சமுதாயத்தினரின் நிலையை ஆராய்ந்து பார்க்கும் போது நாம் இன்னும் கீழ் நிலையில்தான் இருக்கிறோம்.
3 கோடி மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குவதாக முதல்வர் கருணாநிதி கூறுகிறார். தமிழ்நாட்டில் ஆறரை கோடி மக்கள் உள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 3 கோடி பேர் அரை நிர்வாணமாகத்தான் உள்ளனர். இதில் 2 கோடி பேர் வன்னியர்கள்.
ஆட்சி அதிகாரத்துக்காக வன்னியர்களை திட்டமிட்டு அழிக்க நினைக்கின்றனர். அரசியலில் வன்னியர்கள், அநியாயமாக வீணாகி விட்டனர்.
கடந்த 1952ம் ஆண்டில் உழவர் உழைப்பாளர் கட்சி, உழவர் உழைப்பாளர் பொதுவுடமை கட்சியை தொடங்கிய வன்னியர்களான மாணிக் வேல், எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி ஆகியோர் அமைச்சர் பதவிக்காக காங்கிரசிடம் கட்சியை அடமானம் வைத்தனர். வன்னியர் சமுதாயத்துக்கான தேவையை அவர்கள் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பெற்று தந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
இட ஒதுக்கீடு சம்பந்தமாக கடந்த 1980ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். ஒரு கமிஷன் அமைத்தார். அந்த கமிஷன் நிறைவேறுவதற்கு முன்பு அவர் இறந்து விட்டார். இட ஒதுக்கீட்டுக்காக 7 நாள் மறியல் போராட்டத்தை நடத்தியதில் சில வன்னியர்களை இழந்தோம்.
கடந்த தேர்தலில் திட்டமிட்டே நம்மை தோற்கடித்தனர். இதற்காக மேல் ஜாதியினரும் மறைமுகமாக கூட்டு சேர்ந்து தோற்கடித்து விட்டனர். பாமக வளர்ச்சியை விரும்பாமல் அழிக்க நினைக்கின்றனர். பணத்தை கொடுத்துவன்னியர்களின் ஓட்டுகளை பெறுகின்றனர்-
மருத்துவர் அய்யா விழுப்புரத்தில் சமூக முன்னேற்ற சங்கத்தின் 5வது மாநில மாநாடு நடந்த போது பேசியது நாள்-திங்கள்கிழமை, ஜனவரி 4, 2010