நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, May 19, 2011

ஜாதி வாரி கணகெடுப்பு -பாமகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி....

------------------------------------------------------------------------
பாமக சார்பில் ஜாதி வாரி கணகெடுப்பு நடத்த கோரி நடத்தபட்ட போரட்டங்களிலிருந்து சில புகைப்படங்கள்

------------------------------------------------------------------------







பல ஆண்டுகளாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் பல போரட்டங்கள், பொது கூட்டங்கள், என நடத்தி உலக அரசியல் தலைவர்களையே திரும்பி பார்க்க வைத்தது மட்டுமல்லாமல், பாமகவை சேர்ந்த அன்புமணி அவர்கள் அமைச்சராக இருந்த போது 200 க்கு மேற்பட்ட அரசியல் தலைவர்கரளை சந்தித்து அவர்களின் ஆதரவோடு கோரிக்கையகவே நடுவணரசிடம் அளித்தார்.



பா.ம.க வின் தொடர் போரட்டங்களால் மே-19 -2011 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் முதல் முறையாக 1931ம் ஆண்டு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், ஜாதி அடிப்படையில் நடத்தப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாட்டின் மக்கள் தொகை 121.02 கோடி என்றும், ஆண்கள் 62.37 கோடி பேர், பெண்கள் 58.65 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்  நடந்தது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:

* ஜாதி மற்றும் மதம் உட்பட ஏழைகளைக் கண்டறியவும், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

* நகரங்கள் மற்றும் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரை கண்டறிய, கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில், விவரம் கேட்கப்படும் போது, அவர்களின் ஜாதி மற்றும் மதம் குறித்தும் கேட்டறியப்படும்.

* இந்த இரண்டு வகையான கணக்கெடுப்பு பணியும் ஜூன் மாதம் துவங்கும். இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வரும். அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.

* ஏழைகளைக் கண்டறிய, பெரிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

* இந்த ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ளும். இதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த, குறைந்த செலவிலான சிறிய கையடக்க கருவிகள் பயன்படுத்தப்படும்; பேப்பர்கள் எதுவும் பயன்படுத்தப்படாது.

* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களில் எத்தனை பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் கண்டறியப்படும்.

* நகரங்கள் மற்றும் கிராமங்களில் சேகரிக்கப்படும், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் குறித்த இந்த விவரங்கள் எல்லாம், 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பயன்படுத்தப்படும்.

* சமூகம், பொருளாதாரம் குறித்த விவரங்களுடன் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமென, பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.

* இப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியவில்லை எனில், மாநில அரசு ஊழியர்களே இதில் ஈடுபடுவர். இக்கணக்கெடுப்பில் ஏழு விதமான அளவீடுகள் பின்பற்றப்படும், என்று மத்திய அரவு அறிவித்துள்ளது.