நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, November 17, 2010

பா.ம.க வின் அறிய புகைப்படங்கள்.......




தமிழ் குடிதாங்கியின் அறிய புகைப்படங்கள்...





     








































  நம் சொந்தகாரர்களின்  அவலநிலையை பாரீர்.....
விவசாய கூலி தொழிலாளியாகவும், அன்றாடம் கூலி வேலைக்கு சென்று
பசியை போக்கி கொள்வது எத்தனை காலத்திற்க்கு?

நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்..
அய்யாவின் பின்னால் அணிவகுப்போம் வாரீர்....












































தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு தயாராகிறது பாமக

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வரும் என்று தெரியாத நிலையிலும், எந்தக் கட்சியுடன் கூட்டணி என்று முடிவாகாத நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி, தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
மைக்ரோ பிளானிங்: 
              2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 31 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 2009-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 7 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலில் பாமக "மைக்ரோ பிளானிங்'என்ற புதிய திட்டத்தை ஏற்படுத்தி தனது பிரசார முறையை மாற்றிக் கொண்டு களத்தில் இறங்கியது.
                இந்தத் திட்டப்படி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தலைமையில், சட்டப்பேரவை பாமக உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் குக்கிராமங்களுக்குச் சென்று மக்களோடு மக்களாக திண்ணையில் அமர்ந்து வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தனர். அப்போது, பாமக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்று கூறி வாக்கு சேகரித்தனர்.
இப்போதும் அதே பாணி: 
                    இந்தத் தேர்தலில் பாமக வெற்றி பெற முடியாவிட்டாலும் இரண்டாவது இடத்தைப் பிடித்ததோடு தமிழக அரசியல் களத்தில் தன்னுடைய இருப்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது. இதற்கிடையே வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் தயாராகாத நிலையில் தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியை இப்போது தொடங்கியுள்ளது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பென்னாகரம் பார்முலா குறித்து விரிவாக ஆராயப்பட்டது. 
               இதன்படி, கட்சியை வளர்க்க வேண்டும் என்றால், 2011 பேரவைத் தேர்தலில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்று ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால், பென்னாகரம் பார்முலாதான் கை கொடுக்கும் என்று கட்சியின் மூத்த தலைவர்கள் பேசியுள்ளனர்.இதையடுத்து கட்சியின் அனைத்து மேல்நிலைத் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களும் ஒரு பேரவைத் தொகுதியில் 4 நாள்கள் வீதம் முகாமிட்டு கட்சியின் வளர்ச்சிப் பணிகள், உறுப்பினர் சேர்க்கை, கிளைகளை ஒருங்கிணைத்தல், கட்சிக் கொடியேற்று விழாக்கள் நடத்துதல் உள்ளிட்ட வழக்கமான பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
சாதனைகளை விளக்கத் தயார்!  
             அத்துடன் ஒவ்வொரு கிளையிலும் இளைஞர்களை குறிவைத்து இளைஞர், இளம்பெண்கள் அணியைத் தொடங்க உள்ளனர். கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்களும் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும், குக்கிராமங்களிலும் பொதுமக்களைச் சந்தித்து டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் சாதனைகள், கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்க உள்ளனர். " மைக்ரோ பிளானிங்' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் பாமக எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் இருந்தே தொடங்கப்பட உள்ளது.  இத்திட்டத்தின்போது கட்சியில் இணையும் இளைஞர்களுக்கு ராமதாஸ் தலைமையில் தனியாக அரசியல் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும்....



             பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும் என்று ஓமலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.  பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின் போது கடைப்பிடிக்கப்பட்ட புதிய பிரசார உத்திகளை அடிப்படையாகக் கொண்டு, பாமக தங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மைக்ரோ பிளானிங் முகாமினை நடத்தி வருகிறது.

            இதன்படி ஓமலூர் சட்டமன்றத் தொகுதியில் ஆக. 23-ம் தேதி முதல் நடைபெற்று வரும் மைக்ரோ பிளானிங் முகாமில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பங்கேற்றுள்ளனர். மைக்ரோ பிளானிங் முகாமின் முக்கிய நிகழ்ச்சியாக பாமகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணியினருக்கான அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.  ஓமலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தீவட்டிப்பட்டியில் அரசியல் பயிலரங்க பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தலைமை வகித்தார். 

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசியது:  

             தமிழகத்தில் உள்ள நாற்பது சதவீத இளைஞர்களில் பெரும்பாலானோர் 15 வயதிலேயே மது குடிக்க ஆரம்பித்து விடுகின்றனர். பின்னர் அப்பழக்கத்திற்கு அடிமையாகி விடும் இளைஞர்களால் கிராம பகுதிகளில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு  ரூ.2 ஆயிரத்து 400 முதல்  ரூ.5 ஆயிரம் வரை செலவாகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பொருளாதார சீரழிவில் சிக்கித் தவிக்கின்றன. இதுமட்டுமன்றி அளவுக்கு அதிகமான குடிப் பழக்கத்தினால் 25 வயதிலேயே ஏராளமான இளைஞர்கள் போதிய உடல் நலமின்றி உயிரிழக்க நேரிடுகிறது. 

             இது போன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்தி இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் பாமக சார்பில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.÷இதன் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு சட்டமன்ற தொகுதி வாயிலாக அரசியல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது. மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தினால் விவசாயப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கப்படுவதை பாமக எதிர்க்கவில்லை. 

           ஆனால் நன்கு விளைச்சல் தரும் விவசாய நிலங்களை விட்டுவிட்டு, தரிசு நிலங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் வறட்சி பாதித்த மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை தொடங்க வேண்டும். இதன் மூலம் விளை நிலங்கள் காப்பாற்றப்படும் என்பதோடு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றார் முன்னாள் அமைச்சர் அன்புமணி.  

அரசியல் பயிலரங்கினை தொடங்கி வைத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியது:  

               தமிழகத்தில் உள்ள இரண்டரைக் கோடி வன்னியர்களும் பாமகவிற்கு ஓட்டு போட்டால் பாமக ஆட்சியைப் பிடிக்கும். உத்தரபிரதேச மாநிலத்தில் மாயாவதிக்கும், பீகாரில் லல்லு பிரசாத் யாதவிற்கும் அவரவர் சார்ந்த சமுதாயத்தினர் தங்களுடைய ஒட்டுமொத்த ஆதரவினை தருகிறார்கள். இதைப் போன்ற ஆதரவினை வன்னிய சமுதாயத்தினர் வழங்கினால் தமிழகத்தில் பாமக ஆட்சியைப் பிடிக்கும்.  தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்கினால் அதற்கேற்ப அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய முறையில் இட ஒதுக்கீடு கிடைக்கும். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க முதலமைச்சர் கருணாநிதி பயப்படுகிறார். 

             ஆனால் பாண்டிச்சேரி மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்குவதற்கு முதல்-அமைச்சர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பாமகவைத் தவிர உயரிய கொள்கைகள் வேறெந்த கட்சியில் இருந்தாலும் அதில் இணைய தயார் என்று அறிவித்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை யாரும் அதற்கான கொள்கைகள் தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கவில்லை.  

            தமிழகத்தில் வேறெந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் பாமகவில் தான் அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனர். மாநில அளவில் சட்டமன்ற தொகுதி வாரியாக ஆறு லட்சம் இளைஞர்களுக்கு பாமக சார்பில் அரசியல் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு பயிற்சி பெறும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடைய கிராமங்களில் பாமக கொள்கை மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்.

                ஒவ்வொரு இளைஞரும் தலா 100 ஓட்டுகளை பாமகவிற்கு பெற்றுத்தரும் வகையில் செயலாற்ற வேண்டும். கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி பெண்கள் தான் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளனர். பெண்களுக்கு பலனளிக்கும் வகையிலான பல்வேறு சமூக பணிகளை பாமக செய்து வருகிறது. சமூகத்தில் பெரும்பான்மை ஓட்டு வங்கியான பெண்கள் மனது வைத்தால் பாமக ஆட்சிக்கு வரும். அதற்கு இளம்பெண்கள் அணியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார்.   முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.வேலு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.தமிழரசு, வை.காவேரி, பெ.கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தொடக்கம்


 





                      தொழில்நுட்பத் துறையில் உலக அளவில் முன்னணி வகிக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது என்று தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா தெரிவித்தார். 

திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பத்தில் கட்டப்பட்டுள்ள சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா புதன்கிழமை தொடங்கி வைத்து பேசியது:

                      அனைத்துத் தரப்பினரையும் கல்வி சென்றடைய வேண்டும். மனித முன்னேற்றத்துக்கு கல்வி மிக அவசியம். உயர் கல்வியானது தனிமனிதனை மேம்படுத்துவதோடு, சமூகத்தையும் மேம்படுத்த வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய அளவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தத் துறையில் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் தொழிற்சாலைகளையும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களையும், கல்வி நிறுவனங்களையும் அந்தப் பகுதிகளில் உருவாக்க வேண்டும். இதன்மூலம் கிராமப்புறங்களுக்கும், நகர்ப்புறங்களுக்கும் உள்ள இடைவெளியை குறைக்க இது உதவும்.

                   நமது நாட்டில் இருந்த மத்திய அமைச்சர்களில் மது மற்றும் புகையிலை ஒழிப்புக்கு பெரிதும் பாடுபட்ட ஒரே அமைச்சர் அன்புமணி ராமதாஸ்தான். அதேபோல் ரயில்வேதுறை இணை அமைச்சராக இருந்த வேலு, பஞ்சாப் மாநிலத்தில் நிறைய ரயில் திட்டங்களை நிறைவேற்றினார். நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் முக்கியக் காரணம் ராமதாஸ் எனது தனிப்பட்ட நண்பர் என்பதால்தான் என்றார் பர்னாலா. 

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிறுவனரும், பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் பேசியது:

                      பணக்காரர்களுக்கு கிடைக்கிற கல்வி ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பது தான் எனது லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்பது எனது ஆசை என்றார் ராமதாஸ். 

                     முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வரவேற்றார். நாடாளுமன்ற உறுப்பினர் மு.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்.பி.க்கள் இரா.அன்பரசு, கோ.பூவராகவன்,முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சர் இரா.வேலு, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் து.விசுவநாதன், தொழிலதிபர் எஸ்.அருணாசலம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். வன்னியர் கல்வி அறக்கட்டளையின் இயக்குநர் ஆ.அரிநாராயணன் நன்றி கூறினார்.

அரசியல் அரங்கில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்து விட்டோம்

சென்னை: தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி என்பதும், அரசியலில் அதன் பங்களிப்பை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை போல பா.ம.க. எழுச்சியுடனும், உயிர்த்துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பென்னாகரம் தொகுதியில் பணத்தின் பக்கம் பலமாக காற்று வீசுகிறது என்ற கணிப்பு மெய்யாகி இருக்கிறது. பணநாயகம் வெற்றி பெற்று, ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் 8 கட்சிகளின் துணையுடனும், அனைத்து வசதி, வாய்ப்புகளுடனும் ஆளும் கட்சி களமிறங்கியது.
பிரதான எதிர்கட்சியும் 4 கட்சிகளின் துணையுடன் தேர்தலை சந்தித்தது. பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தனித்து போட்டியிட்டு மக்களை சந்தித்தது. மற்றவர்களைப் போல பண பலம் இல்லை, மக்கள் ஆதரவு ஒன்றை மட்டுமே நம்பி களம் இறங்கினோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
தனியாகப் போட்டியிட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறோம். பா.ம.க.வை பொறுத்தவரையில் இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, தார்மீக ரீதியில் மகத்தான வெற்றி ஆகும்.
பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்ற சில ஆரூடக்காரர்களின் கணிப்பை, பென்னாகரம் வாக்காளர்கள் பொய்யாக்கி இருக்கிறார்கள். தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி என்பதும், அரசியலில் அதன் பங்களிப்பை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும், பென்னாகரத்தில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு பெற்றுள்ள 41 ஆயிரத்து 285 வாக்குகள் உறுதிப்படுத்தியிருக்கிறது.
பீனிக்ஸ் பறவை போல பா.ம.க. எழுச்சியுடனும், உயிர்த்துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது என்பதையும், மக்கள் மனதில் பா.ம.க. நீங்காத இடத்தை பெற்றிருக்கிறது என்பதையும் இந்த வாக்குகள் எடுத்துக் காட்டுகின்றது.
இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய பென்னாகரம் வாக்காளர்களுக்கும், இரவு பகல் பாராது, இடையூறுகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, தேர்தல் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தலை வணிகச் சந்தையாக்கும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக தேர்தல் ஆணையம் இந்த ஆபத்தை உணர்ந்து, இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துபேசி உரிய சட்ட நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.
வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டாலொழிய, ஜனநாயகத்தை வீழ்த்தி கொண்டிருக்கும் பணநாயகத்தை ஒழிக்க முடியாது. இதற்கு உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் முனைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உரத்தக் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

திமுக, அதிமுக அதிர்ச்சி...

பென்னாகரத்தில் திட்டமிட்டு செயல்படுத்திய உத்திகள் வெற்றி பெற்றிருப்பதால் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டும் வகையில் 70 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு பென்னாகரம் பார்முலாவை அமல்படுத்தப் போகிwJ ghkf

பாமகவை தூக்கி நிறுத்த பெருமளவில் உதவியிருக்கிறது பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல். அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்ததோடு, வன்னியர் வாக்கு வங்கியை முழுமையாக நாங்கள் இழக்கவில்லை என்பதையும் பாமக நிரூபித்துள்ளது.



தோல்வியிலும் இது வெற்றியாகவே பாமக தரப்பில் கருதப்படுகிறது. இதையடுத்து பென்னாகரம் பார்முலாவை தனது ஆதரவு பலம் அதிகம் உள்ள தொகுதிகளில் அமல்படுத்த பாமக திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் 70 தொகுதிகளை பாமக தேர்வு செய்துள்ளது. அந்த லிஸ்ட்டை ஏ மற்றும் பி என இரு பிரிவாக பிரித்து தயாரித்துள்ளது.
பாமக வலுவாக, அதிக ஆதரவு கொண்ட வாக்கு வங்கியுடன் கூடிய தொகுதிகளை ஏ பட்டியலிலும், ஓரளவு வாக்கு வங்கியுடன் கூடிய தொகுதிகளை பி பிரிவிலும் சேர்த்துள்ளனர்.
ஏ பிரிவில் 40 தொகுதிகளும், பி பிரிவில் 30 தொகுதிகளும் உள்ளனவாம். தேர்ந்தெடுத்துள்ள 70 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்துவதோடு, வாக்கு வங்கியையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது.




இது போக பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமகவின் செயல்பாட்டால் முக்கிய திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதோடு சமாதானமாகப் போக தூது விட்டுவருகின்றன.