நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, November 17, 2010

சென்னையில் வன்னியகுல சத்திரிய மகா சங்கம்’ தொடங்கப்பட்டது பதிவு எண்- 12 OF 1890-91)

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வன்னிய சமூகத்தினர் நடத்தப்பட்ட விதமும் அவர்களது எழுச்சிக்கு முக்கியமான காரணம்.
1819
ஜூலை 6 ம் தேதி, புவனகிரி அருகே ஒரு கிராமத்தில் கோயில் திருவிழாவில் கொடி பிடித்துச் சென்றார்கள் வன்னியர்கள். உடனே அது பிரச்னை ஆகி ஐகோர்ட் வரைக்கும் போனது. வழக்கை விசாரித்த பிரிட்டிஷ் நீதிபதி பிரான்ஸ் துரை வன்னியர்களுக்கு கொடி பிடிக்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார். அது ஒரு சிறு பொறி.
1844
ல் இதே மாதிரி வன்னியர்கள் சிதம்பரம் கோயிலில் கொடி பிடிக்கப்போய் பெரும் கலவரம்.
1860
ல் செங்கல்பட்டில் கொடி பிடித்துக்கொண்டு உயர் ஜாதியினர் வசிக்கும் தெருவழியாகச் சென்றது அவமானமாகக் கருதப்பட்டு, வழக்கு நடந்தது. கடைசியில்  சென்னை கோர்ட் வன்னியர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
அடுத்தடுத்து வந்த தீர்ப்புகளால் அன்றைக்கு வன்னியர்கள் தொடர்ந்து தீண்டாமைக் கொடுமையில் சிக்காமல் தப்பினார்கள். அவர்களுக்குள் ஒருவிதப் புத்துணர்ச்சி. சங்கம் அமைக்க வேண்டும் என்கிற உணர்வு பரவியது. வன்னியர்கள் ஒருங்கிணைந்து போராடத் தயாரானார்கள்.பள்ளிகள்என்று எங்கெங்கு அதுவரை வன்னியர்கள் தடுக்கப்பட்டார்களோ, அங்கேயெல்லாம் நுழைந்தார்கள். அதற்காகப் பல போராட்டங்களும் உத்வேகத்துடன் நடந்தன.
சங்கம் தொடக்கம்
அப்போதே சென்னை ராயபுரத்தில் வன்னியர்கள் கூடி தங்களது ஒற்றுமையைப் பலப்படுத்தத் துவக்கப்பட்ட சங்கம் வன்னியகுல அபிமான சங்கம்ஆரம்பித்த ஆண்டு 1885. இதையடுத்துத் தமிழகம் முழுக்கப் பல வன்னியர் சங்கங்கள். மூன்று வருடத்தில் அனைத்தையும் ஒருங்கிணைத்து 1888 ஏப்ரல் 8ம் தேதி துவக்கப்பட்டது சென்னை வன்னியகுல சத்திரிய மகா சங்கம்’ (பிறகு இரண்டு வருடங்கள் கழித்து பதிவும் செய்யப்பட்து. பதிவு எண்- 12 OF 1890-91)
வன்னியர் சங்கம் - சுதந்திரத்திற்குப் பின்னால்
சுதந்திரத்திற்குப் பிறகு வன்னியர்கள் தலைமையில் இரண்டு கட்சிகள். ஒன்று - மாணிக்கவேலர் தலைமையிலான காமன்வீல்கட்சி. இன்னொன்று எஸ்.எஸ். ராமசாமி படையாட்சி தலைமையிலான உழைப்பாளர் கட்சி’.தமிழகத்தில் 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் 26 எம்.எல்.ஏக்கள் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் உடன்பாடு வைத்துக் கொண்டுதான் ராஜாஜி மந்திரிசபையை அமைக்க முடிந்தது. அந்த மந்திரிசபையில், வன்னிய சமூகத் தலைவரான மாணிக்கவேலர் சபாநாயகர், எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் ஆகியோர் அதில் அமைச்சர்கள்.
இதற்குப் பிறகு பல வன்னியர் சங்கங்கள். ஏறத்தாழ 27 சங்கங்களைத் திண்டிவனத்தில் கூட்டி 1980ல் உருவானதுதான் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம். அதிலும் அவர் நிறுவனர் மட்டுமே. அப்போது இந்தச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றவர் ராமசாமி படையாட்சி. பொதுச் செயலாளர் யு.எஸ். ராமமூர்த்தி. அப்போது ராமதாசு முழங்கிய முழக்கம்.
எனது உடலில் உயிர் இருக்கிறவரை பாராளுமன்றத்தையோ, சட்டமன்றத்தையோ என் கால்கள் மிதிக்காது.’என சபதம் ஏற்றார் நமது மருத்துவர் அய்யா....

No comments: