நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, November 17, 2010

முஸ்லிம் வேடத்தில் டாக்டர் ராமதாசு

ஒரு சமுதாயச் சங்கமாக இருந்து வந்ததிலிருந்து மாறி வன்னியர் சங்கம்என்று தோற்றுவித்தார் டாக்டர் அய்யா. இதன் அடிப்படை நோக்கமே, வன்னியர் இனத்து மக்கள் மட்டுமல்ல, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சரியான இட ஒதுக்கீடு வேண்டும் என்பதுதான். அது மட்டுமின்றி, 18 சதவீதம் என்றிருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற பரந்த நோக்கோடு களமிறங்கினார் டாக்டர் அய்யா.

பெரும்பான்மையாக இருக்கக்கூடிய வன்னிய - தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஒன்றிணைய வேண்டும். அப்படி இணைந்தால்தான் உயர்வு வரும் என்ற எண்ணம் கொள்கை கோட்பாடாக இருந்தது.
அதற்காகவென்றே வன்னியர் - தாழ்த்தப்பட்டவர் ஒற்றுமை மாநாடு என ஒன்றைத் தர்மபுரியில் நடத்தினார். வன்னியர் - அருந்ததியர் ஒற்றுமை மாநாடு என ஈரோட்டில் நடத்தினார். வன்னியர் - தேவேந்திரகுல ஒற்றுமை மாநாடு என மதுரையில் நடத்தினார்.

அதிர்ந்த போராட்டமும் மாறுவேடமும்  
 வேண்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு - டாக்டர் ராமதாஸ்






1931ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகு, இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதிவாரியான புள்ளி விபரம் எடுக்கப்படவில்லை. இதனால் நாங்கள் ஏராளமான சங்கடங்களைச் சந்தித்தோம். வருங்காலத்தில் இத்தகைய சங்கடங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக (1979 ஜூன் 15) எம்.எம். பட்டேல் அவர்களுக்கும், (1979 ஆகஸ்ட் 18) ஒய்.பி. சவாண் அவர்களுக்கும் இது குறித்துக் கடிதங்கள் எழுதினார் மருத்துவர் அய்யா. பிறகு அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கியானி ஜெயில்சிங் அவர்களுக்கும் (1980 மார்ச் 31) ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டு கடிதம் எழுதினார் மருத்துவர்.
‘1981ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாது என்றும், ஜாதியைக் கேட்காமல் தற்போது எடுக்கப்பட்டு வருகிற இந்தக் கொள்கையே இனியும் தொடரும்என்றும் - அரசு எனக்குத் தெரிவித்தது. அரசின் இந்தக் கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்’’ - இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? மண்டல் கமிஷன் அறிக்கையைத் தயாரித்த அதே மண்டல்தான்.
இதே கோரிக்கையை முன் வைத்து 1998 நவம்பரில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வலியுறுத்தல் மாநாட்டையே நடத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. பிறகு 2000 மார்ச்சில் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட ஜாதிச் சங்கத் தலைவர்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தியது. அதற்காகப் பெரும் பேரணியையும் நடத்தியது.
தமிழகத்தில் பா.ம.கவைத் தவிர்த்து வேறு எந்தக் கட்சியும் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை.

No comments: