நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, January 19, 2012

சோழர்கள் வன்னியர் சாதி என்பதற்கும் ஆதாரம் :


                                         
                           பூங்குயிலன் கௌரி



சோழர்கள் வன்னியர் சாதி என்பதற்கும் ஆதாரம் :

முதலில் தேவர் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள் ..தேவர் என்பது ஒரு பட்டம் . தேவர் என்னும் பட்டம் தமிழகத்தில் பல சாதியினருக்கு உள்ளது ... இங்கே வன்னியர்,முத்தரையர் ,கள்ளர் ,மறவர், அகமுடையார் என்பவர்களும் தேவர் பட்டம் தரித்தவர்கள் ..

சரி இப்பொழுது மற்ற சாதியினர் தாங்கள் சோழர்கள் என்பதற்கு முன் வைக்கும் கேள்விக்கு வருவோம் ..

கேள்வி : ராஜ ராஜனும் அவரது முன்னோர்களும் தேவரென்று பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டனர். உதாரணமாக யானை மேல் துஞ்சிய தேவர், ராஜராஜ சோழ தேவர் என்று,

பதில் :

(சோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம் இதோ:

"இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்"
இந்த தேவரும் நீங்கள் நினைக்கும் தேவரா?

இதொ இன்னும் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள்:

சேக்கிழார் குன்றத்தூர் தொண்டை மண்டல சைவ வேளாளர் என்பது உமக்குத் தெரிந்திருக்கும். அவர் பற்றி திருமழபாடி கல்வெட்டு (12 ம் நூற்றாண்டு)
"குன்றத்தூர் சேகிழான் மாதவடிகள் இராம தேவனான உத்தமச் சோழப் பல்லவரையன்"
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

செங்குன்றாபுரம், விருதுநகர் கல்வெட்டு (13 ம் நூற்றாண்டு)

"கம்பன் தேவனான நாற்பத்தெண்ணாயிர ஆச்சாரி"
இது கம்மாளருக்கு இருந்த தேவர் பட்டம்.
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

திருச்சி மாவட்டம், 12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:
"வண்ணான் அழிவில்லாத தேவன்"

இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

எதையும் ஆய்ந்து அலசி முடிவெடுப்பதே சான்றோர் வழி. அதனால் தான் அறிவிற் சிறந்த சான்றோர் அவைக்குப்போனால் பாம்பும் சாகாது என்றனர்?

ஆக, வெறும் தேவர் என்னும் பட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ,அதற்க்கு உரிமை கொண்டாடுவது அறியாமையே ... காரணம் தேவர் என்னும் பட்டம் கொண்ட சாதிகள் பல உள்ளன தமிழகத்தில் .....

உண்மையில் கள்ளர் சங்ககாலத்தில் இவர்கள் முதலில் தூசிப் படைகளாக, ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர். பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக, அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களே அகம்படியர் ஆவர். படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது. இதைத்தான் 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே' என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது.

அப்படியானால் ராஜராஜ சோழன் யார் ?

ஷத்ரியனான சுந்தர சோழனுக்கும், மலையமான் குலப் பெண் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் ராஜ ராஜன். மலையமான் குலம் என்பது ஒரு அடிமைப்படாத சிற்றரசு வம்சமாக இருந்திருக்கிறது. மலையமான் திருமுடிக் காரி பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இந்த மலையமான் வம்சம் அடிமைப் பட்டிருந்தால் சூத்திர வர்ணமாகி இருக்கும். அவ்வாறு அடிமைப்படவில்லை என்பது பிற சான்றுகள் மூலம் நிரூபணம் ஆகிறது.

வன்னியர் குல க்ஷத்ரியர்கள் மட்டுமே தமிழகத்தில் க்ஷத்ரியர் பட்டம் பெற்றவர்கள் . க்ஷத்ரியர் என்பதற்கு உண்மையான தமிழ் வார்த்தை சான்றோன் . சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் என்பதை மயிலை சேனி வேங்கடசாமி அவர்கள் நிரூபித்திருக்கிறார்.

வன்னியர் குலம் மட்டுமே அடிமைபடாது வந்தமையால் ,இவர்கள் நேரடியாக க்ஷத்ரியர்களாக, அரச வர்ணத்தில் வகைப்படுத்தப்பட்டனர். அடுத்து மலையமான் என்பதற்கும் வருவோம் ... வன்னியர்களை மலையமன்னர் எனவும், பல்லவர் , சோழர் எனவும் கம்பர் பாடிய பாடல் பின்வருமாறு :

குலத்தலைவர் படைச் சிறப்பு

விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே. 8

சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

ஆகா ராஜ ராஜன் வன்னியர்குல க்ஷத்ரியனே ... சோழரை மற்ற சாதியினர் நாங்கள் என்று உரிமை கொண்டாடினால் ,சோழர்கள் சூத்திரர் வர்ணத்தில் வர நேரிடும் .. காரணம் ,தமிழகத்தில் வன்னியர்கள் மட்டுமே க்ஷத்ரியர் வர்ணத்தில் உள்ளவர்கள் .

இங்கே ராஜ ராஜனும் க்ஷத்ரியனே...

ஆதாரம் பின்வருமாறு :

சுந்தர சோழன் இறந்தபோது அவனது மனைவி வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறி இருக்கிறாள். சூத்திரப் பெண்கள் இவ்வாறு உடன்கட்டை ஏறியதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. மேலும், சிறிய வயதிலேயே முடிசூடிக் கொள்ள சொல்லப்பட்ட போது, க்ஷத்ரிய தர்மப் படி உரிய வயது வந்ததும் முடிசூடுவதாக ராஜ ராஜன் சொன்னது அவனது மெய்கீர்த்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் க்ஷத்ரிய சிகாமணி என்பது அவனது மெய்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவன் க்ஷத்ரியனே.

இப்பொழுது சோழர் வன்னியர் குல க்ஷத்ரியர் என்பதற்கு முக்கிய ஆதாரத்திற்கு வருவோம் :

களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.

இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.

இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.

தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.

இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம்.
அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர்.

இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.

பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் வன்னிய குலத்தினர் ஆவர்.

நன்றி---- பூங்குயிலன் கௌரி