நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, February 22, 2011

தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி வரலாறு அன்று முதல்-இன்று வரை...

அருமையான விளக்கங்களுடன் விரிவாக விளக்கம் தந்துள்ள திரு அருள் அவர்களின் வலைத்தள பதிவு இது..


விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!


(அரசியல் கூட்டணி என்பதை விபச்சாரத்துடன் ஒப்பிட்டுள்ளமைக்காக வருந்துகிறேன். ஆதிக்க சாதியினரின் மனோபாவம் விகாரமாக இருப்பதால் அதை சுட்டிக்காட்டவே கொச்சையான வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது. மன்னிக்கவும்)""’கொள்கைக்காக கூட்டணி, தமிழர் நலனுக்காகக் கூட்டணி, சுய மரியாதையைக் காப்பதற்காகக் கூட்டணி’ என்றெல்லாம் மற்ற கட்சிக்காரர்கள் தன் கூட்டணித் தாவலுக்கு கஷ்டப்பட்டுக் காரணம் கூறும்போது, மிகவும் வெளிப்படையாக ‘இவங்க கூட ஒரு சீட்டு தர்றோம்னாங்க..வந்துட்டேன்” என்ற ரேஞ்சில் அரசியலை நல்ல பிஸினஸாக நடத்தி வருபவர் ராமதாஸ். அரசியல் என்பது அதிக சீட்டுகளைப் பெறுவதும், சம்பாதிப்பதும் என்று ஆனபின் ’முக்காடு எதற்கு’ என்ற நிலைப்பாடு கொண்டவர் அவர்."" 

--என்று "டாக்டர் ராமதாசும் பாமகவும்" எனும் பதிவில் எழுதுகிறார் செங்கோவி.

"ராமதாஸின் அவதாரங்கள்" என்று விமர்சிக்கிறார் ஓசை.

"இவய்ங்க இப்படி தான் பாஸ் எப்பப் பாத்தாலும் துப்பிக் கிட்டே இருப்பாங்க" என்று கொச்சையாக விமர்சிக்கிறார் சவுக்கு. 

இப்படி வரும் விமர்சனங்களும் அவற்றில் வெளியிடப்படும் கேவலமான பின்னூட்டங்களும் பா.ம.க'வை வேண்டுமென்றே இழிவு படுத்துகின்றன.

இத்தகைய பதிவுகளைவிட ஒருபடி மேலாக - தமிழக பத்திரிகைகள் திட்டமிட்டு பா.ம.க மீது அவதூறு சாக்கடையை அள்ளி வீசுகின்றன?

பா.ம.க'வை தூற்றுவது நியாயம் தானா?காவல்துறையினர் அவ்வப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்று புகைப்படத்தை வெளியிடுவார்கள், அதில் சில பெண்கள் வரிசையாக நிற்பார்கள். ஆனால், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் அப்புகைப்படத்தில் இருக்க மாட்டார்கள். விபச்சாரத்தை யாராவது தனியாக செய்ய முடியுமா? அந்த ஆண்கள் எங்கே போனார்கள்? ஏன் கைது செய்யப்படவில்லை? என்கிற கேள்வி எவராலும் கேட்கப்படாது.

அதே போன்றுதான் - திமுக'வும் அதிமுகவும் இடம்மாறி பாமகவுடன் கூட்டணி அமைக்கும் போதெல்லாம் - பாமக மட்டுமே தாவுகிறது என்கிற கருத்தை ஆதிக்க சாதிவெறியர்கள் ஊதுகின்றனர்.

தமிழ்நாட்டு அரசியலில் அணி மாறாத கட்சி என்று எதுவுமே இல்லை. எடுத்துக்காட்டாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக அணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகியன இப்போது திமுக அணியில் உள்ளன. அவ்வாறே, திமுக அணியில் இருந்த இந்திய பொதுவுடைமைக் கட்சி, மார்க்சீய பொதுவுடைமைக் கட்சி ஆகியன அதிமுக அணியில் உள்ளன.

இது மட்டுமின்றி - எல்லா தேர்தல்களிலும் ஏதேனும் சில கட்சிகள் இடம் மாறுகின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?

ஒருவேளை ஓரிருமுறை விபச்சாரம் செய்பவர்கள் ஒழுக்க சீலர்கள் என்று ஆதிக்க சாதியினர் சாதிக்கப் பார்க்கினரா? அப்படிப்பார்த்தால் கூட அதிக முறை அணிமாறிய கட்சி பா.ம.க இல்லையே! தமிழ்நாட்டில் எல்லா கட்சிகளும் அணி மாறுகின்றன. சில கட்சிகள் சில முறை, சில கட்சிகள் பலமுறை அணி மாறுகின்றன. இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் - அதிகமாக அணிமாறிய கட்சிகள் அதிமுக'வும் திமுக'வும் தான்.

தமிழக தேர்தலில் கூட்டணி வரலாறு

முதலாவது சட்டமன்ற தேர்தல் 1952

தி.மு.க போட்டியிடவில்லை.  காங்கிரசு, CPI கட்சிகள் முதன்மையாக போட்டியிட்டன.

காங்கிரசு கட்சியில் வன்னியர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை என்பதால் - தனித்து களமிறங்கிய மாணிக்கவேல் நாயகரின் காமன்வீல் கட்சி 6 இடங்களிலும் இராமசாமி படையாட்சியாரின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றன. மொத்தமாக அன்றைய தமிழ் பகுதியில் இருந்த 190 சட்டமன்ற இடங்களில் 25 இடங்களை வன்னியர்கட்சிகள் தனித்து வென்றன.

தேர்தலுக்கு பின்பு காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாததால் - விடுதலைக்கு பிந்தைய தமிழ்நாட்டில் முதன்முதலாக வன்னியர் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரசு ஆட்சியமைத்தது.

(பின்னர் வன்னியர்கட்சிகள் கலைக்கப்பட்டு தலைவர்கள் காங்கிரசிலும், காங்கிரசு எதிர்ப்பில் வளர்ந்த தொண்டர்கள் தி.மு.க'விலும் இணைந்தனர்.)


இரண்டாவது சட்டமன்ற தேர்தல் 1957

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.


மூன்றாவது சட்டமன்ற தேர்தல் 1962

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

தி.மு.க'வுடன் CPI, பார்வார்டு பிளாக், முசுலீம் லீக் கட்சிகள் கூட்டணி அமைத்தன.


நான்காவது சட்டமன்ற தேர்தல் 1967

தி.மு.க. கூட்டணியில் இராசாசியின் சுதந்திரா கட்சி, CPI(M), பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, இந்திய யூனியன் முசுலீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான காங்கிரசு கட்சிக்கு தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஆதரவளித்தது.

CPI தனித்து போட்டியிட்டது.


ஐந்தாவது சட்டமன்ற தேர்தல் 1971

தி.மு.க. கூட்டணியில் இந்திரா காங்கிரசு, CPI, பிரசா சோசலிச கட்சி, பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக், தமிழ்தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன.

காமராசர் தலைமையிலான இசுதாபன காங்கிரசுடன் இராசாசியின் சுதந்திரா கட்சி, இந்திய குடியரசு கட்சி, சம்யுக்த சோசலிச கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகியன கூட்டணி அமைத்தன.


ஆறாவது சட்டமன்ற தேர்தல் 1977

தி.மு.க தனித்து போட்டி.

அ.தி.மு.க' வுடன் CPI(M), பார்வார்டு பிளாக், இந்திய யூனியன் முசுலீம் லீக் கூட்டணி.

இந்திய தேசிய காங்கிரசுடன் CPI கூட்டணி,

சனதா கட்சி தனித்து போட்டி.


ஏழாவது சட்டமன்ற தேர்தல் 1980

தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க - சனதா கட்சி கூட்டணி.


எட்டாவது சட்டமன்ற தேர்தல் 1984

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு மற்றும் காந்தி காமராசர் காங்கிரசு கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI(M), CPI, சனதா கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணி.


ஒன்பதாவது சட்டமன்ற தேர்தல் 1989

அ.தி.மு.க (செயலலிதா) - காங்கிரசு கூட்டணி.

அ.தி.மு.க (சானகி) - தமிழக முன்னேற்ற முன்னணி (சிவாசி) கூட்டணி.

தி.மு.க - சனதா தளம், CPI(M) கூட்டணி.


பத்தாவது சட்டமன்ற தேர்தல் 1991

அ.தி.மு.க - காங்கிரசு கூட்டணி.

தி.மு.க'வுடன் CPI, CPI(M), சனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம் கூட்டணி.

பா.ம.க தனித்து போட்டி.


பதினோராவது சட்டமன்ற தேர்தல் 1996

தி.மு.க'வுடன் த.மா.க, CPI, இந்திய தேசிய லீக், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் காங்கிரசு, முசுலீம் லீக், பார்வர்டு பிளாக், அனைத்திந்திய குடியரசு கட்சி, உழவர் உழைப்பாளர் கட்சி, ஐக்கிய பொதுவுடைமைக் கட்சிகள் கூட்டணி.

ம.தி.மு.க'வுடன் CPI(M), சனதா தளம், சமாச் வாதி சனதா கட்சிகள் கூட்டணி.

பா.ம.க - திவாரி காங்கிரசு (வாழப்பாடி இராமமூர்த்தி) கூட்டணி.


பன்னிரெண்டாவது சட்டமன்ற தேர்தல் 2001

அ.தி.மு.க'வுடன் தா.ம.க., பா.ம.க., காங்கிரசு, CPI, CPI(M) கட்சிகள் கூட்டணி.

தி.மு.க'வுடன் பா.ச.க., MGRஅ.தி.மு.க கட்சிகள் கூட்டணி.


பதிமூன்றாவது சட்டமன்ற தேர்தல் 2006

தி.மு.க'வுடன் காங்கிரசு, பா.ம.க., CPI(M), CPI, முசுலீம்லீக் கட்சிகள் கூட்டணி.

அ.தி.மு.க'வுடன் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், பார்வார்டு பிளாக், மூ.மு.க., இந்திய யூனியன் முசுலீம் லீக். சனதா தளம் கட்சிகள் கூட்டணி.

--இவ்வாறாக கடந்த 50 ஆண்டுகால சட்டமன்ற தேர்தல் வரலாற்றில், குறிப்பாக 1962 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான தி.மு.க'வோ அல்லது அ.தி.மு.க'வோ ஒரு தேர்தலில் அமைத்த அதே கூட்டணியுடன் அடுத்த தேர்தலை சந்திக்கவில்லை.


ஆக, எல்லா தேர்தல்களிலும் பெரும்பாலான கட்சிகள் இடம் மாறுகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே அணி மாறி போட்டியிடுகிறது என்பது போன்ற கற்பனையான கருத்தினை ஆதிக்க சாதி பத்திரிகைகள் பரப்புவது ஏன்?