நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, November 18, 2011

சாக்கடிக்கும் பேருந்து,பால்,மின்சார உயர்வு ஒரு நாள் சாகடிக்கும் உயர்வுக்கு காரணமான அனைவரையும்....

பேருந்து கட்டண உயர்வுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் காரணம்?





பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு?,என பலத்த இடியை தமிழக முதல்வர் உலகத்திலேயே நிர்வாக திறமை படைத்த அம்மா அவர்கள் மக்கள் தலையில் இறக்கியுள்ளார்.

பேருந்துகளில் 18-11-2011 அன்று ஓரே அலறல் சத்தம் சில தாய்மார்கள் கண்ணீர் மல்க பேருந்து நடத்துனர்களிடம் முறையிட்டதும்,அருகில் இருக்கும் அறிமுகமே இல்லதா நபர்களிடமும் நெஞ்சம் உருக வைக்கும் அளவுக்கு புலம்பியதும் வயதான முதியோர்,விவசாயிகள் ,இளைஞர்கள் என ஆவேசபட்டது நான் இதுவரை கண்டிராத சம்பவம்.பேருந்து விலை உயர்வல் மனம் நொந்து உள் மனதுக்குள் அழுது கொண்டிருந்த எனக்கு மேற்கண்ட சம்பவங்கள் என்னை கண்ணீர் சிந்த வைத்தது..

ஒரு நிமிடம் என்னை நானே வெறுக்கும் அளவுக்கும் எப்படியாவது இதை தட்டிகேட்க வேண்டும் என வெறியும் என் மனதுக்குள் தாண்டவமாடியது..

20.000 ரூபாய் ஊதியம் வாங்கும் எனக்கே இவ்வளவு வெறி...
எப்படியும் தன் உழைப்பால் இதனை சரிசெய்துவிட முடியும் என தன்னம்பிக்கை உள்ள எனக்கே இவ்வளவு பாதிப்பு மனதுக்குள்..

கூலி,5.000,10.000என சம்பளம் வாங்குபவருக்குள் எத்தனை வெறி இருக்கும்
எவ்வளவு வலி இருக்கும்

நாட்டு மக்களை பாதுகாக்க  வேண்டிய முதல்வரே..தனியார் பேருந்து முதலைகளிடம் 450 கோடிக்கு ஆசைபட்டு அவர்களின் வாழ்வில் ஒளி வீச ஏழைகளின் விளக்கில் திரியை பிடிங்கி இருப்பதாக தகவல்கள் பொது  மக்களிடம் ஆழமாக பதிந்துள்ளது..

மத்திய அரசு பணம் தரவில்லை அதனால் தமிழக மக்கள் உங்களிடம் வராமல் நான் யாரிடம் செல்வேன் என முதல்வர் நீலிக்கண்ணீர் வடித்ததை அவர்களுடைய கட்சிகாரா்களலே ஏற்று கொள்ள முடியவில்லை..

நிர்வாக திறமையற்ற ஒருவரை முதல்வராக்கி விட்டேமோ என மக்களை 6-மாதத்திற்க்குள் சிந்திக்க வைத்துவிட்டார் முதல்வர்...



கஜானா காலி என்பதை ஆட்சிக்கு வரும்பேதெல்லாம்  மீண்டும்  மீண்டும் வலியுறுத்தும் ஜெயலலிதா அப்போது தன் கவனத்தை திருப்பியது, அரசு ஊழியர்கள் மீது.   அரசு ஊழியர்களின் சலுகைகள் அத்தனையையும் பறித்தார்.    அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிய உடன், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார்.  அப்போது ஜெயலலிதா அடித்த அடி, அரசு ஊழியர்கள் மீது மட்டும் விழுந்தது.  இப்போது மக்கள் அத்தனை பேர் மீதும் விழுந்துள்ளது.


போக்குவரத்துக் கழகங்கள் குறித்து பேசிய ஜெயலலிதா, “அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன.  எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது.  2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு  ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது.  அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூறினார்.

புதிய அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப் பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், போக்குவரத்து என்ற தலைப்பில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை என்னவென்று பார்ப்போம்.

போக்குவரத்து
119. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21,169 மாநில  போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

ஆகஸ்ட் 4 அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப் படும், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்கப் படும் என்று, ஆடம்பரமாக அறிவித்து விட்டு, நான்கு மாதங்களில் அப்படியென்ன நெருக்கடி முற்றி விட்டது ?

நிதி நிலைமை மோசமாகி விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம்தான் என்றாலும், மன்னார்குடி மாபியா சார்பில், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்காக 450 கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டு கடந்த வாரம் கொடுக்கப் பட்டுள்ளது என்று நம்பகமாக வட்டாரங்களிடமிருந்து வரும் தகவல்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.  மே மாதமே பொறுப்பேற்ற அதிமுக அரசு, ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறை சார்பாக ஏராளமான அறிவிப்புகளைச் செய்து விட்டு, இன்று போக்குவரத்துக கழகங்களே திவாலாகி விட்டன என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை


------------------------------------------------------------------------------------------------------------பால் விலை கடைகளில் 50 ரூபாய் எத்தனை தாய்மார்களின் மடியில் சாவு மணி அடித்து விட்டர் முதல்வர்...

சாக்கடிக்கும் பேருந்து,பால்,மின்சார உயர்வு ஒரு நாள் சாகடிக்கும் உயர்வுக்கு காரணமான
அனைவரையும்....

கண்ணகி பிறந்த மண்.. எம் தாய்மார்களும் இம் மண்ணில் பிறந்தவர்கள்...

பல்லவ வீரா்கள் வாழ்ந்த மண் .... அவர்கள் வழியில் வளரும் இளைஞர்கள் நாங்கள்....

நிச்சயம் ஒரு நாள் விடியும் அப்பொழுது தமிழர்கள் யாரென்னு புரியும்...






வரும் 23ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,





உரவிலை மீதான கட்டுப்பாட்டை மத்திய அரசு தளர்த்தியதாலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் அனைத்து உரங்களையும் வழங்க மாநில அரசு தவறியதாலும் தமிழ்நாட்டில் உரவிலை 100 முதல் 150 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. 

அதுமட்டுமின்றி உரத்திற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரத் தட்டுப்பாட்டை போக்கவும், மானிய விலையில் உரம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி பா... சார்பில் வரும் 21ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
அதற்குள்ளாகவே ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் வகையில் பேருந்து கட்டணம், பால் விலை ஆகியவற்றை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியுள்ளது. மின்சாரக் கட்டணத்தையும் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குறை முறை ஆணையத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
பேருந்து கட்டண உயர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டதைவிட மிக அதிகமாக உள்ளது. நகரப் பேருந்துகளில் குறைந்த அளவு கட்டணம் 2 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சாதாரண  பேருந்துகளில்கூட குறைந்த அளவு கட்டணம் 4 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சில தடங்களில் பேருந்து கட்டணம் 200 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. வெளியூர் பேருந்துகளில் தனியார் ஆம்னி  பேருந்துகளைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் இனி நடைபயணம்தான் மேற்கொள்ள வேண்டுமோ என்று பொதுமக்கள் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பால் விலை உயர்வால் பிறந்த குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பால்விலையை ரே நேரத்தில் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். மின்வெட்டை செய்ய முடியாத தமிழக அரசு, மின்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
நிதி நெருக்கடி ஏற்படும்போது அதை சரிசெய்ய கசப்பு மருந்து கொடுக்கப்படுவது இயல்பானதுதான். ஆனால், தமிழக அரசு கசப்பு மருந்தை அளவுக்கு அதிகமாக கொடுத்து விஷமாக்கியிருக்கிறது. இதனால் மக்கள் வாழவே முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
உரவிலை உயர்வுக்கு எதிரான போராட்டத்துடன் மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வைக் கண்டித்தும் போராட்டம் நடத்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்துள்ளது. எனவே வரும் 21ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த உரவிலை உயர்வுக்கு எதிரான போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு பதிலாக மானிய விலையில் தட்டுப்பாடின்றி உரம் வழங்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வையும், பால்விலை உயர்வையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு ராமதாஸ்  அய்யா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.