பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.
பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.
பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?
சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,
அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?
கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?
மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?
கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கயவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?
ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?
ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?
மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?
தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?
பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?
நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?
நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?
கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா
சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...
கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...
கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...
அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று – கோயில், இன்று- டாஸ்மாக்….
நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...
அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்
இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா போன்றவர்கள் நாளை கடவுள்...
கடவுளை மற - மனிதனை நினை