திண்டிவனத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில் திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமென திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டார்.
÷விழுப்புரம் திமுக மாவட்ட செயலர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாமக சார்பில் திண்டிவனம்,மயிலம்,செஞ்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மொ.ப .சஙகர், ரா.பிரகாஷ்,அ.கணேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளாகும். அம்பேத்கருக்கும், எனக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் அவரை மும்பையில் அண்ணா சந்தித்தது பற்றி என்னிடம் கூறியுள்ளார். அதிலிருந்து அம்பேத்கர் மீது எனக்கு தனி மரியாதை.
வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் கருணைத் தொகையை வழங்கி வருகிறேன். ராமதாஸின் இடஒதுக்கிடு கோரிக்கையை நான் கைவிட மாட்டேன் என்றார்.