நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, July 17, 2012

மதுக்கடைக்கு பூட்டு போடும் போரட்டம் அதிர்ந்தது தமிழகம்..



மதுக்கடைக்கு பூட்டு போடும் போரட்டம்அதிர்ந்தது தமிழகம்


ஜூலை 17-2012: மது விலக்கை வலியுறுத்தி மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டம் நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
பாமக சார்பில் தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சென்னை, தியாகராயர் நகரில் உள்ள ம.பொ.சி. சிலைக்கு மாலை அணிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது அவர் பேசியது:


 மக்களைக் காப்பது அரசின் கடமையா, அல்லது மதுவை விற்று மக்களைக் கொல்வது அரசின் கடமையா என்ற என்னுடைய 22 ஆண்டு காலக் கேள்விக்கு திராவிடக் கட்சிகள் இன்னும் பதில் அளிக்கவில்லை.


 அரசியல் சட்டத்தில் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் மது வகைகள் மற்றும் போதை பொருள்களை மருந்து தேவைகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அரசியல் சட்டத்தையும் திராவிடக் கட்சிகள் மதிக்கவில்லை. எல்லா மதங்களும் மதுக் கூடாது என்றுதான் வலியுறுத்துகிறது. அதையும் கேட்க மறுக்கின்றனர்.
 இந்த ஆண்டில் மதுக்கடைகள் மூலம் ரூ.18 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இதன் மூலம் குடும்பங்களுக்கு ஏற்படும் இழப்புகளாலும், நோய் தாக்குதல்களாலும் அரசுக்கு 1 லட்சம் கோடி செலவாகிறது.


 வாக்குகளைப் பெறுவதற்காக இலவசங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
 மதுக்கடைகளை ஒரேடியாக மூட முடியாது என்கின்றனர். படிப்படியாக மூடுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.
மும்பையில் ஒரு பகுதியைச் சேர்ந்த 25 சதவீத பெண்கள் கையெழுத்துப் போட்டால் அங்குள்ள மதுக்கடைகளை மூடுகிறார்கள். இந்தச் சட்டத்தை தமிழ்நாட்டிலும் அமல்படுத்த வேண்டும்.
 இன்னும் 6 மாதங்கள் அவகாசம் தருகிறோம். அதற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோல் வீதிக்கு வரமாட்டோம். டிசம்பரில் இரவோடு இரவாக மதுக்கடைகளுக்குப் பூட்டு போடுவோம் என்றார் ராமதாஸ்.
பின்னர் மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போட சென்றபோது, ராமதாஸ் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


 காஞ்சிபுரம் காமராஜர் தெருவில் பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு பாமக இளைஞரணித் தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான அன்புமணி தலைமை தாங்கினார். ஈரோட்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
 பாமக போராட்டத்தையொட்டி மதுக்கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 
தமிழகம் முழுவதும் 25  ஆயிரத்திற்க்கு மேற்பட்டோர் கைது செய்யபட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டனர்..

ஆனால் காவல் துறையும் தமிழக அரசும் சேர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் 10 ஆயிரம் பேர் ம

 ட்டுமே என கூறியுள்ளனர்...