நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, January 23, 2011

கூத்தடிகள் எல்லாருக்கும் தான் ஆசை.....

கூத்தடிகள் எல்லாருக்கும் தான் ஆசை.....

ஆகா....கெளம்பிட்டாருய்யா....கெளம்பிட்டாரு.........ன்னு இப்போ ஒருத்தர் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் தான் புரட்சிக் கலைஞர் (எழுச்சிக் கலைஞர் ??) விஜயகாந்த். தமிழ் நாட்டு அரசியல படிக்க ஆரம்பிச்சதிலிருந்து எனக்கு புரட்சி, எழுச்சி இதுக்கெல்லாம் அர்த்தம் மறந்து போச்சு. என்ன சொல்றாங்களோ அதை கேட்டுக்க வேண்டியது தான். இவர் எதுக்கு அரசியலுக்கு வந்திருக்கார்னு அவருக்கே தெரியலை.

லஞ்சத்தை ஒலி(ளி, ழி??)ப்பேன், ரேஷன் அரிசியை வீட்டுக்கு கொண்டு வருவேன், அப்படி இப்படின்னு பண்ருட்டி ராமச்சந்திரன் எழுதி கொடுப்பதை அப்படியே 'வல்லரசு' பட டயலாக் மாதிரி போற இடமெல்லாம் கண்கல்(ள்??) சிவக்க பேசிட்டு வர்றார். இவர் கட்டின திருமண மண்டபத்துக்கு ஒரு ஆபத்துன்னு செய்தி வந்ததும், கலைஞர் வீடு தேடி ஒடுனவரை, கலைஞர் போட்டோ எடுத்து பத்திரிக்கைக்கு கொடுத்துட்டாராம். ஆக தன்னோட சொத்தை மக்களுக்கு தானமா கொடுப்பேன்னு சொல்றவர், எதுக்கு (அவர் பாஷைலயே சொன்னா) வீடு தேடி பாக்கறார்? அப்போ தன்னுடைய சொத்துக்கு ஒன்னுன்ன உடனே அதை காக்கக் கூடிய ஒருத்தரை தேடிப் பார்த்துப் பேசி, தன்னுடைய சொத்து மட்டும் காப்பாதிக்கணும்னு நினைக்கிற ஒருத்தர், ஆட்சிக்கு வந்து லஞ்சத்தை ஒலி(ளி ??ழி)க்கப் போறாறாம். அட்ரா சக்கை.

அடுத்து அய்யா ஆரம்பிச்சிருக்கிறது, ரேஷன் அரிசி. வீடுதேடி அரிசி வரும்னு சொல்றார். இதை முதல்வன் பட டயலாக் மாதிரி நம்பலாம். இதை எல்லாம் சரியா செய்வாங்க. ஏன்னா எல்லாரும் கை ஏந்துற நெலமைல இருந்தாதானே, நம்ம வண்டி ஓடும். ஒரு படி அரிசில தானே தி.மு.க கிட்ட தமிழ் நாடே விழுந்தது.

மூணாவது, எல்லா மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் தொடங்குவேன் என்பது. இது எனக்கு பிடிச்ச சமனிலைக் கொள்கை. ஆனா யார் சொல்றாங்க, எப்படி செய்வாங்க என்பதுதான் முக்கியம். இவர் நெத்தி வியர்வை நிலத்தில் சிந்தி சம்பாதிச்ச கோடிக்கணக்கான ரூபாயில கட்டுன, கல்யாண மண்டபம், காலேஜ் இன்ன பிற நிறுவனங்கள் இருப்பது எல்லாம் சென்னை, செங்கல்பட்டுல. மூச்சுக்கு முன்னூறு தரம் நான் மதுரைக்காரன்! மதுரைக்காரன்!ன்னு சொல்றீங்களே, அந்த காலேஜ உசிலம்பட்டீல கட்டுனா என்ன? அங்க கட்டுனா பணக்காரன் வந்து படிக்க மாட்டான், பாரதி ராஜா சூட்டிங் தான் நடக்கும்னு நீங்க சொல்றது கேக்குது. ஆக பி.ம்.டபிள்யூ, போர்டு எல்லாம் இளிச்சவாயங்க. முதல்ல அந்த பகுதிக்கு ஏற்ற தொழிற் சாலை என்னன்னு கண்டுபிடித்து, அதற்க்கு ஏற்ப அடிப்படை வசதிகளை ஏற்கனவே உள்ள விவசாயம் பாதிக்கப்படாம செயல்படுத்துவேன்னு நீங்க சொல்லீருந்தா, பாராட்டலாம். வாய்க்கு வந்த படி எல்லாம் பேசி நடத்த அரசாங்கம் என்ன ரசிகர் மன்றமா?

அடுத்து "அன்னைத் தமிழைக் காப்போம், அன்னிய மொழியைக் கற்ப்போம்"னு நீங்க ஆரம்பிச்சிருக்றது. நீங்க யார் சொல்லி இதை பேசுறீங்கன்னு நல்லாவே தெரியுது. பளிச்சுன்னு வெளிப்படையா இந்தியை கட்டாயப் பாடமாக்குவேன்னு சொல்லி பாக்கிறது? இந்தி படிக்காம, ஆங்கிலப் புலமை பெற்று உலகமெங்கும், தமிழர்கள் கணிப்பொறித்துறையில் வெளுத்துக் கட்டுவதும், இந்தி படித்த பீகார், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம்,ஓரிசா,ராஜஷ்தான், இமாச்சலப் பிரதேசம், இன்னும் எத்தனையோ மாநிலங்கள் அடிப்படை வசதிகள் கூட பெறாமல் இருப்பதையும், உங்களுக்கு, திரைக்கதை வசனம் எழுதிக் கொடுத்த "அவா" வசதியா மறந்திருப்பா.


கனவு காண எல்லோருக்கும் உரிமை உள்ளது போல, அரசியலுக்கு வரவும் எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் சொந்தமாக, கொள்கை, ஐந்து வருடத்திற்கான திட்டங்கள்,தொலை நோக்குப் பார்வை, நிர்வாகத் திறன், நிதி நிலை அறிவு, தலைமைப் பண்பு (கோடம் பாக்கம் கட்டப் பஞ்சாயத்து அல்ல) இவைகளை வளர்த்துக் கொண்டு வாருங்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை ஏமாந்ததின் பலனை இருபது வருடமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 


பிறகு கருணாநிதி, ஜெயலலிதா என கூத்தடிகள் நாட்டை ஆண்டு சுரண்டினது போததா நீங்க வேறவா... ம் ஆகாட்டும் ஆகாட்டும்


ஏ தமிழகமே உன் போலி வேசத்தை நிறுத்து...


அரசியல் தலைவர்களுக்கு ஏன் என் இனத்தின் மீது அவ்வளவு வெறுப்பு?

நேரத்தில் பெய்யாமல் போய் ஆறுகளை வற்ற விட்டு, தமிழர்களின் வயிறுகளை வாட விடுவதும்

நேரம் கடந்து பெய்து எங்களின் பயிர்களில் புகுந்து வடியாமல் நின்று, தமிழர்களின் வயிற்றில் அடித்து விடுவதும்

மழையான போது வன்னிய மக்களால்  தாங்கி கொள்ள முடிந்தது

சம உரிமை பேசிய சாத்தான்கள் எம்  இன உயிர்கள் மீது துப்பாக்கி சூடு
நடத்திய போது

 குண்டடிகள் என் மக்கள் மீது அடை மழையாய் கக்கி எம் இன தியாகிகளை கரி  கட்டைகளாய்


என் இனத்தின் குறுதியினை  இன்னும் குடித்து கொண்டிருக்கும்
கயவர்களை

உடம்பில் ஓடும் செந்நீரையெல்லாம் விவசாய நிலத்தில் கண்ணீராய் கொட்டி விட்ட என் இனத்தை

கல்வி வேலை வாய்ப்பு இவைகளுக்கு அப்பற்பட்டு உள்ள வேலிக்குள் அடைத்த பின்னும் பட்டினியே பரிசாக கிடைத்த போது




ஏ தமிழகமே என் இனம் கல்வி வேலைவாய்ப்பு. பொருளாதாரம் . பசி. பட்டினி இவற்றின் கொறபிடியிலிருந்து  விடுதலை பெறும் வரை நீ வளர்ந்தது போதும் .. உன் போலி வேசத்தை நிறுத்தி வை...



என் இனத்தின் 21 உயிர்களை கொன்று குருதியை குடித்த பின்னும் இரத்த வெறி அடங்காத

என் இன எதிரிகளை என்ன செய்வது?

என் இனத்தின் இரத்தத்தை குடித்த மூட்டை பூச்சிகள் இரத்த தானம் செய்ய போகிறது என

பத்திரம் எழுதி கொடுத்த  தமிழகத்தை ஆண்ட கட்சிகளின் பிணம் திண்ணி கழுகுகளை என்ன செய்வது?

தமிழனுக்கு சொரனை வந்தால் மூட்டை பூச்சிகள் கோபப்படும் 


ஆனால் எம் வன்னிய இன மக்களுக்கு கோபம் வந்தால்

 உம் தலைகளை
மூட்டை பூச்சிகள் தேடி வரும்

நிகழ்காலம் உமதென்றால்
வருங்காலம் எமது..

நிகழ்காலம் எமதென்றால்
உம் காலம் அழிந்து விடும்..


விரைவில்

நாளைய சமுதாயம் நன்றி சொல்ல....

நாளைய சமுதாயம் நன்றி சொல்ல..

எட்டி பிடிக்க முடியாமல்
உயரும் விலைவாசிகள்
தட்டிகேட்க முடியாமல்
தொடரும் ஊழல் பட்டியல்...

தள்ளாத வயதிலும்
பொல்லாத பதவி ஆசை
தோழியின் நலக்காகவே
கொட நாட்டு ஓய்வுகள்...

பேனரில் மட்டும் மீசை முறுக்கும்
நடிகர்களின் கட்சிகள்
கொள்கையற்ற மந்தைகளாய்
மானகெட்ட அரசியல் வாதிகள்...

குடியை கொடுத்துவிட்டு
மருத்துவ காப்பீட்டு திட்டம்
இனத்தை அழித்துவிட்டு
செம்மொழி மாநாடு...

குத்தாட்டமிட்டு கூத்தடிக்கும்
திரை உலகிற்க்கு பரிவட்டம்
ஜாமினில் உலா வரும் சாமியார்களின்
கால்களில் பக்தர்கள் கூட்டம்...

வறட்சி வெள்ளம் கொலை கொள்ளை
லஞ்சம் ஊழல் வன்முறை கற்பழிப்பு
ஆள் கடத்தல் கள்ள காதல் எதையும்
தடுக்க சக்தியில்லாத கடவுள்கள்...

நண்பர்களே என்று மாறும் இந்த மனித குளம்?
அறிவியல் வளரும் உலகில் அறிவு வளர வேண்டும்...
பொய்யறிவு மறைந்து மெய்யறிவு காண...
குடியை கெடுக்கும் குடியை விரட்ட...

கொள்ளையற்ற அரசியல் வாதிகளுக்கு சமாதி கட்ட...
தமிழகமே தலைகீழாய் மாறி
எங்கும் சமத்துவம் மலர...

மருத்துவர் அய்யா வழி நடப்போம்
மருத்துவர் சின்னய்யாவின்
சொல் படி நடப்போம்....

அரசுப்பணிகளில் வன்னியர்களின் பரிதபமான நிலை பாரீர்!

தமிழகத்தில் 6 கோடி மக்கள் தொகையில் 2.5. கோடி  மக்களை கொண்ட வன்னியர்கள் சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளாகியும் அரசுப்பணியில் நிலையை பார்த்தால் வேதனையும் கன்னீரும் தாக் மிஞ்சுகிறது
அரசுப்பணிகளில் வன்னியர்களின் பரிதபமான நிலை பாரீர்!








அரசு பதவிகள்                   மொத்தம்     வன்னியர்கள்
1.ஆளுநரின் செயலாளர்                                        1                           இல்லை

2.முதலமைச்சரின் செயலாளர்கள்                  5                            இல்லை

3.இந்திய ஆட்சிப்பணி (IAS)                                 325                             9

4.காவரல் பணி அதிகாரிகள்(IPS)                      162                             6

5.அரசு தலமைச்செயலர்                                        1                          இல்லை

6.அரசு செயலர்கள்(தலமைச்செயலகம்)        36                              1

7.கூடுதல் செயலாளர்கள் (Add,secy)                   15                       இல்லை

8.இனணச்செயலாளர்கள் (joint,secy)                    33                        இல்லை

9.துணைச்செயலாளர்கள் (Deputy Secy)              37                         இல்லை
 
10.சார்பு செயலாளர் (U.Secy)                                231                           7

11.பிரிவு செயலாளர்                                                650                          25

12.உதவி பிரிவு அலுவலர்                                  1300                          80

13.உதவயாளர்கள்                                                     700                            20

14.சட்டமன்ற செயலாளர்                                      1                         இல்லை

15.துறைத் தலைவர்(HOD)                                     124                            1

16.உயர்நீதிமன்ற நீதிபதிகள்                                  58                            1

17.மாவட்ட நீதிபதிகள்                                              57                            6

18.உதவி நீதிபதிகள்                                                   400                          60

19.முன்சீப்                                                                        775                         270

20.கூட்டுறவு வங்கி தலைவர்கள்                         2                             1

21.அரசு சார்ந்த நிறுவன
(ம)தன்னாட்சி அமைப்புகள்                                     66                     இல்லை

22.பல்கலைகழகங்கள்                                                19                            3

23.மாவட்ட ஆட்சியாளர்கள் (கலெக்டர்)          31                             2

24.காவல்துறை தலமை இயக்குனர் (DGP)        4                      இல்லை

25.காவல்துறை தலைவர் (IG)                                12                       3

26.மாவட்ட காவல்துறை
கண்காணிப்பாளர்கள்                                                  31                        3

27.மாவட்ட காவல்துறை ஆணையர்கள்          6                      இல்லை

28.தமிழ்நாடு தேர்வாணையம் (TNPSC)              14                          2

29.அரசு மருத்துவமணை தலைவர்                   21                           1

30.வாரியத்தலைவர்கள்                                            8                        இல்லை

31.ஆணையத்தலைவர்கள்                                      8                        இல்லை

32.ஆசிரிய தேர்வாரிய உறுப்பினர்கள்               4                      இல்லை

33.சீருடை பணியாளர் தேர்வு
உறுப்பினர்கள்                                                                 4                     இல்லை

34.அட்வேகேட் ஜெனரல்                                           2                      இல்லை

35.பப்ளிக் பிராசிகியுட்டர்                                          5                       இல்லை

36.மாவட்ட வருவாய் அலுவலர் (DRO)            35                         7

37.கோட்டச்சியர் (RDO)                                              270                        6

38.மாவட்ட கல்வி அலுவலர்கள்(DEO)              105                       6

39.முதன்மை கல்வி அலுவலர்கள்(CEO)           31                         3

40.தலைமைச்செயலாகத்தில் (IAS)                       3556                   128