எங்கள் ஆசிரியர்..! மருத்துவர் அய்யா.....
அகர முதல சொல்லித் தந்த எங்கள் ஆசிரியரே...
அடக்கம்தனை அறிய வைத்த எங்கள் மருத்துவரே...
ஆசை தீர பாடுகிறோம் உங்கள் புகழையே..!
இனிய தமிழ் பயிற்றுவித்த எங்கள் ஆசிரியையே...
இனிய நம் இனத்தின் பெருமையை சொல்லித்தந்த எங்கள் மருத்துவரே...
ஈன்ற தாயைப் போல நாங்கள் வணங்குவோம் உம்மையே..!
உலக மொழியை அறிய வைத்த எங்கள் ஆசிரியரே...உண்மைதனை எடுத்துரைத்த எங்கள் மருத்துவர் சின்னவரே...
ஊர் கேட்க சொல்லிடுவோம் உங்கள் பெருமையையே..!
எம் இன வரலாற்றை கற்றளித்த எங்கள் மாவீரனே...எளிமைதனை எமக்களித்த எங்கள் பெண்குல மாணிக்கமே...
ஏற்றிடுவோம் உம் புகழை உலக ஏட்டினிலே..!
ஐம்புலனும் அறிவியலை அறியவைத்த எங்கள் ஆசிரியரே...ஐயங்களை நீக்கி வைத்த எங்கள் மருத்துவரே...
ஒழுக்கம் கற்று நிற்கின்றோம் உங்கள் அன்பு முறையிலே..!
ஓர் நிலை சமூகஅறிவியலை படிக்க வைத்த எங்கள் ஆசிரியரே...ஓர்குலம் நாமெல்லாம் என்றுரைத்த எங்கள் மாவீரனே...
ஔவை போல கற்று தெளிந்தோம் உங்கள் வழியிலே..!
எஃகு போல் திடம் கொண்டோம் உம் அரசியலால்..
(எ)ஃகணமும் மனதில் ஏந்தி நிற்போம் உந்தன் கொள்கைகளை..!

மருத்துவர் அய்யாவழிநடப்போம்....
மனுடத்தை காத்து நிற்போம்....