அதாவது, செபடம்பர் 17 அதிகாலை 12 மணி முதல் மறியல் நடத்துவதாக வன்னியர் சங்கம் முன்பே கூறியிருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதே செபடம்பர் 16 இரவு சென்னையில் அறிவாலயம் திறப்புவிழா நடத்தி, செபடம்பர் 17 அதிகாலை 12 மணிக்கு மேல் தென்மாவட்ட திமுகவினர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை கடக்கும் வகையில் - சதி செய்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.
வன்முறையில் ஈடுபடுவதற்கு அணியமாக ஆயுதங்களுடன் வந்த குண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதான் இட ஒதுக்கீட்டு போரில் 21 பேர் உயிரிழக்கவும், ஒரு லட்சம் பேர் சிறைக்கு செல்லவும், பல்லாயிரக் கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் காவல்துறை வெறியாட்டத்தில் பாழாக்கப்படவும் காரணமான முதல் நடவடிக்கையாகும்.
திமுக குண்டர்கள், காவல்துறை வன்முறையாளர்களின் கொலைவெறியாட்டங்கள் தமிழ் மக்களின் நினைவலைகளில் இருந்து மறைந்து விட்டன. ஆனால், தமது உயிரைக் காப்பாற்ற வேண்டும், உடமைகளைப் பாதுகாக்க வேண்டும், காவல்துறையினர் துப்பாக்கிகளோடு ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சிலநூறு மரங்களை வெட்டி, சாலையில் தடுப்பை ஏற்படுத்தியதற்காக - வன்னியர்கள் இன்றும் 'மரம் வெட்டிகள்' என்று ஆதிக்கச் சாதிக் கூட்டத்தினரால் தூற்றப்படுகின்றனர்.
வன்னியப் போராளிகளின் அந்த மாபெரும் தியாகம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த 21 தியாகிகளை நினைவு கூறுவோம்.
இன்னுயிர் தந்து இனம் மானம் காத்த வன்னியர் குல சிங்கங்களின் புகைப்படங்கள்