நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, August 11, 2013

பச்சைத்தமிழன் டாக்டர் ராமதாசைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை.

பச்சைத்தமிழன் டாக்டர் ராமதாசைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை.


திரு வியசன் அவர்கள் மருத்துவர் அய்யாவை பற்றி தன்னுடை வலைத்தளத்தில்

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் பல திராவிட 
தலைவர்கள் பேசத்தயங்கும் தமிழர்கள்  இழந்த  பாரம்பரிய தமிழ் மண்ணை மீட்கும்
விடயம் பற்றி துணிந்து பேசியும் யாரும் இதுவரை அவரைப் பாராட்டி ஒரு பதிவைக் கூடப்  போடக் காணோம். 

மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை
சரி செய்ய வேண்டும் எனக் குரலெழுப்பும் திரு ராமதாஸ் அவர்களை தமிழன் என்ற
முறையில் பாராட்டாமலிருக்க என்னால் முடியவில்லை. தமிழ் அரசியல் தலைவர்களின்
சில நடவடிக்கைகளை, அல்லது தமிழினத்தை சாதியடிப்படையில் பிரிக்கும் கருத்துக்களை
நாம் எதிர்க்கும் வேளையில், அவர்கள் முன்னெடுக்கும் தமிழினத்துக்கு நன்மை பயக்கும் அல்லது 

தமிழர்களின் உரிமை சம்பந்தமான விடயங்களுக்காக குரலெழுப்பும் போது அவர்களுக்கு 
சாதி, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து ஆதரவளிக்க வேண்டியது தமிழனாய்ப் பிறந்த தமிழுணர்வுள்ள ஒவ்வொரு தமிழனதும் கடமையாகும். அதனால் தமிழர் மண்மீட்க
 பா.ம.க. தலைவர் ராமதாசின் தலைமையில் தமிழர்கள் அணிதிரள வேண்டும்.






பச்சைத்தமிழன் காமராஜர் பத்தாம்பசலித்தனமாக இழந்த
 தமிழ் மண்ணை இன்னொரு பச்சைத்தமிழன் ராமதாஸ் மீட்க வேண்டுமென்கிறார். இந்த
 விடயத்தில் அவருக்கு 
ஆதரவளிக்க வேண்டியது
 உலகெலாம் பரந்து  வாழும் 
தமிழர்கள் அனைவரதும் 
கடமையாகும்.  அதனால் தமிழ்
 நாட்டுத் தமிழ் வலைப்பதிவர்கள்
 சாதிக் காழ்ப்புணர்வால் 
திரு ராமதாஸ் அவர்களைப்
 பாராட்டாமல் இருந்தாலும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை.  

திருப்பதிக்குச் செல்லும் போதெல்லாம்,  நீண்ட வரிசையில் மணிக்கணக்காக  சுவாமி தரிசனத்துக்காகக் காத்திருக்கும்போது. அந்தக் கோயிலைச் சுற்றி, தமிழ்நாட்டுக் 
கோயில்களை விட அதிகளவில், நிறைந்திருக்கும் தமிழ்க் கல்வெட்டுக்களை அப்படியே 
தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டு போவது என்னுடைய வழக்கம், அப்பொழுது மனதில் எவ்வளவு பாரமாக இருக்கிறது என்பதை அப்படிச் செய்து பார்த்தவர்கள் உணர்வார்கள். 

தமிழ்க் கடவுள் வேங்கடத்து நெடியோனின் திருப்பதியும், தமிழன் கண்ணப்பநாயனாரின் திருக்காளத்தியும் தமிழர்களுடையவை. அவற்றை தமிழ் நாட்டுடன் மீண்டும் இணைக்க 
முடியாது போனாலும், அவையெல்லாம் பாரம்பரியமாக தமிழர்களுடையவை என்று 
உரிமையுடன், துணிந்து சொல்லும் திரு. ராமதாசைப் பாராட்டவும் ஒரு துணிவு  இருக்க வேண்டும்.  
 சென்னைஆந்திராவில் தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்
 என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்ஆந்திரத்தை இரண்டாகபிரித்து தெலுங்கானா தனி மாநிலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில்சித்தூர் மாவட்டத்தில் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதுஆந்திரத்தில் உரிமை இழந்து வாடும் நமது தமிழ் சொந்தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய கடமையும்பொறுப்பும் தமிழக மக்களுக்கும்அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது. 

 70 ஆயிரம் ச.கிமீ இழப்பு 1956-ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுஅதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது தமிழ்நாடு தான்.தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்கள் துண்டாடப்பட்டு அருகில் உள்ள ஆந்திராகர்நாடகாகேரளா ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்பட்டனஇதனால்தமிழகம் மொத்தம் 70 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதிகளை இழந்தது. 
 ஆந்திராவில் 32 ஆயிரம் ச.கி.மீ இதில் பாதிஅதாவது 32 ஆயிரம் சதுர கிலோ மீட்டரை நாம் ஆந்திராவிடம் இழந்தோம்.தமிழ்நாட்டில் அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கியவட்டங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டன. 300 தமிழ் கிராமங்கள் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதெலுங்கு பேசும் மக்களுக்காக மட்டுமே ஆந்திரா உருவாக்கப்பட்டது.ஆனால் தமிழை தாய் மொழியாகக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் 300-க்கும் அதிகமான கிராமங்கள் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது தமிழர்களுக்கு செய்யப்பட்ட துரோகம் ஆகும்இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள தமிழர்களும்இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களும் போராடியதன் பயனாக 1961-ஆம் ஆண்டில் திருத்தணி வட்டமும்பள்ளிப்பட்டு பகுதியும் மீண்டும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டனதமிழர் துயரம் மீதமுள்ள 8 வட்டங்களும் இன்று வரை ஆந்திரத்தின் ஓர் அங்கமாகவே இருந்துவருகின்றன. 
தெலுங்கு பேசும் மக்களின் மாநிலமான ஆந்திரத்தில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்கள் என்பதால் இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இழந்த உரிமைகளும்அனுபவித்த துன்பங்களும் எண்ணிலடங்காதவைதெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களுக்கே கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று கூறி இவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டதுஇந்தப் பகுதிகளில் வாழும் மக்களில் 95விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழர்கள் என்ற போதிலும்,இவர்களால் ஆந்திர சட்டப்பேரவைக்கோமக்களவைக்கோ தேர்ந்தெடுக்கப்பட முடியவில்லைஆந்திர மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு வரை இப்பகுதிகளின் மக்கள் பிரதிநிதிகளாக தமிழர்களே தேர்வு செய்யப்பட்டு வந்தனர். 
இயற்கைக்கு முரணாக ஆந்திரத்துடன் இணைக்கப்பட்டதால் இவர்கள் தங்களின் அரசியல் உரிமையையும் இழந்தனர்.தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட உள்ள நிலையில்தமிழர்கள் அதிகம் வாழும் 200-க்கும் அதிகமான கிராமங்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. 75-க்கும் அதிகமான ஊராட்சிகள் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆந்திர அரசுக்கு அனுப்பியுள்ளன. 
 சென்னை 50 கி.மீ-ஹைதராபாத் 700 கி.மீ ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் 700 கி.மீ தொலைவில் இருப்பதால்,தங்களின் கோரிக்கைகள் குறித்து முறையிட அங்கு அடிக்கடி செல்ல முடியவில்லைதமிழகத் தலைநகர் சென்னை 50 கி.மீ தொலைவில் இருப்பதால் தாங்கள் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் இணைத்தால் தலைநகருக்கு எளிதில் சென்று கோரிக்கைகள் குறித்து முறையிட முடியும் என்றும் இப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். 
திருப்பதிகாளஹஸ்தியை இணைக்க வேண்டும் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தை சரி செய்ய இப்போது மிகச்சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளதுஅப்போது ஆந்திரத்துடன் இணைக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வாழும் திருப்பதிதிருகாளஹஸ்திபுத்தூர்சத்தியவேடு,சித்தூர் உள்ளிட்ட 8 வட்டங்களை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்இக்கோரிக்கையை தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும். 
சட்டசபையில் தீர்மானம் தேவை இதன் முதல்கட்டமாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி ,இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி .வியசன்