நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, March 4, 2011

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் 4-3-2011

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம்-புகைப்படம்
<> 
<>
 














































































4-3-2011 அன்று பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் திண்டிவனத்திலிள்ள  தைலபுர தோட்டத்தில் நடைபெற்றது அதில் மருத்துவர் அய்யா பேசியவை


 உங்கள் உள்ள எண்ணங்களையும், என்னுடைய உள்ளத்தின் எண்ணங்களையும் நீங்கள் அறிவீர்கள். உள்ளேபோனபோது மகிழ்ச்சியோடு சென்றேன். திரும்பி வரும்போது மகிழ்ச்சியோடுதான் வந்தேன் என இங்கு பேசியவர்கள் கூறினார்கள். ஆனால் இன்னும் ஒன்று சேர்த்து கிடைத்து இருந்தால் மிக மகிழ்ச்சியோடு திரும்பி வந்து இருப்பேன்.
கூட்டணியில் சேர்ந்து விட்டோம். இனி நம்முடைய இலக்கு வெற்றிகளை குவிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிகளை பெறும்.
பா.ம.க.வின் ஒவ்வொரு தொண்டனும் வெற்றிக்கு பாடுபட வேண்டும். 1991, 1996-ல் சமூக நீதி கூட்டணியை அமைத்தோம். அன்று முதல் இன்று வரை சமூக நீதிக்காக பாடுபட்டு வருகிறோம். பா.ம.க. வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற பாடுபட வேண்டும்.

மேலும் கூட்டணிவேட்பாளர்களின் தொகுதியில் 3 மடங்கு பணி செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். தி.மு.க. தலைவர் கருணாநிதி 6-வது முறையாக முதல்வராக நம்முடைய வியர்வை துளிகளை எவ்வளவு வேண்டுமானாலும் சிந்த தயாராக இருக்க வேண்டும்.
டெல்லி மேலவை தேர்தலில் ஏமாற்றமும், மன உளைச்சலில் இருந்தபோது, தி.மு.க. நிர்வாக குழுவில் தீர்மானம் போட்டு கூட்டணியில் இருந்து வெளியேற்றியது. உயர்மட்டக்குழுவை    திரும்பவும்  கூட்டணியில் சேர்த்துக் கொண்டது.

எப்போதும் தமிழக அரசையும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் நான் எந்தவித விமர்சனமும் செய்ய வில்லை. தமிழகத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் பா.ம.க. ஒன்றும் சொல்லவில்லையே என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். கடந்த ஓராண்டாக இந்த கூட்டணியில் நீடிக்க வேண்டும் என்ற காரணத்தினால்தான் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடன்படிக்கையும் ஏற்பட்டது.
அரியலூர் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொண்டு கருணாநிதி தன்னிடம் அண்ணா கூறியதாக கூறினார். வீட்டில் 10 மற்றும் 15 பட்டுபுடவைகள் இருந்தாலும் விருந்துக்கு செல்லும்போது, ஒரு பட்டுப்புடவைதான் கட்ட முடியும். அடுத்த விழாவிற்கு செல்லும்போதுதான் அடுத்த பட்டுப்புடவையை கட்ட முடியும் என்றார்.


ஒரே ஒரு பட்டுப்புடவை வைத்து இருப்பவர்கள் என்ன செய்வது என்றாலும் தி.மு.க. கூட்டணிக்காகவும், அனைத்து கட்சிக்காகவும் கடந்த முறை கிடைத்த 31 என்பதை பெற்றுக்கொண்டேன். தமிழகத்தில் மேலவை நம்மால்தான் வந்தது. இதை கூட்டணி பற்றி பேசியபோது தெரிவித்தேன். அவரும் உடன் இருந்த அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் ஆமாம் என்றனர்.
பா.ம.க.வில் பலருக்கு உயர் பதவிகள் வருங்காலத்தில் கிடைக்கும். யாரும் வருத்தம் அடைய வேண்டாம். பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு பதவிகள் தேடி வரும். தேர்தலுக்கு 35 நாட்கள்தான் உள்ளது. பென்னாகரம் தேர்தலில் அறிமுகப்படுத்திய திட்டம்தான் இந்த தேர்தலில் செயல்படுத்தபோகிறோம்.

தேர்தலில் களப்பணியாளர்களின் பணி முக்கியமானது. களப்பணியாளர்களிடம் 100 பேர் வாக்காளர் பட்டியல் உள்ளதா என்பதை ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் உள்பட 52 பொறுப்பாளர்களும் கவனித்து அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

பாமகவின் கூட்டணி மகத்தான வெற்றி பெற என்றும் அய்யா வழி நடப்போம்.மருத்துவர் சின்னய்யாவின் சொல்படி கேட்போம்

அதிமுகவிட்ம் 800 கோடி பணம் வாங்கிய விஜயகாந்த்....


அதிமுகவிட்ம் 800 கோடி பணம் பெற்றுகொண்டு அதிமுகவில் விசயகாந்த்
இணைந்தார். பல நாட்களாக திமுக, காங்கிரசிடம் பல கோடி கேட்டு பேரம் நடத்தி வந்த விசயகாந்த் 4-3-2011 அன்று இரவு செயலலிதவிடம் 800 கோடிக்கு விலைபோனர். அதுமட்டுமில்லாமல் அவர் போட்டியிடும் 41 தொகுதிக்கும் ஒரு தொகுதிக்கு 1 கோடி என 41 தொகுதிக்கு 41 கோடி பணம்தருவதாகவும் பேரம் பேசப்பட்டு செயலலிதாவிடம் கூட்டணி வைத்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களிடையே பலத்த பேச்சு அடிபடுகிறது.





வெற்றி கனி மாங்கனி- (நாளை நமதே-தமிழகமும் நமதே...)

 

போற்றுவோர் போற்றட்டும். புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும்
நில்லேன், அஞ்சேன்.


வரலாறு என்பது கற்பனையாய் புனையும் கவிதையோ கதையோ இல்லை.

புதினமோ புராணமோ இல்லை.
அது ஒரு புகைப்படமோ, ஓவியமோ இல்லை.
வரலாற்றில் கற்பனைக்கோ, உயர்வு நவிற்சிக்கோ இடமில்லை. அது கடந்த கால உண்மை நிகழ்வுகளின் பதிவேடு. உண்மை சம்பவங்களின் வரைபடம்.

ஒரு இனமும், சமுதாயமும், நாடும் முன்னேற அவை தங்களுடைய கடந்த கால வரலாற்றை தெளிவாக அறிந்திருக்கவேண்டும். தன்னை அறியாதவன், தன் இனத்தை உணராதவன், தன் சமூகசிந்தனை அற்றவன், தன் கடந்த கால வ்ரலாற்றை தெரியாதவன் ஜடமாகி, பிணமாகி பின் மண்னாகிறான். 

வன்னியர் குல நாகரீகத்தையும், பண்பாட்டையும், வளர்ச்சியையும் விளக்கும் வகையில் தெளிவாக உணர்ந்து மறைந்து போன அல்லது மறைக்கப்பட்ட பழைய வரலாற்றுச் சுவடுகளை நம் இளைய தலைமுறையினர் அறிய வழி செய்திடல் வேண்டும்.

அன்பும், கருனையும், பரிவும், பற்றும், பணிவும், வீரமும், விவேகமும் எம் குல சொத்து. இளைய தலைமுறையினர் இவை அறிந்து ஆர்வத்துடன் செயல்படின் வரலாற்றில் தடம் பதித்த எமது இனம் மீண்டும் காலத்தையும் வென்று நிற்க்கும் என்பதில் ஐயமில்லை.

அன்பார்ந்த வன்னிய குல பெருமக்களே ஒரு பணிவான வேண்டுகோள்.
 
நீவிர் எவ்வித கட்சியை சேர்ந்தவராகினும் நம்மினம் காக்க வன்னிய குலம் தழைக்க மருத்துவர் அய்யா வழி நடப்போம்
 
மாம்பழ சின்னத்தில் வாக்களிப்போம்
மருத்துவர் அய்யாவின் கரத்தை வலுபடுத்துவோம்...

 (நாளை நமதே-தமிழகமும் நமதே...)