நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
Showing posts with label ஜெயலலிதா. Show all posts
Showing posts with label ஜெயலலிதா. Show all posts

Friday, November 18, 2011

சாக்கடிக்கும் பேருந்து,பால்,மின்சார உயர்வு ஒரு நாள் சாகடிக்கும் உயர்வுக்கு காரணமான அனைவரையும்....

பேருந்து கட்டண உயர்வுக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் காரணம்?





பேருந்து கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு?,என பலத்த இடியை தமிழக முதல்வர் உலகத்திலேயே நிர்வாக திறமை படைத்த அம்மா அவர்கள் மக்கள் தலையில் இறக்கியுள்ளார்.

பேருந்துகளில் 18-11-2011 அன்று ஓரே அலறல் சத்தம் சில தாய்மார்கள் கண்ணீர் மல்க பேருந்து நடத்துனர்களிடம் முறையிட்டதும்,அருகில் இருக்கும் அறிமுகமே இல்லதா நபர்களிடமும் நெஞ்சம் உருக வைக்கும் அளவுக்கு புலம்பியதும் வயதான முதியோர்,விவசாயிகள் ,இளைஞர்கள் என ஆவேசபட்டது நான் இதுவரை கண்டிராத சம்பவம்.பேருந்து விலை உயர்வல் மனம் நொந்து உள் மனதுக்குள் அழுது கொண்டிருந்த எனக்கு மேற்கண்ட சம்பவங்கள் என்னை கண்ணீர் சிந்த வைத்தது..

ஒரு நிமிடம் என்னை நானே வெறுக்கும் அளவுக்கும் எப்படியாவது இதை தட்டிகேட்க வேண்டும் என வெறியும் என் மனதுக்குள் தாண்டவமாடியது..

20.000 ரூபாய் ஊதியம் வாங்கும் எனக்கே இவ்வளவு வெறி...
எப்படியும் தன் உழைப்பால் இதனை சரிசெய்துவிட முடியும் என தன்னம்பிக்கை உள்ள எனக்கே இவ்வளவு பாதிப்பு மனதுக்குள்..

கூலி,5.000,10.000என சம்பளம் வாங்குபவருக்குள் எத்தனை வெறி இருக்கும்
எவ்வளவு வலி இருக்கும்

நாட்டு மக்களை பாதுகாக்க  வேண்டிய முதல்வரே..தனியார் பேருந்து முதலைகளிடம் 450 கோடிக்கு ஆசைபட்டு அவர்களின் வாழ்வில் ஒளி வீச ஏழைகளின் விளக்கில் திரியை பிடிங்கி இருப்பதாக தகவல்கள் பொது  மக்களிடம் ஆழமாக பதிந்துள்ளது..

மத்திய அரசு பணம் தரவில்லை அதனால் தமிழக மக்கள் உங்களிடம் வராமல் நான் யாரிடம் செல்வேன் என முதல்வர் நீலிக்கண்ணீர் வடித்ததை அவர்களுடைய கட்சிகாரா்களலே ஏற்று கொள்ள முடியவில்லை..

நிர்வாக திறமையற்ற ஒருவரை முதல்வராக்கி விட்டேமோ என மக்களை 6-மாதத்திற்க்குள் சிந்திக்க வைத்துவிட்டார் முதல்வர்...



கஜானா காலி என்பதை ஆட்சிக்கு வரும்பேதெல்லாம்  மீண்டும்  மீண்டும் வலியுறுத்தும் ஜெயலலிதா அப்போது தன் கவனத்தை திருப்பியது, அரசு ஊழியர்கள் மீது.   அரசு ஊழியர்களின் சலுகைகள் அத்தனையையும் பறித்தார்.    அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கிய உடன், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தார்.  அப்போது ஜெயலலிதா அடித்த அடி, அரசு ஊழியர்கள் மீது மட்டும் விழுந்தது.  இப்போது மக்கள் அத்தனை பேர் மீதும் விழுந்துள்ளது.


போக்குவரத்துக் கழகங்கள் குறித்து பேசிய ஜெயலலிதா, “அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் உள்ளன.  எரிபொருள், வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கும், சாலை விபத்துகளில் நிவாரணம் வழங்காததால் நீதிமன்றங்களில் பிணையாக வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்கவும், போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியமும், ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் இதரப் பலன்களை அளிக்கவும் இயலாத சூழ்நிலையை முந்தைய தி.மு.க. அரசு ஏற்படுத்தி அரசுப் போக்குவரத்துக் கழகங்களை ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு மக்களின் சிரமத்தை கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காமல், டீசலின் விலையை உயர்த்திக் கொண்டே செல்கிறது.  2001 ஆம் ஆண்டு லிட்டருக்கு 18 ரூபாய் 26 காசுகள் என்று இருந்த டீசல் விலை தற்போது 43 ரூபாய் 95 காசுகள் என்ற அளவிற்கு மத்திய அரசால் உயர்த்தப்பட்டுவிட்டது. இது தவிர, டயர், டியூப் உட்பட பல்வேறு உதிரி பாகங்களின் விலையும், தொழிலாளர்களின் ஊதியமும் பெருமளவு உயர்ந்துவிட்டன. இதன் காரணமாக, 31 மார்ச், 2011 நிலவரப்படி, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் அனைத்திற்கும் 6,150 கோடி ரூபாய் அளவுக்கு ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் நிலையில் உள்ளதால், போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் ஊதியத்திற்காக எனது தலைமையிலான தமிழக அரசு  ஒவ்வொரு மாதமும் 60 கோடி ரூபாய் நிதி உதவி அளித்து வருகிறது.  அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுக்காமல் விட்டுவிட்டால், போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்” என்று கூறினார்.

புதிய அரசு பொறுப்பேற்று தாக்கல் செய்யப் பட்ட இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், போக்குவரத்து என்ற தலைப்பில் நிதி அமைச்சர் ஆற்றிய உரை என்னவென்று பார்ப்போம்.

போக்குவரத்து
119. தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகங்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் நம்பகத்தன்மையுடைய போக்குவரத்து வசதிகளை பொதுமக்களுக்கு அளித்து வருகின்றன. தற்போது 21,169 மாநில  போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு போக்குவரத்து நிறுவனங்களின் தற்போதைய நிதிநிலை மிக மோசமான நிலையில் உள்ளது. எனவே, அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக்கூட மாநில அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. பணியாளர் கட்டுப்பாட்டுடன் செயல்பட வழிவகை செய்து தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், போக்குவரத்துக் கழகங்களின் செயல் திறனை மேம்படுத்துவதற்கும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். போக்குவரத்துக் கழகங்களுக்குக் கூடுதல் வருவாயை ஏற்படுத்தும் வகையில் தற்போது கணிசமாக நிலம் உள்ள பேருந்து நிலையங்களை அரசு-தனியார் கூட்டு முயற்சியால் பேருந்து நிறுத்தம் வசதியுடன் அடுக்கக வணிக வளாகம் கட்டி மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு 2011-2012 ஆம் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் பங்கு மூலதன உதவிக்கென 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கு இழப்பீடாக மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்க 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.”

ஆகஸ்ட் 4 அன்று தாக்கல் செய்யப் பட்டுள்ள பட்ஜெட்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்கப் படும், மாநிலப் போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவித் தொகை வழங்கப் படும் என்று, ஆடம்பரமாக அறிவித்து விட்டு, நான்கு மாதங்களில் அப்படியென்ன நெருக்கடி முற்றி விட்டது ?

நிதி நிலைமை மோசமாகி விட்டது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணம்தான் என்றாலும், மன்னார்குடி மாபியா சார்பில், தனியார் பேருந்து உரிமையாளர்களிடமிருந்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதற்காக 450 கோடி ரூபாய் வசூல் செய்யப் பட்டு கடந்த வாரம் கொடுக்கப் பட்டுள்ளது என்று நம்பகமாக வட்டாரங்களிடமிருந்து வரும் தகவல்களையும் நம்பாமல் இருக்க முடியவில்லை.  மே மாதமே பொறுப்பேற்ற அதிமுக அரசு, ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறை சார்பாக ஏராளமான அறிவிப்புகளைச் செய்து விட்டு, இன்று போக்குவரத்துக கழகங்களே திவாலாகி விட்டன என்று சொல்லுவதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை


------------------------------------------------------------------------------------------------------------பால் விலை கடைகளில் 50 ரூபாய் எத்தனை தாய்மார்களின் மடியில் சாவு மணி அடித்து விட்டர் முதல்வர்...

சாக்கடிக்கும் பேருந்து,பால்,மின்சார உயர்வு ஒரு நாள் சாகடிக்கும் உயர்வுக்கு காரணமான
அனைவரையும்....

கண்ணகி பிறந்த மண்.. எம் தாய்மார்களும் இம் மண்ணில் பிறந்தவர்கள்...

பல்லவ வீரா்கள் வாழ்ந்த மண் .... அவர்கள் வழியில் வளரும் இளைஞர்கள் நாங்கள்....

நிச்சயம் ஒரு நாள் விடியும் அப்பொழுது தமிழர்கள் யாரென்னு புரியும்...






Wednesday, November 16, 2011

அதிமுக ஆட்சியை அலசிப் பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.


சவுக்கு---

அதிமுக அரசு பதவியேற்று ஆறு மாதங்கள் ஆகி விட்டன.   புதிதாக பொறுப்பேற்ற அரசை ஆறு மாதங்கள் கழித்தே விமர்சனம் செய்ய வேண்டும் என்று எடுத்திருந்த முடிவை, முதல் வாரத்திலேயே மாற்றியது ஜெயலலிதா அரசு சமச்சீர் கல்வி தொடர்பாக எடுத்த முடிவு.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஜெயலலிதா காட்டும் முனைப்பு பாராட்டத்தக்கது.    மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் சிறப்பான திட்டமாக இருந்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளில் 70 லட்சம் லேப்டாப்புகளை கொள்முதல் செய்யும் ஒரு அரசு, வைரஸ் தொந்தரவுகள் குறைவாக உள்ள இலவச மென்பாருளான லைனக்ஸ் மென்பொருளை பயன்படுத்தாமல், வின்டோஸ் மென்பொருள் உள்ள லேப்டாப்புகளை வாங்குவது, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி க்ளின்டனின் வருகையோடு தொடர்புள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அரசு நிறுவனமான எல்காட்டின் செர்வர்களே லைனக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தும் போது, மாணவர்களுக்கு மட்டும் எதற்காக விண்டோஸ். 

July---20-d
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை தொடர்ந்து பல்வேறு பொருட்களை வாங்குவதற்கும், தொடர்ந்து ஆன்டி வைரஸ் மென்பொருட்களை நம்பி இருப்பதற்கும் நிர்பந்திக்கும் ஒரு நிறுவனம் என்பது கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.

லேப்டாப் கொள்முதல் செய்வதற்காக முதலில் விடப்பட்ட டெண்டரில் 320 ஜிபி ஹார்ட் டிஸ்க், வைஃபை, வெப் கேம் வசதிகள் இருந்தன.  மைக்ரோசாப்ட் மென்பொருட்களை வாங்குவதற்காக, இரண்டாவதாக வெளியிடப்பட்ட டெண்டரில், வைஃபை, வெப்கேம் வசதிகள் நீக்கப் பட்டன.  ஹார்ட் டிஸ்க் 320 ஜிபியிலிருந்து 160 ஜிபியாக குறைக்கப் பட்டது.   வெளிப்படையான நிர்வாகம் வேண்டும் என்று அறிவிக்கும் ஜெயலலிதா, இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு பணிந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.  வைஃபை வசதி இல்லாத லேப்டாப் எதற்கு பயன்படும் ?  இணைய வசதியை மாணவர்களுக்கு எப்படிக் கொடுப்பார்கள் ? 
Microsoft_Sign_on_German_campus
மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதற்காக இந்தத் திட்டமா, அல்லது மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதற்காக இந்தத் திட்டமா என்று சந்தேகமாக இருக்கிறது ?

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டை நீக்குவேன் என்று அறிவித்த அதிமுக அரசு, ஆறு மாதங்களைக் கடந்தும் இன்றும் மின்வெட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

சமச்சீர் கல்வியைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசு எடுத்த நடவடிக்கைகள் பல நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப் பட்டிருப்பது இந்த அரசுக்கு ஒரு கரும்புள்ளியாகவே இருக்கிறது.  அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டிடத்தை மாற்றும் திட்டம் ஒரு சிறந்த உதாரணம்.  சென்னையில் உள்ள 60 ஆண்டுகள் பழமையான குழந்தைகள் மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தருவதை விட்டு விட்டு, ஒரு அழகான நூலகத்தை மாற்ற உத்தேசித்தது பொதுமக்களிடையே அதிமுக அரசின் மீது கடும் அதிருப்தியை உருவாக்கியது.
 May_16_a
சமச்சீர் கல்வியில் ஜெயலலிதா காட்டிய பிடிவாதமும் பொதுமக்களிடையே அதிருப்தி மட்டுமல்லாது கோபத்தை ஏற்படுத்தியது.   சென்னை உயர்நீதிமன்றம் அளித்த ஒரு விரிவான ஆழமான தீர்ப்பையும் சட்டை செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, இரண்டு மாத காலமாக குழந்தைகளை படிக்க விடாமல் தடுத்த செயலை யாரும் ரசிக்கவில்லை.

மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கமும் பரவலான எதிர்ப்பையே சந்தித்துள்ளது.  இது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக ஜெயலலிதா திமுகவை வளர்ப்பதற்கே உதவி செய்கிறார்.  மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கத்திற்கு எதிராக இன்று சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினரை பார்க்கும் போது இந்தக் கருத்து வலுப்பெறுகிறது.   குடும்பச் சண்டையிலும், ஊழல் புகார்களிலும் உழன்று கொண்டிருக்கும் ஒரு கட்சிக்கு இப்படி வாழ்வளிப்பது எப்படிப்பட்ட அரசியல் என்பது புரியவில்லை.

மேலும், ஜெயலலிதா திமுக அரசின் வழக்கறிஞர் பிரிவை குறைத்து மதிப்பிடுகிறார்.   திமுக வழக்கறிஞர் பிரிவு, அதிமுக வழக்கறிஞர் பிரிவைப் போல மங்குணிப் பிரிவு அல்ல.  கடந்த திமுக ஆட்சியில் நடந்த அத்தனை அட்டூழியங்களுக்கும் எதிராக ஒரு வழக்கைக் கூட அதிமுக அணி போடவில்லை என்பது ஊரறிந்த உண்மை.  ஆனால் நில அபகரிப்பு வழக்குகள் உட்பட, அத்தனை வழக்குகளிலும், திமுக வழக்கறிஞர்கள் எப்படித் துடிப்பாக செயல்படுகிறார்கள் என்பதை ஜெயலலிதா கவனத்தில் கொள்ள வேண்டும்.

மூன்று தமிழர்களை தூக்கிலிருந்து காப்பாற்றுவதற்கு மிகச் சிறப்பான ஒரு தீர்மானத்தை இயற்றி விட்டு, அவர்கள் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதில் மனு தாக்கல் செய்கையில், சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்தைப் பற்றி ஒரு வரி கூட சொல்லாமல், அவர்கள் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எடுத்திருக்கக் கூடிய நிலைபாடு, சட்டமன்றத் தீர்மானத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அதிமுக ஆட்சியில் மிகப் பெரிய கரும்புள்ளியாக அமைந்த ஒரு விஷயம் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்.  ஜெயலலிதா அரசு என்றாலே, காவல்துறையினருக்கு கொண்டாட்டம் தான்.  மனித உரிமை மீறல்களை அரங்கேற்றுவதில் எப்போதுமே முன்னணியில் உள்ள காவல்துறை, ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அந்த மீறல்களை சற்றே துணிச்சலோடு செய்யும்.  இந்தக் கருத்து, பரமக்குடி சம்பவத்திலும் உறுதி செய்யப் பட்டிருக்கிறது. 
43
கண்துடைப்புக்காக ஒரு விசாரணைக் கமிஷனை போட்டு விட்டு, அந்த அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகம் தொடர்ந்த வழக்கில் அவர்களைக் காப்பாற்றுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கிறது அதிமுக அரசு.   பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப் பட்ட மக்களை சந்திக்க மு.க.ஸ்டாலின் சென்ற போது அவருக்கு கிடைத்த மிகச் சிறப்பான வரவேற்பு இதற்கு ஒரு முக்கியச் சான்று.

ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ஜெயலலிதா அரசின் நடவடிக்கைகள் சிறப்பாகவே இருக்கின்றன. குறிப்பாக டிஎன்பிஎஸ்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நடத்தப் பட்ட சோதனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.   திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு எதிராக தொடரப்பட்டு வரும் சொத்துக் குவிப்பு வழக்குகளும் சிறப்பானவையே…..  ஆனால் இந்த வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் அமைத்து நீதிமன்ற விசாரணையை துரிதப் படுத்தினால் மட்டுமே இந்தத் தொடக்கம் சிறப்பாக அமையும்.    இன்னும் ஏராளமாக சொத்துக்களை குவித்திருக்கும் மற்ற திமுக பிரமுகர்கள் மீதும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தால், அது  மக்களிடையே வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
 DSC_0106
டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் நடந்த சோதனையின் போது
புதிய தலைமைச் செயலக கட்டுமானத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிப்பதற்கு ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்து விட்டு, அந்த ஆணையத்தின் தலைவராக ஒரு ஊழல் பெருச்சாளியை நீதிபதியாக நியமித்திருப்பது இந்த ஆணையத்தின் நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.  விசாரணை தொடங்கி இந்நேரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்க வேண்டிய விசாரணை, தங்கராஜ் என்ற ஒரு ஊழல் பெருச்சாளியை நீதிபதியாக நியமித்ததால் இன்று உயர்நீதிமன்ற வழக்கில் உழன்று கொண்டிருக்கிறது.

நில அபகரிப்புக்கென்று தனிப் பிரிவை அமைத்து, அந்தப் பிரிவு பொதுமக்களிடமிருந்து புகார்களை வாங்கி நடவடிக்கை எடுப்பது ஜெயலலிதா அரசின் மற்றொரு சிறப்பான நடவடிக்கை.  பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கூப்பாடு போட்டாலும், புகார் கொடுப்பவர்கள் யாரும் கட்சிக்காரர்கள் அல்லவே….. திமுக ரவுடிகளிடம் நிலத்தை இழந்து, காவல்துறையினரிடம் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காததால் செய்வதறியாது திகைத்த பொதுமக்களே ஆயிரக்கணக்கில் புகார் கொடுத்து வருகிறார்கள்.  வழக்கறிஞர் புகழேந்தியிடம் வந்த ஒரு புகாரே இதற்கு உதாரணம்.   சென்யை, ஷெனாய் நகரில் 50 ஆண்டுகளாக குடியிருந்த ஒரு குடும்பத்தை மதுரையைச் சேர்ந்த தளபதி என்பவர், அந்த இடம் தங்களுக்குச் சொந்தம் என்று வந்து மிரட்டினார்.  அவருக்கு ஆதரவாக தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கும் ப.ரங்கநாதனும், கவுரிசங்கரும் வந்து மிரட்டினார்கள்.   இவர்கள் கையாண்ட அடுத்த தந்திரம் என்ன தெரியுமா ?   அப்போது அண்ணா நகர் துணை ஆணையராக இருந்த பன்னீர் செல்வத்தை அணுகினார்.  பன்னீர் செல்வம், அந்த வீட்டில் குடியிருந்தவரை அழைத்து “வீட்டை விற்பனை செய் அல்லது அவர் கேட்கும் தொகையை கொடு.  இல்லையென்றால், வீட்டில் இருக்கும் பெண்களை அழைத்து வழக்கு போடுவேன்” என்று மிரட்டினார்.  இந்த நிலையில் நம்மிடம் வந்தார் அந்த வீட்டின் உரிமையாளர்.   அவர் வந்த அன்றே, சென்னை மாநகர ஆணையர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு, பன்னீர் செல்வத்தை உடனே சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.  அதன் பிறகு பன்னீர் செல்வம் இருந்த இடம் தெரியாமல் பம்மி விட்டார்.  இந்த வீட்டு உரிமையாளரைப் போல பாதிக்கப் பட்டவர்களே இன்று நில அபகரிப்புப் புகார்கள் அளிக்கிறார்கள்.  ஆனால் இதிலும் ஒரு விசித்திரம் என்னவென்றால், இதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டுமே சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.  இவர்களுக்கு உதவி செய்த, காவல்துறை அதிகாரிகள், பத்திரப் பதிவு அதிகாரிகள் கவனமாக தப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்த வழக்குகளை மக்கள் திமுகவின் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கவில்லை என்பதையே உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டின.

உள்ளாட்சித் தேர்தல்களை அமைதியாக நடத்தியதற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.   ஜெயலலிதா நினைத்திருந்தால், காவல்துறை உதவியோடு, அதிமுகவினரை அராஜகத்தில் இறங்க வைத்திருக்க முடியும்.  2006 உள்ளாட்சித் தேர்தலில், லத்திக்கா சரண் மற்றும் ஜாங்கிட் உதவியோடு, திமுகவினர் நடத்திய வன்முறை வெறியாட்டங்களை மீண்டும் அரங்கேற்றியிருக்க முடியும்.  ஆனால், எந்த வித வன்முறையும் இல்லாமல் ஜெயலலிதா தேர்தலை நடத்தி முடித்தற்கு கிடைத்த பரிசுதான், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த அமோக வெற்றி.
அடிக்கடி நடக்கும் மாற்றங்களால் அரசு நிர்வாகம் கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அமைச்சர்கள் எப்போது மாறுவார்கள் என்ற நிலையற்ற தன்மையினால் தலைமைச் செயலகத்தில் உள்ள ப்யூன் கூட, அச்சமில்லாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.  ஐஏஎஸ் அதிகாரிகளும், எப்போது மாற்றம் வருமோ என்று, எந்த வேலையிலும் ஈடுபாடு காட்டுவதில்லை என்று சொல்கிறார்கள்.   அமைச்சர்களும் எந்த நேரத்தில் மாற்றம் வருமோ என்ற அச்சத்தோடே இருப்பதாக தெரிகிறது.    அவ்வப்போது வரும் மாற்றங்களால், எதைச் செய்தாலும் தப்பாகப் போய் விடுமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.
Augu---24-zd
தவறு செய்யதால் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சம் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இருப்பது நல்லதுதான் என்றாலும், தற்போது உள்ளது போன்ற நிலைமை நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து விடும். அமைச்சர்களின் இந்த நிலையற்ற தன்மையால், காவல்துறை அதிகாரிகளின் கை ஓங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். முதல்வரின் செயலாளராக உள்ள ஷீலா ப்ரியாதான் அதிகபட்ச அதிகாரம் உள்ள அதிகாரியாக விளங்குவதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
July---20-f

ஷீலா ப்ரியா
முதல்வர் கவனத்துக்கு செல்லும் எல்லா கோப்புகளும், ஷீலா ப்ரியாவைத் தாண்டியே செல்ல வேண்டும் என்பதால், ஷீலா ப்ரியா குறித்த புகார்கள் ஜெயலலிதா கவனத்துக்கு செல்வதில்லை என்றும் தெரிகிறது. ஏற்கனவே ஆளுனரின் செயலாளராக இருந்த ஷீலா ப்ரியா மீது அப்போதே ஏராளமான ஊழல் புகார்கள் இருந்தன.  ஆனால் இவற்றை கவனத்தில் கொள்ளாமல், ஷீலா ப்ரியாவை தனது செயலாளராக நியமித்து, ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் பேசுவது நகைச்சுவையை வரவழைக்கிறது.

கடந்த ஆட்சியில் இருந்தது போல குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆதிக்கம் இல்லையென்றாலும், நடராஜன், ராவணன், வெங்கடேஷ், போன்ற பெயர்கள் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.   அரசு அலுவலகங்களில் விசாரித்தால், மணற்கொள்ளை தங்கு தடையின்றி நடைபெறுவதாகவும், அதிகாரிகள் நியமனத்தில், மன்னார்குடி ஆதிக்கம் கொடிகட்டிப் பறப்பதாகவும் தெரிவிக்ககிறார்கள்.  இது போக பெசன்ட் நகரில் நடராஜன் தனியாக ஒரு தலைமைச் செயலகத்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
 DSC_4879
இவையெல்லாம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு வருகிறதா இல்லையா என்பது தெரியவில்லை.   ஆறுமாதங்களின் முடிவில், அதிமுக ஆட்சியை அலசிப் பார்த்ததில் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

Tuesday, June 7, 2011

தமிழக மக்கள் நாங்களும் தமிழ்நாட்டுல இருக்கிறோம்...!!!



முதலமைச்சாரக பதவியேற்ற அன்றே 1000 கோடி ரூபாயை அலேக்காக தூக்கி வீசி இருக்கிறார் ஜெயலலிதா...?

கருணாநிதியால் கட்டப்பட்ட(கருணாநிதி என்ன அவர் சொந்த பணத்தை போட்டா கட்டினார்?) தலைமை செயலகத்துக்கு செல்ல மாட்டேன் என்று கூறி பழைய தலைமை செயலகமான கோட்டையில் பதவி ஏற்றுள்ளார் ஜெயலலிதா...

நாளை அந்த தலைமை செயலகத்தை வேற எதற்காக அரசு பயன்படுத்தினாலும் அது கட்டப்பட்ட நோக்கம் வீண் தானே ?

இதற்க்கு பின்னால் இருக்கும் கண்ணாம்பூச்சி விளையாட்டை கொஞ்சம் பாப்போம்...

அரசுக்கு தேவையான முக்கிய அலுவலகங்கள் அனைத்தையும் இந்த கோட்டைக்குள் கொண்டு வரமுடியவில்லை என்பதால் ராணிமேரி கல்லூரி அமைந்துள்ள இடத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட புதிய தலைமை செயலகத்தை கட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் முடிவு செய்தார்.

ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக அதற்கு முட்டுக்கட்டை போட்டது...

இந்த நிலையில் கருணாநிதி ஆட்சிக்கு வந்த பின்னர் ஓமந்தூர் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகத்தை 1000 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கினார்...அது எல்லாம் மக்களின் வரிப்பணம்...

இப்போது ஜெயலலிதா கருணாநிதியின் மீது உள்ள வீம்பு, ஈகோ ,நீ கட்டி நான் என்ன ஆளுவது என்ற போட்டி (ஜெயலலிதா பாணியில் சொன்னால் சபதம் ) போன்றவற்றால் 1000 கோடியை வீணாக்கி உள்ளார்...

அது என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ? நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டு விளையாட?எல்லாம் வியர்வை சிந்தி உழைக்கும் சாமான்ய மக்களின் வரிப்பணம்...

உங்களுக்குள் உள்ள ஈகோ மற்ற கருமாதிக்காக கருணாநிதி வீட்டுக்கு நான் போகமாட்டேன் என்று சபதம் போட்டால் அது நியாயம்...j

அதைவிட்டு விட்டுவிட்டு அவசர அவசரமாக கோட்டையில் இருந்த நூலகத்தை அகற்றிவிட்டு தலைமை செயலகத்தை மாற்றி அமைப்பது எந்த வகையில் நியாயம்..?

மக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது ஊழலற்ற ,சீரான சட்டம் ஒழுங்கு கொண்ட நல்லாட்சி மட்டுமே...இது மாதிரி வீண் சபதங்கள் போட்டு மக்கள் வரிபணத்தை வீணடிப்பது அல்ல...

அது போததென்று சமச்சீர் கல்வி திட்டம் கலைஞர் ஆட்சியில் அமல்படுத்தபட்டன என்ற ஒரே நோக்கத்திற்க்காக நிறுத்துவாது நியாமா
இத்திட்டத்தை அமல்படுத்த பல ஆண்டுகளாக பாமக போரடிவருவது அனைவரும் அறிந்ததே

கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்து 2011 -ல் ஆளும் அரசு பெரும் பங்காற்றியுள்ளதை வரலாறும் வறுமையில் வாடுபவர்களும் மன்னிக்க மாட்டார்கள்..

கலைஞர் வீடு வசதி திட்டம் இரத்து,திட்டத்திற்க்கு ரத்துக்கு பதில் வேண்டுமென்றால் ஜெயலலிதா வீடு வசதி திட்டம் என்றாவது மாற்றிகொண்டு இருந்தால் தமிழகத்தில் வாடும் வருமையில் உள்ளவர்கள் பயன்பெற்று இருப்பார்கள்..

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் இரத்து இதிலோயும் தமிழக மக்களின் வயிற்றில் மண்..

போதக்குறைக்கு அரசு பேருந்து பணிமனைகளில் ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தில்  அனைவரையும் இணைய சொல்லி கட்டாய படுத்துவதால் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது..
 பயணம் செய்யலாம்னு பார்த்த உட்கார பயண இருக்கைக்கும் ஆப்பு வைச்சிட்டிங்க....

பவம்ங்க தமிழக மக்கள் கலைஞர் குடும்ப ஆட்சி நடத்துனாரு சொன்னீங்க இப்பே தமிழக அரசு நடத்துவது என்ன ஆட்சிங்கா...

மக்களுக்கு ஆதரவான ஆட்சியா? இல்லை திமுகவுக்கு எதிரான ஆட்சியா?


தமிழக மக்கள் நாங்களும் தமிழ்நாட்டுல இருக்கிறோம்...!!!

சில நாட்களிலேயே தமிழக அரசு சாதனை படைக்கும் போலிருக்கு....

Friday, June 3, 2011

டாஸ்மார்க்கும் உங்கள் உபயம்-இப்போ கேபிள் டிவியும் உங்கள் உபயம்...






கேபிள் டிவி அரசுமையாக்கபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.வரவேற்க்க தக்கது..ஆனால் இதனால் பயனடைபவர்கள் யார் என்று பார்த்தோமானல் கேபிள் டிவி நடத்திவரும் உரிமையாளர்கள்
தான்.தற்சமயம் அவர்களின் கட்டுபாட்டில் உள்ள கேபிள் டிவி இணைப்பு துண்டிக்கபட்டால் அவர்கள் வந்து சரி செய்வதற்க்குள் இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும் அரசு அறிவித்துள்ளபடி கேபிள் டிவி அரசுடமையாக்கபட்டால் மக்கள் பாடு திண்டாட்டம் தான் அவர்களின் கட்டுபாட்டில் உள்ள போது மூன்று நாட்கள் மேல் ஆகும் போதக்குறைக்கு அரசுடடையாக்கபட்டால் சொல்லவ வேண்டும்....


மக்களுக்கு கேபிள் டிவி மூலம் தரமான இணைப்பு கொடுக்க முடியுமா?

இணைப்பு துண்டிக்கபட்டவுடன் உடனடியாக சரிசெய்யபடுமா?

மக்களிடம் வாங்கும் பணம் முழுவதுமாக அரசுக்கு சென்றடையுமா?

மக்களுக்கு அரசுடமையாக்கபட்ட உரிமையாளர்கள் மதிப்பளிப்பார்களா?

தண்ணிருக்காகவும்,மின்சாரத்திற்காகவும் காத்திருப்பது போன்று காத்திருக்க வேண்டுமா?

இதில் அரசியல் வாதிகளின் தலையிடு இல்லாமல் இருக்கமா?

ஆக மொத்தம் பவம் மக்கள்...


Sunday, March 20, 2011

உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்...

உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்...


தென் மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு வழக்கம் உண்டு. மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலோ, கூட்டாக ஏதாவது தவறு செய்தாலோ, அவர்களை ஒருவர் காதை மற்றவர் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள் ஆசிரியர்கள். ""உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்'' என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போட வேண்டும்.
 ÷நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், தி.மு.க.வும் காங்கிரஸýம், அல்லது அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அந்த நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். தி.மு.க., காங்கிரஸýக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ அ.தி.மு.க. - ம.தி.மு.க.வுக்கு இது நிச்சயமாகப் பொருந்தும்.
 ÷தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ""கட்சியின் உயர்நிலை மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெருவாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை.
 ÷""பொதுச் செயலாளரின் முடிவை அவருக்கு நெருக்கமான மூன்று நான்கு மூத்த மாவட்டச் செயலாளர்களின் மூலம் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்பது போலத் தெரிவித்திருக்கிறார்கள். இது தொண்டர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக இல்லை. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகவோ நாம் ஏன் ஒரு அரசியல் கட்சியை நடத்த வேண்டும்? பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப்பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது?'' - பெருவாரியான ம.தி.மு.க. தொண்டர்களின் மனக்குமுறல் இதுவாகத்தான் இருக்கிறது.
 ÷சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத எந்தவொரு அரசியல் கட்சியும் தனது தனித்துவத்தை இழந்து மெல்ல மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்றுவிடும் என்பதுதான் சரித்திரம். 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூடப் போட்டியிடாமல் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்ததன் விளைவுதான் இன்றுவரை காங்கிரஸ் தமிழகத்தில் தலைதூக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.
 ÷1996-ல் வைகோவின் ம.தி.மு.க. தனது முதல் தேர்தலை சந்தித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. போட்டியிட்ட தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் தொகையைப் பெற முடிந்தது. நல்ல வேளையாக, 1998-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்ததால் அந்தக் கட்சிக்கு சின்னமும் அங்கீகாரமும் கிடைக்க நேர்ந்தது.
 ÷2001 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமை 21 இடங்களை ஒதுக்கித்தர முன்வந்தும், ஓரிரு தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார் வைகோ. அந்த மாபெரும் தவறால்தான் கட்சித் தொண்டர்கள் பலர் ம.தி.மு.க.விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.விற்குத் திரும்ப நேர்ந்தது. வைகோவுடன் தி.மு.க.விலிருந்து 1993-ல் வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் தாய்க் கழகத்துக்கே திரும்பிவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.
 ÷""தனித்துப் போட்டியிட கட்சிக்காரர்கள் யாரும் தயாராக இல்லை. பணத்தைச் செலவழித்துத் தோல்வியைத் தழுவ யார்தான் தயாராக இருப்பார்கள்? 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்? தேர்தலிலிருந்து ஒதுங்குவது என்று கட்சி முடிவெடுத்தால், நாங்கள் தி.மு.க.வுக்கே திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை'' என்கிறார்கள் ம.தி.மு.க.வில் இருக்கும் பலர்.
 ÷வைகோவின் இந்த முடிவு உணர்ச்சிபூர்வமானது என்பது ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டு ம.தி.மு.க. வெளியேற்றப்படுகிறது என்று வைகோ கருதுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நாள் தோழனாக இருக்கும் தன்னிடம் முதலில் பேசித் தொகுதிகளை ஒதுக்காமல், மற்றவர்களிடம் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதே வைகோவை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் தான் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகளின் பெயர்களையும், அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தான் நிறுத்த இருப்பவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்திருந்தார் வைகோ.
 ÷35 இல்லாவிட்டாலும், 15 தொகுதிதான் என்றாவது முடிவு செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கலாம் அ.தி.மு.க. தலைமை. சிறிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும், தே.மு.தி.க.வின் தொகுதி உடன்பாடும் முடிந்த பிறகுதான் ம.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தையே தொடங்கியது அ.தி.மு.க. அதிலும் வெறும் 6 இடங்கள், 7 இடங்கள் என்று பேசத் தொடங்கியது என்ன நியாயம் என்கிற வைகோவின் ஆதங்கத்தில் யார்தான் குற்றம் காண முடியும்?
 ÷ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து விலக்கி நிறுத்துவதில் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருவேளை ஜெயலலிதாவின் ஆசியுடனும் அனுமதியுடனும்கூட நடந்திருக்கக்கூடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
 ÷வைகோவால் பாதிக்கப்பட்ட ஒரு பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தின் பங்கு இதில் இருக்கிறது என்கிறார்கள். வைகோவையும் ம.தி.மு.க.வையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் தி.மு.க.வின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்கள் அ.தி.மு.க.வுக்குத் தர முன்வந்ததாகவும், திட்டமிட்டுத்தான் வைகோ வெளியேற்றப்பட்டார் என்றும் ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ""ஆறு இடங்கள், ஏழு இடங்கள் என்றெல்லாம் கூறினால், உணர்ச்சிவசப்பட்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவார் என்று தெரிந்துதான் அ.தி.மு.க. தலைமை அவரை அவமானப்படுத்த முற்பட்டது. அந்த வலையில் வைகோவும் விழுந்து விட்டார்'' என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர்.
 ÷வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ""அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே வைகோ மீது அனுதாபம் பிறந்திருக்கிறது. தங்கள் கட்சிக்காக கடந்த 5 ஆண்டுகள் உழைத்த தோழமைக் கட்சியை இப்படி உதாசீனப்படுத்துவது தவறு'' என்று மூத்த தலைவர்களேகூட அங்கலாய்க்கிறார்கள்.
 ÷""தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்து வைத்திருப்பவர் அண்ணன் வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இருக்கும் கால அவகாசம் மிகமிகக் குறைவு. அம்மாவைத் தவிர எங்கள் கட்சியில் பிரசாரம் செய்ய யார் இருக்கிறார்கள்? விஜயகாந்த் அவரது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில்தான் கவனம் செலுத்திப் பிரசாரம் செய்வார். எங்கள் வேட்பாளர்களில் பலர் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர்களும்கூட. தி.மு.க.வின் பிரசாரத்தை முறியடிக்க நமக்கு இருந்த ஒரே ஆயுதத்தையும் இப்போது இழந்துவிட்டோம்'' என்று கூறி வருத்தப்பட்டார் மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.
 ÷அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களைப் பொறுத்தவரை தேர்தல் களப் பணிகளைச் செய்வார்களே தவிர, முறையாக வாக்குச்சாவடி நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர்கள் ம.தி.மு.க.வினரும், இடதுசாரிகளும்தான். இவர்கள் இல்லாமல் போனால், தி.மு.க. அணியினரிடம் அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜன்டுகள் சுலபமாக விலை போய்விடுவார்கள். இல்லையென்றால் மிரட்டப்பட்டு, விரட்டப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
 ÷""அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது. ம.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தி.மு.க.வின் வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் அத்துப்படி. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும், ஆளும் கட்சி அராஜகத்தை அதிகாரபூர்வமாக எதிர்கொள்ளவும் ம.தி.மு.க. கூட்டணியில் இருப்பது அவசியம்'' - இப்படிக் கூறுபவர் மூத்த இடதுசாரித் தலைவர் ஒருவர்.
 ÷1999-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட போதே, ம.தி.மு.க.விலிருந்து பல தொண்டர்கள் தி.மு.க.வுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வால் அவமானப்படுத்தப்பட்ட வேதனையும், தேர்தலில் போட்டியில்லை என்கிற வைகோவின் அறிவிப்பும் மிச்சம் மீதி இருக்கும் தொண்டர்களையும் தி.மு.க.வுக்குத் திரும்ப வைத்துவிடும். ம.தி.மு.க. கூடாரம் காலியாவதுதான் மிச்சம் என்று பலர் அடித்துச் சொல்கிறார்கள்.
 ÷மக்கள் மத்தியிலும் ம.தி.மு.க. மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தலைமையின் சந்தர்ப்பவாத அரசியல் பல நடுநிலையான வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் முதல்வர் கருணாநிதியே இதற்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் கருதி தி.மு.க.வுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 ÷அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு ம.தி.மு.க.வை வெளியேற்றியது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஜெயலலிதாவோ, அவரைச் சூழ்ந்திருப்பவர்களோ, தேர்தலை சந்திப்பதற்காக விலை போயிருந்தால்கூட ஆச்சரியமில்லை. ஆனால், அதுவே அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பலவீனமாக மாறி, முறையாக வேட்பாளர் தேர்வும் இல்லாது போனால், தனித்து ஆட்சி அமைக்கும் சக்தியை இழந்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டால்? தனிப்பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அமையப் போவது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருக்காது என்பது உறுதி.
 ÷ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக் கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால்? மீண்டும் முதல் பாராவைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் நடக்கும்!


நன்றி-தினமனி

Wednesday, March 9, 2011

மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிளுக்கு ஜெயலலிதா ஆப்பு வைக்கிறாங்க


சட்டமன்ற தேர்தல் 2011-கலாட்டா...




அதிமுக அணியில் இருக்கும் கட்சிகளுக்கு மாரியாதை கொடுக்க தெரியாதவர் செல்லி ஜெயலலிதா என்பது நடே அறிந்த விசயம்
அதை மீண்டும் நிருபிக்கும் வகையில் அமைந்துள்ளது 2011 சட்டமன்ற தேர்தல்

அதிமுக அணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவது பற்றி மதிமுக தலைமை தீவிரமாக யோசித்து வருவதாகத் தெரிகிறது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படாத நிலையில் இடதுசாரிக் கட்சித் தலைவர்களும் அதிமுக தலைமை மீது கடும் கோபத்தில் உள்ளனர். தேவைப்பட்டால் அவர்களும் மதிமுகவின் முயற்சிக்கு தோள் கொடுப்பார்கள் எனத் தெரிகிறது.

சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக அணி - அதிமுக அணி என இரு முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அணியில் காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தொகுதிகள் பங்கிடப்பட்டுள்ளன.


ஆனால், பேச்சுவார்த்தையை முதலில் நடத்தி சிறிய கட்சிகளான புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி போன்றவற்றுக்கு தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக அணியில் இன்னும் தொகுதிப்பங்கீடு முழுமையாக முடிவடையவில்லை.

மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அதிமுக தலைமையின் அழைப்புக்காக வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.


முன்னதாகவே இடதுசாரிக் கட்சிகள், மதிமுக ஆகியவற்றுடன் அதிமுக பேச்சு நடத்தியது. ஆனால், எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதற்கிடையில் அதிமுக தலைமை, விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் கடந்த வாரம் தொகுதி உடன்பாடு செய்து கொண்டது. காங்கிரஸýடன் தேமுதிக இணைந்து மூன்றாவது அணி அமைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தேமுதிகவுடன் அதிமுக தொகுதி உடன்பாட்டை உடனடியாகச் செய்து கொண்டது என்றும், இதையடுத்து தங்களுக்கும் திருப்தியான முறையில் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனவும் இடதுசாரிகளும், மதிமுகவும் நினைத்தன.


மூன்று கட்சிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படக்கூடும் என அரசியல் வட்டாரத்தில் கருத்து நிலவியது. ஆனால், எந்தக் கட்சியையும் அதிமுக தலைமை அழைக்கவில்லை. இதனால், இடதுசாரிக் கட்சிகளும் மதிமுக தலைவர்களும் எரிச்சலுக்கு உள்ளாயினர். இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் அதிமுக தொகுதி பங்கீட்டுக் குழு திங்கள்கிழமை அழைத்துப் பேசியது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஓரிரு நாள்களில் சுமுக முடிவு எட்டப்படும் என மார்க்சிஸ்ட் தலைவர்கள் தெரிவித்தனர்.


அதேசமயம், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்று காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிமுக அணியில் மதிமுக, இடதுசாரிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கப்படாததே இழுபறிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அதிமுக தலைமையின் நீண்ட கால நண்பராக இருக்கும் வைகோ, கூட்டணியில் தனது கட்சிக்கு "கௌரவமான அளவில்' இடங்களை ஒதுக்க வேண்டும் எனக் கருதுகிறார்.


முதலில் 25 தொகுதிகளை வலியுறுத்திய அவர், இப்போது அதிலிருந்து இறங்கி வந்து 21 தொகுதிகள் கட்டாயம் வேண்டும் எனக் கூறி வருகிறார். ஆனால், "அதிமுக தலைமையோ 10 தொகுதிகளுக்கு மேல் மதிமுகவுக்கு ஒதுக்குவதாக இல்லை' என்று கூறப்படுகிறது.


கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுகவுக்கு, அதிமுக அணியில் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல கடந்த 2009 மக்களவைத் தேர்தலிலும் மதிமுக 4 தொகுதிகளைக் கேட்டுப்பெற்று ஒரே ஒரு தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது.

""வீம்புக்கு அதிகத் தொகுதிகளைக் கேட்டு வாங்கிவிட்டு பெருவாரியான தொகுதிகளில் தோல்வியைத் தழுவுவது மதிமுகவின் வாடிக்கையாகிவிட்டது. வைகோ-வைத் தவிர அந்தக் கட்சியில் பெயர் சொல்லக்கூட ஒரு முக்கியமான தலைவர் கிடையாது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 6 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் மதிமுகவிலிருந்து விலகிவிட்டனர். தொகுதிகளைக் கேட்டுப் பெற்றால் மட்டும் போதுமா? அதில் போட்டியிடத் தகுதியான வேட்பாளர்கள் மதிமுகவில் இருக்கிறார்களா'' என்று கேள்வி எழுப்பும் அதிமுக தலைமை, வைகோவுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

உறுதியாக வெற்றி பெறக்கூடிய 20 தொகுதிகளின் பட்டியலை வைகோ தந்தால் அதில் 10 தொகுதிகளை ஒதுக்குவதாகவும் அந்த 10 தொகுதிகளிலும் மதிமுக முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றியடையலாம் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவே நேரடியாக வைகோவிடம் தெரிவித்ததாகவும் கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இதைப்பற்றிக் கேட்டால் மதிமுக தரப்பு கொதித்து விடுகிறது.


""184 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மட்டும் அத்தனை தொகுதிகளிலுமா வெற்றி பெற்றுவிட்டது? வெறும் 61 தொகுதிகளில்தானே ஜெயிக்க முடிந்தது. அப்படியிருக்கும்போது எங்களை மட்டும் குறைகூறுவது என்ன நியாயம்?'' என்பது மதிமுக தரப்புவாதம்.

இடதுசாரிக் கட்சிகளிடையேயும் தொகுதிகளின் எண்ணிக்கையில் பிரச்னை இருந்து வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி 15 தொகுதிகளைக் கேட்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோ தங்களுக்குக் குறைந்தது 11 தொகுதிகளாவது வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், மார்க்சிஸ்ட்டுக்கு 11, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 9 என்ற அளவில் மட்டுமே தொகுதிகளைத் தர முடியும் என அதிமுக தெரிவித்துள்ளது. தொகுதிகளை அளிப்பதில் தேமுதிகவுக்கு அடுத்தபடியாக தங்களுக்கு முன்னுரிமை கிடைக்கும் என நினைத்திருந்த மதிமுகவுக்கு இப்போது அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அதிமுக. இந்த அதிர்ச்சியால் மதிமுக தலைமை உறைந்து போயுள்ளது. கட்சியின் மூத்த நிர்வாகிகளும், முன்னணித் தலைவர்களும் அதிமுக அணியை விட்டு வெளியேறித் தனியாக களத்தைச் சந்திக்கலாம் என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


இடதுசாரிக் கட்சிகளுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களிலும், மதிமுகவுக்கு தென் மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் அழைப்புக்காகக் காத்திருப்பதைவிட, செல்வாக்குள்ள தொகுதிகளில் தனியாக களமிறங்கினால் ஓரளவுக்கு வெற்றிபெற முடியாவிட்டாலும் ஆட்சியைப் பிடிக்கும் அதிமுகவின் கனவைத் தகர்த்துவிட முடியும் என்று மதிமுக கருதுகிறது.

மதிமுக, இடதுசாரிக் கட்சிகளைக் காத்திருக்க வைப்பது அவர்களது தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. "கடைசி வரை காத்திருக்க வைத்து, இருக்கின்ற தொகுதிகளை கொடுத்தாலே போதுமானது' என்ற நிலைக்கு தங்களைக் கொண்டு வர அதிமுக தலைமை திட்டமிடுகிறதோ என்று மதிமுக, இடதுசாரிக் கட்சித் தொண்டர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

என்ன "விலை' கொடுத்தாவது மதிமுகவையும் இடதுசாரிகளையும் அதிமுக அணியிலிருந்து பிரித்து மூன்றாவது அணி அமைக்க வைப்பதில் திமுக தலைமையும், காங்கிரஸ் மேலிடமும் சுறுசுறுப்பாகி இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி வாக்குகளில் ஏற்படும் பிளவு, ஆளும் திமுக கூட்டணிக்குச் சாதகமாக அமையும் என்று வியூகம் வகுக்க முற்பட்டிருக்கிறது திமுக தலைமை.


அதிமுக அணியில் தேமுதிகவுக்கு 41 இடங்களும் ஏனைய உதிரிக் கட்சிகளுக்கு 8 இடங்களையும் ஒதுக்கி இருக்கும் நிலையில், மீதமிருப்பது 185 இடங்கள் மட்டுமே. அதில் மதிமுக மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு 30 இடங்களை ஒதுக்கிவிட்டு மீதியுள்ள 155 இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.


கடைசியில், மதிமுகவுக்கு 15 தொகுதிகளும் மார்க்சிஸ்ட்டுக்கு 13 தொகுதிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 தொகுதிகளும் தந்து அவர்களைத் தங்களது அணியில் அதிமுக தக்கவைத்துக் கொள்ளக்கூடும்.

கடைசிநேரத்தில் அணி மாறுவது அல்லது தனித்துப் போட்டியிடுவது என்கிற வழக்கத்தை மதிமுக 1996, 2001, 2006 தேர்தல்களைப் போலவே, இந்தத் தேர்தலிலும் கடைப்பிடிப்பது அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக எழுப்பப்படும் கேள்வி!