“புத்தனுக்கு போதி மரம் மாதிரி எனக்கு ‘சிறைச்சாலை வாசல்’தான் அரசியல் திருப்புமுனை. 1986ல் நான் சென்னையில் எம்.பி.பி.எஸ். படிச்சுட்டிருக்கேன். அப்போதுதான் அய்யா தலைமையில் இட ஒதுக்கீட்டுக்காக ஒரு வாரம் தொடர்சாலை மறியல் நடத்தினாங்க. அந்த சமயத்துல அய்யாவைக் கைதுபண்ணி, சென்னை சென்ட்ரல் ஜெயிலில் வச்சிருந்தாங்க.
காலேஜ் முடிஞ்சவுடனே அப்படியே நடந்து, குறுக்கால இருக்கிற பாலத்தை தாண்டிப் போய் (சென்னை) சென்ட்ரல் ஜெயில் வாசல்ல அய்யாவையும் கட்சிக்காரர்களையும் காத்துக்கிடந்து பார்த்துட்டு வருவேன்.
அப்போதுதான் எனக்கு அரசியல்ல ஒரு ஈடுபாடு வந்தது. அய்யா இப்படியெல்லாம் கஷ்டப்படுறாரே, நாமளும் கூடவே ‘இருந்துட்டா என்னா’ன்னு தோணும். அந்த சமயத்துலதான் 27 பேர் போலீஸ் சுட்டு இறந்து போனாங்க. செத்தவங்களோட சொந்த பந்தம்னு வந்து ஜெயில் வாசல்ல அய்யாவுக்காகக் காத்துக் கிடந்து கதறி அழுறதைப் பார்க்கும்போது பதறிப் போவேன்.
அதன் பிறகும் ‘அய்யா’ நிறைய போராட்டத்துல கலந்துக்கிட்டு பலமுறை ஜெயிலுக்குப் போயிருக்காரு. தமிழ்நாட்டுல பாளையங்கோட்டையைத் தவிர மற்ற எல்லா ஜெயில்லேயும் அய்யா இருந்திருக்காரு.
நான் பசுமைத்தாயகம் அமைப்புக்காக தமிழகத்தின் பல பகுதிக்கும் போய்ட்டு வருவேன். மரக்கன்னு நடறதுபத்தி எடுத்துச் சொல்லி பிரச்சாரம் பண்ணுவேன். அப்படித்தான் ஒரே நாளுல தமிழகம் பூராவும் இந்த அமைப்பு சார்பா ஒரு லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டிருக்கேன்.
அப்படி போய்க்கிட்டிருக்கிறப்போதான்... அந்த இடத்துக்கு எல்லாம் பா.ம.க. தொண்டருங்க வருவாங்க. ‘அய்யா’வுக்குப் பின்னாடி எங்களுக்கு ஒரு நம்பிக்கையான ஆளுவேணும். கட்சிக்குன்னு நம்பியிருந்தவங்க எல்லாம் அய்யாவுக்குத் துரோகம் பண்ணிட்டு ஓடிடுறாங்க. இந்தக் கட்சிய வித்துப்போட நினைக்குறாங்க. அதனால் அய்யாவுக்காக நீங்களும் கூட வந்தாத்தான் நாங்களும் நம்பி அரசியல்ல நிக்க முடியும்னு ரொம்பவும் தொந்தரவு பண்ணினாங்க.
யோசிச்சு கட்சியில ஒரு சாதாரண தொண்டனா இருக்க முடிவு செஞ்சேன். அதன்படி ஒரு எட்டு மாசத்துக்கு முன்னதான் நான் பா.ம.கவுல அடிப்படை உறுப்பினரா சேர்ந்தேன். இந்தக் குறைஞ்ச காலத்துக்குள்ளாகவே 50 சட்டமன்றத் தொகுதிக்குபோய் கொடி ஏத்தி வச்சி தீவிரப் பிரசாரத்துலேயும், கட்சி வளர்ப்புலேயும் கலந்துக்கிட்டிருக்கேன்.
கட்சித் தொண்டருங்க எல்லாம் சேர்ந்து எனக்குப் பொறுப்புனு கொடுக்க வந்தா அதைப் பெருமையா ஏத்துக்கிட்டு அவுங்க நம்பிக்கையை நிறைவேத்துவேன். ‘அய்யா’ மறுத்தார் என்றால் நான் வரமாட்டேன். தொண்டனாகவே இருப்பேன். ஏன்னா... சின்ன வயசுலேர்ந்தே நான் அவரு பேச்சைத் தட்டினதில்லை.
பா.ம.கவை வளர்த்தெடுக்க, பாட்டாளி மக்களுக்கென்று அவர் இழந்த இழப்புகள் என்ன என்பது என் குடும்பத்தாருக்கு மட்டுமே தெரியும். இதை எல்லாத்தையும் லட்சக்கணக்கான தொண்டர்களைப் போல நானும் மதிச்சு நடப்பேன். அய்யாவுக்குப் பின்னாடி ‘பொறுப்பு’னு எனக்கு வந்தா, அதுவும் தொண்டர்கள் முடிவு செய்துட்டா அதை ஏற்கவும் கடமைப்பட்டிருக்கேன். அவர்களின் ‘நம்பிக்கை’ அதுதான்னு இருந்தா நான் என்ன செய்யமுடியும்.’’
No comments:
Post a Comment