பென்னாகரத்தில் திட்டமிட்டு செயல்படுத்திய உத்திகள் வெற்றி பெற்றிருப்பதால் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டும் வகையில் 70 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு பென்னாகரம் பார்முலாவை அமல்படுத்தப் போகிwJ ghkf…
பாமகவை தூக்கி நிறுத்த பெருமளவில் உதவியிருக்கிறது பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல். அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்ததோடு, வன்னியர் வாக்கு வங்கியை முழுமையாக நாங்கள் இழக்கவில்லை என்பதையும் பாமக நிரூபித்துள்ளது.
தோல்வியிலும் இது வெற்றியாகவே பாமக தரப்பில் கருதப்படுகிறது. இதையடுத்து பென்னாகரம் பார்முலாவை தனது ஆதரவு பலம் அதிகம் உள்ள தொகுதிகளில் அமல்படுத்த பாமக திட்டமிட்டுள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் 70 தொகுதிகளை பாமக தேர்வு செய்துள்ளது. அந்த லிஸ்ட்டை ஏ மற்றும் பி என இரு பிரிவாக பிரித்து தயாரித்துள்ளது.
பாமக வலுவாக, அதிக ஆதரவு கொண்ட வாக்கு வங்கியுடன் கூடிய தொகுதிகளை ஏ பட்டியலிலும், ஓரளவு வாக்கு வங்கியுடன் கூடிய தொகுதிகளை பி பிரிவிலும் சேர்த்துள்ளனர்.
ஏ பிரிவில் 40 தொகுதிகளும், பி பிரிவில் 30 தொகுதிகளும் உள்ளனவாம். தேர்ந்தெடுத்துள்ள 70 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்துவதோடு, வாக்கு வங்கியையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது.

இது போக பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமகவின் செயல்பாட்டால் முக்கிய திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதோடு சமாதானமாகப் போக தூது விட்டுவருகின்றன.
No comments:
Post a Comment