அதன் பிறகு 1991 சட்டமன்றத் தேர்தலிலும் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது. கட்சி சார்பாக - பண்ருட்டி ராமச்சந்திரன் - ஒரே ஒரு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். அப்போது தமிழ்நாட்டில் வாங்கிய மொத்த ஓட்டு சதவீதம் 5.91. இதே தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளோடு போட்டியிட்டு அதுவும் ஒரே ஒரு தொகுதியில்தான் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அந்த ஒரு தொகுதியின் வேட்பாளர் கலைஞர் கருணாநிதிதான். பா.ம.கவிற்கும் ஒரு எம்.எல்.ஏ., தி.மு.க.விற்கும் ஒரு எம்.எல்.ஏ.!
அடுத்ததாக 1996 சட்டமன்றத் தேர்தல். பா.ம.க. அப்போதும் தனித்துப் போட்டியிட்டு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஓட்டு சதவீதம் 3.84. கட்சிக்கு 4 எம்.எல்.ஏக்கள் என்ற பெருமை கிடைக்கிறது. இதே தேர்தலில் அ.தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து போட்டியிட்டு நான்கே நான்கு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெறுகிறது பா.ம.க.விற்கும் 4 எம்.எல்.ஏக்கள். அ.தி.மு.கவிற்கும் 4 எம்.எல்.ஏக்கள்!
1998 - எம்.பி. தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்டதில் 4ல் வெற்றி. தலித் எழில் மலை, என்.டி. சண்முகம், எம்.துரை, பாரிமோகன் ஆகிய நால்வரும் வெற்றி பெற்றவர்கள். ஓட்டு சதவீதம் 6.05.
1999ல் தி.மு.க.வுடன் கூட்டணி. ஐந்தில் வெற்றி. என்.டி. சண்முகம், துரை, ஏ.கே. மூர்த்தி, பு.தா. இளங்கோவன், பொன்னுசாமி என்று ஐந்து எம்.பிக்கள். ஓட்டு சதவீதம் 8.21.
முன்பு யானைச் சின்னத்தில் போட்டியிட்ட பா.ம.க. இப்போது மாம்பழச் சின்னத்துடன் களத்தில் நிற்கிறது.
No comments:
Post a Comment