பெயர் : டாக்டர் ச. ராமதாசு
வயது : 71
பிறந்த தேதி : 25.7.1939
பிறந்த ஊர் : கீழ்சிவிரி, விழுப்புரம் மாவட்டம்
தந்தை : சஞ்சீவிராயக் கவுண்டர்
தாயார் : நவநீத அம்மாள்
சகோதரி : ஒருவர்
சகோதரர்கள் : மூன்று பேர்
மனைவி : சரஸ்வதி அம்மாள்
படிப்பு : மருத்துவம் - எம்.பி.பி.எஸ்.
பிடித்தவை : மரம், செடி கொடிகள். இயற்கையுடன் ஈடுபாடு. புத்தகங்கள் வாசிப்பு.
பிடித்த விளையாட்டு : கால்பந்து
சாதனைகள் : வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவியது. பசுமைத் தாயகம்.சமூக முன்னேற்றசங்கம்,தமிழ்நாடு உழவர் பேரிழக்கம்,
2000லிருந்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.மற்றும் பல
மகன் : டாக்டர் அன்புமணி, (மேனாள் சுகதார துறை அமைச்சர்)
மகள்கள் : ஸ்ரீகாந்தி, கவிதா
அரசியலுக்கு முன் : 1967லிருந்து டாக்டர். முதலில் பணிபுரிந்தது திண்டிவனம் அரசு மருத்துவமனை.
1989 ஜூலை 16ம் தேதி.
சென்னை சீரணி அரங்கில் துவக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி.
நோக்கம்
1980லிருந்து வன்னியர் சங்கமாக இயங்கி வந்த இயக்கத்தின் இன்னொரு வடிவம் பாட்டாளி மக்கள் கட்சி.
1980லிருந்து 1989 வரை வன்னியர் சங்கப் போராட்டங்கள் ஆட்சியாளர்களை அதன் பக்கம் திருப்பின.
இட ஒதுக்கீடு
1986 மார்ச் மாதத்தில் உடம்பில் ‘பட்டை நாமம்’ போட்டுக்கொண்டு இட ஒதுக்கீட்டிற்காகப் போராட்டம் நடத்தினார் ராமதாஸ்.
அதற்கு எம்.ஜி.ஆர். அரசு செவிசாய்க்காததால் மதுராந்தகத்தில் எம்ஜி.ஆருக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது (28.6.86)
சாலை மறியல்
நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்படாததை எதிர்த்து வன்னியர் சங்கம் போராடியதன் பலன் 432 பேருக்கு அங்கு உடனடியாக வேலை வாய்ப்பு.
தேர்தல் புறக்கணிப்பு
1989ல் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு அளிக்காத அரசியல் கட்சிகளை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடந்தது. “ஓட்டுப் பொறுக்கிகளே... உள்ளே நுழையாதீர்கள்’’ என்கிற வாசகங்கள் வன்னியர் பகுதிச் சுவர்களில் தென்பட்டன. சில கிராமங்களில் கட்சிக் கொடிகள் வீழ்த்தப்பட்டன.
தாக்கப்பட்டார்கள்
அந்தச் சமயத்தில் மத்திய ராணுவப்படை, வன்னியர் அதிகமுள்ள கிராமங்களில் புகுந்து தாக்குதலை நடத்தியது. ‘Yellow Flower Operation’ என்கிற பெயரில் நடந்த அந்தத் தாக்குதலின்போது ஆயிரக்கணக்கான வன்னியர்கள் பாதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பு.தா. இளங்கோவன், அருள்மொழி போன்ற பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணிப் பிரமுகர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
அதன் பிறகு தொடர்ந்து வன்னியர் சங்கம் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைத் தாக்குப்பிடித்து எதிர்கொள்ள அரசியல் இயக்கம் தேவை என்று உணர்ந்து, சென்னை கடற்கரையில் உருவானது பாட்டாளி மக்கள் கட்சி.
கிடைத்தது வெற்றி
இடஒதுக்கீட்டிற்காகத் தொடர்ந்து போராடியதின் பலனாக, வன்னியர்களுக்குத் தனி ஒதுக்கீடு கிடைக்காவிட்டாலும் கூட பிற்படுத்தப்பட்ட 108 சாதிகளுடன் வன்னியரையும் இணைத்து, இருபது சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இது வன்னியர் சங்கத்துக்கும், பா.ம.கவுக்கும் டாக்டர் ராமதாசுக்கும் கிடைத்த வெற்றி.
பா.ம.க. ஜாதிக் கட்சியா?
ஜாதிக் கட்சிகள் இன்று அதிகரித்து வருகிற நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிதான் அதற்கு மூலகாரணம் என்று சொல்லப்படுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
“1980ல் வன்னியர் சங்கம் துவக்கப்பட்டத்திலிருந்து எந்த அளவுக்கு நான் தமிழ்நாடு முழுக்கச் சுற்றி வந்தேன்? எவ்வளவு தியாகம் பண்ணினேன்? எவ்வளவு செலவு பண்ணினேன்? மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னிய சமூகம் இடம்பெற எவ்வளவு தூரம் பாடுபட்டேன் என்று பலருக்குத் தெரியும்.
1989ல் கட்சி ஆரம்பித்ததைப் பார்க்கிறவர்கள் வன்னியர் சங்கத்தைப் பற்றி மட்டும்தான் பார்க்கிறார்களே ஒழிய, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும், ஏன்? முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கூட அவர்களுக்குரிய ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே சொல்கிறோம். அதனால் வன்னியர் சங்கம் வேறு. கட்சி வேறு. சங்கம் என்பது அந்த மக்களின் கல்வி வளர்ச்சிக்கும், சமுதாய மேம்பாட்டிற்கும் உதவி செய்வதற்கும், பிற சமுதாயத்தினருடன் நல்லிணக்கத்தை உண்டாக்குவதற்கும்தான். இந்த நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எந்தச் சங்கத்திற்கும் இருக்க முடியாது.
நாங்கள் பா.ம.கவை ஆரம்பித்தபிறகு பல ‘சமுதாய, நல்லிணக்க மாநாடுகளை’ நடத்தினோம். மற்ற எந்தக் கட்சிக்காவது இந்தச் சிந்தனை இருக்கிறதா? பதினான்கு மாவட்ட மாநாடுகளிலும் சாதியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ சண்டை போட்டு ஒரு துளி ரத்தம் கூடச் சிந்தக்கூடாது என்பதைச் சொன்னோம். கலைஞரே கூட இந்த மாநாட்டைப் பார்த்துவிட்டு ஆச்சர்யப்பட்டார்.’’
இதையெல்லாம் நீங்கள் சொன்னாலும் ‘ஜாதிக் கட்சி’ என்கிற விமர்சனம்தானே கடுமையாக இருக்கிறது?
பா.ம.கவில் முக்கியப் பொறுப்பு தலித் சமூகத்தினருக்குத்தான் கொடுக்கிறோம். முதன் முதலாக மத்திய அமைச்சரவையில் பங்கேற்க பா.ம.கவுக்கு வாய்ப்பு கிடைத்தபோதும் அதை அவர்களுக்குத்தானே கொடுத்தோம். வெறும் ஜாதிய நோக்கங்களுக்காகவே நாங்கள் கட்சியைத் துவக்கியிருந்தால் வன்னியர் சமூகத்தவர்களை மட்டும்தானே மத்திய அமைச்சர்களாக்கியிருப்போம். இந்த அம்சங்களை எல்லாம் பா.ம.கவை ‘ஜாதிக்கட்சி’ என்று குறை கூறுகிறவர்கள் பரிசீலிக்கிறார்களா? வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் பா.ம.கவில் பங்கேற்பது எதை உணர்த்துகிறது.
அதனால் ஒரு கட்சியின் இயக்கத்தை, அதன் செயல்பாட்டை வைத்துத்தான் மதிப்பிட வேண்டுமே தவிர, வெறுமனே யூகங்களை வைத்தல்ல.’’
1 comment:
good collection
by kasi.elangovan,
sirkali.
Post a Comment