நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, December 28, 2011

அரசியலுக்கு முழுக்கு போட அஸ்திவாரம் போட்ட விஜயகாந்த்..



காற்றில் பறக்குது விஜயகாந்த் வேட்டி..




 மூடு விழா நடத்திய 7-அமைப்புகள்




நடிகர் கட்சியின் 7-அமைப்புகளுக்கு  முடு விழா நடத்தினார்.
விரைவில் தேமுதிக விற்க்கும் முடு விழா நடத்தி விட்டு முழு நேரமும் சினிமாவில் நடிப்பது பற்றி கேப்டன் அவர்கள் குடித்து விட்டு உலறி கொண்டு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பெறும் பேச்சு அடிபடுகிறது..


குடிகார கேப்டனின் கிழ்கானும் தொழிற்சங்க பிரிவுகள் முடு விழா நடத்தபட்டது..


 தொழிற்சங்க பேரவையின் 
மாநில என்ஜினியரிங் தொழிலாளர் பிரிவு..
மாநில தோட்டத் தொழிலாளர் பிரிவு
மாநில பஞ்சாலை  தொழிலாளர் பிரிவு
மாநில விவசாய  தொழிலாளர் பிரிவு
மாநில கைத்தறி  தொழிலாளர் பிரிவு
மாநில கூட்டுறவு  தொழிலாளர் பிரிவு
மாநில பொது மற்றும் அமைப்பு சார  தொழிலாளர் பிரிவு



மேற்கண்ட அமைப்புகளில் இணைந்திருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதிலிருந்து  விலகியதால் மேற்கண்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிகிறது.


அதே போன்று தேமுதிக வில் உள்ள பெரும்பாலனேர் விலகி பாமக வில் இணையும் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு மருத்துவர் அய்யா முன்னிலையில் நடைபெற்றது..








Wednesday, December 21, 2011

விவசாயிகளுக்கு பரிசு தொகை தமிழக அரசு அறிவிப்பு - சாத்தியமா?

 விவசாயிகளுக்கு பரிசு தொகை வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்க்க தக்க செயல்... ஆனால் அவர்கள் கூறும் நிபந்தனைகளை பார்த்தால் இது சாத்தியமல்லாத ஒன்றாகும்..
அப்படியும் மீறி பரிசு பெற்றால் அது அரசங்கத்தை ஏமற்றியும் அதிகரிகளை தன் கையில் போட்டு கொள்ளும் சக்தி வாய்ந்த அரசியல் வாதியாகத்தான் இருக்க முடியும்... 
தமிழக அரசின் அறிவிப்பு...
சென்னை : திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு போட்டி நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதிக விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசும் பதக்கமும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ள 50 சென்ட் நிலத்தில் பயிர் விளைவித்திருக்க வேண்டும் என்றும் ஏக்கருக்கு குறைந்தது 2500 கி வரை விளைச்சல் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் நீலகிரி மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண்துறையில் புதிய தொழில்நுட்பம் புகுத்தும் நோக்கில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திருந்திய நெல் சாகுபடி முறையில் குறைந்த இடுபொருட்களின் மூலம், அதிக மகசூல் பெறுவது  எப்படி அரசு கூறும் வழிமுறைகள் இவைகள் தான்..          
சாதாரண நெல்நடவில் மொத்த நீர்த்தேவை, 1200 மி.மீ., எனில் திருந்திய சாகுபடியில் பாதியளவு போதும்.
§                     இலை வண்ண அட்டையை பயன்படுத்தி, தேவைக்கேற்ப தழைச்சத்து இடவேண்டும்.
   வெள்ளைப் பொன்னிக்கு 3ம் எண், மற்ற ரகங்களுக்கு 4ம் எண்ணுடன் நிறத்தை ஒப்பிட வேண்டும்.
                அட்டை எண் 4க்கு குறைவாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 30 கிலோ அளவில் தழைச்சத்தும், தண்டு உருளும் பருவத்தில் பாதியளவு சாம்பல் சத்தும் இட வேண்டும்.
§                     நிலத்தில் சீரான நீர் இருக்கும் போது, நட்ட 10, 20, 30, 40ம் நாட்களில் களைக்கருவி கொண்டு, பயிரின் ஊடே குறுக்கும், நெடுக்குமாக களையை மண்ணில் மடக்கி விட வேண்டும்.
§                     காற்றோட்டம் அதிகமாவதுடன், தண்ணீர், உரச்சத்துக்கள் நெற்பயிருக்கு கூடுதலாக கிடைக்கும்.

இவ்வாறு அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை கூறுகின்றனர்..
ஆனால் இவர்கள் கூறும் வழிமுறைப்படி நெல் சாகுபாடி செய்தால்
13.000 ஆயிரம் முதல் 15.000 ஆயிரம் வரை செலவாகும்.. என்று விவசாயிகள் கூறுகின்றனர்..
சாதரண முறையில் பயிர் சாகுபடி செய்தால் 15.000 முதல் 18.000 வரை செலவாகும்..
திருவள்ளுரை மாவட்ட விவசாயி  திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் நெல் பயிரிட்ட திருப்பாச்சூரைச் சேர்ந்த விவசாயி  கதிரேசன் அவர்கள் தினமணி நாளிதழ்க்கு 4-12-2011 அன்று அளித்த பேட்டி...

 நான் 15 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். பல முறை லாபமும் சில முறை நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விதை நெல், உரம், யூரியா என அனைத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, வேளாண்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 2 ஆண்டுகளாக திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் நெல் பயிரிட்டேன். அதன்மூலம் அதிக லாபம் ஈட்டியுள்ளேன்.
திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில் களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், நாற்று நடும் கூலி, விதை நெல் உள்ளிட்ட செலவுகள் குறைகின்றன. இது தவிர வழக்கமான முறையில் பயிர் செய்யும் போது ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவாகும்.   திருந்திய நெல் சாகுபடியில் ரூ.10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. வழக்கமான முறையில் ஏக்கருக்கு 22 முதல் 25 மூட்டைகள் அறுவடை செய்ய முடியும்.
 திருந்திய நெல் சாகுபடி திட்டம் மூலம் 28 முதல் 30 மூட்டைகள் அறுவடை செய்ய முடியும். செலவு குறைவதுடன் மகசூலும் அதிகளவில் கிடைப்பதால் திருந்திய நெல் சாகுபடி திட்டம் விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தரும் என்றார்.


விவசாயி தன் அனுபவத்தில்  கூறியபடி 28 முதல் 30 மூட்டைகள் அறுவடை செய்ய முடியும் என்கிறார்..அவரது சொல்படி பார்த்தால்

1மூட்டை 75 கிலோ என்றால் 30 மூட்டைகள்  2250 கிலோ  ஒரு ஏக்கருக்கு பயிர் செய்து அறுவடை செய்ய முடியும் என்கிறார்...

அதுவும் அவர் உண்மையாக கூறி இருந்தால் அவர் சொல்லும் 30  மூட்டைகள்  அதிகபட்சமானவையாகும்..

ஆனால் தமிழக முதலமைச்சர் அவர்கள்...குறைந்தது 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும் என்றும் அதவது  ஓரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது  2500 கிலோ  வரை அறுவடை செய்தால் 5.இலட்சம் பரிசும் 3500 ரூபாய் மதிப்புள்ள நினைவு பரிசும் அளிக்க படும் என்கிறார்..

நான் ஒரு விவசாயி என்ற முறையில் எங்கள் குடும்ப அனுபவத்தில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 23  மூட்டைகள்  மட்டுமே அறுவடை செய்திருக்கிறோம்..

சரி தமிழக அரசு சொல்வது போல் பரிசு தொகை கிடைத்தால் அது உண்மையான உரிய விவசாயிக்கு கிடைக்க அரசு வழிவகை செய்ய வெண்டும் என்பதே என்னை போன்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பு...

 

Saturday, December 17, 2011

வேல்முருகனுக்கு ஒரு வன்னியனின் எச்சரிக்கை...




நிறுத்தி கொள்ளுங்கள் உங்கள் உலறல் பேச்சை.....





நம்பிக்கை துரோகி முன்னாள் பா.ம.க சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்கள் மருத்துவர் அய்யா எவ்வளவு பணம் எங்கிருந்து வாங்கினார் என்பது என்னிடம் காணெளி ஆதரம் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிட போவதாகவும் உலறியுள்ளார்..

மருத்துவர் அய்யாவின் நிழலில் தங்கி சுகத்தை அனுபவித்துவிட்டு தற்போது கோடி கணக்கில் பணம் சேர்ந்தவுடன். பணவெறி பிடித்து உலறுவது வன்னிய மக்களகிய எங்களுக்கு மட்டுமின்றி அனைத்து உலக மக்களுக்கும் நன்கு தெரியும்..

வேல்முருகன் அவர்களே பாமக வின் வளர்ச்சி பிடிக்காமல் தங்களை துண்டி விடும் சக்தி யார் என்பது விரைவில் வெளிவரும் அதுவரை பொருமை காத்து கொண்டிருக்கும் எங்களை தங்களுக்கு எதிரான ஆதாரங்களை ஒன்று திரட்டி போரட துாண்ட வேண்டாம் என்பதை எச்சரிக்கிறோம்..

வன்னிய மக்கள் மீது அளவுகடந்த  மரியாதை தாங்கள் வைத்திருந்ததும்.வன்னியருக்காக நீங்கள் போரட்டம் நடத்தியதும் நாங்கள் நன்றாக அறிவோம்..

தாங்கள் வளர்ச்சிக்கு பாமக மற்றும் நிருவாகிகள் உதவினார்கள் என்பதை தங்களால் மறுக்க முடியாது.

ஏனே தங்களுக்கு இந்த பணவெறி....

யாருக்காக நீங்கள் மருத்துவர் அய்யாவையும், பாமக வையும் இழிவாக பேசி வருகிறீர்கள்..

தங்கள் வளர்ச்சிக்காக மருத்துவர் அய்யாவை எதிர்த்தீர்கள்..

இப்போது உலக வன்னிய மக்களையும் பழிக்கறீர்கள்...

உங்கள் உலறல் பேச்சை நிறுத்தி கொள்ளுங்கள்..

பாமகவில் வெளியேறிய எத்தனையே பேர் காணமல் முகவரியே இல்லாமல் உள்ளனர்..

அந்த வரிசையில் தங்களுக்கு தாங்களே இடம்தேடி கொண்டிர்கள்..பாவம் தன் தலையில் தனே மண்ணை வாரி போட்டு கொள்வது என்பது இது தானோ....

Thursday, December 8, 2011

மது மூலம் வரும் மக்கள் பணத்தில் அரசை நடத்துவதை விட


நாட்டை காப்பற்ற ஒன்று சேருவோம்..


ண்டுக்கு 14,000 கோடி ரூபாய் வருமானம் கொட்டும் டாஸ்மாக் சார்பில் இப்போது புதிதாக வெளிநாட்டு மதுபானங்களை விற்க 'எலைட் ஷாப்களைத் திறப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. 'உயர் ரக மது வகைகள், குளிரூட்டப்பட்ட பார், கம்ப்யூட்டர் பில்எனக் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் தமிழக அரசு புது சாதனை படைக்க அடிகல் நாட்டிருக்கிறது.

நாட்டில் முழு மது விலக்கு வேண்டும் என மருத்துவர் அய்யா அவர்கள் பல ஆண்டுகளாக போரடிவருகிறார் அதில் சில குறிப்பிட்ட  வெற்றியையும் கண்டுள்ளார்.

மது மூலம் வரும் மக்கள் பணத்தில் அரசை நடத்துவதை விட வெறென்ன சொல்வது.............................. நீங்களே இவ் வெற்றிடத்தை  புர்த்தி செய்து கொள்ளுங்கள்..












எலைட்  மதுவிற்பனையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது...



தமிழகம் முழுவதும் 200 "எலைட்' மதுபான கடைகள் உள்ளிட்ட 800 கடைகள் திறப்பதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஐகோர்ட்டில் வழக்கறிஞர் எம்.ஞானசேகர் தாக்கல் செய்த மனு:வணிக வளாகங்கள், முக்கிய வர்த்தக மையங்கள், பொழுதுபோக்கு இடங்களில், 200 உயர்ரக மதுபான கடைகளை திறக்கும் திட்டம் உள்ளது. இக்கடைகளில் உயர்தர மதுபான வகைகள் விற்பனை செய்யப்படும். கடைகளுடன் இணைந்து "பார்' இருக்காது. இந்த "எலைட்' கடைகள் தவிர 600 சாதாரண மதுபான கடைகளும் திறக்கப்பட உள்ளது.


புதிய "எலைட்' கடைகள் மற்றும் சாதாரண கடைகளை திறக்கும் முடிவு சட்ட விரோதமானது. முந்தைய அரசானது, மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக, கூடுதல் கடைகளை திறக்கக் கூடாது என முடிவெடுத்தது. கடைகளின் நேரத்தையும் குறைத்தது.இந்நிலையில், இந்த அரசானது, ஐந்து ஆண்டுகளில் 800 கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது.


உயர்ரக மதுபான கடைகள், சென்னையில் 20, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகராட்சிகளில் 40, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மாநகராட்சிகளில் 25, மாவட்ட தலைநகரங்கள் 23ல் 115 கடைகள் என மொத்தம் 200 கடைகளும், 33 மாவட்டங்களில் சாதாரண கடைகள் 600ம் திறக்கப்பட உள்ளது.இதற்கான அரசாணை, கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும். புதிய "எலைட்' மற்றும் சாதாரண கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும். தற்போது இயங்கி வரும் கடைகளை ஆய்வு செய்ய, ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


வழக்கு கண்டிப்பாக வெற்றி பெறும்...தமிழக அரசுக்கு நல்லதொரு பாடம் மீண்டும் நீதி மன்றம் புகட்டும்...




Friday, December 2, 2011

மயக்கம் என்ன திரைப்படத்தில் விதிமுறை மீறல்...மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டிப்பு...

மயக்கம் என்ன  திரைப்படத்தில் விதிமுறை மீறல்...மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டிப்பு...








திரைப்படங்கள் மூலம் புகையிலை விளம்பரங்களை புகையிலை  மதுபான கம்பனிகள் ,திணித்து வருகின்றன.


அதன் தொடர்ச்சியாக தற்பொழுது வெளிவந்திருக்கும் 


மயக்கம் என்ன?


திரைப்படத்தின் மூலம்  தனுஷ்  மது அருந்துவதும்- புகை பிடிப்பது போன்ற காட்சிகளை திணித்துள்ளனர்.


இதனை மருத்துவர் மேனாள் குடும்பநலத்துறை அமைச்சர் அன்புமணி அவர்கள் கண்டித்துள்ளார்..


மயக்கம் என்ன படத்தின் தலைப்புக்கு எப்போதும் புகை, மது  மயக்கத்திலேயே தனுஷ் அவர்கள் இருப்பதால் இந்த பெயரை வைத்தார்களா?









புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்


* வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்ற உடல் பாகங்களால் புற்றுநோய் ஏற்பட புகையிலை காரணமாகிறது.


புகையிலையினால் ஏற்படுகிற வாய்ப்புற்று நோய் கொண்ட நோயாளிகள், உலகிலேயே, இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில்  உள்ளனர்.
இந்தியாவில், ஆண்கள் மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே 56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது.
90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.


* இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புற இரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலை காரணமாகிறது.

இந்தியாவில் 82% நாட்பட்ட நுரையீரல் சுவாசக்குழாய் அடைப்பு நோய் ஏற்பட, புகைப்பிடித்தல் காரணமாய் அமைகிறது.
புகையிலை மறைமுகமாக நுரையீரல் டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது. எப்போதும் புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம் ஆகும். சிகரெட் அல்லது பீடிகளை அதிகளவு புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.

புகைத்தல்/புகையிலை திடீரென இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது.
புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில் காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும் புண்களை ஏற்படுத்தலாம்.

புகையிலை, உடல் முழுவதிலும் உள்ள தமனி எனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய் சுவர்களை சேதப்படுத்துகிறது.
புகைத்தல், சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு உடல்நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது. புகைப்பழக்கமில்லாத ஒருவர், புகைப்பழக்கம் (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கும்) உள்ளவரோடு சேர்ந்து வாழும்போது, புகைபிடிக்காத நபர் அவரை அறியாமலேயே மூன்று சிகரெட்டினை புகைக்கிறார். இது அவரின் சிறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்ட கணிக்கப்பட்டது.

புகைத்தல்/புகையிலை பயன்பாடு டையாபிடிஸ் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாக அமைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
புகையிலை, இரத்தத்திலுள்ள நன்மை பயக்கக்கூடிய கொழுப்பின் அளவை குறைக்கிறது.

புகைபிடிப்பவர்கள் / புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, பயன்படுத்தாாதவர்களை, விட இதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3 மடங்கு அதிகமாக உள்ளது.


* ஒவ்வொரு 8 விநாடிகளில் 1 புகையிலை சம்மந்தமான மரணம் நிகழ்கிறது.

இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்பு ஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.

புகையிலையை தவிர்ப்பதால் ஒரு விடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது.

புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில் பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால் கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர் நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும் கொல்லப்படுகின்றர்)
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு, மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


* ஆண்கள் மற்றும் பெண்களில், புகைத்தல் / புகையிலை உபயோகம், கெடுதலான விளைவுகளை ஏற்படுத்துகிறது

தொடர்பான தகவல்கள்
ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம் ஒரு காரணமாக அமைகிறது.

புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில் ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது. மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பே ஏற்படுகிறது.
புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல் மற்றும் திறனை குறைக்கிறது.

புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூலை பாதிப்பு) ஏற்படும் வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.
புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகளில், குழந்தையை இழக்க அதிகவாய்ப்பு உள்ளது. குறைந்த எடையுடன் கூடிய பிள்ளைபிறக்கும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியில் கோளாறுகள் கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தை திடீரென இறக்க வாய்ப்புள்ளது.


புகையிலையினை தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்


உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.
உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம் குறைகிறது.
நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால் பாதிக்கப்படமாட்டார்.
உங்கள் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இருமல் மற்றும் சளி மறையலாம்.
உங்கள் பற்கள் வெண்மையாகவும், சுத்தமாகவும் மாறும்.
புகையிலையை தவிர்ப்பதால் ஏற்படும் சமுதாய நன்மைகள்

நீங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராக இருப்பின், சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.

உங்கள் சுயதோற்றம் மற்றும் சுயநம்பிக்கை வளரும்.
இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் இருப்பீர்கள்.

புகையிலையை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம், மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்


தனுஷ் அவர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்  மக்களை சீரழிக்கும் மது.புகை போன்ற தீய பழக்கங்களை மக்களிடம் திணிப்பதை நிறுத்த வேண்டும்... இல்லையேல்.......? மக்களை ஒன்று திரட்டி உங்களுக்கு எதிராக போரடவேண்டிய நிலைக்கு இளைஞர்களை  தள்ளமாட்டீர்கள் என நம்புகிறோம்...

Tuesday, November 22, 2011

DAM(n)999-திரைப்படத்தை தடை செய்ய மருத்துவர் இராமதசு அய்யா கோரிக்கை.


DAM(n)999-திரைப்படத்தை தடை செய்ய மருத்துவர் இராமதசு அய்யா கோரிக்கை. ..!


                        புதிய அரசியல்...புதிய பாதை.....புதிய நம்பிக்கை..











155 அடி உயரம் உள்ள முல்லை பெரியாறு அணையில் 142அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்ற உச்ச நீதி மன்ற ஆணையை காங்கிரசு களவாணிகள் ஆளும் மத்திய அரசுடன் இணைந்து குப்பையில் போட்ட மார்க்சிய சனநாயகவாதிகள் அணையை உடைக்க இந்த முறை கலைத்தாயின் சேவையை நாடி உள்ளனர். 


நிருபமா மேனன் ராவ்,சிவசங்கர மேனன், ஏ.கே.அந்தோணி, எம்.கே.நாராயணன் என்கிற தமிழர்களுக்கு எதிரான மலையாள துரோக கும்பல் வரிசையில் சோகன் ராய் என்கிற இன்னொரு கரையானின் முயற்சியால் வெளிவர இருக்கும் படம் தான் "டாம்999".  அணை உடைந்தால் தமிழகம் அழிந்து விடும் என்று இந்த விளக்கெண்ணெய் நம் மீது பரிதாபப்படுகிறதாம்;அச்சப்படுகிறதாம்.அதை விளக்க இந்த படமாம்.

இந்த படத்திற்காக அவர்கள் தூக்கி எறிந்த எலும்பு துண்டுகளை கவ்விய நமக்கு அறிமுகமான சில "___"கள் 
  1. தோட்டா தரணி-கலை இயக்குனர்
  2. வி.ஸ்ரீனிவாஸ் முரளி மோகன்-வரைகலை(எந்திரன்,சிவாஜி
  3. அனல் அரசு-சண்டைக் காட்சி
  4. பின்னணி குரல்
    ஹரிஹரன்
    ஜெயச்சந்திரன்
    கே.எஸ்.சித்ரா
  5. ஆஷிஸ் வித்யார்த்தி,விமலா ராமன் 

1895இல் ஆரம்பிக்கப்பட்டு கட்டப்பட்டு வந்த நிலையில் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு மேற்கொண்டு நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஆங்கில பொறியாளர் ஜான் பென்னி குக்  தனது சொத்து முழுவதையும் விற்று அவரது தியாகத்தால் உருவானது இந்த வரலாற்று சிறப்பு மிக்க அணை. ஆனால் இங்கு விளையும் காய்கறிகளையும், அரிசியையும், உற்பத்தியாகும் நெய்வேலி மின்சாரத்தையும் நம்பி வாழும் மலையாளிகள்அணையை உடைத்து தமிழர்களுக்கான தங்கள் நன்றிக்கடனை திருப்பி செலுத்த விழைகின்றனர். என்ன இருந்தாலும் அது ஊசிப் போன இந்திய ரத்தம் தானே?!அவர்களிடம் இருந்து இதற்கு மேலான நாகரிகத்தை எதிர்பார்ப்பது நமது அறிவீனம்.

 "இரு இனங்களுக்கு இடையில் பகை உணர்ச்சியை தூண்டும் இந்த படத்திற்கு மட்டும் எப்படி தரச் சான்றிதழ் தந்தார்கள்" தமிழனை தாக்க,அந்த இனத்தை அழிக்க யார் முயற்சி எடுத்தாலும் இந்தியா முன்னின்று சென்று ஆதரிக்கும் என்ற வாதத்தையே வலியுறுத்துகிறது. 

தமிழகத்தில் எந்த ஒரு திரை அரங்கிலும் இது திரை இடப்பட்டாலும் அது தமிழனுக்கு இழுக்கு.

இனி தமிழன் அறம் வழி சென்று எதையும் சாதிக்க இயலாது என்பதையே இந்திய யூனியன் நமக்கு திரும்ப திரும்ப கற்றுத் தரும் பாடம் ஆகும்.



Monday, November 21, 2011

குமுதம் வார இதழியில் மருத்துவர் சின்ன அய்யா...

22-11-2011 குமுதம் வார இதழியில் மருத்துவர் சின்ன அய்யா...

சீனியர் மருத்துவ கல்லுாரி மாணவர் போல் படு இளமையாக தோற்றமளித்தார் டக்டர் அன்புமணி. இடம் சென்னை திலக் தெரு அவரது வீட்டில் “கட்சிக்கு புதிய வேகத்துடன் உழைக்க வேண்டுமென்றால் நம் உடம்பை பார்த்து கொள்ள வேண்டமா? என்று புன்னகைத்தார்..அரசியல் கட்சியின் தகவல்களை நம்முடன் பகிரிந்து கொண்டார்...என தொடங்கும் கட்டுரையுடன்



ஒரு சக்தியாக உருவான பா.ம.க இன்று தங்கள் சொந்த சமூக மக்களே நம்பிக்கை இழந்து விட்ட அளவிற்க்கு பலவீன மாகி விட்டதே...ஏன்?


உங்கள் செல்வாக்கு பெருமளவிற்கு சரிவிட்டது என்றால் ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது...?


சரி நீங்கள் பலமாக இருப்பதாக சொல்லபடும் மாவட்டங்களில் கூட அதிமுக
அமோக வெற்றி பெற்றுள்ளதே..?




ரொம்ப காலம் கடந்த ஞானோதயமாக இருக்கிறதே?


நீங்கள் அரசியல் ரீதியாக செய்த தவறுகளுக்கு ஊடங்களை ஏன் திட்டுகிறீர்கள்..?


ஒரு பக்கம் கட்சியை வளர்பதாக சொல்லிவிட்டு இன்னொருபுறம் வேல்முருகன் போன்ற புத்திசாலிகளை விரட்டுகிறீர்களே...?


போட்டி கட்சி ஆரம்பிக்க போவதாக சொல்கிறாரே...?


நில அபகரிப்பு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறீர்களா..?


கருணநிதிக்கு உங்கள் அறிவுரை..?


போன்ற கேள்விகளுக்கு  வி.சந்திரேசன் நிருபர் அவர்களுக்கு மருத்துவர் சின்ன அய்யா சுடச்சுட பதில் அளித்துள்ளார்..




குமுதம் வார இதழை வாங்கி படியுங்கள்...

உங்கள் கருத்துகளையும், மருத்துவர் சின்ன அய்யாவை பேட்டிகண்ட இதழையும் பாரட்டி குமுதம் இதழுக்கு கடிதம் எழுதுங்கள் ...இது போன்ற செயல்களால் நமது பாமக மேலும் வலு்பெறும்....


புதிய அரசியல் புதிய நம்பிக்கை....