நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, March 31, 2011

விஜய்காந்து அரசியலில் ஆப்பு வைக்க பாஸ்கரனை அனுகவும்..

 

எதிர்க்கட்சிக்காரர்கள் யாரவது பாஸ்கரனை அனுகி, உனக்கு 10 கோடி தறேன்னு, " விஜய்காந்து கோபம் வந்து உன்னை அடிச்சான் னு உண்மையை ஒரு போலிஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளய்ன் பண்ணு" விலை பேசி அதற்கு பாஸ்கரன் சரி என்றால், விஜய்காந்து அரசியல் வாழக்கை இன்றோடு ஒரு முடிவுக்கு வந்துவிடும்!

எத்தனைகோடி நஷ்ட ஈடு விஜய்காந்திடம் பெற்றாரோ அந்த அடிவாங்கிய பாஸ்கரன்? விஜய்காந்திடம் வாங்கிய அந்த நாலு அடிக்கு குறைந்தது நாலு கோடியாவது வாங்கி இருப்பார்!

மொதல்ல விஜய்காந்து அவரோட வேட்பாளர் “பாண்டியனை” (பாஸ்கரனை) அடிச்சான்னு சொன்னதும் நான் நெஜம்மாவே நம்பலை! சும்மா விஜய்காந்துமேலே உள்ள கெட்ட எண்ணத்திலே இவரை வச்சு காமெடி பண்ணுறானுகனுதான் சத்தியமா நெனச்சேன். ஆனால், அந்த வீடியோ மட்டுமல்லாமல், விஜய்காந்தே நான் அடிச்சேன்னு சொல்ற ஆளு மஹாராஜரா ஆகிவிடுவார்னு பிதற்றிப் பூசி மொளுகுவதைப் பார்த்தால், இவன் அடிச்சான்கிறதை நம்பாமல் இருக்க முடியலை!

சிறுகுழந்தைகளை, தான் பெற்ற பிள்ளைகள் தவறு செய்யும்போது அடிப்பதே தவறு! அப்படியிருக்கும்போது தன்னால் (இந்த ஆளுதானே வேட்பாளரை தேர்ந்தெடுத்தது) தரமான ஆள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வேட்பாளரை தொடுவதே மிகப்பெரிய தவறு. இந்த ஆளு என்னப்பா உண்மையிலேயே பப்ளில் மத்தியில் இப்படி அடிச்சு இருக்கான்!! கைநீட்டி அடிக்கும் விஜய்காந்துபோல ஒரு கீழ்த்தரமான ஆளுக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கு?

மேதாவி சோ ராமசாமி என்னவோ விஜய்காந்து தன் வேட்பாளரை அடிச்சா தப்பு இல்லைனு சொன்னதாகச் சொன்னார்கள். சோ ராமசாமிக்கு என்ன மறை கழண்டுருச்சா? திமுக ஆட்சி ஒழியனும் என்பதற்காக இவன் என்ன வேணா பேசலாமா? ஒரு வேட்பாளரை மக்கள் முன்னிலையில் அடிச்சதை எப்படி தவறில்லைனு சொல்ல முடியும்?

ஆமா, விஜய்காந்தை, வடிவேலு தரமற்றுப் பேசியவைகளை விமர்சனம் செய்த மேதாவிகள் இப்போ அநாகரிகமாக நடந்த முட்டாள் விஜய்காந்தை கண்டிக்க முன்வரவில்லையே, அது ஏன்?

பதிவுலகில் உள்ள சாதாரண அதிமுக ஜால்ரக்கள், விஜய்காந்து ஜால்ராக்கள் எல்லாம் விஜய்காந்தின் இந்த கிழ்த்தரமான செயலை பார்த்துக்கிட்டு என்னமோ ஒண்ணுமே நடக்காத மாதிரி பொத்திக்கிட்டு இருக்கார்கள்! பதிவுலகில் இஷ்டத்துக்கு நியாயம் பேசும் இவர்களே இப்படி பெரிய அரசியல்வாதிபோல் நடந்துகொள்ளும்போது பல ஆண்டுகள் அரசியலில் புரண்டவர்கள் எப்படி எல்லாத்தையும் உதிர்த்துவிட்டு இருப்பார்கள் என்று விளங்குது!
 
நன்றி..

Wednesday, March 30, 2011

ஷத்திரியர்கள்

 

வன்னியப் பெருங்குடி மக்கள் தான் தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள். எத்தனையே வகுப்பினர் முட்டி மோதிப் பார்த்த போதிலும், வன்னியர்கள் மட்டுமே ஷத்திரியர்கள் என்று ஆங்கிலேயர்களே அங்கீகரித்து விட்டனர். அறிவிக்கையும் அமலில் உள்ளது. தமிழகத்தில் வன்னியர்களைத் தவிர வேறு யாருக்கும் ஷத்திரியப்பட்டம் சொந்தமில்லை.

இவற்றுக்கு ஆதாரங்கள் எண்ணற்றவை.

விஜயதசமியின் போது வன்னியர்கள் ஆயுத பூஜை செய்வதில்லை என்று சொன்னது யார்...? உங்களுக்கு தெரியுமோ என்னவோ...? வன்னியர்களுக்கு உள்ள பட்டங்களில் ஒன்று வில்வித்தையனார் என்பது. வில் வித்தைகளுக்கு அதிபதி என்று அதற்குப் பொருள். இந்த வில்வித்தையை வன்னியர்கள் கற்கத் தொடங்குவதே விஜயதசமி அன்று தான். இது வெறும் கூற்று அல்ல. வரலாற்று பதிவுகள் ஏராளமானவை உண்டு.

வன்னியர்களான மாயவரம் பாளையக்காரர்களுக்கு உள்ள ஒரு பட்டம், ராவுத்தமின்ட நைனார் என்பது. அதாவது, அவர்கள் குதிரைப் படைகளுக்கு பொறுப்பாளர்கள். குதிரை ஏறி ஆயுதம் பிடித்து எதிரிகளின் கொட்டத்தை அடக்கியவர்கள். அதுமட்டுமல்ல... கரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வழி வழியாக வரும் கிராமப்புற கதைகளில், அடக்க முடியாத முரட்டுக் குதிரைகள் பலவற்றை வன்னியர்கள் மட்டுமே அடக்கியதை எடுத்துக் கூறுவார்கள். கிராமியக் கதைகள் தான் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு முக்கியமான களம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை...

நான் வகைப் படைகளை ரத, கஜ, துரத, பதாதி என்று பிரிப்பார்கள். இவை நான்கும் சேர்த்துதான் படை. படையாட்சி என்பது வெறும் காலாட்படை அல்ல. ரதம், யானை, குதிரை போன்றவற்றையும் சேர்த்தது தான். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், வன்னியர்களின் ஒரு பிரிவினருக்கு குல தெய்வம் மதுரை வீரன். குதிரையில் ஏறி கம்பீரமாக அமர்ந்து இருப்பான் மதுரை வீரன்.

மதுரை வீரன் என்றதும் மதுரைக் காரர் என்று நினைத்து விடக் கூடாது. நம்முடைய பகுதியில் இருந்து மதுரைக்கு சென்று போர் புரிந்தவர்.

பட்டங்களையும் முத்திரைகளையும் பாதுகாக்கும் சாதிப் பிள்ளைகளை கேட்டால் சொல்வார்கள்... வன்னியர்களின் வாகனம், குதிரை. அதிலும் ஆண் குதிரை. வன்னியர்களின் காவல் மிருகம், ஆண் நாய். திருண்ணாமலை மாவட்டத்திற்கு முன்பு இருந்த பெயர், சம்புவராயர் மாவட்டம் என்பது. சம்பு + அரயர் = சம்புவராயர். அந்த பகுதியை ஆண்ட வன்னிய அரசர்கள் அவர்கள்.

இன்னும் வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்று சொல்வதற்கு கலிங்கத்துப் பரணி, கல்நாடம், சிலையெழுது போன்ற ஏகப்படட நூல்கள் உள்ளன. பின்னர் வந்த பாளையக்காரர்கள் பலர் நம்மவர்கள் தான் என்பதை வன்னியர் சிலையெழுபது என்ற வழி நூலும் பளிச்சென்று சொல்லும், வன்னியர்கள் தான் ஷத்திரியர்கள் என்பதை.

சோழ மன்னர்கள் வன்னியர்கள் என்று சொல்வதற்கு வரலாற்று ஆதாரமாய் வாழ்கிறார்கள், பிச்சாவரத்து பாளையக்காரர்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒரு நடைமுறை வழக்கம் உண்டு. சோழ மன்னர்களுக்கு மட்டுமே அங்குள்ள மூலஸ்தானத்தின் பஞ்சாட்சரப் படிக்கட்டில் வைத்து, சிவ பெருமானுக்கு உள்ள அத்தனை அபிஷேக ஆராதனைகளையும் செய்து முடி சூட்டுவார்கள். இந்த வரலாற்று உண்மை, பெரிய புராணத்தில் காணப்படுகிறது. அதிலும், கூற்றுவ நாயனார் புராணம் இதைப் பற்றித் தான் பேசுகிறது. வேறு எந்த சாதிக்கும், பிரிவுக்கும் இந்த மரியாதை கிடைக்காது.

இந்த பஞ்சாட்சர படிக்கட்டில் வைத்து முடிசூட்டும் உரிமையை இந்த காலம் வரையில் பெற்ற ஒரே குடும்பம், பிச்சாவரத்து பாளைக்காரர்கள். இவர்கள் வன்னியர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அவர்களைக் கேட்டால் கூட சொல்வார்கள். எனவே, வன்னியர்கள் தான் சோழர்கள் என்பதில் எந்த மாறுபாடும் இல்லை. எனவே, வன்னியர்கள் மன்னர்கள், ஆண்ட பரம்பரை, ஷத்திரியர்கள் என்பதில் உறவுகளுக்கு ஐயமே தேவையில்லை.

மற்றொன்று, உணவுப் பழக்கத்தை மையப்படுத்தி நம்முடைய கலாச்சாரத்தை தாழ்வு படுத்த முடியாது. உணவுப் பழக்கம் என்பது காலத்திற்கு ஏற்ப மாறுதல்களுக்கு உட்பட்டது. ரிக் வேதத்தில் பிராமணர்கள் மாட்டு இறைச்சியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதற்கு விரிவான விளக்கங்கள் உள்ளன. அது அந்தக் காலம். ஆனால், இன்று பிராமணர்கள் சிலர் பசுவதையை தடுக்க வேண்டும் என்று கோஷமிடுகிறார்கள்.

அசுவமேத யாகம் என்ற ஒன்றைப் பற்றியும் ரிக் வேதம் கூறுகிறது.

மன்னர்கள் நடத்தும் அந்த யாகத்தின் இறுதியில் அனைத்து தகுதிகளும் கொண்ட ஆண் குதிரை பலியிடப்படும். பின்னர் அதன் பாகங்கள் அரசனுக்கும், பின்னர் வேதங்களை சொல்லி யாகத்தை நடத்தி வைக்கும் பிராமணர்களுக்கு பகிர்ந்து தரப்படும். குதிரைக் கறி தின்ற பிராமணர்கள் இப்போது அதையே தான் சாப்பிடுகிறார்களா...?

மேலும், வன்னியர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை. அது சில பகுதிகளை மட்டுமே சார்ந்தது. அதோடு, காட்டில் சென்று பன்றியை வேட்டையாடுவது அத்தனை சாமான்யமானதில்லை. ஈட்டியை வைத்து தான் பன்றியை வேட்டையாடிப் பிடிப்பார்கள். பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்பதும் உணவு பழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. சமூக, பொருளாதார நிலவரத்தால் பன்றிக் கறியும் சாராயமும் ஒரு சிலருக்கு பழக்கமாகி இருக்கலாம். ஆனால், வன்னியர்கள் அத்தனைப் பேருமே அப்படி இருப்பதில்லை.

அதோடு, நம்முடைய பாரம்பரிய கலையான கூத்துகளில், மண்ணைக் காக்கும் போர்கள் பற்றிய கதைகள் தான் அதிகம். மாட்சிமைப் பொறுந்திய மன்னர்களாகவும், படையாட்சி செய்த தளபதிகளாகவும், எதிரிகளை பந்தாடும் படைகளாகவும் விளங்கியவர்கள் வன்னியர்கள் தான். நாங்கள் தான் தமிழ்நாட்டு ஷத்திரியர்கள்.

நம்மிடம் பெருமையாய் சொல்ல இன்னும் எத்தனையே இருக்கிறது.

Tuesday, March 29, 2011

நிதானம் தவறி உளறுகிறார் விஜயகாந்த்: மாவீரன் ஜெ.குரு

நடிகர் விஜயகாந்திற்கு தேர்தல் ஜுரம் அதிகரித்து, நிதானம் தவறிவிட்டார். என்ன பேசுகிறோம்? வரலாறு என்ன? என்று அறியாமலும், புரியாமலும் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார் என, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு கூறியுள்ளார்.

வன்னியர் சங்கத் தலைவர் மாவீரன் ஜெ.குரு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடிகர் விஜயகாந்திற்கு தேர்தல் ஜுரம் அதிகரித்து, நிதானம் தவறிவிட்டார். என்ன பேசுகிறோம்? வரலாறு என்ன? என்று அறியாமலும், புரியாமலும் மேடைக்கு மேடை உளறிக் கொண்டிருக்கிறார்.

மரங்களையெல்லாம் வெட்டி விட்டு இப்போது பசுமை தாயகம் என்ற பெயரில் மரங்களை நடச் சொல்லுகிறார்கள் என்று விபரம் தெரியாமல் விஜயகாந்த் பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் மிகப்பெரிய பின் தங்கிய சமுதாயம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதார சூழ்நிலையிலும் தொடர்ந்து பின்தங்கி கிடந்த நிலையில், 1987ஆம் ஆண்டு இச்சமுதாயம் மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையில் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தை நடத்தியது.

சமூக நீதிக்காக நடைபெற்ற இப்புனித போராட்டம் நடந்த காலத்திலே, தன்னுடைய பிழைப்பிற்காக கோடம்பாக்கம் தெருக்களிலே சுற்றி திரிந்த ஒரு நபர் இப்போராட்டத்தை கொச்சைப்படுத்துவது இந்த புனிதப் போராட்டத்தில் பங்கு கொண்ட இலட்சக்கணக்கான மிகபின்தங்கிய மக்களையும், தன் இன்னுயிரை ஈந்த 21 தியாகிகளின் தியாகத்தையும் இழிவுப்படுத்துவதாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் இந்தப் போராட்டம் நடந்தாலும், அதன்பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞரின் ஆட்சியில்தான் மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டின் விளைவாக இவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த மருத்துவம், பொறியியல் போன்ற தொழில் கல்விகள் இப்போது ஓரளவு கிடைத்து வருகிறது.

இதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாமல், பொறாமை உணர்வுடன் நடிகர் விஜயகாந்த் இந்த மக்கள் மீது, மரத்தை வெட்டியவர்கள் என்று பழிசுமத்தி பேசுகிறார்.

அவர் சார்ந்த திரைப்படத் துறையினராலேயே தள்ளாட்டம் போடுகின்ற தண்ணீர் மனிதன் என்று விமர்சிக்கப்படுகின்ற ஒரு நபர் வெகு மக்களின் போராட்டத்தை, இழிவுப்படுத்தி பேசுவதை தமிழ் சமுதாயம் இனியும் மன்னிக்காது.
விலைமதிப்பற்ற 21 மனித உயிர்களை பலி கொடுத்த நேரத்திலே நடந்த சில சம்பவங்களை பெரிதுபடுத்தும் நிதானம் இல்லாத அந்த நபர் என்றாவது மக்களின் பிரச்சனைகளுக்காக போராடியதுண்டா? ஆண்டுடாண்டு காலமாக உழவுத் தொழிலை நம் குலத் தொழிலாக கொண்டு அனைவருக்கும் உணவு அளிக்கும் இம்மக்கள் மரங்களை நடுவதும், பசுமை தாயகம் அமைப்பதும் புதுமையான செய்தியல்ல. இவ்வாறு ஜெ.குரு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
 

Monday, March 28, 2011

குடிகார விஜயகாந்தே இதோட நிறுத்திக்க உன் உலறல் பேச்சை..

அன்புள்ள குடிகார விஜயகாந்த் அவர்களுக்கு மரத்தைவெட்டிவிட்டு பசுமைத்தாயகமா, சுயநலத்துக்காக பசுமைத்தாயகம் நடத்துகிறார் இராமதாசு என்று பசுமைத்தாயகத்தை கேவலபடுத்தும் விதமாக  நீங்கள் பேசுவது உமக்கு வருகின்ற சட்டமன்ற தோ்தலில் நீங்கள் போட்டியிடும் அனைத்து இடங்களிலும்  டெபசிட் இழக்க வழி வகுக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்..

பசுமைத்தாயகம் செய்து வரும் சாதனைகளை இவ்வுலகமே அறியும் இவ்வமைப்பு ஐ.ந.சபையில் அங்கிகாரம் பெற்ற அமைப்பாக உள்ளது.
இவ்வமைப்பில் உள்ளவர்கள் உங்கள் கட்சியில் உள்ளவைரை போல் குடிகாரர்களல்லா உங்களை போல் 800 கோடி வாங்கி கொண்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தவர்களும் அல்லா.

படித்த பட்டதாரிகளும், செய்யும் வேலைகளை திறம்பட செயல்திட்டம் தீட்டி செவ்வெனே செய்து முடிப்பவர்கள், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள்,சுற்றுசூழல் அக்கறையில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

எங்கள் தலைமை உத்தரவிட்டால் உம்மை..... ?

Monday, March 21, 2011

பாமகவின் முத்தான தேர்தல் அறிக்கை..

பா.ம.க. தேர்தல் அறிக்கை




பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை  நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சென்னையில் வெளியிட்டார்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை மாதம்தோறும் நிதி உதவி வழங்கப்படும்.

 குழந்தைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்புவோர், பிறந்தது முதல் 6 வயது வரை இலவச தடுப்பூசி போடுவோர், சொட்டு மருந்துகள் அளிப்போர், மருத்துவப் பரிசோதனைகள் செய்வோர், கர்ப்பிணிகள் எனில் உரிய தடுப்பூசிகள், மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்பவர்கள் ஆகியோருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.

 தனியார் துறை, அரசுசாரா அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சட்டப் பேரவைத் தொகுதி நீடித்த வளர்ச்சித் திட்டம் என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்மயமாக்குதல், வேளாண்மை வளர்ச்சி, அறுவடைக்கு பிந்தைய மதிப்பு கூட்டல் தொழில்களை வளர்த்தல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கும்.


 பள்ளிக் கல்வியை அரசே வழங்க வேண்டும்: அனைத்து வளர்ந்த நாடுகளிலும் உள்ளதுபோல பள்ளிக் கல்வியானது முழுக்க முழுக்க அரசினால் நடத்தப்படும் நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.


 தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். பொதுப் பள்ளி முறை, அருகாமை பள்ளி முறை கொண்டு வரப்படும்.

 6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்பது 3 முதல் 14 வயது வரை என்று மாற்றியமைக்கப்படும்.

 பள்ளிக் கல்வித் துறையிலிருந்து தொடக்கக் கல்விக் துறையை பிரித்து தனித் துறை உருவாக்கப்படும். பள்ளிகளில் தமிழ் இசை ஒரு பாடமாக சேர்க்கப்படும். நீதிபோதனை வகுப்பு கட்டாயமாக்கப்படும்.


 
புதிய மாவட்டங்கள்: 6 எம்.எல்.ஏ. தொகுதிக்கு ஒரு மாவட்டம் உருவாக்கப்படும். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் குடிசைகள் இடிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். தமிழகம் முழுவதும் பனை மரங்கள் நடப்படும். உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே பனை மரத்தை வெட்ட முடியும் என்கிற சட்டம் கொண்டு வரப்படும். தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும்.


 அரசு ஊழியர்கள் முழு ஓய்வூதியம் பெற வேண்டுமானால் 33 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதை 20 ஆண்டுகளாக குறைக்க வழிவகை செய்யப்படும்.

 சத்துணவு ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.


 மத்தியில் ஆட்சி மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் தமிழை கொண்டுவர வழிவகை செய்யப்படும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.


 தமிழ் ஈழமே தீர்வு: இலங்கையில் தமிழீழம் அமைய இந்திய அரசு துணை நிற்க வேண்டும். கடைசி கட்ட போரின்போது இலங்கை அரசால் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு, பன்னாட்டு நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும்.


 இலங்கை கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் மீன்பிடி உரிமையை உறுதி செய்யவும், கச்சத் தீவை மீட்கவும் பா.ம.க. பாடுபடும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 100 நாள் வேலை திட்டத்தை வேளாண் பணிகளுக்கும் நீட்டிக்க வேண்டும். மீனவர்களின் உயிர், படகு, கட்டுமரங்களை ஒட்டுமொத்தமாக காப்பீடு செய்ய திட்டங்கள் வகுக்கப்படும்.

மீன் பிடிக்கத் தடை இருக்கும் காலங்களில் மாதம் ரூ.2 ஆயிரம் நிதி வழங்கப்படும். சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும்.


 தாலுகாவுக்கு ஓர் அரசுக் கல்லூரி: தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கட்டுப்படுத்தப்படும்.

தொழிற்கல்வி நிறுவனங்களில் கிராமப்புற மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். தாலுகாவுக்கு ஓர் அரசுக் கல்லூரியும், ஒன்றிய அளவில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும், மாவட்டம்தோறும் தமிழிசைக் கல்லூரியும் தொடங்கப்படும்.


 ஜாதிவாரி கணக்கெடுப்பு: வேளாண் துறைக்கு நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை முறையாக நடத்த பா.ம.க. துணை நிற்கும். மக்கள் தொகை அடிப்படையில் 100 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க பா.ம.க. குரல் கொடுக்கும்.


 வீட்டுக்கு ஒருவருக்கு வேலை:

அனைவருக்கும் வேலை,

அனைவருக்கும் வருமானம் என்ற அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும்.

வணிகர்களுக்கு சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு 2 லட்சம் சிறு வணிகர்களுக்கு ரூ.50 கோடி கடன் வழங்கப்படும்.

சென்னை மாநகரில் ஓடும் பஸ்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரிக்கப்படும். குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ளது போல பேருந்து விரைவுப் போக்குவரத்து முறை கொண்டு வரப்படும்.


 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் வகையில் பா.ம.க. பாடுபடும்.

ஒரே தடுப்பூசி மூலம் பல நோய்களைத் தடுக்கும் கூட்டுத் தடுப்பூசி முறை கொண்டு வரப்படும். தனியார் மருத்துவமனைகளில் குறைந்தது 15 சதவீத இலவச சிகிச்சை அளிக்க உறுதி செய்யப்படும்.

புற்றுநோய் சிகிச்சைக்காக ரூ.100 கோடியில் தனி சுழல் நிதி உருவாக்கப்படும். பூரண மதுவிலக்கை செயல்படுத்துவது பா.ம.க.வின் தலையாய நோக்கமாக இருக்கும். குட்கா, பான் மசாலா, மெல்லும் வகை புகையிலை பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும். சென்னை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றப்படும்.


 நீதித் துறையில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டில் 50 சதவீதம் என்ற உச்சவரம்பையும், கிரீமி லேயரையும் நீக்குதல், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு விகிதாச்சாரத்தை மாநிலங்களே முடிவு செய்து கொள்ள தேவையான சட்ட திருத்தம் செய்வது ஆகியவற்றுக்காக பா.ம.க. பாடுபடும்.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ம் தேதியை சமூகநீதி நாளாக அறிவிக்க குரல் கொடுப்போம்.

 தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு: இட ஒதுக்கீடு வழங்குவதில் மதம் ஓர் அடிப்படையாகக் கருதப்படக் கூடாது என்கிற வகையில் அரசியல் சாசனம் திருத்தப்பட வேண்டும்.

வன்னிய கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

Sunday, March 20, 2011

2011 தேர்தலில் போட்டியிடும் 31-பாமக சிங்கங்கள்....

2011-சட்டமன்ற தேர்தலில்   போட்டியிடும் பாமக வேட்பாளர்கள்

1.கும்மிடிப்பூண்டி- திரு.கே.என்.சேகர்

2.ஜெயகொண்டம்- திரு.செ.குரு

3.மதுரவாயல்- திரு.செல்வம்

4.வேளச்சேரி- மு.செயராமன்

5.செங்கல்பட்டு- திரு.ரங்கசாமி

6.திருப்போரூர்- திரு.திருக்கச்சூர் ஆறுமுகம்

7.காஞ்சிபுரம்- திரு.உலகரட்சகன்

8.ஆற்காடு- திரு.இளவழகன்

9.ஜோலார்பேட்டை- திரு.பொன்னுசாமி

10.பர்கூர்- திரு.தி.க. ராசா

11.பாலக்கோடு- திரு.பாடி செல்வன்

12.தர்மபுரி- திரு.பி.சாந்தமூர்த்தி

13.போளூர்- திரு.எதிரொலி மணியன்

14.செஞ்சி- திரு.கணேஷ் குமார்

15.திண்டிவனம் (தனி)- திரு.மொ.ப. சங்கர்

16.ஓமலூர்- திரு.தமிழரசு,

17.மேட்டூர்- திரு.ஜி.கே.மணி

18.எடப்பாடி- திரு.மு. கார்த்திக்

19.பரமத்திவேலூர்- திரு.வடிவேல் கவுண்டர்,

20.பவானி- திரு.மகேந்திரன்

21.திண்டுக்கல்- திரு.ஜே. பால்பாஸ்கர்

22.நெய்வேலி- திரு.வேல்முருகன்

23.புவனகிரி- திரு.அறிவுச்செல்வன்

24.பூம்புகார்- திரு.அகோரம்,

25.அணைக்கட்டு- திரு.மா.கலையரசு

26.சோழவந்தான் (தனி- திரு.மு.இளஞ்செழியன்

27.ஆலங்குடி- திரு.டாக்டர் அருள்மணி

28.கோவில்பட்டி- திரு.கோ.ராமச்சந்திரன்

29.வேதாரண்யம்-திரு.ந.சதாசிவம்
30.மயிலம்-திரு.இரா.பிரகாஷ்

உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்...

உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்...


தென் மாவட்டங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் ஒரு வழக்கம் உண்டு. மாணவ, மாணவியர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டாலோ, கூட்டாக ஏதாவது தவறு செய்தாலோ, அவர்களை ஒருவர் காதை மற்றவர் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடச் சொல்வார்கள் ஆசிரியர்கள். ""உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டாய்'' என்று சொல்லிக் கொண்டே தோப்புக்கரணம் போட வேண்டும்.
 ÷நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தால், தி.மு.க.வும் காங்கிரஸýம், அல்லது அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அந்த நிலைக்குத்தான் தள்ளப்படுவார்கள். தி.மு.க., காங்கிரஸýக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ அ.தி.மு.க. - ம.தி.மு.க.வுக்கு இது நிச்சயமாகப் பொருந்தும்.
 ÷தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ""கட்சியின் உயர்நிலை மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெருவாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை.
 ÷""பொதுச் செயலாளரின் முடிவை அவருக்கு நெருக்கமான மூன்று நான்கு மூத்த மாவட்டச் செயலாளர்களின் மூலம் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்பது போலத் தெரிவித்திருக்கிறார்கள். இது தொண்டர்களின் மனதைப் பிரதிபலிப்பதாக இல்லை. தேர்தலைப் புறக்கணித்து விட்டு வீட்டில் உட்கார்வதற்காகவோ, தனித்துப் போட்டியிட்டு "டெபாசிட்' இழப்பதற்காகவோ நாம் ஏன் ஒரு அரசியல் கட்சியை நடத்த வேண்டும்? பொதுச் செயலாளர் வேண்டுமானால் கலிங்கப்பட்டியில் விவசாயம் செய்து கொண்டு காலத்தைக் கழிக்கலாம். நாங்கள் என்னதான் செய்வது?'' - பெருவாரியான ம.தி.மு.க. தொண்டர்களின் மனக்குமுறல் இதுவாகத்தான் இருக்கிறது.
 ÷சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத எந்தவொரு அரசியல் கட்சியும் தனது தனித்துவத்தை இழந்து மெல்ல மெல்ல மக்கள் நினைவிலிருந்து அகன்றுவிடும் என்பதுதான் சரித்திரம். 1971 சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் ஒரு தொகுதியில்கூடப் போட்டியிடாமல் அத்தனை சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்ததன் விளைவுதான் இன்றுவரை காங்கிரஸ் தமிழகத்தில் தலைதூக்க முடியாமல் போனதற்குக் காரணம் என்பதை மூத்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டால் சொல்வார்கள்.
 ÷1996-ல் வைகோவின் ம.தி.மு.க. தனது முதல் தேர்தலை சந்தித்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் தேர்தல் உடன்பாடு செய்து கொண்டு போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாமல் போனது. போட்டியிட்ட தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் மட்டுமே டெபாசிட் தொகையைப் பெற முடிந்தது. நல்ல வேளையாக, 1998-ல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்ததால் அந்தக் கட்சிக்கு சின்னமும் அங்கீகாரமும் கிடைக்க நேர்ந்தது.
 ÷2001 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமை 21 இடங்களை ஒதுக்கித்தர முன்வந்தும், ஓரிரு தொகுதிகளுக்காக தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்தார் வைகோ. அந்த மாபெரும் தவறால்தான் கட்சித் தொண்டர்கள் பலர் ம.தி.மு.க.விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.விற்குத் திரும்ப நேர்ந்தது. வைகோவுடன் தி.மு.க.விலிருந்து 1993-ல் வெளியேறிய 9 மாவட்டச் செயலாளர்களில் 8 பேர் தாய்க் கழகத்துக்கே திரும்பிவிட்டனர் என்பதுதான் கசப்பான உண்மை.
 ÷""தனித்துப் போட்டியிட கட்சிக்காரர்கள் யாரும் தயாராக இல்லை. பணத்தைச் செலவழித்துத் தோல்வியைத் தழுவ யார்தான் தயாராக இருப்பார்கள்? 12 இடங்கள் தருவதாக அ.தி.மு.க. கூறுகிறது என்றால், பொதுச் செயலாளர் வைகோ, ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி 15 தொகுதிகளையும் ஒரு எம்.பி. சீட்டையும் பெற்று வருவதுதானே சாமர்த்தியம்? தேர்தலிலிருந்து ஒதுங்குவது என்று கட்சி முடிவெடுத்தால், நாங்கள் தி.மு.க.வுக்கே திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை'' என்கிறார்கள் ம.தி.மு.க.வில் இருக்கும் பலர்.
 ÷வைகோவின் இந்த முடிவு உணர்ச்சிபூர்வமானது என்பது ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டு ம.தி.மு.க. வெளியேற்றப்படுகிறது என்று வைகோ கருதுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. நீண்ட நாள் தோழனாக இருக்கும் தன்னிடம் முதலில் பேசித் தொகுதிகளை ஒதுக்காமல், மற்றவர்களிடம் பேசி ஒப்பந்தம் செய்துகொண்டதே வைகோவை எரிச்சலூட்டியது. இத்தனைக்கும் தான் போட்டியிட விரும்பும் 35 தொகுதிகளின் பெயர்களையும், அந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களாகத் தான் நிறுத்த இருப்பவர்களின் பெயர்களையும் பட்டியலிட்டு ஜெயலலிதாவிடம் நேரில் கொடுத்திருந்தார் வைகோ.
 ÷35 இல்லாவிட்டாலும், 15 தொகுதிதான் என்றாவது முடிவு செய்து பேச்சுவார்த்தையைத் தொடங்கி இருக்கலாம் அ.தி.மு.க. தலைமை. சிறிய கட்சிகளுக்கான தொகுதி உடன்பாடும், தே.மு.தி.க.வின் தொகுதி உடன்பாடும் முடிந்த பிறகுதான் ம.தி.மு.க.விடம் பேச்சுவார்த்தையே தொடங்கியது அ.தி.மு.க. அதிலும் வெறும் 6 இடங்கள், 7 இடங்கள் என்று பேசத் தொடங்கியது என்ன நியாயம் என்கிற வைகோவின் ஆதங்கத்தில் யார்தான் குற்றம் காண முடியும்?
 ÷ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து விலக்கி நிறுத்துவதில் அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டினார்கள் என்று கூறப்படுகிறது. இது ஒருவேளை ஜெயலலிதாவின் ஆசியுடனும் அனுமதியுடனும்கூட நடந்திருக்கக்கூடும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
 ÷வைகோவால் பாதிக்கப்பட்ட ஒரு பன்னாட்டுத் தொழில் நிறுவனத்தின் பங்கு இதில் இருக்கிறது என்கிறார்கள். வைகோவையும் ம.தி.மு.க.வையும் கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் தி.மு.க.வின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான சக்தியை அவர்கள் அ.தி.மு.க.வுக்குத் தர முன்வந்ததாகவும், திட்டமிட்டுத்தான் வைகோ வெளியேற்றப்பட்டார் என்றும் ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கிறார்கள். ""ஆறு இடங்கள், ஏழு இடங்கள் என்றெல்லாம் கூறினால், உணர்ச்சிவசப்பட்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவார் என்று தெரிந்துதான் அ.தி.மு.க. தலைமை அவரை அவமானப்படுத்த முற்பட்டது. அந்த வலையில் வைகோவும் விழுந்து விட்டார்'' என்கிறார் விவரம் தெரிந்த ஒருவர்.
 ÷வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ""அ.தி.மு.க.வினர் மத்தியிலேயே வைகோ மீது அனுதாபம் பிறந்திருக்கிறது. தங்கள் கட்சிக்காக கடந்த 5 ஆண்டுகள் உழைத்த தோழமைக் கட்சியை இப்படி உதாசீனப்படுத்துவது தவறு'' என்று மூத்த தலைவர்களேகூட அங்கலாய்க்கிறார்கள்.
 ÷""தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்து வைத்திருப்பவர் அண்ணன் வைகோ. தேர்தல் பிரசாரத்துக்கு இருக்கும் கால அவகாசம் மிகமிகக் குறைவு. அம்மாவைத் தவிர எங்கள் கட்சியில் பிரசாரம் செய்ய யார் இருக்கிறார்கள்? விஜயகாந்த் அவரது கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில்தான் கவனம் செலுத்திப் பிரசாரம் செய்வார். எங்கள் வேட்பாளர்களில் பலர் தொகுதியில் அறிமுகம் இல்லாதவர்களும்கூட. தி.மு.க.வின் பிரசாரத்தை முறியடிக்க நமக்கு இருந்த ஒரே ஆயுதத்தையும் இப்போது இழந்துவிட்டோம்'' என்று கூறி வருத்தப்பட்டார் மூத்த அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.
 ÷அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களைப் பொறுத்தவரை தேர்தல் களப் பணிகளைச் செய்வார்களே தவிர, முறையாக வாக்குச்சாவடி நிர்வாகம் செய்வதில் தேர்ந்தவர்கள் ம.தி.மு.க.வினரும், இடதுசாரிகளும்தான். இவர்கள் இல்லாமல் போனால், தி.மு.க. அணியினரிடம் அ.தி.மு.க., தே.மு.தி.க.வைச் சேர்ந்த வாக்குச்சாவடி ஏஜன்டுகள் சுலபமாக விலை போய்விடுவார்கள். இல்லையென்றால் மிரட்டப்பட்டு, விரட்டப்பட்டு விடுவார்கள் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
 ÷""அவர்களிடம் ஆட்சி இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. பணம் இருக்கிறது. ம.தி.மு.க.வுக்கு மட்டும்தான் தி.மு.க.வின் வியூகங்களை முறியடிக்கும் உத்திகள் அத்துப்படி. பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, அ.தி.மு.க., தே.மு.தி.க. தொண்டர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கவும், ஆளும் கட்சி அராஜகத்தை அதிகாரபூர்வமாக எதிர்கொள்ளவும் ம.தி.மு.க. கூட்டணியில் இருப்பது அவசியம்'' - இப்படிக் கூறுபவர் மூத்த இடதுசாரித் தலைவர் ஒருவர்.
 ÷1999-ல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட போதே, ம.தி.மு.க.விலிருந்து பல தொண்டர்கள் தி.மு.க.வுக்குப் போகத் தொடங்கிவிட்டனர். அ.தி.மு.க.வால் அவமானப்படுத்தப்பட்ட வேதனையும், தேர்தலில் போட்டியில்லை என்கிற வைகோவின் அறிவிப்பும் மிச்சம் மீதி இருக்கும் தொண்டர்களையும் தி.மு.க.வுக்குத் திரும்ப வைத்துவிடும். ம.தி.மு.க. கூடாரம் காலியாவதுதான் மிச்சம் என்று பலர் அடித்துச் சொல்கிறார்கள்.
 ÷மக்கள் மத்தியிலும் ம.தி.மு.க. மீது அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. தலைமையின் சந்தர்ப்பவாத அரசியல் பல நடுநிலையான வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. எல்லோரையும் அரவணைத்துக் கொண்டு போகும் முதல்வர் கருணாநிதியே இதற்கு பரவாயில்லை என்று பொதுமக்கள் கருதி தி.மு.க.வுக்கு வாக்களிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 ÷அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு ம.தி.மு.க.வை வெளியேற்றியது என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை. ஜெயலலிதாவோ, அவரைச் சூழ்ந்திருப்பவர்களோ, தேர்தலை சந்திப்பதற்காக விலை போயிருந்தால்கூட ஆச்சரியமில்லை. ஆனால், அதுவே அந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய பலவீனமாக மாறி, முறையாக வேட்பாளர் தேர்வும் இல்லாது போனால், தனித்து ஆட்சி அமைக்கும் சக்தியை இழந்துவிடக் கூடிய நிலைமை ஏற்பட்டால்? தனிப்பெரும்பான்மை இல்லாமல் தனிப்பெரும் கட்சியாக அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அமையப் போவது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியாக இருக்காது என்பது உறுதி.
 ÷ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக் கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால்? மீண்டும் முதல் பாராவைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அதுதான் நடக்கும்!


நன்றி-தினமனி

Thursday, March 17, 2011

தன் தலையில் தானே மண் வாரிபோட்டு கொண்ட அஇதிமுக...

இதையும் படியுங்க...


சோழர்கள் தங்கள் மரபினர் என்று கூறுபவர்கள் இதனைப் பார்க்கவும்.

சாளுக்கியர்களில் வேங்கி சாளுக்கியர் என்ற ஒரு அரச குலமுண்டு.இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல.இந்த வேங்கி சாளுக்கியர் மரபின் முதல் அரசன் குப்ஜ விஷ்ணுவர்த்தனன்(கி.பி. 624 - 641).

    இந்த வேங்கி சாளுக்கியர் மரபில் 23- ஆவது அரசன் விமலாதித்யன் (கி.பி. 1011 - 1018). இந்த விமலாதித்யன் ராஜ ராஜ சோழனின் மகளும் ராஜேந்திர சோழனின் சகோதரியுமாகிய குந்தவையை மணம் புரிந்தான்.

சாளுக்கிய மன்னன் விமலாதித்தனுக்கும், குந்தவைக்கும் பிறந்தவன் ராஜ ராஜ நரேந்திரன்.
ராஜ ராஜ நரேந்திரன் பல சிக்கல்களுக்கு இடையே தனது தாய் மாமன்(முதலாம் ராஜேந்திர சோழன்) உதவியுடன் வேங்கி சாளுக்கிய மன்னன் ஆனான்.இவன் வேங்கி சாளுக்கிய மரபின் 24-ஆவது மன்னன்.

இந்த ராஜ ராஜ நரேந்திரன் தனது மாமன் (முதலாம் ராஜேந்திர சோழன்) மகளாகிய அம்மங்கை என்பவரை திருமணம் செய்துகொண்டான்.

ராஜ ராஜ நரேந்திரனுக்கும்,அம்மங்கைக்கும் மகனாகப் பிறந்தவன் ராஜேந்திர சாளுக்கியன்.இந்த ராஜேந்திர சாளுக்கியன்தான் முதலாம் குலோத்துங்க சோழன்.

ராஜேந்திர சாளுக்கியன் தனது நாட்களில் பெரும்பகுதியை கங்கை கொண்ட சோழபுரத்தில் கழித்தான்.

ராஜேந்திர சாளுக்கியன் இரண்டாம் ராஜேந்திர சோழனின்(கி.பி. 1054 - 1063) மகளான மதுராந்தக தேவி என்பவரை மணம் புரிந்தான்.

எவ்வாறு ராஜேந்திர சாளுக்கியன் சோழ மன்னன் ஆனான்?

இரண்டாம் ராஜேந்திர சோழனுக்கு வீர ராஜேந்திர சோழன் என்ற சகோதரனும்,ராஜ மகேந்திரன் என்ற மகனும் இருந்தனர். 2-ஆம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்திலேயே அவன் மகன் ராஜ மகேந்திரன் இறந்துவிட்டான்.

அதனால் 2-ஆம் ராஜேந்திர சோழனின் சகோதரன் வீர ராஜேந்திர சோழன் சோழ மன்னனாக கங்கைகொண்ட சோழபுரத்தில் முடி சூட்டப்பட்டான்.

வீர ராஜேந்திர சோழன் மறைந்த பிறகு அவன் மகனான அதி ராஜேந்திர சோழன் கி.பி. 1070 -இல் கொலை செய்யப்பட்டான்.

அதிராஜேந்திர சோழன் கொலை செய்யப்பட்ட பிறகு சோழ மன்னனாகத் தகுதியான வாரிசு யாரும் இருக்கவில்லை.எனவே ராஜேந்திர சாளுக்கியன் சோழ மன்னனாக முடி சூடப்பெற்று குலோத்துங்க சோழன் என்ற பெயருடன் சோழ அரசன் ஆனான்.

சாளுக்கியர் மரபினனே முதலாம் குலோத்துங்க சோழன்.இவன் மறவர் இனத்தவனும் அல்ல.தேவேந்திர குலத்தினனும் அல்ல.சான்றோரும் அல்ல.
ஒரு குழந்தையை ஒருவர் தத்து எடுத்துக்கொண்டால அந்த குழந்தை எந்த குலமாக இருந்தாலும் தத்து எடுத்தவர் குலத்தைத்தானே சார்ந்ததாகும் அப்படியானல் அது சரியென்றால் முதலாம் குலோத்துங்கன் தமிழ் சோழனே. ஏன் என்றால் அவனது பாட்டி அவனை குழந்தை பிறந்த உடனே தத்து எடுத்துக் கொண்டாள்--கலிங்கத்துப்பரணியில் உள்ளது
சான்றோர்'என்ற ஒற்றைச் சொல் பற்றி

சங்க இலக்கியத்தில் சான்றோர் என்ற சொல் சில பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.இது மறவர்,வன்னியர் போன்று வீரரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பண்புப்பெயர் ஆகும்.பலதரப்பட்ட மக்களும் மூவேந்தர் படைப்பிரிவில் பங்குபெற்ற நிலையில்,வீரர்கள் இந்த சொற்களால் அழைக்கப்பட்டனர்.இது தனிப்பட்ட இனத்தைக் குறிப்பதற்கான மரபுச் சொல் கிடையாது.எனவே,சான்றோர் என்பதை ஒரு தனி இனத்தைக் குறிப்பதாகக் கொள்ளக்கூடாது.தற்காலத்தில் நாடார் இனமக்கள் தங்களின் சாதிப்பெயரான சாணார் என்பது சான்றோர் என்பதிலிருந்து வந்ததாகக் கொள்ளப்படுகிறது.இது உண்மையாகக் கொண்டாலும்,அவர்கள் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் கிடையாது.ஏனெனில் சங்க கால திணைநிலை மற்றும் திணைநிலை சாராத இனங்களில் அவர்களின் அடையாளம் கிடையாது.சங்கப் பாடலில் குறிப்பிடக்கூடிய சான்றோர் என்ற சொல்லுக்கும்,இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

ஆனால்.பல்லவ மற்றும் இடைக்காலத்தில் ஈழவர் என்ற மக்கள் காணப்படுகிறார்கள்.பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இலங்கையின் மீது தமிழகத்திலிருந்து படையெடுப்பு நடந்தது.அப்படையெடுப்பில் பலர் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர்.அதேபோல்,இராசராச சோழன் இலங்கை மீது படையெடுத்தான்.சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் இலங்கை மீது படையெடுத்து பலரை கைது பண்ணி இங்கு கொண்டு வந்தான்.இவ்வாறான படையெடுப்புகள் மூலம் தமிழகத்திற்கு வந்தவர்கள்தான் ஈழவர் என்று சொல்லக்கூடிய நாடார் இனமக்கள்.படையெடுப்பில் கைது செய்யப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டவர்களில் பலர் படை வீரர்கள் இருந்தார்கள்.அவ்வாறாக வந்தவர்தான் ஈழச்சான்றோன் என்று சொல்லக்கூடிய ஏனாதிநாதர்.அவர் தமிழ்மறவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.மற்ற மக்கள் ஆற்றுக்குக்கரை அமைத்தல்,படையெடுப்பின்போது கொடி சுமந்து செல்லுதல் மற்றும் கள் இறக்குதல் போன்ற பணியில் ஈடுபட்டார்கள்.பெரும்பாலான மக்கள் கள் இறக்குதலில் ஈடுபட்டனர்.இதற்கு வரலாற்றில் ஆதாரங்கள் உள்ளன.இன்றுவரை அது தொடர்கிறது.

வீரர் என்ற வகையில் ஏனாதிநாதர் போன்றோர் சான்றோர் என அழைக்கப்பட்டார்கள் என்பதற்காக,அது சான்றோர் இனம் என்றும்,அவர்கள்தான் தமிழகத்தின் உண்மையான மூவேந்தர் இனம் என்றும் சொல்வது உண்மையில் தமிழகத்தின் வரலாற்றைத் தலைகீழாக திருப்ப ஆர் எஸ் எஸ் காரர்களின் சதி போல் தெரிகிறது.இதன் அடிப்படையிலேயே'சத்திரியர்-பார்ப்பனர் கூட்டணி'ஆட்சி பண்டைய தமிழகத்தில் நடந்ததாக கதை அளப்புகள்.

1921 ஆம் ஆண்டிலிருந்து நாடார் இனமக்களின் பெரியமனிதர்கள் தங்கள் இனத்தை போலியாக உயர்த்திக்கொள்ள பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதைப் பற்றி பல வரலாற்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.அப்படி வந்த ஒரு சொல்தான் தாங்கள் சத்திரியர் இனம் என்பதும்,நாடார் என்ற பட்டம் நாடாள்வான் என்பதிலிருந்து வந்தது என்பதும்.நாடார் என்பது உண்மையில் நாடாவி என்பதிலிருந்து வந்தது.உண்மையில் நாடாள்வான் மற்றும் நிலைமைக்காரன் என்போர் வேறொரு இனத்தைச் சார்ந்த மக்கள் ஆவார்கள்.இதைப்பற்றி பின்பு பார்க்கலாம்.

முத்தரையர் யார்?
முத்தரையர் என்போர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கலாம்.
முத்தரையர் என்பது முத்து+அரையர்,முத்து அரசர் அதாவது முத்து சல்லாபத்தில் ஈடுபடுபவர் என்று பொருள் கொள்ளலாம்.முத்து சல்லாபம் என்பது சங்க காலத்தில் பாண்டியநாட்டின் கடற்கரைப்பகுதியில் நடைபெற்றது.அதில் ஈடுபட்டவர் பாண்டியநாட்டு வணிகர்கள்.இவர்கள் மத்தியகிழக்கு மற்றும் உரோமாபுரி முதலிய மேல்நாடுகளுடன் வியாபாரம் செய்துவந்ததாக சங்க இலக்கியங்கள்,வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் மேல்நாட்டார் பயணக்குறிப்புகள் விளக்குகின்றன.எனவே,முத்து வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றினரா?என்ற கேள்வி எழுகிறது.பாண்டியருக்கும்,முத்தரையருக்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகள் பாண்டியநாட்டு வணிகரிலிருந்து முத்தரையர் தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வழுப்படுத்துவதாக உள்ளது.

(1)முத்தரையர் ஆரம்பத்தில் சமண சமய சார்புடையவராக இருந்தனர்.பாண்டிய மன்னர்களும் சமய சமயச் சார்புடையவராக இருந்திருக்கின்றனர்.சோழ இளவரசியை மணந்த கூன்பாண்டியன் ஆரம்பத்தில் சமண சமயச் சார்புடையவராய் இருந்தான்.முத்தரையர் காலத்தில் தோன்றிய நாலடியார் என்ற நூல் சமண சமயச் சார்புடையது ஆகும்.

(2)முத்தரையரின் சின்னம் மீன் ஆகும்.பாண்டியரின் சின்னமும் மீன் என்பது குறிப்பிடத்தக்கது.

(3)முத்தரையர் மன்னர் மாறன் என்ற பட்டம் தரித்திருந்தனர்.வேல்மாறன்,வாள்மாறன்,சுவரன்மாறன்,மாறன் பரமேஸ்வரன்,செருமாறன்..............
மாறன் என்பது பாண்டியர்களின் பட்டம் என்பது நமக்குத்தெரியும்.அதாவது,மாறவர்மன்,மாறன் குலசேகர பாண்டியன்,மாறன் சடையன்....

(4)முத்தரையர் மல்லன் என்ற பெயர் தரித்திருந்தனர்.மல்லன் அநந்தன்,மல்லன் வதுமன்,சத்ரு மல்லன் என வழங்கினர்.மல்லன் என்பது சேர,சோழ,பாண்டியரின் குடிப்பெயராகும்.

(5)முத்தரையர் தென்னவர் எனவும்,தமிழ்திரையன் எனவும் மற்றும் மீனவன் எனவும் வழ்ங்கியுள்ளனர்.இப்பட்டங்கள் பாண்டியருக்கு உரியதாகும்.

முத்தரையர் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே மிகுந்த கருத்து வேறுபாடு உள்ளதாக புதுக்கோட்டை வரலாறு கண்ட திரு ஜெ.இராஜாமுகமது கூறுகிறார்.(அ)முத்தரையர் களப்பிரர் கிளைக்குடி என எஸ்.கே.அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.ஆனால் களப்பிரரிலிருந்து முத்தரையர் எப்படி வந்தது என்று விளக்கவில்லை.(ஆ)முத்தரையர் என்போர் பல்லவர் என வெங்கடசாமி நாட்டாரும்,கள்ளர் என இராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.

முத்தரையர் என்பது முத்து+அரையர்,அரையர் என்பது நாடாள்வோர் என்பதையும் குறிக்கும். 'அரையனாய மருளகமாளவதற்கு'(தேவாரம்- 648.4)

*முத்தரையர் மாறன்,மீனவன்,தென்னவன் போன்ற பாண்டியரின் குடிப்பெயரைப் பெற்றிருந்த செய்தியைப் புதுக்கோட்டை கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

*செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச்சின்னம் கயல்(மீன்)எனக் காணப்படுகிறது.இதனை ஆய்வு செய்யும்போது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியாக இருக்கவேண்டும் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது.
(திரு.இராஜா முகமது,புதுக்கோட்டை வரலாறு,பக்கம் 18)

செங்குந்தர் என்ற இனத்தவரே கைக்கோளர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.சோழர் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் என்ற புலவர் செங்குந்தர் மரபினர் என அறியப்படுகிறார்.செங்குந்தர் என்பது ஒரு இனமாக இருந்தது இச்செய்தியின் மூலம் நாம் அறிவது.எப்படி சிலர் வேளாளர் குலத்தவர் என்று குறிப்பிடப்பட்டனரோ அவ்வாறு ஒட்டக்கூத்தரும் செங்குந்தர் குலத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

கைக்கோளர் என்பவர் வீரபாகு கோத்திரம் என்று சொல்லி பூணூல் தரித்து உயர்ந்த சாதி எனக் கூறிவருகின்றனர்.இவர்கள் 10 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய பறையரில் ஒரு பிரிவாகிய நெசவுத்தொழில் புரிந்த வந்த கோலியப்பறையர் போன்று நெசவுத்தொழில் புரிந்துவந்த எயினர் மரபினரே.(எம்.சீனிவாச அய்யங்கார்)
காஞ்சிபுரம் கல்வெட்டு(14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு)கைக்கோளர் என்ற தனிச்சாதி இருந்ததாகக் கூறுகிறது.குலோத்துங்கசோழன் காலத்தில் இம்மரபைச்சார்ந்த ஒட்டக்கூத்தர் செல்வாக்குப் பெற்றிருந்தபோது,இம்மரபு செல்வாக்குப்பெற்றது.

இந்த மக்கள் கோயிலில் பணிபுரிவதற்கும்,ஆண்கள் தேவாரம்,திருவாசகம் ஓதுவதற்கும்,பெண்கள் நடனமாடுவதற்கும்,பாடுவதற்கும் நியமனம் பெற்றதைப் பற்றி ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு.
எல்லா ஊர்களிலும் இவர்களுக்குத் தனித் தெருக்கள் இருந்தன.இவர்களுக்கு சில சிறப்பு உரிமைகளும் இருந்தன.இவர்களுக்கு முதலி என்ற பட்டமும் வழங்கிற்று.இவர்கள் படைப்பிரிவில் ஈடுபட்ட ஆதாரம் இல்லை.

ஒட்டக்கூத்தர் எனும் புலவர் சோழர் காலத்தவர்.அவர் தனது இனமாகிய செங்குந்தர்(கைக்கோளர்) பெருமையை கூறும் விதத்தில் இயற்றியதுதான் ஈட்டி எழுபது எனும் நூல்.எனவே கைக்கோளர் ஒரு இனமாய் இருந்தமைக்கு சாத்தியம் உண்டு.

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சியின்போது பண்டைய வேளாண் மரபினரிடமிருந்து நில உடைமையை பறி முதல் செய்து,அரசுடைமையாக்கி பாளையப்பட்டுக்களுக்கும்,பார்ப்பனருக்கும்,அரியநாயகம் அழைத்து வந்து குடியேற்றிய அவனது உறவினருக்கும் வழங்கப்பட்டது.உழவர்கள் கொத்தடிமை ஆக்கப்பட்டனர்.இவரது பதினெண்குடியைச் சார்ந்த பஞ்சசாதி என வழங்கப்படும் தச்சர்,கொல்லர்,கற்கொல்லர்,தட்டார்,கன்னார் வகுப்பினர் பெருந்தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டனர்.இவர்கள் ஐவரும் ஒன்று சேரக்கூடாது என்று நாயக்கர் தடை விதித்ததை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.இதனிடையே புதிய குலங்கள் பல தோன்றி தமிழகத்தில் சாதிக்குழப்பம் ஏற்படலானது.

ஒவ்வொரு சாதியினரும் தம்மை வலங்கை,இடங்கை எனப் பிரித்துக்கொண்டு,தமது சாதிதான் உயர்ந்தது எனச்சொல்லி கிளர்ச்சி செய்து,தனது சாதிக்கு கொடியும்,சிறப்பும் அரசிடம் வேண்டிப் பெற்று வந்திருக்கின்றனர்.

மேலும் ஒவ்வொரு சாதியும் தங்கள் தங்களுக்கு உயர்வு தேட புராணக்கதைகளையும்,மற்ற இலக்கியங்களையும் படைத்தனர்.இதன்படி,தற்கால வேளாளர் என்போர் ஏரெழுபது,திருக்கைவளக்கம்.வேளாளர்புராணம்,சதகங்கள் போன்ற நூல்களை எழுதினர்.

பள்ளி வகுப்பினர் தம்மை படையாச்சி எனவும்,வன்னியகுல சத்திரியர் எனவும் கூற முற்பட்டனர்.தம் கூற்றுக்கு ஆதரவாக 'சிலைஎழுபது' என்ற நூலை தோற்றுவித்தனர்.

ஈழவர் என்றும்,பின்னர் சாணார் என்றும்,தற்போது நாடார் என்றும் அழைக்கப்படும் மக்கள் 'வலங்கைமாலை' 'சாணார் குலமரபு காத்தவர் சாணார் விதர்ப்ப வினாவிடை' 'நாடாரும்,நாயக்கர் மன்னர்களும்' போன்ற நூல்களையும் எழுதினர்.

செங்குந்தர் என்று தம்மை உயர்வாகக் கூறி வரும் கைக்கோள நெசவாளர் 'ஈட்டிஎழுபது' என்ற நூலை எழுதினர்.

மறவர் 'வான் எழுபது' என்ற நூலையும்,சேனைத்தலைவர் சேனைகுலத்தார் பட்டயம்,சேனைத் தலைவர் மரபு காத்தல்' என்ற நூலையும் எழுதினர்.

இவ்வாறே வைசிய புராணம்,கருணீகர் புராணம் என்ற நூல்களும் தோன்றின.


திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியின் போது வெளியிடப்பட்ட குறிப்பில் பள்ளன்(பாண்டியன்) என்று உள்ளது.ஆனால் இது பள்ளர் இனத்தவரின் ஒரு பிரிவையே குறிக்கிறது.

தெய்வேந்திர பள்ளன், சோழிய பள்ளன், பாண்டிய பள்ளன், கொங்கு பள்ளன் போன்ற பிரிவுகள் பள்ளர் இனத்தில் உண்டு.அதனால் அக்குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நபர் பாண்டிய பள்ளர் பிரிவைச் சார்ந்தவர் என்பது தெளிவாகிறது.இது அவர் பாண்டியர் வம்சத்தவர் என்று கூறுவதாகக் கருத இயலாது.

ஒரு ஊரில் வாழும் அனைத்து மக்களும் தமது பெயருடன் பாண்டியர் என அழைக்கப்படுவது ஆதாரமாகுமா?தமது பெயருடன் பாண்டியர் என மற்ற ஊர்களில் மற்ற இனத்தவரும் வழங்கப்படும்போது இதனை ஆதாரமாகக் கூறுவது பொருத்தமாக இல்லை.

தென் தமிழ் நாட்டில் ஏறக்குறைய எல்லா இனத்தவருள்ளும் தமது பெயருடன் பாண்டியர் என வழங்கப்படுபவர்கள் உள்ளனர்.பாண்டியன் என்ற ஒட்டுச் சொல்லைச் சேர்த்துக்கொள்வது அங்கு சாதாரணம்.

தேவேந்திர இனத்தவர் சோழர் வழியினர் என்றும் உரிமை கோருகின்றனர்.அவர்கள் அனைவரும் சோழர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்களா?பாண்டியர் என அழைக்கப்படுபவர்கள் வாழும் ஊர் இருக்கும்போது சோழர் என்ற பெயருடன் இம்மக்கள் மட்டும் வாழும் பகுதி உள்ளதா?
  தெய்வேந்திர பள்ளன் என்பது பள்ளர்களில் ஒரு பிரிவு கிடையாது.பள்ளர்கள் தேவேந்திரகுலத்தைச் சார்ந்தவர் என்றமுறையில் தெய்வேந்திர பள்ளன் என்று அழைக்கப்படுகிறார்கள்.எனவே,தெய்வேந்திரப் பள்ளன் என்பதைப் பள்ளரின் ஒரு பிரிவு எனக்கொள்ளக்கூடாது.அது மள்ளர் பற்றிய பொதுப்பெயரே.
சோழியப் பள்ளன் என்பதைப் பள்ளரின் ஒரு பிரிவாக இருப்பதை அறிகிறேன்.ஆனால்,ஒரு ஊரில் உள்ள அனைத்து மள்ளர்களும் சோழர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்களா?என்று தெரியவில்லை.ஆனால்,சோழ நாட்டில் மள்ளர்கள் காலாடி,தொண்டைமான்,பணிக்கன்,மூப்பன்,வாய்க்காரன் மற்றும் பண்டாரத்தார் என்று அழைக்கப்படுகிறார்கள்.


சங்க காலம் முதற்கொண்டு இடைக்காலத்திலும் ஆண்ட அரசர்கள், குறுநிலத் தலைவர்கள் அல்லது வேளிர்கள் அனைவரும் மள்ளர் குலத்தவர் என்று கூறுவது அதிகப்படியாகத் தோன்றுகிறது.
இடைக்காலம் என்பதும் தமிழரசர்கள் ஆண்ட காலம்தான்.குறு நில மன்னர்கள் ஏனைய இனத்தோரிலும் உண்டு.

மள்ளர்களே தமிழகம் முழுதும் ஆண்டார்கள்,சிறிய பகுதிகளுக்குக் கூட தலைவராக விளங்கியவர்கள் மள்ளர்கள் என்பது போன்ற கருத்துக்கள் மிகையானவை.உழு தொழில் செய்தவர்தான் அனைத்தும் அறிந்தவர் எனக் கூற முடியாது.உழு தொழில் மேன்மை உடையது என்று கூறினாலும் ஒவ்வொரு அரசனும் தங்கள் நாட்டைக் காத்துக்கொள்ள படைகள் கூடுதலாகவே தேவைப்பட்டன.உழு தொழில் செய்த மள்ளர்களே போர்த் தொழிலில் இறங்கியபோது, வில்லேந்தி வேட்டையாடும் இனத்தவரான எயினர்,கள்ளர்,மறவர் போன்றோர் போர் செய்வதில் சிறந்தவர்களாக விளங்கினார்கள் எனக் கருத இடமுண்டு.

      தலைவராகத் தகுதி என்று பெரிதாக ஒன்றுமில்லை.யார் வலிமை படைத்தவரோ அவரே தலைவராக முடியும்.நாட்டைக் காக்க உழு தொழில் செய்வோருக்கே உரிமை என்றும் இல்லை.

      உழு தொழில் தோன்றுமுன்னரே பல்வேறு இனக் குழுக்கள் இருந்தன. பெருங்கற்காலத்தில் அதாவது சங்க காலத்திற்கு சற்று முந்தைய காலத்தில் மனிதன் வேட்டையாடுவதற்கு வில் அம்புகளைப் பயன்படுத்தத் தொடங்கினான்.அப்போது
உழவுத் தொழிலே இல்லை.அப்போது அறியப்பட்டவர்கள் வேட்டையாடல் தொழில் செய்தோரே.

இதனை உறுதிப்படுத்துகிறார் திரு.வி.கனகசபை (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கழக வெளியீடு,மூன்றாம் பதிப்பு, பக்கம் 74). அதில் அவர் தமிழகத்தின் மிகப் பழமை வாய்ந்த குடியினராக "வில்லவர்" அல்லது வில்லாளிகள் என்ற குடியினரைக் குறிப்பிடுகிறார்.அவர்கள் மலைப் பகுதிகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வேட்டையாடல் வாழ்க்கை நடத்தினார்கள் எனவும் கூறுகிறார்.

இக் குடியினருக்குத் தலைவராக யார் விளங்கமுடியும்?அவர் குடியில் ஒருவர்தான் தலைவராக இருந்திருப்பார்.இவர்கள் தான் அரச குலத்தின் முன்னோடிகளாக இருக்கமுடியும்.

உழவுத் தொழில் அறிமுகமானபோதுதான் தலைவர்கள் தோன்றினர் என்பது சரியான வாதமன்று. தலைமைப் பொறுப்பிற்கும், உழவுத் தொழிலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இன்னும் கூறப்போனால் உழவுத் தொழில் தோன்றுமுன்னரே தலைவர்கள் தோன்றிவிட்டனர்.

பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு முன்னோடியாகக் காணப்பெறும் குறியீடுகளில் வில்லின் உருவமும் பொறிக்கப் பெற்றிருக்கிறது. இக்குறியீடுகள் பண்டையத் தமிழ் எழுத்தின் முந்தைய வடிவம் என்று வரலாற்றறிஞர்களால் கூறப்படுகிறது.(B.B.Lal, "From the megalithic to the Harappa, tracing back
the graffiti on the pottery" Ancient India, Number 16, (1960), Bulletin of the Archaeological survey of India, Plate 23)

பெருங்கற்கால ஈமச் சின்னங்களில் இறந்தோரின் எலும்புக் கூடுகளுக்கு அருகில் எலும்பு மற்றும் இரும்பினால் செய்யப் பெற்ற அம்பு முனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.அவற்றோடு ஒரு சில ஈமச் சின்னங்களில் இரும்பினாலான குறுவாள்கள், பெருங்கத்திகள் காணப்படுகின்றன.("கொடுமணல் அகழாய்வு - ஓர் அறிமுகம்" - கா.ராஜன், 1994, பக்கம் 21).
எதற்காக இந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன?போர் செய்யத்தானே? குறு வாள், கத்தி போன்றவற்றைப் பயன்படுத்தி போர் செய்யத் தெரியும்போது தமக்கென்று ஒரு தலைவனை அம்மக்கள் தேர்ந்தெடுக்கத் தெரியாதவர்களா?

கி.மு 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சில சதுர செப்புக் காசுகள் கண்டுபிடிக்கப்பட்டன.மன்னர் உருவம் பொறிக்கப்படாத அக்காசுகளில் முன்புறம் யானை உருவமும் பின்புறம் வில் அம்பு உருவமும் காணப்பெறுகிறது.(தமிழர்காசு இயல் - நடன.காசிநாதன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு,முதல் பதிப்பு(1995),படம் 1)
முத்திரை குத்தப் பெற்ற காசுகள் ஜனபதக் குழுக்களால் வெளியிடப்பெற்றவை எனக் கொள்ளப்படுகிறது(நாணயங்கள் - டாக்டர் பரமேஸ்வரி லால்குப்தா, நேஷனல் புக் ட்ரஸ்ட்,புது டில்லி, 1975, பக்கம் 13- 14)

அதை போலவே மேற்குறிப்பிட்ட காசுகள் வில்லைக் குலக் குறியீடாகக் கொண்ட குடியினரால் வெளியிடப்பெற்றவை எனக் கூறலாம்.

திணை நிலங்கள் பகுப்பிற்கு முன்பே(உழும் தொழில் அறிமுகமாதற்கு முன்னரே) தலைவர்கள் இருந்தனர்.அப்படியிருக்கும்போது உழவுத் தொழில் செய்தவர்தான் தலைவர்கள் என்று ஒருக்காலும் கூற முடியாது.

மருத நிலம் என்று எப்போது அறியப்பட்டது?நாகரீகம் உள்ளவர்கள் எங்கிருந்து திடீரென வந்தார்கள்?

மருத நிலத்தின் வளம் கண்டு அங்கே குடியேறிய நாகரிகமற்ற குடிகள் தான் அரசுகளை அமைத்தன.

தலைவர்களானவர் உண்மையில் நாகரிகமற்ற போர்க்குடிகளே. இவர்கள் உழவு செய்வதில்லை.உழவுத் தொழில் மேற்கொண்டோரை ஊக்கப்படுத்தினர்.ஒரு கேள்வி .ஆயுதங்களை மட்டும் தொடர்ந்து உபயோகித்தோர் வலிமை பொருந்தியவரா? அல்லது அதனை விடுத்து ஏர் தொழில் செய்தோர் வலிமையானவர்களா?ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்தி வில்,வேல் கொண்டு போரிட்டவர்களே தலைவர்கள். எந்தத் தலைவனும் ஏர் பூட்டி உழுவதில்லை.

       தங்கள் பகுதியைக் காப்பதற்கும், படையைப் பெருக்குவதற்கும் உழவர்களை அரசர்கள் கூடுதலான வீரர்களாகச் சேர்த்துக்கொண்டனர்.உழும் தொழில் செய்தாலும் இவர்கள் போரின்போது தமக்கு உதவ வேண்டும் என்பதால் இவ்வுழவர்களுக்குப் போர் பயிற்சியளித்தனர் அரசர்கள்.இத்தகைய உழவர்களைப் படைவீரராகப் பெற்றிருந்ததால்தான் சேரர்,சோழர் போன்றோர் தம்மை மள்ளர் தலைவராகக் கூறிக்கொண்டனர்.

       மள்ளன் கோப்பெருனற்கிள்ளி என்பதால் அவ்வரசனும் உழும் தொழில் செய்த மள்ளனா?
தெளிவாக மள்ளன் கோப்பெருநற்கிள்ளி எனக் கூறப்பட்டபோதும் எந்த வரலாற்றாசிரியராவது சோழர் மள்ளர் மரபினர் என்றோ சேரர் மள்ளர் குடியினர் என்றோ கூறினரா?இல்லையே.ஏன்? சோழன் மள்ளன் அல்ல.மள்ளர்களைப் படை வீரர்களாகப் பெற்றிருந்தவன்.இதுதான் காரணமாக இருக்க முடியும்.

சேரரின் கிளைக் குடியினராகக் கருதப் பட்டவர்கள் மழவர்கள்.இவர்கள் உழவுத் தொழில் செய்தவரல்ல. போர்க் குடியினர். மழவர்களின் போர்த்திறன் கண்டு சோழ மன்னர்களும் மழவர் படையணியைப் பெற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டனர்.அதனால்தான் தகடூர்,கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த மழவர்களுள் சில பிரிவினர் சோழ நாட்டுப் பகுதிகளுக்குச் சென்று குடியேறினர் என்பது வரலாற்றறிஞர்கள் சிலரது முடிவு.

மழபாடி - மழவர் படைகள் தங்குமிடம்.பிற்காலச் சோழர் ஆட்சியில் சிறந்து விளங்கிய பளுவேட்டரையர் என்பார் மழவர் இனத்தவரே. மேலும் சோழர்களோடும், பாண்டியர்களோடும் மண உறவு கொள்ளூமளவிற்கு ஏற்றம் பெற்றோராய் மழவர்கள் விளங்கியமை கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படும் செய்தி.

சங்க காலத்தில் அறியப்பட்ட மள்ளர்கள் செல்வாக்கு நாளாவட்டத்தில் குறைந்தது எனலாம். இதற்குக் காரணம் அவர்கள் உதவி நாளாவட்டத்தில் தேவைப்படாமல் போயிற்று.அதனால் அவர்கள் உழவுத் தொழிலிலேயே காலத்தை ஓட்ட வேண்டியதாயிற்று.
     
ஏன் மள்ளர் உதவி தேவைப்படாமல் போயிற்று? காரணத்தை மிக எளிதாகக் கூறலாம்.மருத நிலப் பகுதியில் மள்ளர்கள் அல்லாத குடியினர் குடியேற்றப்பட்டதுதான் காரணம்.முக்கியமாக போர்க் குடிகளே குடியேற்றப்பட்டனர்.

இப்போது மருத நிலப் பகுதிகளாக அறியப்படும் பகுதிகளில் கள்ளர்,வன்னியர்,உடையார் போன்ற இனத்தோர் மிகுதியாக உள்ளது ஏன்? இவர்கள் அன்னியர்(தெலுங்கர்) படையெடுப்பிற்குப் பின் குடியேறியவர்கள் என்று கருதினால் அது அறியாமையே. ஏனெனில் கல்வெட்டுக்கள் இம் மக்கள் சோழர் காலத்தில் இப்பகுதிகளில் இருந்தமையை தெளிவாக நிருபிக்கின்றன.

தருமபுரி மருத நிலம் எனக் கூறுகிறார் சகோதரர் சித்தார்த். அப்படியானால் மருத நிலமான தருமபுரிப் பகுதியில் மள்ளர்களான பள்ளர் இனத்தவர்தானே மிகுதியாக இருக்க வேண்டும்?அப்படி இல்லையே.எங்கே போனார்கள் மள்ளர்கள்? அங்கு கிடைத்தக் கல்வெட்டுக்களில் சில கல்வெட்டுக்கள் தவிர்த்து ஏனைய கல்வெட்டுக்கள் எல்லாம் வன்னியர்(பள்ளி) மக்கள் குறித்ததாகவே உள்ளன.இதை தருமபுரி அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக இருந்த ஒருவர் உறுதி செய்துள்ளார்.
பார்க்க :தருமபுரி வரலாறும்,பிரகலாத சரித்திரமும் (ச.கிருஷ்ணமூர்த்தி)

ஏருக்கு உழவன் போருக்கு மள்ளன்.இது சமீபத்தில் ஒரு தளத்தில் நான் கண்டது.
மழவர்,எயினர்,கள்ளர்,மறவர் போன்றோர் எப்போதும் போருக்குத்தான். போருக்கும் இவரே போருக்கும் இவரே.போர்க்குடிகள் அரசராகாமல் வேறு யாரால் முடியும்?

உணவுப் பொருட்களுக்காக மருத நில உழவர்களை நாட வேண்டிய அவசியம் இவர்களுக்கில்லை.விரும்பினால் விளைபொருட்களை பறித்துச் செல்லும் ஆற்றல் இவர்களுக்கிருந்தது.

நாடாளும் வேந்தன் படையெடுப்பது எதற்காக?மற்ற அரசர் நிலத்தைப் பறிப்பதற்குத்தானே?அதனால்தான் போர்க்குடியினர் வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றனர்.

அரசர்கள் போர்க்குடியினருக்கு விளை நிலங்களை எதற்காக வழங்கினார்கள்?எயினர்,மழவர்,மறவர் வழித்தோன்றல்கள் தங்கள் வீரத்திற்குப் பரிசாகப் பெற்ற நிலங்களே அவை.

எயினர்,மழவர்,கள்ளர்,மறவர் போன்றோர் சோழர்,பாண்டியர் படைகளில் பிரதான இடம் வகித்ததால்தான் பிற நாட்டரசர்களை வெல்லுமளவிற்கு வலிமை வேந்தர்கள் வலிமையுடன் இருந்தனர்.

கங்கை கொண்டான்,கடாரம் கொண்டான் என தமது பெருமைகளை தம்பட்டம் அடித்துகொள்ள முடிந்தது எதனால்? போர்க்குடியினரான, எயினர்,மறவர்,மழவர் வழித்தோன்றல்களான வீரர்களால்தான்.

மள்ளர்,மல்லர் எனத் தேவைக்கேற்ப பொருள் கொள்வது சரியா என்பதை ஏனையோர் கூறுவதை விட வரலாற்றுத் துறை ஒப்புக்கொள்ளுமா?
"மல்லன்" என்ற பட்டம் வன்னியருக்கும் உண்டு. சமீபத்தில் நான் கண்ட ஒரு நூலில் அவர்களது பட்டப்பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.அவற்றில் மல்லன் என்பதும் ஒரு பட்டமாகக் குறிப்பிடப் பட்டிருந்தது.
மல் என்ற சொல்லுக்குச்
செல்வம் என்று பொருள்.மல்லை என்றால் செல்வம் மிகுந்தது என்று பொருள்.அதற்கு திண்மை என்ற பொருளும் உண்டு.வளப்பம் என்ற பொருளும் உண்டு.


வளப்பம் என்ற பொருளும்,திண்மை என்ற பொருளும்,செழுமை என்ற பொருளும்,செல்வம் என்ற பொருளும் மல் என்ற சொல்லுக்கு உண்டு(டாக்டர்.தயாளனின் லெக்௯சிகன் மற்றும் திராவிடியன் எட்டிமலாச்சி டிக்ஸனரி).எனவே,மல்லன் என்றால் யார் எனப் புரிந்துவிடும்.
இதே பொருளை மள் என்ற சொல்லுக்கும் பார்க்கலாம்.அதாவது,மள்ளர் என்றால் திண்மை,செழுமை என்று வருகிறது.மல்-மல்லர்,மள்-மள்ளர் இரண்டுக்கும் ஒரே மாதிரியான பொருள் வருகின்ற காரணத்தினால் இரண்டு சொற்களும் ஒரே பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
படைகளில் சிறந்து விளங்கிய இனத்தாருக்கு பல்வேறு பட்டப்பெயர்கள் வழங்கப்பட்டன.சேரனார்.சோழன்,பல்லவராயர்,முனையரையர் போன்ற பட்டங்களை பிற இனத்தினர் பெற்றுள்ளபோது இது போன்ற பட்டப்பெயர்கள் மள்ளர்களாகிய பள்ளருக்கு ஏன் இல்லை?

மள்ளர் என்பார் பழமை

வாய்ந்த குடியினர்.உழவர்களாகவும் போர் வீரர்களாகவும் விளங்கியவர்கள்.இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவர்கள் பேரரசர்களின் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாதது வியப்பானது --- சோழர் காலச் சமுதாயம் , தொகுதி - 4.

இடைக்காலத்தில் இம் மள்ளர்கள் நிலை என்ன? மற்ற குடியினர் பற்றியும் அவர்கள் பொது வாழ்வில் செய்த கொடைகள் பற்றியும் குறிப்புகள் உள்ளபோது இவர்கள் பற்றி மட்டும் குறிப்புகள் ஏன் இல்லை?

மள்ளர் என்பார் மருத நிலத்தவர்.சரி.இடைக்காலத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலப்பரப்பிற்குப் பெயர் இல்லையா?மள்ளர் நாடு என்று இருந்ததா?வேளிர்கள் ஆட்சி செலுத்திய பகுதிகளில் உள்ள மள்ளர்கள் தற்போது எங்கே உள்ளார்கள்?இடைக்காலத்திலும் சோழர்,பாண்டியர் ஆட்சி செலுத்தினர்.அப்போது செல்வாக்குள்ளவர்களாக சில குடியினர் அறியப்படும்போது மள்ளர் நிலை என்ன ?(பிற்கால) சோழர் காலத்தில் ஆட்சி செய்த குறு நில மன்னர்கள் யாரும் மள்ளர் அல்ல.கல்வெட்டுக்கள் இதனை உறுதி செய்கின்றன.ராஜ ராஜ சோழர் காலத்தில் ஆட்சி செய்த மலையமான்கள் எந்த இனம் என்பதும் கல்வெட்டுக்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.அவர்கள் மலையர் குலத்தவர்,உடையார்கள்.சோழருக்குப் பெண் கொடுக்கும் நிலையில் இருந்தோர்.

பாண்டிய மன்னன் தனக்கொப்பான மழவர் குலச் சிற்றரசர் மகளை மணந்தது பாண்டியர் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சோழர் குலத்தவர் மழவரையர் குலத்தோடு மண உறவு கொண்டனர்.

சோழர் குலத்தினருக்கு நெருங்கிய சொந்தமாக விளங்கிய கொடும்பாளூர் வேளிர் முத்தரையர் இனத்தவர்.

மள்ளர்கள் இந்தக் காலக்கட்டத்தில் என்ன செய்தார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

ராஜராஜ சோழன்

சிலை பெரியகோவிலுக்கு வெளியே தனியொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.அது ஏன்?என்பது பற்றி எனக்கு சரியான காரணம் தெரியவில்லை.அந்த சிலையின் பீடத்தில்'கோயிலின் உள்ளே வைப்பதற்கு அனுமதி கிடைக்காததால்,இங்கே நிறுவப்பட்டது'என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.என்ன காரணமாக இருக்கும் என்று இன்டர்நெட்டில் தேட ஆரம்பித்தேன்.ராஜராஜ சோழன் வடக்கே கங்கைவரை சென்று அதைக் கைப்பற்றி அதை தன் ஆளுகையின் கீழ் கொண்டுவந்து சக்கரவர்த்தியாக விளங்கியதால் அதை மறைக்கும் பொருட்டு,அவரது சிலையை உள்ளே வைத்தால் அவர் யார்? எனக் கேட்டு அந்த உண்மைகள் வெளிவந்து விடும் என நினைத்து மத்திய அரசு அவ்வாறு செய்ததாகக் கூறி இருக்கிறார்கள்.உண்மை வெளிவரக்க்கூடாது என்று வரலாற்றுத் துறை அவ்வாறு செய்ததா?இது உண்மையானதாகத் தெரியவில்லை.இதற்கு வேறு ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

இதற்கிடையே,மக்களிடையே பரவியிருக்கின்ற ஒரு செய்தி.அதாவது,முன்னாள் பிரதமர் திருமதி.இந்திராக்காந்தி அவர்கள் அந்த சிலையை கோயிலுக்குள் வைக்க நடவடிக்கை எடுத்ததாகவும்,அதன் பின்பே அவர் இறந்தார் எனவும் செய்தி பரவிக்கிடக்கிறது.இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை.எனக்குத் தெரிந்து அந்தக் கோயிலைப் பற்றி தவறான தகவலை மக்களிடம் பரப்பி இருக்கிறார்கள்.அது பழங்காலத்திய கோயில் என்ற சிறப்பு மட்டுமே உண்டு.மற்றபடி மற்ற எந்த சிறப்பும் இல்லை.இதன்பின் இருப்பவர்கள் அரசியல்வாதிகளா?எது உண்மை?கோயிலைக் கட்டிய மாமன்னன் சிலை கோயிலின் உள்ளேயோ,அருகிலோ இருந்தால் நாட்டிற்கு நல்லது இல்லையோ?அல்லது தீட்டுப்பட்டு விடுமா?

நாயக்கர் ஆட்சிக்கு

முன் தேவேந்திர மக்கள் நல்ல நிலையில் இருந்தனர்.இது ஏற்றுக்கொள்ளக்கூடியது. சோழர் காலத்தில் குறிப்பிடத்தகுந்த மள்ளர் இனச் சிற்றரசர்கள் யாரேனும் இருந்தனரா?

சோழர் சிற்றரசரான மலையமான்கள் எந்த இனத்தவர் என்பதும் கல்வெட்டுக்கள் வாயிலாகத் தெளிவாகியுள்ளது.இவர்கள் சோழருக்குப் பெண் கொடுக்கும் நிலையில் இருந்த குறு நில மன்னர்கள்.இவர்கள் மள்ளர் அல்ல.பார்க்கவ கோத்திரத்தவர்,மலையர் குல மக்கள். ராஜ ராஜ சோழனின் தாய் மலையமான் குலத்தவர்.

தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்துவந்த சம்புவராயர்கள் பள்ளி(வன்னியர்) குலத்தவர்.
நடு நாட்டின் வலிமை மிகுந்த சிற்றரசர்களான காடவராயர்களும் வன்னியர் இனத்தவரே.இவர்கள் கல்வெட்டுக்களில் தம்மை பள்ளி இனத்தவராகவே குறிப்பிட்டுள்ளனர்(ARE 137 of 1900; S.I.I vol.7, No.150).

செல்வாக்குள்ள மள்ளர் இனத்தவர் ஏன் ஒருவர் கூட சிற்றசராய் அறியப்படவில்லை?கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலை எழுபது நாயக்கர் காலத்திற்கு முன் சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில்தான் எழுதப்பெற்றது.வன்னிய குலத்தவரின் பெருமைகளைக் குறிப்பிடும் இந் நூல் வன்னியர்களை ஆட்சி செய்யும் மன்னர் இனத்தவராகக் குறிப்பிடுகின்றது.

பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் வன்னிய குலத்தவர் சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வன்னிய குலத்தவருக்கு அரசரால் கொடையளிக்கப்பட்ட நிலங்கள் "பள்ளிப் பேறு" எனப்பட்டன.(ARE 200 of 1904)

மேலும் வன்னியர் குலத்தவர் விற்போர் வீரர்களாக விளங்கினர். இவர்கள் "வில்லிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்(ARE 360 of 1902)(ARE 394 of 1921).பள்ளி குல மக்கள் வாழ்ந்த பகுதி பள்ளி நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது(ARE 35 of 1913).

விஜயநகர வேந்தர் படையெடுப்பின்போது அவர்களை எதிர்த்து முதலில் போரிட்டது தமிழ் குறு நில மன்னர்களான சம்புவராயர்கள்தான்.இவர்கள் வன்னியர் குலத்தவர்.(ARE 267 of 1919)

வன்னியர்களும் வெள்ளைக் குடை, வெள்ளை யானை, தேர் போன்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர்.

நாயக்கர் காலத்தில்தான் வன்னியர் இனம் ஏற்றம் பெற்றது எனக் கூறுதல் தவறு.

VERY IMPORTANT DOCUMENT

களப்பிர அரசனான கூற்றுவ நாயனார்

தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.

இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.

இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.

தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.

இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911   -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம்.
அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர்.
இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.


ராஜராஜசோழன் காலத்தில்

பல இன மக்கள் இருந்தனர்.பல இன,பல மொழி பேசும் மக்கள் படைப்பிரிவில் கூட ஈடுபட்ட காலம்    அது.தளிச்சேரி,தலைவாய்ச்சேரி,கம்மாளச்சேரி,வண்ணாரச்சேரி,தீண்டாச்சேரி,ஈழச்சேரி போன்ற சேரிகளும் இருந்தன.பஞ்சஜாதி என அழைக்கப்பட்ட கொல்லர்,கற்கொல்லர்,கன்னார்,தச்சர்,தட்டார்(பொற்கொல்லர்) போன்ற கம்மாளச்சேரி வாழ் மக்களும் இருந்தனர்.இவர்களே பிரகதீஸ்வரர் கோயில் சிற்பம் அமைக்கும் வேலையிலும் ஈடுபடுத்தப்பட்டனர்.ஆனால் இவர்களை வழிநடத்திய தலைமைச்சிற்பி வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன் ஒரு மள்ளன் ஆவார்.ஏனெனில்,மள்ளர்/மல்லர் என்பது மருதநில மக்களினத்தைக் குறிக்கும் மரபுச் சொல் ஆகும்.இதை தேவர்,சான்றோர்,வேளான்,அய்யர் போன்று பயன்படுத்தமுடியாது.அதை ஒரு மள்ளர் இனத்தைச் சார்ந்த ஒருவர்தான் பயன்படுத்தமுடியும்.பிரகதீஸ்வரர் கோயில் அமைப்பில் அவர்களுக்கு தலைவராக மள்ளர் ஒருவர் இருந்து வழி நடத்தியதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?
 மள்ளர் ஒருவர் சிற்பி என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்?
Copied From Dina Malar dated 26th September 2010

சிறப்புமிக்க தஞ்சைத்தரணி:

 சோழநாடு தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிசெய்யப் பட்ட பகுதியாகும். தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். பெருகி வரும் காவிரியாற்றால் இப்பகுதி வளம் மிக்கதாகத் திகழ்ந்தது. இவ்வூர் பற்றிய மிக பழமையான குறிப்புகள் திருச்சி மலைக்கோட்டை பல்லவமன்னன் சிம்ம விஷ்ணுவின்(கி.பி.555- 590) கல்வெட்டில் இடம் பெற்று உள்ளது. தஞ்சையில் பெரியகோயில் கட்டப்படுவதற்குமுன் "தஞ்சை தளிக்குளத்தார் கோயில்' இங்கு இருந்ததாகத் தெரிகிறது. தற்போதும் தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பெயராலேயே இவ்வூர் "தஞ்சாவூர்' என அழைக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது.

ராஜராஜனின் கலைக்கோயில்:

உலகிற்கு ஆன்மிகக் கருத்தையும், பண்பாட்டுச் சிந்தனையையும் வாரி வழங்கி வரும் தமிழகத்திலுள்ள தஞ்சை மண்டலத்தை கி.மு.,இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி., 13ம் நூற்றாண்டு வரை 1,500 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சோழ அரச மரபினர் ஆட்சி செய்து வந்தனர். அவர்களின் முதல் 400 ஆண்டு கால ஆட்சிச் சிறப்பைச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களிலிருந்து அறிய முடிகிறது. காவிரியில் கல்லணை கட்டி, காடு திருத்தி, நாட்டை வளம் பெறச் செய்த கரிகாற் பெருவளத்தான் என்ற சங்க காலச் சோழ மன்னன் கி.பி., முதலாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்தான். தொடர்ந்து சோழப் பரம்பரையின் புகழ் சிறிது குன்றி யிருந்தாலும், ஆட்சி தொடர்ந்து நடந்தது. கி.பி., 850ம் ஆண்டு சாத்தன் பழியிலி என்ற முத்தரையர் குலச் சிற்றரசனிடம் போரிட்டு 90 விழுப்புண்களை பரகேசரி விஜயாலயச் சோழன் பெற்றான்.இவன் தான் தஞ்சாவூர் நகரைக் கைப்பற்றி, தனது தலைநகராகக் கொண்டு, தஞ்சைச் சோழப் பரம்பரையைத் தோற்றுவித்தான். பிற்காலச் சோழமன்னர்களின் பரம்பரையில் தோன்றியவரே ராஜராஜ சோழன். இவர் சுந்தர சோழனுக்கும், வானவன் மாதே விக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தார். இவன் ராஜகேசரி என்ற பட்டப்பெயருடன் மேலும் 42 சிறப்புப் பெயர்களையும் பெற்றவன்.

பெரிய கோயில் கட்டும் எண்ணத்துக்கு அஸ்திவாரம்: காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனின் மனதை மிகவும் கவர்ந்தது. அக்கோயிலை ""கச்சிப்பேட்டுப் பெரியதளி'' என்று போற்றி மகிழ்ந்தார். இக்கோயிலின் அமைப்பு அவருக்குள் உணர்ச்சி பெருக்கையும், பக்தியையும் ஏற்படுத்தியது. தானும் ஒரு சிவாலயத்தை அமைக்கவேண்டும் என்ற எண்ணத்தில், தஞ்சா வூரில் பெரியகோயில் திருப்பணியைத் தொடங்கினார். காஞ்சி கயிலாயநாதர் கோயிலைப் பார்த்ததன் விளைவே, தஞ்சைப் பெரிய கோயில் கட்டும் எண்ணத்துக்கு அஸ்திவாரமாக அமைந்தது.

பிரம்மாண்டமான சிவலிங்கம்: கருவறையில் உள்ள சிவலிங்கம் உலகிலேயே மிக பெரியதாகும். ஆறு அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரமும், 23 அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனிதனித் கருங்களனால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தை சுற்றி வர இடமும் கருவறையை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. நமது பார்வையில் தென்படுவது சிவலிங்கத்தின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. அபிஷேக ஆராதனைகளுக்கு வசதியாக இரு புறங்களிலும் படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தஞ்சை கோயிலின் சிவலிங்க வழிபாடு மகுடாகம அடிப்படையில் செய்யப்படுகிறது. உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

பெரிய லிங்கப் பிரதிஷ்டையின் போது ஏற்பட்ட பெரும் சிக்கல்: தஞ்சை பெரியகோயில் கட்டுமானப்பணியின் போது கருவறையில் லிங்கப் பிரதிஷ்டையில், ஆவுடையாரில் லிங்கத்தை நிறுவி மருந்து சாத்தினர். மருந்து இளகியபடியே இருந்ததால் லிங்கம் இறுகவில்லை. ஆதீனங்களை அழைத்து மருந்து சாத்தியும் கைகூடாமல் போனதால் ராஜராஜ சோழன் மனச்சோர்வடைந்தார். அப்போது, ""கருவூரார் வந்தாலன்றி, மாமன்னர் வெற்றியடைய முடியாது,'' என்று அசரீரி வாக்கு கேட்டது. உடனே மன்னர், "கருவூரார் எங்குள்ளார்? அவரை எப்படி தேடிக் கண்டுப் பிடிப்பது,' என கேட்டார். போகர் சித்தர், கருவூராரை அழைத்து வருவதாக கூறினார். ஒரு காகத்தின் காலில், ஓலையைக் கட்டி பறக்கவிட்டார். சிறிது நேரத்தில் கருவூரார் தஞ்சை கோயில் வந்தடைந்தார். கருவூரார் போகரிடம், ""எல்லா வல்லமையும் பெற்ற தாங்களே இதைச் செய்திருக்கலாமே!, அடியேனை அழைத்தது எதற்காக?'' என்று கேட்டார். போகர், "நீர் சிவயோகிகளின் தலைவர் என்பதை உலகுக்கு அறிவிக்க இவ்வாறு செய்தேன்,'' என்றார். மாமன்னர் ராஜராஜன் போகரையும், கருவூராரையும் வணங்கி லிங்கப்பிரதிஷ்டைக்கு உதவுமாறு வேண்டினார். கருவூராரும் சிவசிந்தனையுடன் கைகளால் அழுத்திப் பிடிக்க மருந்து இறுகிப் பிடித்துக் கொண்டது. மன்னரும் கருவூராரின் செயலுக்கு நன்றி செலுத்தும் முகமாக அவருக்கு ஒரு சன்னதியை ஏற்படுத்தினார்.

உயரமான கோபுரம்: பெரியகோயிலின் கோபுரங்களில் உயரமானது கேரளாந்தகன் வாயில் கோபுரம். ராஜராஜன் கி.பி.,988 ம் ஆண்டு சேரமன்னன் பாஸ்கர ரவிவர்மனைப் போரில் வெற்றி பெற்றதைப் போற்றும் வகையில் இக்கோபுரத்திற்கு ""கேரளாந்தகன் வாயில் கோபுரம்'' எனப் பெயரிடப் பட்டுள்ளது. இக்கோபுரம் 90 அடி உயரமும் 54 அடி அகலத்தில் ஐந்து நிலையுடன் அமைந்துள்ளது. கோபுரத்தின் நிலைக்கால்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி நீளம், மூன்று அடி அகலம், 40 அடி உயரம் கொண்ட ஒரே கல்லால் ஆனவை. கோபுரத்தின் நாற்புறங்களிலும் நாயக்கர் மற்றும் மராட்டியர் காலச் சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இக்கோபுரத்தை ஒட்டிச் செல்லும், சிவகங்கைக் கோட்டை உள்மதில், செவ்வப்ப நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. கேரளாந்தகன் வாயில் கோபுரத்தில் காணப்படும் சுதைச் சிற்பங்களில் சோழர்காலச் சிற்பங்கள் சில உள்ளன. மற்ற சிற்பங்கள் பிற்கால நாயக்கர், மராட்டியர் மன்னர்களின் காலத்தைச் சேர்ந்தவை. இதில் மகாசதாசிவமூர்த்தி என்னும் சிற்பம் குறிப்பிடத்தக்கதாகும். ஐந்து தலைகள் பத்து கைகள் கொண்ட மூர்த்தியாக பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் இவர், சிவாம்சம் கொண்டவர். இச்சிற்பம் சோழர் கால சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

முதல் தங்ககோபுரம்: தட்சிணமேரு என்னும் தஞ்சை பெரிய கோயில் விமானம் முழுவதும் செப்புத் தகடுகளைப் போர்த்தி அதன் மேல் பொன் வேய்ந்தான் ராஜராஜன் என்று கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 216 அடி விமானம் முழுவதும் தங்கத்தகடு வேய்ந்ததை ஒட்டக்கூத்தர் தக்கயாகப்பரணியில் குறிப் பிட்டுள்ளார். தட்சிணமேருவான தஞ்சை ராஜராஜேஸ்வரத்தை எப்படி ராஜராஜன் பொன் மயமாக அமைத்தானோ, அதுபோல, தில்லை நடராஜர் கோயில் விமானத்தை குலோத்துங்கன் அமைத்தான் என்ற செய்தி சிதம்பரம் வரலாற்றில் இடம்பெற்று உள்ளது. பிற்காலத்தில் நிகழ்ந்த படையெடுப்புகளில் இந்த விமானத்தில் வேய்ந்த பொன் முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது.

22 கிலோ தங்க வைர நகைகள்: தஞ்சை பெரிய கோயிலுக்கு 183 கிலோ தங்கப்பாத்திரங்கள், 22 கிலோ தங்க வைர நகைகள், 222 கிலோ வெள்ளிப்பாத்திரங்கள், 65 செப்புத் திருமேனிகள், ஒரு லட்சத்து 16 ஆயிரம் கலம் நெல் விளையக்கூடிய 44 கிராமங்கள், கோயிலின் 158 திருவிளக்குகள் நாள்தோறும் எரியும் வகையில் தினசரி 158 உழக்கு நெய் வழங்கும் வகையில் நான்காயிரம் பசுக்கள், நான்காயிரம் ஆடுகள் ஆகியவற்றை கொடையாக ராஜராஜசோழனும் மற்றவர்களும் வழங்கியுள்ளதாகக் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

ராஜராஜனை வணங்கிய அலுவலர்: ராஜராஜசோழன் காலத்தில் பெரிய கோயிலில் நிர்வாக அலுவலராக இருந்தவர் தென்னவன் மூவேந்த வேளாளன். இந்தப் பணியை அக்காலத்தில் "ஸ்ரீகார்யம்' என்று கூறுவர். இவர் ராஜராஜசோழன் மற்றும் அரசி லோகமாதேவி ஆகியோருக்கு செப்புப்படிமங்கள் செய்து பெரியகோயிலில் பிரதிஷ்டை செய்தார். அந்தச் சிலைகளுக்கு தங்க ஆபரணங்களும் அளித்தார். மன்னனையே தன் தெய்வமாகக் கருதி விளக்கும் ஏற்றி வந்தார். அந்த படிமத்தின் முன் திருநீறு மடல் வைத்து வழிபட்டார். இச்சிலைகள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தஞ்சாவூரில் இருந்து குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆமதாபாத் கவுதம் சாராபாய் கலைக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

செப்புத்தகடு கொடிமரம்:

நந்திமண்டபம் அருகில் மேற்குப் புறத்தில் செப்புத்தகட்டால் மூடப்பட்ட கொடிமரம் உள்ளது. இம்மண்டபம் சிறந்த கலை வேலைப்பாடுகளுடன் திகழ்கிறது. இது நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்டதாகும். இரண்டாம் சரபோஜி மன்னர் இந்த கொடிமரத்தூணுக்கு கொறடு (ஒட்டுத்திண்ணை என்னும் பிடிமானம்) ஒன்றைப் புதிதாக அமைத்துள்ளார். அத்து டன் நந்தி மண்டபத்தின் கிழக்கே ஒரு செங்கல் மேடை அமைத்து, அதில் சித்திரைத் திருவிழாவின் 9ம் நாள், "சரபேந்திர பூபால குறவஞ்சி' என்னும் நாடகம் நடக்கச் செய்துள்ளார். அதன் எதிரில் வட்டமான மேடை அமைத்து, அதில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்துள்ளார்.

மிக உயரமான மதிற்சுவர்:

கோயிலை சுற்றி சுமார் 28 அடி உயரத்தில் அமைந்துள்ள மதில் ராஜராஜனின் தலைமை அமைச்சரான சோழ மண்டலத்து உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணாட்டு அமன் குடியான கேரளாந்தகச்சதுர்வேதி மங்கலத்து கிருஷ்ணன் ராமன் என்னும் மும்முடிச் சோழ பிரம்மராயன் என்பவரால் மன்னனின் ஆணைப்படி கட்டப்பட்டது. மதிற்சுவர் மீது வரிசையாக நந்தி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மதிற்சுவரின் வெளிப்புறத்தின் கீழ்பகுதியில் சோழர் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிழக்கு மேற்காக 800 அடி நீளமும், தெற்கு வடக்காக 400 அடி அகலமும் கொண்டுள்ளன. கோயிலின் பிரகாரச்சுற்றில் கருங்கற்களினாலும், செங்கற்களினாலும் தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி கி.பி., 1803ல், தளம் அமைத்தார்.
மிகப்பெரிய சண்டிகேஸ்வரர்: புகழ்மிக்க இப் பெரிய கோயிலில் எல்லாமே பெரியவை என்ற வகையில் விமானத்தின் வடபுறத்தில் அமைந்துள்ள சண்டிகேஸ்வரர் சன்னதியும் மிகப்பெரிதாக உள்ளது. இந்த சன்னதியின் வெளிச்சுவர்களிலும், தூண்களிலும் சோழர் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
லிங்க வடிவில் நவக்கிரகங்கள்: பெரிய கோயிலின் மேல்புற வடபகுதியில் லிங்கவடிவில் நவக்கிரங்கள் உள்ளன. இவற்றை அடுத்து 108 லிங்கங்களும், அடுத்து வரிசையாக லிங்கங்களும் மன்னர் இரண்டாம் சரபோஜியால் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 252 லிங்கங்கள் உள்ளன. திருச்சுற்று மாளிகையின் மேற்குப் புறத்தின் தென்பகுதியில் "பரிவார ஆலயத்து கணபதியார்' சன்னதி உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு ராஜராஜனும், மற்ற மன்னர்களும் அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளனர்.
தங்க மலர்: ராஜராஜ சோழன் வழிபாடு செய்துவந்த செப்புத் திருமேனிக்கு "தெட்சிணமேரு விடங்கரான ஆடவல்லார்' என்று பெயர். மேலை சாளுக்கிய மன்னர்களை வென்றபோது இந்த ஆடவல்லாரின் திருப்பாதத்தில் தங்கத்தாலான மலர்களை இட்டு பூஜை செய்து தன் நன்றியை தெரிவித்தான்.ராஜராஜன் உருவாக்கிய நந்தி எது?: நந்திமண்டபத்திற்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசைநோக்கியபடி உள்ள நந்தியே ராஜராஜன் காலத்தைச் சேர்ந்ததாகும். இதுவே முதலில் பெருவுடையாருக்கு எதிரில் இருந்தது. பின்னாளில் நாயக்கர்கள் மூலவருக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி, கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்தது. பிற்காலத்தில் திருச்சுற்று மாளிகைக்கு மாற்றப்பட்டது.
25 டன் எடையுள்ள நந்தி: தஞ்சாவூர் கோயில் என்றாலே அங்குள்ள விமானமும், நந்தியும் தான் எல்லோர் நினைவிலும் வரும். ஒரே கல்லினால் செய்யப்பட்ட மிகப் பெரிய நந்திகளுள் இதுவும் ஒன்றாகும். (திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோயிலில் உள்ள கல்நந்தி தஞ்சாவூர் நந்தியை விடப் பெரியது. தமிழகத்தின் மிகப்பெரிய நந்தியும் இதுதான்) திருச்சி அருகிலுள்ள பச்சை மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் செய்யப்பட்ட இந்த நந்தி 25 டன் எடை உடையது. 19 அரை அடி நீளம், எட்டேமுக்கால் அடி அகலம், 12 அடி உயரம் கொண்டது. விஜயநகரக் கலைபாணியில் அழகும், கம்பீரமும் கொண்டு அமைந்துள்ள இந்த நந்தி தஞ்சை நாயக்க மன்னர்களால் நிறுவப்பட்டதாகும். நந்தி, நந்தி மண்டபம் ஆகியவற்றை கி.பி., 17ம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களான அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் மற்றும் விஜயராகவ நாயக்கர் ஆகியோர் உருவாக்கினர். இவர்களது சிலைகள் இந்த மண்டபத் தூண்களில் உள்ளன. நந்தி மண்டபத்தின் மேல் விதானத்தில், மூன்றாம் சிவாஜி மன்னர் காலத்தில் பூக்களும், பறவைகளும் வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.
சித்திரக்கூடம்: தஞ்சாவூர் கோயில் கருவறையை அடுத்துள்ள உட்பிகாரத்தில் 13 சித்திரக்கூட பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதிக்கு அந்தராளம் என்று பெயர். இந்த ஓவியங்களின் மூலம் சோழர் கால மக்களின் நாகரிகம், பண்பாடு, வாழ்க்கைமுறை, ஆடை ஆபரணங்கள், இசைக் கருவிகள், நாட்டியமுறைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடிகிறது.
தேவியருடன் ராஜராஜன்: பெரியகோயிலின் ஒன்பதாவது ஓவிய அறைப்பகுதியின் மேற்கு நோக்கிய சுவரில் சோழர்கால பாணியில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சிறப்பானவை. ராஜராஜன் காலத்திய சிதம்பரம் நடராஜர் கோயிலின் நான்கு நுழைவாயில்கள், முதலாம் பராந்த கனால் பொன்வேயப்பட்ட மண்டபத்தின் நடுவில் சிவனின் ஆனந்த தாண்டவம், காலருகில் ஒரு புறம் காளி, மறுபுறம் காரைக்கால் அம்மையார் காட்சியளிக்கின்றனர். இந்த தொகுப்பிற்கு இடப்புறம் எளிய அடியவரைப் போல மாமன்னன் ராஜராஜன் மீசை, தாடி யுடன், கூப்பிய கரங்களுடன் நடராஜரை வணங்குவது போல ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அருகில் மாமன்னனின் தேவியரில் மூவர் மட்டும் நின்ற கோலத்தில் உள்ளனர். அருகில் மெய்க் காவலர்கள் நிற்கின்றனர்.
ராஜராஜனின் விட்டுக்கொடுக்கும் குணம்: ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருள்மொழி என்பதாகும். இளம் வயதில் பெற்றோரை இழந்ததால் பாட்டி செம்பியன் மாதேவியார், சகோதரி குந்தவை ஆகியோரின் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டார். அவருடைய மூத்த சகோதரர் ஆதித்த கரிகாலன் பகைவர்களால் கொலை செய்யப்பட்டார். நாட்டுமக்கள் அனைவரும் இளையவன் அருள்மொழியே நாட்டை ஆளவேண்டும் என்று விரும்பினர். ஆனால், ராஜராஜனின் சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனுக்கு, தானே சோழநாட்டின் மன்னராகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ராஜராஜனும் அரியணையை விட்டுக்கொடுத்து அவரை மன்னனாக்கினார். மதுராந்தகச் சோழன் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருடைய மறைவுக்குப்பின், தஞ்சைச் சோழர் வரலாற்றில் பொற்காலத்தைப் பதித்தான் ராஜராஜசோழன். கி.பி.,985ம் ஆண்டு தஞ்சைச் சோழ அரசுக் கட்டிலில் அமர்ந்த இவனுக்கு, பட்டம் சூட்டும் வரை அருள்மொழி என்ற பெயரே இருந்தது.
மாமன்னனின் மாபெரும் குடும்பம்: ராஜராஜனுக்கு 10 மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்திவிடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக இருந்தார். இவரைத் தவிர, சோழமாதேவி, திரைலோக்கியமாதேவி, பஞ்சவன் மாதேவி, அபிமானவல்லி, லாடமாதேவி, பிருதிவிமாதேவி, மீனவன்மாதேவி, வீரநாராயணி, வில்லவன்மாதேவி, வானவன்மாதேவி ஆகியோர் இருந்தனர். வானவன் மாதேவிக்குப் பிறந்த ஒரே பிள்ளையே புகழ்மிக்க ராஜேந்திரச் சோழன். இவனுக்கு ராஜராஜனால் இட்ட பெயர் மதுராந்தகன். இது ராஜராஜனின் சித்தப்பா நினைவாக வைக்கப்பட்டதாகும். மதுராந்தகனுக்கு இரு சகோதரிகள். மூத்தவள் மாதேவ அடிகள். இளையவள் குந்தவை. ராஜராஜன் தன்னை வளர்த்த பாட்டி செம்பியன் மாதேவியின் நினை வாக ஒரு மகளுக்கு மாதேவஅடிகள் என்றும், சகோதரி குந்தவையின் நினைவாக ஒரு மகளுக்கு குந்தவை என்றும் பெயரிட்டார். இதன்மூலம் அவருடைய பாசபந்தமும், நன்றியும் தெரிகிறது.
ராஜராஜ சோழனின் புனைப்பெயர்கள்: அபயகுலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருண்மொழி, அழகிய சோழன், ரணமுக பீமன், ரவிகுல மாணிக்கம், ரவி வம்ச சிகாமணி, ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜராஜன், ராஜாச்ரையன், ராஜகேசரி வர்மன், ராஜ மார்த்தாண்டன், ராஜவிநோதன், ராஜேந்திர சிம்மன், உத்தம சோழன், உத்துங்கதுங்கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கீர்த்தி பராக்கிரமன், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாத சேகரன், சோழகுல சுந்தரன், சோழ மார்த்தாண்டன், சோழ நாராயணன், சோழேந்திர சிம்மன், திருமுறை கண்ட சோழன், தெலிங்க குலகாலன், தைலகுலகாலன், நிகரிலிச் சோழன், நித்திய வினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச் சோழன், மூர்த்த விக்ரமாபரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், க்ஷத்திரிய சிகாமணி. கல்வெட்டுகளில் இருந்து இந்தப் பெயர்களை அறிய முடிகிறது.
திருப்புகள் பாடிய அருணகிரியார்: தஞ்சைப்பெரிய கோயிலில், ராஜராஜ சோழன் முருகப் பெருமானுக்கு தனிசன்னதி கட்டவில்லை. அவர் எழுந்தருளி இருக்கும் திருக்கோயில்களுக்குச் சென்று திருப்புகழ் பாடும் அருணகிரிநாதர் ராஜராஜன் கட்டிய பெரியகோயிலைக் காணும் ஆவலில் வந்திருக்கிறார். தனிசன்னதி இல்லாததால் கோபுரத்தில் இருக்கும் முருகனையே ""தஞ்சை மாநகர் ராஜகோபுரத்து அமர்ந்த பெருமாளே'' என்று பாடியுள்ளார். பிற்காலத்தில் முருகப்பெருமானுக்கு பெரியஅளவில் நாயக்க மன்னர்கள் சன்னதி அமைத்துள்ளனர்.
ராஜராஜன் திருவாயில்: கேரளாந்தகன் வாயிலை அடுத்து அமைந்துள்ளது ராஜராஜன் திருவாயில். இக்கோபுரம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. இந்த வாயிலின் இருபுறத்திலும் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன துவாரபாலகர் சிலைகளும், 40 அடி உயரமுள்ள இரண்டு ஒற்றைக்கல் நிலைக்கால்களும் அமைந்துள்ளன. துவாரபாலக சிற்பங்களின் கீழ்ப்பகுதியில் சிவபுராணக்கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. திரிபுர தகனம், சண்டீசர் கதை, மார்க்கண்டேயன் வரலாறு, சிவபார்வதி திருமணம், வள்ளி திருமணம், அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளல், மன்மதன் தகனம், கண்ணப்பர் வரலாறு ஆகிய கதைகள் இடம் பெற்றுள்ளன. கோபுர நுழைவுவாயிலின் இருபக்கங்களிலும் சிறிய விநாயகர் சன்னதிகளும், கோபுரத்தின் உட்புறம் தென்திசையில் நாகராஜர் சன்னதியும், வடதிசையில் இந்திரன் சன்னதியும் உள்ளன. திருச்சுற்று மாளிகை தென்கிழக்கு மூலையில் மடைப்பள்ளி 2ம் சரபோஜி மன்னரால் அமைக்கப்பட்டுள்ளது.
விக்கிரமச்சோழன் திருவாயில்: அர்த்த மண்டபத்தின் தெற்கு நுழைவு வாயில் ராஜேந்திரசோழனின் இயற்பெயரால் விக்கிரமச் சோழன் திருவாயில் என வழங்கப்படுகிறது. இவ்வாயிலின் இருபுறங்களிலும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. வாயிலின் கிழக்கு புறத்தில் கஜலெட்சுமியும், மேற்கு புறத்தில் சூரிய மற்றும் விஷ்ணு அநுக்கிரக மூர்த்தி சிற்பங்களும் உள்ளன. இவ்வாயில் படிக்கட்டுகளின் வெளிப்புறங்களில் திருமால், துர்க்கை, திரிபுர அசுரர்களை வதம் செய்தல், சிவ பார்வதி திருமணம் ஆகிய புராணக் காட்சிகள் அழகிய படைப்பு சிற்பங்களாக உள்ளன.
கோயிலை கட்டியவர் யார்?: கல்வெட்டில் தஞ்சைப் பெரியகோயில் ""ராஜராஜீச்சரம்'' என்று குறிக்கப்படுகிறது. இலக்கணப்படி ராஜராஜேச்சரம் என்பது சரியானதாக இருந்தாலும், கல்வெட்டுகளில் ராஜராஜீச்சரம் என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. இக்கோயிலை உருவாக்கியவர், வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன். இவருடைய பணிக்கு உதவியாக மதுராந்தகனான நித்தவிநோதப் பெருந்தச்சன், இலத்திசடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்பவர்களும் குஞ்சரமல்லனுக்கு துணையாக கோயில் திருப்பணிகளைச் செய்தனர்.