நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, April 28, 2011

மரம் வளர்ப்போம்-இயற்கையை காப்போம்-போத்தீஸ்

போத்திஸ் இயற்கையை காப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது. அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் தன் வடிக்கையாளர்களுக்கு பயன்தரக்கூடிய மரக்கன்றுகளை வழங்கி வருகிறது.இந்த ஆண்டு 10 இலட்சம் மரக்கன்றுகளை வழங்க முடிவு செய்துள்ளது.இதற்க்கு ”my tree my family" என பெயரிடபட்டுள்ளது.

போத்திஸ்-ன்  சேவை மேலும் தொடர இவ்வுலக மக்களின் சார்பாக நாமும் நம் வாழ்த்தினை கூறுவோம்...






                                 மரம் வளர்ப்போம் - மனிதனை நேசிப்போம் 

Tuesday, April 26, 2011

கணக்கு உதைக்குது.

எங்க  வாத்தியார்
சரியாச் சொல்லிக்கொடுக்கலை...

வட்டம் மாவட்டம்
வரைஞ்சு காட்டலை...

வாக்குச் சதவீதம்
போட்டுக்காட்டலை...

வறுமைக் கோடு
கிழிச்சிக்காட்டலை...

புறம்போக்குப் புள்ளிவிபரம்
புரிய வைக்கலை...

ஸ்விஸ் பேங்கைப் பத்தி
சொல்லவே இல்லை...
அரசியல் தலைவர்களை
பற்றியும் சொல்லவே இல்லை...


இட ஒதுக்கீடு பற்றி
எடுத்து சொல்லல....

வாறுமை போக்க
வழி கூறல...


எங்க  வாத்தியார்
சரியாச் சொல்லிக் கொடுக்கலை...

கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?


பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை. அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!

எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.


பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா? சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.
திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.
பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?

சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால்,

அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?பக்தர்களே, சிந்தியுங்கள்!
பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!
சுனாமி வந்தபோது கடவுள் சுக்கு காப்பி குடிக்க சென்றார...?

கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகள் தீயில் கருகி இறந்தபோது கடவுள் காற்று வாங்கபோனரா..?

மசூதி இடிந்து விழுந்து 100-க்கு மேற்பட்டோர் இறந்த போது கடவுள் மாதம் மாறி போனரா..?

கோயிலே கதி என்று சுற்றி வரும் பல பெண்ணிகளின் கற்பை கவர்கள் கலவாடும் போது கடவுள் என்ன வெளிநாடு சென்றுவிட்டாரா...?

ஏசு நாதரை சிலுவையில் அடைந்தபோது அவர் தானே கடவுள் என்கிறீர்கள் தன்னை காப்பற்றி கொள்ள முடியதாவர் நம்மை காப்பாற்ற போகிறாரா...?

ஆன்மிக சாமியார் என்ற போர்வையில் ஆதிக்கம் செய்து வரும் மனித கயவர்கள் உருவமற்ற கடவுளின் மறுபிறவியா....?

மனிதனை படைத்தவன் கடவுள் என்றால்....உண்ண உணவு உடுத்த உடை இன்றி தினம் தினம் போரடும் மக்களை படைத்தவன் கடவுளா...?

தன் மேல்சட்டை (ஜாக்கட்) கிழிந்தபடி வீதி வீதியாக உலவரும் பெண்கைளை படைத்தவன் கடவுளா.....?

பிறக்கும் போதே மனவளர்ச்சி குன்றியதாக பிறக்கும் குழந்தையை படைப்பவன் கடவுளா....?

நாட்டில் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடுடன் படைக்கும் ஓரவஞ்சனை பிடித்தவன் கடவுளா....?

நாட்டில் கொள்ளையடிப்பவனும் இருக்கின்றான். கூழுக்காக போரடுபவனும் இருக்கின்றான்.
அப்படியனால்.....?

கடவுள் இருப்பது உண்மையென்றால் காற்றை கூட அறியும் மனிதர்கள்....இதுவரை கடவுளை அறிந்தது உண்டா...கண்டது உண்டா

சினிமாவிலும் மனிதர்களால் படைக்கபட்ட உருவாக்க பட்ட கோயில்களில் மட்டுமே நாம் இதுவரை கடவுளை கல்லாகவே..(நவின உலகத்தில் அவரவரவது கற்பனை திறனுக்கு ஏற்றார் போல் பல வண்ணங்களில் பல உருவங்களில்) பார்த்து வந்திருக்கிறோம்.வருகிறோம்...

 
கடவுளை மறுக்க காரணங்கள் பல்லாயிரம் உண்டு நமக்குதான் காகித தாள்கள் வீண்...

கோயில்கள் மனிதனை நல்வழி படுத்த நம் முன்னோர்களால் உருவாக்க பட்டவை...

அரசின் வருமானத்திற்காக உருவாக்கபட்டவை கோயில்கள். அன்று கோயில், இன்று- டாஸ்மாக்….

நீங்கள் வழிபடும் கடவுள் நம் முன்னோர்களே தவிற கடவுள் அல்ல...

அன்று வாழ்ந்த சீறடி சாய்பாபா இன்று கடவுள்

இன்று வாழும் நித்யனந்தா, புட்டபாத்தி சாய்பாபா ,மேல்மருவத்துர் அம்மா  போன்றவர்கள் நாளை கடவுள்...


     கடவுளை மற - மனிதனை நினை


Friday, April 22, 2011

க்ஷத்ரியர்களான வன்னியர்களை குற்றப்பரம்பரை என்பதா??? - தந்தை பெரியார்




விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஆணை, முக்குலத்தோர் சமூகத்தினருக்கு மட்டுமல்லாது, வன்னியர் சமூகத்தினருக்கும் இருந்தது. குறிப்பாக தென்னாற்காடு மாவட்டத்தில் ‘படையாட்சி’ என்று அழைக்கப்பட்ட வன்னியர் சமூகத்தினர் காவல் நிலையங்களில், அன்றாடம் கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று சில பார்ப்பன போலீஸ் அதிகாரிகள், அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்கள். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியில் இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்ற அவசர தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், இதை காங்கிரசார், தங்களின் சாதனைபோல அப்போதே பொய் பிரச்சாரம் செய்துள்ளனர். இந்த வரலாற்றுச் செய்திகளை 1935 ஆம் ஆண்டு ‘விடுதலை’ ஏட்டிலும், ‘குடிஅரசு’ இதழிலும், ‘தென்னாற்காடு ஜில்லா படையாட்சிகள்’ எனும் தலைப்பிலும் பதிவாகியுள்ளது. செய்தியை இங்கு வெளியிடுகிறோம்.
சமீபத்தில் நடக்கப் போகும் தென்னாற்காடு ஜில்லா போர்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெரியார்கள், மற்ற இடங்களில் உண்மையை மறைத்தும், உள்ளதைக் குறைத்தும் கூறிப் பொய்ப் பிரச்சாரம் செய்த மாதிரி, தங்களுடைய ஒழுங்கீனமான சுயநலப் பிரச்சாரம் செய்ய முற்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. அவர்கள் செய்த சூழ்ச்சிகளைக் குறித்து நமது நிருபர் எழுதிய விவரங்களை வேறொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். அவற்றால், சுயநலக் கூட்டத்தார் ஜஸ்டிஸ் கட்சியினரைத் தோற்கடிக்க எவ்வளவு தூரம் முயற்சி செய்கிறார்களென்பது விளங்கும். தம்முடைய பிரச்சாரத்திற்காக, எவ்வளவு கேவலமான முறைகளையும் அனுசரிப்பார்களென்பது, அவர்களுடைய முழுப் பொய்ப் பிரச்சாரத்தினால் புலப்படுகின்றது. சில வாரங்களுக்கு முன், படையாட்சி வகுப்பினரைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் குற்ற பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட அரசாங்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

க்ஷத்திரிய வகுப்பைச் சேர்ந்த பழங்குடி மக்களான படையாட்சிகள் ஏன் குற்றஞ் செய்யும் வகுப்பினரோடு சேர்க்கப்பட்டார்கள்? அதற்குக் காரண மென்ன? காரணம் சில பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்கள். அவர்களுடைய ‘ரிப்போர்ட்டு’களில் அவ்வகுப்பினரை குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் மிக அவசியம் என்று எழுதியதனால், அரசாங்கத்தார், தவறாக அப்படிப்பட்ட உத்தரவை வெளியிட்டார்கள். அந்த உத்தரவு படையாட்சி வகுப்பினரிடையே பெருத்த பரபரப்பை உண்டு பண்ணியது. அவர்களுடைய சுயமரியாதைக்கும், கௌரவத்திற்கும், அரசாங்க உத்தரவு இடையூறு செய்ததைக் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் கண்டிக்கப்பட்டது. அந்த அவமரியாதையான உத்தரவை ரத்து செய்வதற்குத் தென்னாற்காடு ஜில்லா போர்டு தலைவர், ராவ்பகதூர் ஜம்புலிங்க முதலியார் அவர்கள் பிரயாசைப்பட்டு வெற்றி பெற்ற விஷயம் அந்த ஜில்லாவாசியான படையாட்சிகளுக்குத் தெரிந்திருக்குமென்று நம்புகின்றோம்.

சென்னை சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியினர் ஒருவரால் அவசரத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவ்வுத்தரவை ரத்து செய்யும் விஷயமாக அரசாங்கத்தார் கவனிப்பதாக வாக்குறுதியளித்ததின் பேரில், தீர்மானம் ‘வாப்பீஸ்’ வாங்கிக் கொள்ளப்பட்டது. பின்னர், ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்களின் முயற்சியால், அரசாங்கத்தார் பார்ப்பன போலீஸ் உத்தியோகஸ்தர்களுடைய ‘ரிப்போர்ட்’டுகளின் மேல் தாங்கள் அம்மாதிரி உத்தரவிட்டது தவறென்று உணர்ந்து, படையாட்சிகளின் கிளர்ச்சியின் உண்மையை அறிந்து, உத்தரவை ரத்து செய்தார்கள்.

இவ்வுத்தரவு ஜஸ்டிஸ் கட்சியாரால் ஏற்படுத்தப்பட்டது. காங்கிரஸ்காரர்கள் தான் சட்டசபையில் இதை விவாதித்து ரத்து செய்வதற்கு உதவி செய்தார்கள் என்று சுயநலக் கூட்டப் பத்திரிகைகள் சில கூறுவது எவ்வளவு பொய்யான விஷயம் என்பதை படையாட்சிகள் அறிவார்கள் என்று நம்புகிறோம். படையாட்சிகள் பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களில் மிகப் பழங்குடி மக்கள். அவர்களைப் பற்றிப் பார்ப்பனர்கள் பரிந்து பேசுவதும், அவர்களுடைய நன்மைக்காகப் பாடுபடுவது போலப் பாசாங்கு செய்வதும், மக்களை ஏமாற்றி ‘ஓட்’டுப் பறிப்பதற்கேயாகும். காங்கிரஸ் என்ற போர்வையை மேல் போர்த்திக் கொண்டால், படையாட்சிகளை ஏமாற்றிவிடலாம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலும்.

சதாகாலமும் பொய், ஏமாற்றுதல், மானக்கேடான செயல்களைச் செய்து, வேலை சம்பாதித்தல், புல்லிய செய்கைகளின் மூலம் வயிறு வளர்த்தல் முதலிய குற்றங்களை இரவு பகலாகச் செய்து வரும் பார்ப்பனர்களை, குற்ற வகுப்பினர் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டியிருக்க, தமிழ்நாட்டின் விவசாய விருத்திக்குக் கற்றூண் போல் விளங்கி, பழமையும் பெருமையும் பொருந்திய க்ஷத்திரிய வீரத்தையும், தேக பலத்தையும் நாட்டின் செழுமைக்கு உபயோகிக்கும் படையாட்சிகளைக் குறற் பரம்பரை வகுப்பினராகச் சேர்த்தது எவ்வளவு தவறான விஷயம். இத்தவறுதலுக்குக் காரணம் பார்ப்பனர்கள் என்பதை யுணர்ந்து, அவ்வுத்தரவு ரத்து செய்ததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி என்பதறிந்து, சமீபத்தில் நடைபெறப் போகும் தேர்தலில் சுயநலக் காங்கிரஸ் கூட்டத்தை முறியடிப்பார்கள் என்று நம்புகிறோம்.

‘விடுதலை’

‘குடி அரசு’ மறு பிரசுரம் - 08.12.1935

உண்மையில் குற்றப்பரம்பரையை சேர்ந்த மக்களுக்கு ஆதரவாக தந்தை பெரியார் பேசவில்லை என்பதையும்,  க்ஷத்ரியர்களான வன்னியர்களை குற்றப்பரம்பரை என்று சொன்ன போது தான் கொதித்எழுந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது....


Wednesday, April 20, 2011

பா.ம.க காலத்தின் தேவை.....

அரசியல் அரங்கில் மருத்துவர் ராமதாஸ்,  என்றும், பாமக கட்சியினரால்  "அய்யா" என்றும், திரு. திருமாவளவனால்  "தமிழ் குடிதாங்கி" என்றும் அழைக்கபடுவர். unofficial ஆக அரசியல்வாதிகளும், மாற்று சாதியினரும், சில வன்னியர்களும் "மரம்வெட்டி", "கூட்டணி  தாவி ", "சாதி வெறியன்" என்றும் அழைக்கின்றனர்.
  
மரம் வெட்டி: இவர் உண்மையில் "மரத்தை வெட்டுங்கள்" என்று சொல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். இதை பெரும்பாலும் வன்னியர்களும் மற்ற ஆதிக்க சாதியினரும் (மற்ற சாதிகள் எப்படி வந்தது என்பதை தனியாக சொல்கிறேன்) சேர்ந்து செய்தது இது. அது ஒரு கட்டுப்பாடு அற்ற கலவரம். திடீர் என்று திசை மாறி தலித்துக்களுக்கு  எதிரானதாக மாறிய  கலவரம். அந்த கலவரத்தில் நடந்ததை எல்லாம் ஒரு தனிப்பட்ட மனிதர் தலைமீது போடுவது முறையல்ல. அப்படி நடந்தது தவறு என்றாலும் உயிர் பலி அதிகம் இல்லாத கலவரம் என்பதால் இந்த மரம் மேட்டரை நான் அதிகம் கண்டு கொள்வதில்லை. பசுமை தாயகமும் மிக அதிகமாக மரக்கன்றுகளை நட்டு தன் பாவத்தை போக்கி கொண்டது என்பதால் அந்த மரம்வெட்டி சரியாக படவில்லை..
 
கூட்டணி தாவுபவர்:  இதனால் என்ன? எந்த சாதாரண  மனிதனுக்கும் இது ஒரு பிரச்சினை அல்ல. கூட்டணி மாறினால் என்ன? கூட்டணியிலேயே இருந்தால் என்ன? என்ன ஒருபக்கம் புத்தர் மறுபக்கம் ஹிட்லர் தலைமையிலா இரண்டு பிரதான கட்சிகள் செயல்படுகின்றன?. யாரோ ஒருவர் நல்லவராக இருந்திருந்தால் நாம் அதை பற்றி கவலைபடலாம். தமிழக மக்களை பொறத்தவரை இரண்டு திராவிட கட்சிகளும் ஒரே குட்டையில் uuriya  மட்டைகள். இந்த இரண்டு கட்சிகளில்  இருக்கும் அல்லக்கைகளுக்குதான் இவற்றின் கூட்டணி தத்துவம் எரிச்சலை கிளப்புமே அன்றி நடுநிலையான மக்களுக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை என்பது சத்தியம்.

சாதி வெறியர் : என்ன சாதி வெறியர்?. எப்படி சாதி வெறியர்?. ஒன்றும் இல்லை அடிக்கடி வன்னியர் என்று சொல்லுவார் (கலைஞர் திராவிடர் என்று சொல்வது போல), வேறு என்ன சொல்ல வேண்டும்? பாமகவின் அடித்தலமே வன்னியர் தான். வன்னியர் இல்லையே பாமக இல்லை. வன்னியர்களை பற்றி  சொல்லாமல் வேறு சாதி பெயரை எதற்காக சொல்ல வேண்டும்?. உண்மையில் மற்றவர்கள் திருமாவளாவன் உட்பட ஆரம்பத்தில் மற்ற சாதிகளை குறிப்பாக வன்னியர்களை தரக்குறைவாக பேசித்தான் கட்சியை வளர்த்தனர் (எப்படி பார்ப்பனை திட்டி திமுக வளர்ந்ததோ அப்படி), அன்று வெள்ளாளர்களுக்கு மேல் பார்பனர் இருந்தனர் அதனால் திமுக என்ற வெள்ளாளர் கட்சி அவர்களை திட்டியே தன்னை வளர்த்து கொண்டது, அதைப்போல விடுதலை சிறுத்தைகளும் அவர் சமூக மக்களுக்கு எது அருகாமையில் இருக்கும் ஆதிக்க சக்தியோ அதை பயன்படுத்திகொண்டார். ஆனால் மருத்துவர் தலித்துக்களையும்  தன்னோடு இணைத்து கொள்ள முயற்சி செய்தாரே ஒழிய , தலித்துக்குகளை வன்னியர்களுக்கு எதிரிகளாக காட்டவில்லை. அப்படி காட்டி இருந்தால் வன்னிய இளைஞர்கள்  இன்னும் பெருமளவில் பாமகவின் இணைத்திருப்பர் என்பது உண்மை.  எண்ணிக்கை பலம் இருந்தும் மிகவும் பின் தங்கி கிடந்த ஒரு சமூகத்திடம் திமுக வோ அதிமுகவோ உண்மையாக நடந்து  இருந்தால் பாமக என்ற ஒரு கட்சிக்கே அவசியம் இருந்து இருக்காது (இது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் பொருந்தும்). வெறும் தேர்தலில் மட்டுமே பயன்படுத்தி கொள்ளப்பட்டனர் வன்னியர்கள். வெறும் பார்ப்பான் எதிர்ப்பு என்ற சொத்தை வாதத்தை எதற்காக வன்னியர்கள் கேட்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. "திராவிட புரட்சி" என்பது வெள்ளாளர்களுக்கும் , பார்பனர்களுக்கும் idaiye  நடந்த ஒரு ஆதிக்க போராட்டம். இதில் வெள்ளாளர்கள் வென்றனர். மற்றவர்கள் அல்லகைகளாக (அதிமுக வரும்வரை ) இவர்கள் சொல்வதை எந்த ஒரு சமூக புரிதலுமின்றி கடைபிடிக்கவேண்டும் அவ்வளவே. அதை பின் தொடர்ந்து இருந்தால் வன்னியர்களுக்கு ஆபத்தே அன்றி வேருன்றும் இல்லை. அன்றைய நிலையில் BC என்ற பிரிவில் வசதியான வெள்ளாள சாதி, மற்ற சில சமூக பொருளாதரத்தில் வளர்ந்து விட்ட சாதி  மாணவர்களோடு  போட்டி போட வேண்டும் (இப்போது தஞ்சை கள்ளர்கள் இதில் மாட்டி கொண்டு தவிக்கிறார்கள்) . எனக்கு தெரிந்து நல்ல கல்லூரிகளில் seat கிடைத்து சென்ற வன்னியர்களே எங்கள் பகுதியில் கிடையாது. lottery டிக்கெட் விற்பது, பெயிண்ட் அடிக்க போவதுதான் வன்னியர் இளைஞர்களின் தொழிலாக  அப்போது நான் கண்டது. இப்போது Engineer, டாக்டர் என்று தெருவுக்கு ஒருவர் வன்னியர் சமூகத்தில் வந்து கொண்டிருப்பது ராமதாஸ் என்ற மனிதனால் தான். இன்று "விடுதலை சிறுத்தைகள் " கட்சியை நாம் ஜாதிகட்சியாக பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது தவறு. ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்று ஒரு கட்சியோ , இயக்கமோ வருவது வரவேற்கதக்கது. அதைப்போலவே வன்னியர்களுக்காக வந்த பாமக  அன்றைய தேதிக்கு நிச்சமாக ஒரு சாதி கட்சி அல்ல. மருத்துவரும் சாதி வெறியர் அல்ல.."பாமக காலத்தின் தேவை". "மருத்துவர் பாமகவின் தேவை".    

நிறைகள்: கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி என்றால் அது பாமகதான். அதிமுக, திமுக இரண்டும்  அவர்கள் கட்சியையோ, தலைவரையோ, இல்லை avarkal  செய்யும் தொழிலையோ ஆளும்  கட்சியின்  நடவடிக்கைகள்  பாதித்தால் தான் எதிர்கட்சிகள் இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும். இல்லை என்றால் சத்தமே வராது. அதைப்போல அவர்கள் தலைவர்களும்  சட்ட  மன்றத்திற்கு  வரமாட்டார்கள் (பெருமை குறைந்து விடும் என்பதால்). கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக எதிர்கட்சியாக  irunthu aakkapoorvamaaka என்ன செய்தது என்று நினைத்து பார்த்தால் எனக்கு ஒன்றும் ஞாபகத்திற்கு வரவில்லை. விஜயகாந்த், ஜெ ஜெ  வோடு போட்டி போட்டு கொண்டு அந்த கடை பக்கமே (சட்டமன்றம் தான் ) போவதில்லை. இந்த மோசமான காலகட்டத்தில் உண்மையான எதிர்கட்சியாக seyal பட்டது பாமக மட்டும் தான். அதிலும் மக்கள் எதிர்பார்க்கும் அந்த "நல்ல  எதிர்கட்சி" யாக செயல்பட்டது. வெறுமனே thottaதற்கெல்லாம் வெளிநடப்பு செய்யும் எதிர்கட்சியைதான் நமக்கு தெரியும். இவ்வளவு தைரியமாக மக்கள் பிரச்சனைகளை பேசும் கட்சியை நான் இப்போதுதான் பார்க்கிறேன் . பாமக இதுவரை  எழுப்பிய பிரச்சினைகள் அத்தனையும் முத்தானவை , மணியானவை.

ரயில்வே: ஆண்டாண்டு காலமாய் பார்லிமென்ட் election என்றால் மக்களுக்கு  வெறும் பொழுது போக்குதான். இதை ஒரு முக்கியமான் விஷயமாக மக்களும் பார்த்ததில்லை. கழகங்களும் பார்த்ததில்லை (மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் கழகம்). அங்கே போய் யார்யாரோ மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார்கள் , அவர்கள் இதை செய்யவில்லை, அதை செய்யவில்லை என்று மக்கள் கேட்பதும் இல்லை. ஏன் என்றால் அவர்கள் எல்லாம் "சும்னாச்சிக்கும் " என்ற எண்ணம் தான் இருந்தது முன்பு. பாமக மத்திய ரயில்வே துறையில் பொறுப்பேற்றவுடன் தான் எனக்கு தெரிந்தது மத்திய அமைச்சர் இவ்வளவு செய்ய முடியும் என்பது (பெரும்பாலான மக்கள் அப்படிதான், இதற்கு முன் இப்படி எல்லாம் மத்திய அமைச்சரை சத்தியமாக மக்கள் பார்த்ததில்லை). அப்போது எல்லாம் நான் குஜராத்தில் இருந்தேன். டிக்கெட் reserve செய்ய வேண்டுமென்றால் வெகு தூரம் உள்ள பெரிய நகரத்திற்கு போகவேண்டும். இப்போது என் குட்டி கிராமத்திலேயே இருக்கிறது reservation facility .மீட்டர் கேஜ் போய் பிராட்  கேஜ்  வந்து விட்டது (மீட்டர் கேஜ்  யில் பயணம் செய்வது மஹா கொடுமை) .. இதற்காக பாமக விற்கு நன்றி! நன்றி !

இன்னும் நிறைய சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அது நீண்டு கொண்டே போகும்.

இப்போது கிரிக்கெட் பற்றி சொல்லி என் நெஞ்சில் பால் வார்த்தார் மருத்துவர். சிறுவயது  முதலே கிரிக்கெட் மட்டுமே ஆடுவது தவறு . குழந்தைகளுக்கு கிரிக்கெட்டால் ஒரு நல்ல physical structure கிடைக்காது.ஆரம்பத்தில்  football , hockey ஆடலாம், கிரிகெட்டை பார்ட் டைம் ஆக ஆடலாம்..ஆனால் இப்போது எல்லோரும் கிரிக்கெட் மட்டுமே ஆடுகிறார்கள். கிரிக்கெட் விளையாட்டு ஒரு கிரிக்கெட் player யை தவிர வேறொன்றையும்   உருவாக்காது. ஆனால் football , hockey , கபடி போன்றவை பல thadakala  வீரர்களை உருவாக்கும் தன்மை கொண்டவை. காரணம் சிறுவயது முதலே football , hockey விளையாடுவதால் ஒரு நல்ல உடலமைப்பு , Balanced Body Structure எல்லாம் கிடைக்கும். எந்த விளையாட்டு வீரரை உருவாக்குவதற்கும் இந்த உடலமைப்பு வெகு முக்கியம். எனக்கு கிரிக்கெட் மீது கோவம் இல்லை. ஆனால், அதனால் பெரும் நன்மை ஏதும் இல்லை. FIFA வேர்ல்ட் கப் யிற்கு qualify ஆவதை விட கிரிக்கெட்டில் world cup   ஜெயிப்பது ஓன்று மேலானது இல்லை.

இப்போது கிரிக்கெட் என்றொரு அரக்கன் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார் அய்யா..சந்தோசமாக இருக்கிறது. அப்படியே ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு sythetic track உள்ள athletics கிரௌண்ட் வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு 10 இடத்தில் ஆவது sythetic turf உள்ள ஹாக்கி கிரௌண்ட் வேண்டும். PET வாத்தியார்கள் ஒன்றும் சிறப்பாக செயல்படுவதில்லை. குடிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரம் வேலை , அதை கூட ஒழுங்காக செய்வதில்லை. ஏதேனும் ஏழை மாணவர்கள் கிடைத்தால் கேட்க நாதி இல்லை என்பதால் ஏதோ அவர்கள் தேவைக்கு district event வரை பயன்படுத்தி விட்டு தூக்கி எரிந்துவிடுகின்றனர். படிப்பும் போய், விளையாட்டிலும் ஒன்றும் பெரிய அளவில் இல்லாமல் வாழ்கையை தொலைத்து நிற்கின்றனர் பல ஏழை மாணவர்கள். இந்தியா அளவில்(school meet ) triple jump யில் தங்கம் வென்ற மாணவர் இன்று EB போஸ்ட் ஏறும் வேலைக்கு சென்றதுதான் நான் கண்ட சாதனை ..அய்யா இதில் கவனம் செலுத்துவாரா?

மொத்தத்தில் எனக்கு பாமகவை மிகவும் பிடிக்கும். பாமகவின் ஆணிவேராக இருப்பவர்   மருத்துவர்,  பல்வேறு சமூக நற்பணிகளை செய்திட இவரது  கூட்டணி கொள்கையும்  பயன்பட்டது. வெறும்  வன்னியர் சங்கமாக இருந்திருந்தால், பெரிய ரௌடிகளையும்  , கட்ட பஞ்சாயத்து  seipavarkalaiyum,  saathi kalavarathirkkaaka kaathu kitappavarkalaiyum thaan வன்னியர் சங்கம்  undaakki  irukka  mudiyum. vada  tamilnaadu  muzhuvathum  "thalith - வன்னியர் " saathi  sandaikal thaan intru pirapalamaaka irunthirukkum (then thamizhnaadu mukkulathor oru thalavarin keezh illaathathaal thanippatta manithanin pirachinaikal ellaam saathi kalavaramaaka maarukirathu enpathai inke karuththil kolla vendum). aanal ivai ethuvum nadaiperaamal thaduththathu paamaka entra katchiyin thotram. athaivida sirappu paamaka thamizhaka makkalin pirachinaiyai kaiyil eduththu peedu nadai poduvathu..

vaazhka paamaka! valarka maruththuvar samukapani!
 
நன்றி..kkrn

Sunday, April 17, 2011

மருத்துவர் ராமதாசுக்கு ஒரு திறந்த மடல்! – தமிழருவி மணியன்

 


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்.

ஒவ்வொரு தேர்தலின்போதும் எந்த அணியில் நீங்கள் இருப்பீர்கள் என்று இறுதி நேரம்வரை அரசியல் கட்சித் தலைவர்களையும், வாக்காளர்களையும் ஒரு தெளிந்த முடிவுக்கு வர முடியாமல் திகைப்படையச் செய்வதில், உங்களுக்கு இணை சொல்ல இன்னொ​ருவர் இல்லை!

நீங்கள் அணி மாறுவது குறித்தும் அஞ்சுவது இல்லை; மாறிய பின், முன்பு புகழ்ந்தவர்கள் மீது கடும் விமர்சனக் கணைகளை வீசவும் தயங்குவதும் இல்லை. உங்கள் ஆளுகையில் இருக்கும் வாக்கு வங்கிக்​காக அவர்களும் நீங்கள் எவ்வளவு வசைமாரிப் பொழிந்​தாலும் பொருட்படுத்துவதே இல்லை. ‘அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர​மாகத் தன்னலம் மட்டுமே உண்டு’ என்ற வாசகத்தை உங்களைப்​போல் வேத மந்திரமாக ஏற்றுக்கொண்டு, செயல்​படுத்துபவர் வேறு ஒருவரும் இல்லை.

கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் உரிய பங்கினை வன்னியர்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், சிதறிக்கிடந்த சமுதாய மக்களைச் சலிப்பின்றி சந்தித்து… அவர்களை வலிமைமிக்க ஓர் இயக்கமாக வளர்த்தெடுத்தவர் நீங்கள். காங்கிரஸிலும், தி.மு.க-விலும் வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்​படுத்தப்பட்டவர்களை, உங்கள் தலைமையின் கீழ் ஒன்றிணைத்து, உரிமைக்குப் போராடும் உணர்வை ஊட்டியவர் நீங்கள். உங்கள் வருகையால் பெரிதும் பாதிக்கப்பட்டது தி.மு.க. மாநிலத்தில் 20 விழுக்காடும், மத்தியில் 2 விழுக்காடும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று 1987-ல் உண்ணாவிரதம், ரயில் மறியல், ஒரு நாள் சாலை மறியல் என்று போராடிப் பார்த்தும் பலன் இல்லாததால், ஏழு நாட்கள் தொடர் சாலை மறியல் நடத்தி, எந்த வாகனமும் சென்னைக்கு வரவியலாத சூழலை உருவாக்கி… துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரைப் பறிகொடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உங்கள் இன மக்களைச் சேர்த்த பின்பு உங்கள் வன்னியர் சங்கம், பாட்​டாளி மக்கள் கட்சியாய் 1989-ல் வடிவெடுத்தது.

ஒடுக்கப்பட்டவர்களுக்குச் சம வாய்ப்பு கிடைப்பதுதான் சமூக நீதி. அதற்காக, நம் தமிழினம் சாதிரீதியாகப் பிரிந்து நிற்பது சரியா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். ‘வன்னியர் சங்கம்’ என்று எம் தமிழரில் ஒரு பகுதி மக்களைத் தனித்துக் குறிப்பிடுவதுகூட மிகப் பெரும் தவறு என்று உணர்கிறேன். நீங்களும் அப்படி உணர்ந்துதான், பா.ம.க. அமைப்பைக் கட்ட முனைந்தீர்கள் என்று நம்புகிறேன். பா.ம.க-வின் சட்ட திட்டங்​களிலும், கொள்கைகளிலும் ஓர் இடத்தில்கூட வன்னிய சமூகத்தின் பெயரோ, வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை. தலித்கள், முஸ்லிம்கள், பிற்பட்ட பிற இனத்தவர் பா.ம.க-வின் நிர்வாகிகளாகவும் நியமிக்கப்பட்டனர். உங்கள் கட்சிக் கொடியில் இடம் பெற்றிருக்கும் நீல நிறம் தலித் சமுதாயத்தையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், சிவப்பு வண்ணம் கம்யூனிஸத்தையும் குறிப்பவை என்று நீங்கள் விளக்கினீர்கள். கம்யூனிஸம், சோஷலிஸம், பெரியாரிஸத்தின் பல கொள்கைகளும், அண்ணல் அம்பேத்கரின் லட்சியங்களும் கலந்த கலவைதான் பா.ம.க. என்று தமிழரிடையே தெளிவுபடுத்தினீர்கள்.
நீங்கள் முன்வைத்த முழக்கங்கள் எல்லாம் சமூக நலன் சார்ந்தவை. ‘தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு, தமிழினம் வீழ்ந்தால் முட்டுக்கொடு’ என்றும், ‘மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்’ என்றும், ‘புகையிலை ஒழிப்போம், புற்று நோய் தடுப்போம்’ என்றும், ‘வரதட்​சணை ஒழிப்போம், பெண்ணுரிமை காப்போம்’ என்றும் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத பரப்புரையை நீங்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவருகிறீர்கள். கட்டுப்பாடற்ற ஊடகங்கள் பெருகி வரும் நிலையில், குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து பார்க்கும் வகையில் தொலைந்துபோன நம் தொன்மையான கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளை மீட்டெடுக்கும் முயற்சியில், சமரசம் இல்லாமல் பீடுநடை போடும் ஒரே தொலைக்காட்சி உங்கள் ‘மக்கள் தொலைக்காட்சி’ என்று மலை உச்சியில் நின்று நான் முழங்குவேன்.

தாய்மொழிக் கல்வி குறித்தும், சமச்சீர் கல்வி குறித்தும் தொடர்ந்து ஆரோக்கியமான ஆலோசனைகளை நீங்கள் வழங்கி வருவது, பாராட்டுக்கு உரியது. வட மாவட்டங்களில் தலித்களும், வன்னியர்​களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் மெச்சத்​தக்கவை. இவ்வளவு பெருமைக்குரிய பணிகளில் ஈடுபட்ட நீங்கள், சந்தர்ப்பவாத சாகசத்தின் சிகரம் தொட்டதில்தான் சரிந்து​விட்டீர்கள். எந்த சிகரத்தில் ஏறி நின்றாலும், பக்கத்தில் செங்குத்துச் சரிவைத்தான் பார்க்க முடியும்.

வன்னியர் சங்கத்தை அரசியல் அமைப்பாக்கிய பின்பு, மக்களிடம் சில வாக்குறுதிகளை நீங்கள் வழங்கியது, உங்கள் நினைவுகளில் மெல்லிய ஞாபக மின்னல்களாய் இப்போதும் கண்சிமிட்டக் கூடும்… இல்லையா? ‘அதிகாரம் சார்ந்த எந்தப் பதவியிலும் நான் என்றும் அமர மாட்டேன். என் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரையும் அரசியல் வாரி​சாக வளர்க்க மாட்டேன். பொதுவாழ்வில் ஒரு செப்புக் காசையும் சேர்க்க மாட்டேன்’ என்றீர்கள். ‘இன்னொரு பெரியார் உருவாகிறார்’ என்று பலர் வியப்புடன் உங்களைப் பார்க்கத் தலைப்பட்டனர். ஆனால், அன்புமணிக்கு மீண்டும் மாநிலங்களவையில் இடம் கிடைப்​பதற்காக நீங்கள் அணி மாறியதும், கலைஞருக்குக் கடிதம் தீட்டியதும், மகனை மீண்டும் மத்திய அமைச்சராக்கி அழகு பார்க்க நீங்கள் தவிப்பதும், துடிப்பதும், உங்கள் சித்திரத்தைச் சிதைத்துவிட்டது. தைலாபுரம் தோட்டமும், தற்போது உங்களுக்கு வாய்த்திருக்கும் செல்வ வளமும் நீங்கள் ஒரு வித்தியாசமான அரசியல் வேள்விக்காரர் என்று மக்களை நம்பத் தூண்டவில்லை.
நீங்கள் ஆரம்பத்தில் லட்சியப் பதாகையுடன்தான் தேர்தல் களத்தில் தனித்து நின்றீர்கள். 1989-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 32 தொகுதிகளில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினாலும், 15 லட்சம் வாக்குகளுக்கு மேல் உங்கள் கட்சி பெற்றது ஒரு சாதனை! 1991 சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி ராமச்சந்திரன் மட்டும் உங்கள் கட்சியின் சார்பில் வெற்றி பெற்றுப் பேரவைக்குள் நுழைந்தார். உங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேற்றுமை உருவானதும், அவரும் நெல்லிக்குப்பம் வி.கிருஷ்ணமூர்த்தியும் கட்சியைக் கைப்பற்ற 5.12.93 அன்று பண்ருட்டியில் சிறப்புப் பொதுக் குழுவைக் கூட்டி, நீங்கள் நியமித்த தலைவர் தீரனையும் பொதுச் செயலாளர் தலித் எழில்மலையையும் நீக்கினர். ஆனால், நீங்கள்தான் கட்சி என்பதை நிரூபித்தீர்கள். 1996-ல் சட்டமன்றத்தில் உங்கள் கட்சியின் எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
இன்று விஜயகாந்த்துக்கு வந்து சேர்ந்த கூட்டணி ஞானம், உங்களுக்கு 1998 தேர்தலில் வந்து சேர்ந்தது. அரசியல் சதுரங்கத்தில் கூட்டணி போட்டுக் காய்களை வெட்டும் கலை உங்கள் கைவசமானது. அன்று முதல் இன்று வரை நீங்கள் ஆடும் அரசியல் ஆட்டம், திடீர்த் திருப்பங்கள் கொண்ட திரைப்படங்களைவிட, பார்வையாளர்களின் கூடுதல் கவனத்தைக் கவர்ந்துவிட்டது!

அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் அணி மாறுவது இயல்புதான். ஆனால், அணி மாறுவதையே ஓர் அரசியல் சாகசமாக்கியவர் நீங்​கள் ஒருவர்தான்! 1998-ல் அ.தி.மு.க. அணி. 99-ல் தி.மு.க. அணி. 2001-ல் அ.தி.மு.க. அணி. 2004-ல் தி.மு.க. அணி. அடிக்கடி அணி மாறியதில் உங்களுக்கே சலிப்பு வந்துவிட்டது போலும். 2006-ல் தி.மு.க. அணியிலேயே நின்றுவிட்டீர்கள். ஒரே இடத்தில் இருப்பது உங்கள் இயல்புக்கு விரோதம் என்று நீங்கள் உணர்ந்ததும், 2009-ல் அ.தி.மு.க. அணிக்கு மாறினீர்கள். உங்கள் இலக்கணப்படி 2011-ல் திரும்பவும் தி.மு.க. அணிக்குத் திரும்பிவிட்டீர்கள். தேசிய அளவில் பி.ஜேபி. கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் அடுத்தடுத்து இடம் பிடித்து, மத்திய அமைச்சரவையில் 10 ஆண்டுகள் தலித் எழில்மலை முதல் மகன் அன்புமணி வரை அமைச்சர்களாக நீடித்து, அடையவேண்டிய ஆதாயங்களையும் அடைந்துவிட்டீர்கள். ஆனால், ஒரு நல்ல செய்தி, நீங்கள் ரயில்வே துறையில் அமைச்சர்களாக்கிய ஏ.கே.மூர்த்தியும், வேலுவும் தமிழகம் பயன் பெறுகிறாற்போல் தங்கள் பதவியைப் பயன்​படுத்தினார்கள். உங்கள் மகன் அன்புமணி புகையிலைப் பயன்பாட்டுக்கு எதிரான நடவடிக்கை, உயிர் காக்கும் மருந்துகளின் விலைக் குறைப்பு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னேற்றம், உயர் கல்வி நிலையங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.எஸ்., ஏ.ஐ.எம்.எஸ். ஆகியவற்றில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு, உயிர்காக்கும் ’108’ ஆம்புலன்ஸ் என்று நேர்த்தியான நிர்வாகத் திறனோடு மிக இளம் வயது அமைச்சராய் சாதனைகளை நிகழ்த்தினார். ஆனால், ‘சாதனைகள்’ அவற்​றோடு மட்டும் நின்றுவிடவில்லை என்று கேள்வி!
பழையனவெல்லாம் போகட்டும், உங்கள் நிகழ்கால நடவடிக்கைகளுக்கு வருவோம். கலைஞரோடு கூட்டணி அமைந்து, உங்க​ளுக்கு 31 தொகுதிகள் கிடைத்ததும் கோபாலபுர வாசலில் நின்றபடி ‘இது வெற்றிக் கூட்டணி’ என்று வாய் மலர்ந்தீர்கள். 2009 – நாடாளுமன்றத் தேர்தலின்போது போயஸ் தோட்டத்தில் ‘அன்புச் சகோதரி’யை சந்தித்துவிட்டு, ‘இது வெற்றிக் கூட்டணி’ என்று நீங்கள் ஆரூடம் கணித்தீர்களே… அதுதான் பொய்த்துப்போனது. ஓ… இதுவும் பொய்த்துப் போகுமோ?
தைலாபுரம் தோட்டத்தில் கூடிய பா.ம.க. பொதுக் குழு, ‘கலைஞரை ஆறாவது முறை முதல்வராக்க உறுதிபூண்டு இருப்​பதாக’வும், ‘கலைஞர் ஆட்சிக்கு 5 ஆண்டு​கள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்​போவ​தாக’வும், ‘யார் முதல்வராக வேண்டும் என்பதுதான் முக்கியம்’ என்றும் தீர்மானம் தீட்டியிருக்கிறது.

2006-ல் ஐந்தாவது முறை ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஏழை – அடித்தள மக்க​ளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஏராள​மான வளர்ச்சித் திட்டங்களை நடை​முறைப்​படுத்தியதாகவும் பொதுக் குழு பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறது. எனக்கு ஓர் ஐயம்… தி.மு.க-வுடன் இருந்த உறவை 2008-ல் முறித்துக்கொண்டு அன்புச் சகோதரியுடன் ஐக்கியமானபோது, ‘கலைஞர் அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் தங்களால் தர முடியும்?’ என்ற கேள்விக்கு ‘பூஜ்யம்’ மதிப்பெண் போட்டீர்களே… அன்று சொன்​னது உண்மை இல்லையா? வெறுப்பிலும் விரக்தியிலும் வெளிப்படுத்திய மதிப்பீடா? இன்று மட்டும் நீங்கள் உண்மை சொல்வதாக நாங்கள் எப்படி நம்ப முடியும்?

‘லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றிபெறும். தேர்தல் முடிந்​ததும் தமிழக அரசியலிலும், தி.மு.க. ஆட்சி​யிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்’ (27.04.09) என்றீர்கள். நீங்கள் இடம் மாறப்​போவதைத்தான் சூசகமாக அப்படிச் சொன்​னீர்களோ!

‘டாஸ்மாக் நிறுவனம் 12,300 கோடி லாபத்தில் இயங்குவதாக தி.மு.க. அரசு சொல்கிறது. அது ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம்’ (9.1.11) என்று உண்மை உரைத்தீர்கள். இரண்டு முறை பல அமைப்புகளுடன் சென்று கலைஞரிடம் மதுவிலக்கு வேண்டி கோரிக்கை வைத்தீர்​கள். படிப்படியாக மதுக் கடைகளை மூடுவதாக முதல்வர் அறிவித்தார். நீங்கள் சந்தித்துவிட்டு வந்த பின்புதான் ஆறு புதிய சாராய ஆலைகளுக்கு நம் முதல்வர் அனுமதி வழங்கினார்! ஆனால், ‘மதுவை ஒழிப்போம்; மக்களைக் காப்போம்’ என்று முழங்கும் நீங்கள், கலைஞரை முதல்வராக்க முடிவெடுத்துவிட்டீர்கள். நன்றாகத்​தான் அரசியல் நடத்துகிறீர்கள், ஐயா மருத்துவரே!

பென்னாகரம் இடைத்தேர்தலில் வன்னியர் சக்தியை ஒன்றுதிரட்டி 41 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் நீங்கள் பெற்றது, பெரிய சாதனை. தி.மு.க. வெற்றியைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘பணநாயகம் வெற்றி பெற்று ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டது. தேர்தலை வணிகச் சந்தை​யாக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணரவேண்டும்…’ என்று அழகாகச் சொன்னீர்கள்.
ஆங்கிலப் படைப்புலக மேதை கோல்ட் ஸ்மித் பற்றி ஒரு விமர்சகன், ‘இவன் தேவனைப்போல் எழுதுகிறான். ஆனால், சாத்தானைப்போல் பேசுகிறான்’ என்று குறிப்பிட்டான். அது ஏனோ இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது.

உங்கள் மகன் அன்புமணி விழுப்புரத்தில் நடந்த மாவட்டப் பொதுக் குழுவில், ‘பென்னாகரம் ஃபார்முலாவைப்போல் இனி விஞ்ஞானபூர்வமாக அரசியல் பணி ஆற்றுவோம்’ என்று அறிவித்திருக்கிறார். திருமங்கலம் ஃபார்முலா என்பது பணப் பட்டுவாடா! பென்னாகரம் ஃபார்முலா என்பது சாதிக் கட்டுப்பாடா? எங்கே போகிறது தமிழகம், மருத்துவரே?

வன்னியத் தமிழர்கள் 50 தொகுதிகளுக்கு மேற்பட்ட இடங்களில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். அவர்களை அசைக்கமுடியாத அரசியல் சக்தியாக மாற்றியவர் நீங்கள்தான். ஒரு கோடிக்கு மேற்பட்ட வன்னியர்கள் இருப்பதாக அடிக்கடி ஆதாரம் தருகிறீர்கள். ஆனால், 1989 தேர்தலில் 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளைப் பெற்ற உங்கள் பா.ம.க. 2006 சட்டமன்றத் தேர்தலில் 18 லட்சத்து ஆயிரத்து 749 வாக்குகளைப் பெற்றது. அப்படியானால், பெரும்பான்மை வன்னியர்கள் வாக்கு முற்றாக உங்களிடம் இன்னும் வந்து சேரவில்லை. அவர்களது நம்பிக்கையைப் பூரணமாகப் பெறுவதற்குத்தான் சகலரும் சங்கமிக்கும் பா.ம.க-வை நீங்கள் மீண்டும் வன்னியர் சங்கமாகவே சுருக்கிவிட்டீர்கள். ஒரு பக்கம் பெரியாராகவும், மறுபக்கம் கார்ல்மார்க்ஸாகவும், இன்னொரு பக்கம் அம்பேத்கராகவும் தன்னைக் காட்ட முயன்று, அது முடியாமற்போய் மருத்துவர் ராமதாஸாகவே நீங்கள் நின்றுவிட்டீர்கள்.
இதை எல்லாம் சொல்வதால் என் மீது கோபம் வரலாம். அம்மாவுக்கு நான் ஆள் பிடிப்பவனும் இல்லை. ஐயாவுக்கு வால் பிடிப்பவனும் இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, வலிமை மிக்க மூன்றாவது அணி வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
அதற்காகவே, 1969 முதல் 1998 வரை என் இளமை முழுவதையும் இந்திராகாந்தியின் குடும்ப அரசியலை எதிர்ப்பதிலேயே நான் செலவழித்தேன். நேர்மை சார்ந்த அரசியலைத் தவிர வேறு எந்த நாட்டமும் என்றும் எனக்குள் இருந்தது இல்லை. பெரிய அரசியல் மாற்றத்தை ஒட்டுமொத்த தமிழ் சாதிக்கும் கொண்டுவருவீர்கள் என்று நம்பியது பிழையாய்ப் போனது. நீங்களும் குடும்ப அரசியலும், சாதிக் கண்ணோட்டமும்கொண்டவராய் குறுகிப்போனது வருத்தம் தருகிறது.
‘பொய் சொல்லவும், ஏமாற்றவும், திருடவும் உனக்குத் தெரியவில்லை என்றால், அவற்றைக் கற்க உன் பார்வையை அரசியல் பக்கம் திருப்பு’ என்றார் அறிஞர் பில்லிங். தமிழகத்தில் இன்று அதுதான் நடந்துகொண்டு இருக்கிறதோ..?

இப்படிக்கு,
தமிழினம் முழுமைக்கும் நீங்கள் தலை​வராக முயல வேண்டும் என்று விரும்பும்,
தமிழருவி மணியன்

நன்றி: ஜூனியர் விகடன்

Friday, April 8, 2011

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு..திரு.இராமதாசு முன்னிலையில் கலைஞர் கருணாநிதி அறிவிப்பு..

 
 
 
திண்டிவனத்தில் நடைபெற்ற தேர்தல் பொது கூட்டத்தில்  திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுமென திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி அறிவிப்பு வெளியிட்டார்.
  
 ÷விழுப்புரம் திமுக மாவட்ட செயலர் க.பொன்முடி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாமக சார்பில் திண்டிவனம்,மயிலம்,செஞ்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மொ.ப .சஙகர், ரா.பிரகாஷ்,அ.கணேஷ்குமார் ஆகியோரை ஆதரித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
 
 பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் ஆதிக்க சக்திகளை வீழ்த்தக் கூடிய வல்லமை வாய்ந்த சக்திகளாகும். அம்பேத்கருக்கும், எனக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் அவரை மும்பையில் அண்ணா சந்தித்தது பற்றி என்னிடம் கூறியுள்ளார். அதிலிருந்து அம்பேத்கர் மீது எனக்கு தனி மரியாதை.
 
 வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 20 பேரின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் கருணைத் தொகையை வழங்கி வருகிறேன். ராமதாஸின் இடஒதுக்கிடு கோரிக்கையை நான் கைவிட மாட்டேன் என்றார்.

Thursday, April 7, 2011

திமுக கூட்டணி ஏன் வெற்றி பெற கூடாது....


தமிழகத்தில் ஏதோ பாசிச ஆட்சி நடப்பதால் , தமிழகத்தை காப்பாத்த போறதா சொல்லி  ஜெயலலிதா ஓட்டு கேட்குறார். தமிழகத்துக்கு விடுதலை வாங்கி தர குடிகார கேப்டன் ஊரு ஊரா போயி பொலம்புறாரு அ தி மு க மகா சக்தி கூட்டணிங்கிறாரு தா பாண்டியன். இதுக்கெல்லாம் ஒரு படி மேலே போயி நம்ம ஜிலேபி புகழ் சந்திரபாபு நாயிடு வாங்கின பேட்டாவுக்கு வேலை செய்யணுமேன்னு தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்குதுன்னு வேற சொல்லுறாரு. ஊழல் கூட்டணியை ஒழித்து கட்டுங்கள்னு ஜெய்லலிதா கூட கூட்டணி வச்சிட்டு  பிரகாஷ் காரத் பிரச்சாரம் பண்ணுறாரு இப்புடி எல்லோரும் கலைஞரை  போட்டு தாக்கி பிரச்சாரம் செய்து வரும் வேளையில்..
 
திமுக கூடடணியில் உள்ள பாமக தமிழக நலனுக்காக, மண்ணின் நலனுக்காக போரடிவரும் பசுமைத்தாயகம் என்ற அமைப்பை ஐ.ந அவையில் அங்கிகரிக்கபட்ட அமைப்பாக சிறப்பாக நடத்தி வருகிறது
 
கொள்கை அளவில் பாமகவில் என்று தனி வட்டமே போட்டு செயல்பட்டு வருகிறது

கலைஞர் ஒன்றும் நல்லவரும் அல்ல முற்றும் துறந்த முனிவரும் அல்ல..தெய்வ திருமகனும் அல்ல. இவங்க எல்லாம் இப்படி பேசுறதுக்கு தகுதி ஆனவங்க தானா என்று சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்..பாசிசம் அப்படின்னா என்ன அர்த்தமென்று தெரியுமா அந்த அம்மையாருக்கு ? பாசிசம் என்ற வார்த்தையை வைகோ தான் ஜெயலலிதாவிற்காக கண்டு பிடித்தார், இப்போது அதை அந்த அம்மாவே உபயோகபடுத்துறது தான் ஹைலைட்..

ஊழல் கூட்டணி ஊழல் கூட்டணி என்று தெருவுக்கு தெரு முழங்கும் பீச்சாங்கை சாரிகளே போன தேர்தலில் இதே முழக்கத்தை தானே முழங்கினீர்கள்.. இந்த ஐந்து வருடத்தில் அந்த அம்மா எந்த புண்ணிய நதியில் போயி மூழ்கி ஊழல் பாவங்களை கழுவி பரிசுத்தவதி ஆனார்.. ஆனா  ஒண்ணுங்க ஆனா உண்மையிலேயே இடது சாரிகள் மட்டும் தான்  தமது கொள்கைகளுக்காக (??) அடிக்கடி கூட்டணி தாவியிருக்காங்க..
 
எப்புடியாவது ஆளுங்கட்சியை தோற்க்கடிக்கணும்ணு எதிர்கட்சி கூட சேர்ந்து பிரச்சாரம் பண்ணுவாங்க, அதே கட்சி ஆளுங்கட்சி ஆகிட்ட திரும்பவும் யாரு எதிர்கட்சியே அவங்க கூட சேர்ந்து கவுக்குற வேலைய பாப்பாங்க..
 
ஆனா எல்லா தேர்தலிலும் அவங்க பண்ணுற ஊழலுக்கெதிரான பிரச்சாரம் மட்டும் மாறவே மாறாது. அவங்களுக்கு நாட்டை ஆளவும் தெரியாது, அடுத்தவங்கள ஆள விடவும் பிடிக்காது..

இப்போ எல்லாரும் முழங்குறது ஊழல் கூடி போச்சு, விலைவாசி ஏறி போச்சி, கரண்ட் கட் ஆகி போச்சி, கட்ட பஞ்சாயத்தும் ரவுடிசமும் கூடி போச்சி இத்யாதி இத்யாதி ஆயி போச்சி.. இதுக்கெல்லாம் தேவை அம்மா தலைமையிலான ஆட்சி..

இந்த எல்லா பிரச்சினைகளும் அம்மா வந்தால் சரி ஆகி விடுமா ? ஜெயலலிதா வந்தால் ஊழலை ஒழிக்க முடியுமா ?? அது அவ்வளவு சுலபமான விசயமா ? கலைஞர் ஆட்சியிலயாவது 100 ரூபாய் திட்டத்துக்கு 30 ரூபாய் அடிச்சுட்டு மீதி 70 ரூபாய்க்கு மக்களுக்கு ஏதாவது செய்வாங்க.. ஆனா அம்மா வந்தா எல்லாரும் சுரண்டிட்டு போக மீதி 30 ரூபாயாவது  மக்களுக்கு போயி சேருமாங்கிறதே சந்தேகம் தான்.

யாரு ஆண்டாலும் விலைவாசி என்பது இறங்குறதுக்கு வாய்ப்பே இல்லை. மீண்டும் அந்த காமராஜரே ஆட்சிக்கு வந்தாலும் கூட..

அப்புறம் அம்மா வந்தா மின்வெட்டு தீர்ந்துடுமாம்.. அம்மா எங்கேயிருந்து கரண்ட் எடுத்து கொடுக்க போறாங்கன்னு சொன்னா பரவாயில்லை.. கருணாநிதி 2006 ல் பொறுப்பேத்ததுலேயிருந்து  அ தி மு க ஆட்சியில மின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்கலைன்னு குத்தம் சொல்லிக்கிட்டு இருக்காரு.. ஏதோ அவங்க வந்து தான் புதிய மின் திட்டங்களை எல்லாம் உருவாக்க ஆரம்பிசிருக்கோம் , இன்னும் மூணு வருசத்துல தமிழகம் மின்சார தன்னிறவை  அடைஞ்சிடும்னு சொல்லுறத பாத்தா அம்மா ஆட்சிக்கு வந்தாலும் கொறஞ்சது மூன்று வருடங்களுக்கு அதே மின்வெட்டு நிலைமை தான்..

கட்டபஞ்சாயத்துக்களும் , ரவுடிசமும் பண்ணுற ஆளுங்க வேணும்னா மாறுவாங்களே தவிர இந்த ரெண்டையும் அறவே ஒழித்து விட கலைஞராலும் முடியாது, புரட்சி தலைவியாலும் முடியாது.. மன்னார்குடி வகையறாக்கள் போயஸ் கார்டனிலேயே இருந்து வேட்பாளர் பட்டியல் மாத்தினதையே அம்மாவால கண்டு பிடிக்க முடியலயாம்(உபயம்: தினமலர்) .. அப்படின்னா வெளியே நடக்குற கட்டப்பஞ்சாயத்துக்களை எப்படி ஒழிக்க முடியும்.

இலவசம் கொடுத்து கொடுத்து கலைஞர் தமிழகத்தை கடனில் மூழ்கடிக்கிறாருன்னு சொல்லி தான் அந்த அம்மா கடந்த அஞ்சு வருசமா கொட நாட்டுல இருந்து அரசியல் நடத்திச்சி..இப்போ அவங்களே ஒரு லட்டுக்கு பதிலா ரெண்டு லட்டு தின்ன ஆசையான்னு தேர்தல் அறிக்கை விட்டுருக்காங்க.. ஆகையால இந்த விசயத்துலேயும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல.

அப்புறம் இந்த ஈழ தமிழர்கள் விசயம்.. கலைஞர் ஈழத்தமிழருக்காக எதையும் செய்ய வில்லை தான் , ஆனா அது தான் உண்மை.. அவரல் ஒண்ணுமே செய்ய முடியாதுங்கிற விசயத்தை ஏற்கனவே ராமதாசும், வைகோவும் இன்ன பிற ஈழ ஆதரவு தலைவர்களும் ஓப்பன் ஸ்டேட்மன்டே விட்டுருக்காங்க.. ஒண்ணும் பண்ண முடியாதவர் எதுவுமே செய்ய்லைன்னு சொல்லுறது சரியில்லை.. ஈழத்தமிழர்களுக்காக தியாகம் பண்ணுறேன் பேர்வழின்னு  மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்காம வெளியே வந்தா அடுத்த நொடியே அம்மா மத்திய அரசுக்கு ஆதரவு கரம் நீட்டுவார்.. இதுனால அவரோட பதவி போறது மட்டும் தான் மிச்சம்.. ஆனா கலைஞர் ஈழத்தமிழர்களுக்காக ஒண்ணுமே செய்ய முடியலயேன்னு கண்டிப்பா ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருப்பார்.. ஆனா அந்த ஒரு சொட்டு கண்ணீர் கூட அம்மையார் சிந்தி இருக்க மாட்டார்.


இப்படி எந்த விசயத்தை எடுத்து பார்த்தாலும், கடைசியில்  எடுத்தேன் கவிழ்த்தேன்னு முடிவெடுக்காம பொறுப்பா நிதானமா முடிவு எடுப்பதாலும், எதிரியையும் மன்னிச்சு சரிக்கு சமமா உட்கார வச்சி பேசுறதினாலும், கூட்டணி கட்சியினரை மதிக்கிற தன்மையாலும் , ஏதோ ஒரு கட்சி கூட்டத்துல பேசினா ஒரு மாசம் சொகுசு பங்களாக்களில் ஓய்வெடுக்காமல், இந்த வயதிலும் (யாருக்காக உழைக்கிறாரோ அது வேற விசயம்) சுறுசுறுப்பா வேலை செய்யிறதினாலேயும், யாரும் எப்போதும் போயி அவரை சந்திக்கலாம்கிறதுனாலேயும், நான் , எனது ஆட்சி என்ற திமிர் இல்லாததுனாலும், கூட்டணி கட்சியினரை கேட்டுக்கு வெளியே நிக்க விடாமல் உட்கார வச்சி பேசுறதினாலும் கலைஞரே இந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார்.
 
ஏதோ சில நல்ல திட்டங்களான காப்பீட்டு திட்டம்,  மருத்துவர் அன்புமணி இராமதாசு அய்யாவால் உலகெங்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டம்  இதனால்  நகரவாசிகளை விட கிராமவாசிகள் மனதிலும் இடம் பிடிச்சிருக்கிறாரு.. அதுனால் மீண்டும் கலைஞர் ஆட்சி வந்தால் எதிர் கட்சிகள் கொக்கரிப்பது போல குடி ஒண்ணும் மூழ்கி போயிடாது...

நம்மக்கிட்டே சொந்தமா இருக்குற ரெண்டு சட்டையுமே அழுக்கா இருக்கும்போது , புதிய சட்டை வாங்க கடையும் பக்கத்துல இல்லைங்கிற நிலைமை வரும்போது எந்த சட்டை கொஞ்சமா அழுக்கா இருக்கோ அதை எடுத்து போடுறதுல ஒண்ணும் தப்பில்ல..

Tuesday, April 5, 2011

தேர்தல் களத்தில் சரியும் விஜயகாந்தின் அரசியல் பயணம்

குடிகார பைய விஜயகாந்த் உலறல் பேச்சால் அவருக்கு அவரே வைத்து கொள்ளும் ஆப்பு...

விக்கெட் # 1 : பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சனம் 
 
 
தமிழக கட்சிகளில் பாமக அபர வளர்ச்சி பெற்று வரும் நிலையில் பாமக வை எதிர்த்த அரசியல் கட்சிகள் பல இன்று அவர்களின் தொடர் போரட்டங்களால் இன்று அடையாளம் தெரியாத நாபர்களகவே வலம் வந்து கொண்டிருக்க இப்போது பாமகவை வம்புக்கு இழுத்துள்ள விஜயகாந்த் இன்னும் சில நாட்களில் அடையளாம் காணமல் போக போகிறார் என்பது உறுதி.. 
 
 
 
விக்கெட் # 2 : அண்ணாவின் ஆவி
பேரறிஞர் அண்ணா மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாக அண்ணா பெயர் கொண்ட அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளேன். அண்ணாவின் ஆவி கூறியதால்தான், அவர் பெயரிலான கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்துள்ளேன் என்றார் விஜயகாந்த்.
அண்ணாவின் ஆவி சொல்லிச்சு, அண்ணாவின் ஆயா சொல்லிச்சுன்னு எப்போ சொன்னாரோ அப்போதே ஒபனிங்க் விக்கெட் காலி.. ஆவியில இட்லி சுட்டு வியாபாரம் செஞ்சு பொழப்பு நடத்தும் முனியம்மாவையே நம்பலாம்.. ஆனா குடி போதையில ஆவிக்கிட்டே பேசிகிட்டு இருக்கும் மந்திரவாத சூனியக்காரர்களை எல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள், குறிப்பாக இஸ்லாமிய சமயத்தை சார்ந்தவர்கள் பெரும்பாலானோர் ஆவிகள் பேர் சொல்லி திரியும் பாவிகளை நம்புவதில்லை.
விக்கெட் # 3: வடிவேலு பிரச்சாரம்
எந்நேரமும் தண்ணியில மிதக்குறவன் பேரு இல்லை கேப்டன் என்பது போன்ற அரும்பெரும் கருத்துக்களை சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வடிவேலு செல்லுமிடமெல்லாம் ஏக ரெஸ்பான்ஸ் வாங்கி மக்களை சிந்திக்க வைத்திருக்கிறார் . இதனால் இவருடைய ரெண்டாவது விக்கெட் காலி.

வடிவேலுவின் கருத்துக்களுக்கெல்லாம் பதில் சொல்ல போவதில்லை என்று சொன்ன விஜயகாந்த் , வடிவேலுவை இப்படியே பந்து வீச விட்டால் எல்லாரையும் க்ளீன் போல்ட் ஆக்கி விடுவார் என்று பயந்து வடிவேலுவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது மட்டுமின்றி , வடிவேலு பந்தை மட்டுமே எதிர்கொள்ள சிங்கமுத்துவை பேடு கட்டி அனுப்பி இருக்கிறார்கள்.
விக்கெட் # 4: (வேட்பாளரை) ஹிட் விக்கெட்
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதை அந்த வேட்பாளர் திருத்தியதால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்து உதைத்தார்.
மக்களுக்கு சேவை (??) செய்வதர்காக பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் தன்னுடைய அடவடித்தனங்களையும், கை கால்களையும் குறைந்தது பொது இடங்களிலாவது அடக்கி வைக்க வேண்டும்.. அட நீங்க கதவை சாத்திகிட்டு பண்ருட்டிய எந்த மாதிரி திட்டினாலோ அல்லது மச்சான் சுதீஸை கட்டி வச்சி அடிச்சாலோ யாருக்கும் தெரியாது , யாரும் கேட்கவும் மாட்டார்கள்.. ஆனா பொது இடத்துல அதுவும் உங்க கட்சி வேட்பாளரையே கும்மு கும்முன்னு கும்முனா பொது ஜனத்துக்கு கண்டிப்பா உங்க மேல நல்ல ஒரு அபிப்ராயம் வராது..
விக்கெட் # 5: விருத்தாச்சலம் மக்கள்
நீங்க இந்த முறை விருத்தாச்சலத்தில் ஏன் போட்டி இடவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்க்கு அங்குள்ள மக்கள் சரி இல்லையென்று சொன்ன போது விழுந்தது நாலாவது விக்கெட்.
ஆட்டம் நடக்கும் போது பொதுவா பேட்ஸ்மேன் அவுட் ஆகுறதுக்கு ஏகப்பட்ட காரணம் இருக்கலாம் , ஆனா பார்வையாளார் (விருத்தாச்சலம் தொகுதி மக்கள்)  சரி இல்லைன்னு சொல்லுறது எல்லாம் ரொம்ப ஓவர். அதுபோல உங்களால் நிருபர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் ஒழுங்கா சிந்திச்சு பேச தெரியல!

விக்கெட் # 6: சக (அ.தி.மு.க) வீரர்களிடம் சண்டை!
கூட்டணி கட்சின்னு நெனச்சி அ.தி.மு.க தொண்டர்கள் நீங்க பிரச்சாரம் பண்ண வந்த போது ஏதோ அவங்களோட கட்சி கொடியையும் சேர்த்து கொண்டு வந்திருக்காங்க.. ஆனா நீங்க அ.தி.மு.க ர.ர.க்களிடம் கொடியை இறக்குங்க இறக்குங்கன்னு சத்தம் போட்டு கத்தி இருக்கீங்க அதுவும் மைக்குல.கூட்டணி கட்சிகாரன் எப்படி உங்களுக்கு பிரச்சாரம் பண்ணுவான்.. அதுனால கழண்டது விக்கெட் நம்பர் 5.
மக்களிடமும் தெய்வத்துடனும் தான் கூட்டணின்னு சொன்ன காலம் மலையேறி போயி , இப்போதைக்கு தனியா நின்னா ரெண்டு பேராலையும் போனியாக முடியாதுன்னு நெனச்சு தானே ரெண்டு பேரும் சேந்து மட்டைய எடுதுட்டு வந்தீங்க.. அதுனால ஓட்டு வாங்கணும்னா நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஓடுனா தானெய்யா ரன் கிடைக்கும்..நீங்க தனியா ஒரு பேட்டை மட்டும் வச்சிகிட்டு ஓடுனீங்கன்னா   எப்பிடி ரன்(ஓட்டு) கிடைக்கும், 

விக்கெட் # 7:  முன்னுக்கு பின் முரணாக பேசி செய்யும் பிரச்சாரம்
பிரச்சாரம் செய்ய போகும் போது வாயில் வந்ததை எல்லாம் உளற கூடாது.. அப்படி தான் மகாபாரதத்துல ஒரு கதைன்னு ஆரம்பிச்சி , கதை என்னான்னு கூட தெரியாம உதவியாளர் கிட்டே புக்கை எடுத்து கேட்டு விட்டு ,, அந்த புக்கை ரெண்டு தடவை புரட்டி விட்டு அடுத்த பேச்சு பேச உங்க பாட்டுக்கு போயிட்டீங்க..மக்கள் அந்த கதை என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு மண்டைய ஒடச்சதுதான் மிச்சம்.. உங்களுக்கே நல்ல தெரியும் உங்க பொது அறிவு கொஞ்சம் இல்ல ரொம்பவே வீக்குன்னு.. நீங்க பேசுறது உங்க்ளுக்கும் புரியல அதை கேக்குறவனுக்கும் புரியல.. விக்கெட் நம்பர் 6 காலி.

விக்கெட் # 8:  ஆப்பு வைக்க ஆப்பு அடிக்கனுமாம்..

எதிர் கட்சிகளை ஒழிக்க ஆப்பு அடிச்சதான்  அவங்களுக்கு ஆப்பு வைக்க முடியும்ன்னு அவர் வாயலேயே அவர் குடிகாரதை ஒத்துகனது அப்புறம்  இன்னொரு விக்கட்டும் விழுந்திருச்சி

விஜயகாந்தின் கமெடி தொடரும்..............

அரசியலில் ஈடுபடுங்கள்! -



                  லகின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பு கொண்ட இந்தியாவின் அரசியல் வடிவம் என்பது முன்னேறிய நாடுகளான இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவற்றின் அரசியல் கொள்கைகளின் கலவையாக இருக்கிறது. அரசியலில் ஈடுபடுபவர்களின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் உத்தரவாதமளிக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பலகட்சி உறுப்பினர்களை அங்கமாக கொண்ட பாராளுமன்ற ஆட்சி வடிவம் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கும், நிர்வாகத்துக்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறது. மாநிலங்களில் சட்டமன்றம் - நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் என்று மக்களை ஆளும் அமைப்புகள் அனைத்துமே பாராளுமன்ற வடிவத்திலேயே இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. 60 ஆண்டுகால இந்திய குடியரசு வரலாற்றில் ‘எமர்ஜென்ஸி’ காலம் தவிர்த்து, வேறெப்போதும் இவ்வமைப்புகள் முடக்கப்பட்டதேயில்லை என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரும் சாதனை.

இப்படிப்பட்ட தலைசிறந்த மக்களாட்சி அமைப்புமுறையில், அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு என்னவகையிலான சுதந்திரம் இருக்கிறது? இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், இந்தியராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தகுதியான வயது வந்ததும் ஓட்டுரிமை வழங்குகிறது. ஓட்டு போடுகிற உரிமை இருக்கிற ஒவ்வொருவரும் அரசியலில் ஈடுபடுகிற அந்தஸ்து பெற்றவர்களாகிறார்கள்.

தனிப்பட்ட முறையில் தங்களுக்கு உடன்பாடான கொள்கைகளை கொண்ட கட்சியில் சேர்ந்தோ, அல்லது சுயேச்சையாகவோ தேர்தல்களில் பங்கேற்கலாம். அரசியலில் பங்கேற்க சாதி, மதம், இனம், மொழி, நிறம், ஆண் பெண் பேதம் எதுவும் தடையில்லை என்று அரசியல் அமைப்புச் சட்டம் சுதந்திரமளிக்கிறது.

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் இந்தச் சுதந்திரத்தை உண்மையிலேயே அரசியலில் ஈடுபட நினைக்கும் எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறதா என்பதுதான் கேள்விக்குறி. ஏனெனில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தில் இந்தியா இருக்கிறது. கட்சி சார்பற்றவர்கள் தேர்தலில் நின்று, வெற்றிபெற்று மக்களுக்கு சேவையாற்ற முடியுமென்ற நம்பிக்கை கடந்த அறுபதாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவருகிறது. சுயேச்சையாக ஒருவர் வெற்றிபெற வேண்டு மானால், அவர் அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்த செல்வந்தராகவே இருந்தாக வேண்டும் என்பதுதான் யதார்த்தம்.

தேர்தலில் நின்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பில்லாத பெரிய தொழில் அதிபர்கள் பலரும், அறிஞர் அவை என்று சொல்லப்படுகிற ராஜ்யசபாவுக்கும், சட்டமன்ற மேலவைகளுக்கும் ‘எப்படியோ’ தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை அடிக்கடி செய்தித்தாள்களில் நாம் வாசிக்க நேர்கிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் ஒவ்வொரு குடிமகனுக்கும் தரும் அரசியல் சுதந்திரம் என்பது ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அரசியலில் ஈடுபட்டு கவுன்சிலர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதல்வர், பிரதமர், குடியரசுத்தலைவர் என்று ஒரு எளியக்குடிமகன் உயரமுடியுமாவென்றால், முடியுமென்று சொல்கிறது அரசியல் சட்டம். முடியாது என்கிறது இந்தியாவின் தற்கால நிலவரம்.

இதற்கு யாரை குற்றம் சொல்வது? அரசியல் கட்சிகளையா, அரசியல்வாதிகளையா? அரசியல்வாதிகளுக்கு ஓட்டுபோட்டு, அரசியல் கட்சிகளை ஆட்சிப்பீடத்தில் ஏற்றும் வாக்காளர்களைதான் நாம் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும். ஏனென்றால் நம்மை ஆளுபவர்களை நாம் தான் தேர்ந்தெடுக்கிறோம். தேர்ந்தெடுத்துவிட்டு லஞ்ச லாவண்யம், ஊழல், அராஜகம், நிர்வாகக்குளறுபடி என்று அடுத்த ஐந்தாண்டுகளுக்கு புலம்பிக் கொண்டிருக்கிறோம். வேறு ஒரு கட்சியை அடுத்த தேர்தலுக்கு தேர்ந்தெடுக்கிறோம். அவர்கள் மீதும் அதே பழைய லாவணி. மீண்டும் அடுத்த தேர்தலில் முந்தைய கட்சியை ஆதரிக்கிறோம்.


தேர்தல் நாளன்று நம்மைப்போன்ற ஒருவருக்கு நாம் வாக்களிப்பதில்லை என்பதுதான் பிரச்சினை. அரசியலில் எளிமை, தூய்மை, வாய்மையென்று முயற்சிப்பவர்களுக்கு நாம் வாக்களிப்பதில்லை. ஜனநாயகத்துக்கு வலு சேர்க்க ஐந்தாண்டுகளுக்கு ஒரு நாளாவது நாம் நேர்மையாக, கூர்மையாக சிந்தித்து செயல்படுவதின் மூலமாகவே, நமக்கு கொடுக்கப்பட்ட அரசியல் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கிறவர்களாக அறியப்படுவோம்.

சரி, அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் பொறுப்புகள் என்னவென்று பார்ப்போம். மிகச்சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தருவதே இவர்களது தலையாயப் பொறுப்பு.

அடிப்படை உரிமைகள் என்றால் ஒவ்வொரு குடிமகனும், வாழ்வதற்கு ஏதுவான சூழல் என்று எடுத்துக் கொள்ளலாம். குடிநீர், உணவு, கல்வி, வேலைவாய்ப்பு என்று அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையைச் சொல்லப்போனால் மக்களின் அடிப்படைத்தேவைகள் என்பது மிகக்குறைவானதுதான். ஆயினும் அதுகூட இந்த அறுபதாண்டு கால அவகாசத்தில் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை என்பதுதான் வேதனை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கூட இன்னமும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கிட்டத்த 40 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு என்று நிறையப் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கிறது. இவையெல்லாம் இன்னும் பொறுப்புடன் செயல்படுங்கள் என்று அரசியல் வாதிகளுக்கு அலாரம் அடித்துக்கொண்டும் இருக்கிறது.

கடந்த ஆண்டு, இந்தியத் தலைநகர் டெல்லி பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றினைப் பார்ப்போம். உங்களுக்கு ரோல்மாடலாக யாரை எடுத்துக் கொள்வீர்கள் என்பது மாணவர்களிடையே கேட்கப்பட்ட கேள்வி. 13 சதவிகித மாணவர்கள் மறைந்த, சுதந்திரத்துக்கு பாடுபட்ட நாற்பதாண்டுகளுக்கு முந்தையத் தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கிறார்கள். இன்றைய அரசியல் தலைவர்கள் சிலரின் பெயரை சொன்னவர்கள் வெறும் 2 சதவிகிதம் பேர்தான். மீதி மாணவர்கள் பலரும் அரசியல்சாராத மற்ற பிரிவினரின் பெயர்களை தான் தங்கள் ரோல்மாடலாக கருதுகிறார்கள். அடுத்த தலைமுறை அரசியலை தவிர்க்கிறது என்பதை இன்றைய அரசியல்வாதிகள் உணர்ந்தேயாக வேண்டும். பொறுப்பினை தட்டிக் கழிப்பவர்கள் சமூகத்தால் தவிர்க்கப்படுகிறார்கள்.

கடந்துபோன அரசியல் தலைவர்களின் மீது கூட இன்றையத் தலைமுறைக்கு இருக்கும் நம்பிக்கைகளும்,  மதிப்பீடுகளும் ஏன் இன்றையத் தலைவர்கள் மீது இல்லை?

ஏழ்மை, கல்வியறிவின்மை, ஊழல், நோய்கள், ஊட்டமான உணவிண்மை என்று ஏராளமான விஷயங்கள் பாக்கியிருக்கிறது. இவற்றை விரைவாக களைவதுதான் அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் முக்கியமான பொறுப்பு. இதுவொன்றும் மலையை கயிறுக் கட்டி இழுக்கும் அசாத்தியமான பணியுமல்ல.

சந்தை சீர்த்திருத்தங்களுக்கு பிறகாக பொருளாதார அடிப்படையில் அசுரவேகம் அடைந்திருக்கும் நாடாக நம் நாடு இருக்கிறது. நாட்டை ஒரு வயலாக எடுத்துக் கொண்டால், பாய்ச்சப்படும் நீர் ஒரே இடத்தில் தேங்காமல் எல்லாப் பகுதிக்கும் பரவலாகப் பாயவேண்டும். இதைக் கண்காணிக்கும் பொறுப்புதான் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கிறது.

‘இது சரியில்லை, அது சரியில்லை’யென்று புலம்பிக் கொண்டிருப்பவர்களால் எந்த பிரயோசனமும் இல்லை. புலம்புபவர்களுக்கு உண்மையாகவே அக்கறை இருக்குமானால் நேரடியாகவோ, மறைமுகவாகவோ அரசியலில் ஈடுபட்டு அனைத்தையும் சரி செய்ய முன்வரவேண்டும். குறைந்தபட்சம் தேர்தல் நாளன்று ஓட்டு போட மட்டுமாவது வாக்குச் சாவடிக்கு சென்றாக வேண்டும் என்பதே நம் எதிர்ப்பார்ப்பு.