நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, May 19, 2011

ஜாதி வாரி கணகெடுப்பு -பாமகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி....

------------------------------------------------------------------------
பாமக சார்பில் ஜாதி வாரி கணகெடுப்பு நடத்த கோரி நடத்தபட்ட போரட்டங்களிலிருந்து சில புகைப்படங்கள்

------------------------------------------------------------------------







பல ஆண்டுகளாக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக சார்பில் பல போரட்டங்கள், பொது கூட்டங்கள், என நடத்தி உலக அரசியல் தலைவர்களையே திரும்பி பார்க்க வைத்தது மட்டுமல்லாமல், பாமகவை சேர்ந்த அன்புமணி அவர்கள் அமைச்சராக இருந்த போது 200 க்கு மேற்பட்ட அரசியல் தலைவர்கரளை சந்தித்து அவர்களின் ஆதரவோடு கோரிக்கையகவே நடுவணரசிடம் அளித்தார்.



பா.ம.க வின் தொடர் போரட்டங்களால் மே-19 -2011 அன்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் முதல் முறையாக 1931ம் ஆண்டு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பின் 10 ஆண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், ஜாதி அடிப்படையில் நடத்தப்படவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், நாட்டின் மக்கள் தொகை 121.02 கோடி என்றும், ஆண்கள் 62.37 கோடி பேர், பெண்கள் 58.65 கோடி பேர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில்  நடந்தது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது:

* ஜாதி மற்றும் மதம் உட்பட ஏழைகளைக் கண்டறியவும், ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

* நகரங்கள் மற்றும் கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோரை கண்டறிய, கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில், விவரம் கேட்கப்படும் போது, அவர்களின் ஜாதி மற்றும் மதம் குறித்தும் கேட்டறியப்படும்.

* இந்த இரண்டு வகையான கணக்கெடுப்பு பணியும் ஜூன் மாதம் துவங்கும். இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவுக்கு வரும். அரசுக்கு 3,500 கோடி ரூபாய் செலவாகும்.

* ஏழைகளைக் கண்டறிய, பெரிய அளவில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

* இந்த ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு பணிகளை, மாநில அரசுகள் மேற்கொள்ளும். இதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தயாரித்த, குறைந்த செலவிலான சிறிய கையடக்க கருவிகள் பயன்படுத்தப்படும்; பேப்பர்கள் எதுவும் பயன்படுத்தப்படாது.

* வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களில் எத்தனை பேர் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது இதன் மூலம் கண்டறியப்படும்.

* நகரங்கள் மற்றும் கிராமங்களில் சேகரிக்கப்படும், வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்வோர் குறித்த இந்த விவரங்கள் எல்லாம், 12வது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் பயன்படுத்தப்படும்.

* சமூகம், பொருளாதாரம் குறித்த விவரங்களுடன் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுமென, பார்லிமென்டில் மத்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.

* இப்பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த முடியவில்லை எனில், மாநில அரசு ஊழியர்களே இதில் ஈடுபடுவர். இக்கணக்கெடுப்பில் ஏழு விதமான அளவீடுகள் பின்பற்றப்படும், என்று மத்திய அரவு அறிவித்துள்ளது.

Wednesday, May 18, 2011

வன்னியனின் வெற்றி திக்கட்டும் பரவும்....

அன்புக்குறிய உலகத்தமிழ் வன்னிய
சொந்தங்களுக்கு வணக்கங்கள்…!
மூவாயிரம் கோடி……..

“நீதியின் தீபங்கள் கைகளில் ஏந்திடும்
இலட்சிய பயணம் இது! – இதில்
சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயம் இது!!”

“புதியதோர் உலகம் செய்வோம்!

வரலாற்று சிறப்புமிக்க வன்னிய இனம் ,
திண்டிவனத்தாரின் ஆசியுடன் கோட்டையில்
பட்டொளி வீசி பறக்கும் நாள் வெகுநாளில்லை

“பா.ம.க கொடி”  ஏழைகளின் வீட்டில்
பறக்கும் நாளும் தொலைவில் இல்லை!
வன்னியனின் வெற்றி திக்கட்டும் பரவும்
உலகமே  வியந்து வன்னியரை பாரட்டும்...

தமிழகமே இவ்வுலகில் பட்டொளி வீசி பறக்கும்
அப்போது தெரியும்
நாம் யாரென்று....

விழ்வது எழுவதற்க்கே
அழுவது சிரிப்பதற்க்கே...

வீழ்வது எழுவதற்க்கே...

வாழ்க்கை
வாழ்வதற்கே....



தீமையெல்லாம்
நன்மைக்கே....

தோற்பது
வெல்வதற்கே....
நிலவு
அமாவாசையில் காணமல் போகும்...
சூரியன்
இரவில் காணமல் போகும்...
மாற்றம்
தற்காலிகமானதே...
தோழா
முயன்றிடு...
வன்னியனால்
முடியாததது
இவ்வுலகில் யாரலும் முடியாது....

உழைத்திடு
வென்றிட.....
அதிகாரம்  அவர்களிடத்தில்
ஒட்டு பெட்டியும் அவர்களிடத்தில்
வெறென்றும் சொல்வதற்கில்லை....
தோழா
முயன்றிடு...
உழைத்திடு
வென்றிட.....
அழுவது

சிரிப்பதற்கே....
வீழ்வது

எழுவதற்கே....

Sunday, May 8, 2011

பசுமைத்தாயகத்தின் போரட்டத்திற்க்கு வெற்றி...

பசுமைத்தாயகம் அமைப்பு பீடி,சிகரெட்,மது போன்ற தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல சாதனைகளை புரிந்துள்ளது.இதனையடுத்து

கடந்த 4-ஆம் தேதியன்று பசுமைத்தாயகம் சார்பில் மது விளம்பரத்தில் நடிக்கும் கிரிகெட் வீரர் டோனிக்கு எதிர்ப்பு தெரிவித்து.அவர் தங்கியிருந்த ஓட்டலை பசுமைத்தாயகத்தினர் முற்றுகை போரட்டம் நடத்தினர்.

இதனால் உலக முழுவதும் உள்ள கிரிகெட் ரசிகர்களிடையே டோனிக்கு எதிரான எதிர்ப்பு அலை உருவாகியது.





இதனையடுத்து சென்னையில் டோனி தோன்றிய புகைப்படங்களடங்கிய பேனர்களை பல பகுதிகளில் அகற்றப்பட்டன.

இது பசுமைத்தாயகத்திற்க்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்..

Wednesday, May 4, 2011

டோனிக்கு எதிராக பசுமைத்தாயகம் ஆர்பாட்டம், திடீர் முற்றுகை

மது கம்பனிகளுக்கு ஆதரவாக டோனி விளம்பரத்தில் நடித்ததால் சென்னையில் மட்டைபந்து வீரர் டோனி தங்கியிருந்த உணவு விடுதியை பசுமைத்தாயகம் அமைப்பினர் திடீர் முற்றுகையிட்டனர். இதனால் தமிழகம் உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஊடகங்கள் மூலம் இந்த செய்தி காட்டு தீ போல பரவியதால் டோனி அச்சமடைந்துள்ளார்..


                                                 புகைப்படங்கள் சில













சென்னை : அடையாறில் டோனி தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட முயன்ற 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி. தற்போது இவர், ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார். சென்னை அடையாறில் உள்ள பார்க் ஷெரட் டன் ஓட்டலில் தங்கியிருக்கிறார்.

தற்போது, ஒரு மதுபான விளம்பரத்தில் டோனி நடித்து வருகிறார். அதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று டோனிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால், விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வதற்கான எவ்வித அறிவிப்பையும் டோனி வெளியிடவில்லை.

இந்நிலையில், ‘பசுமை தாயகம்’ அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அருள் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர், டோனி தங்கியிருக்கும் பார்க் ஷெரட்டன் ஓட்டலை நேற்று காலை முற்றுகையிட முயன்றனர். டோனிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். முற்றுகையிட முயன்ற பசுமை தாயகம் மாநில பொதுச் செயலாளர் அருள், வ.ஆ. பத்மநாபன், கனல் கண்ணன், பாண்டியன், ஜெயராமன் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவர்களை வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.