உலகை திரும்பி பார்க்க வைத்த கோடி வன்னியர்கள் ஒன்று கூடிய வன்னியர் திருவிழா--- 25-4-2013 அன்று மகாபலிபுரத் திருவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு..
எந்த ஒரு வெற்றியும் தடைகள் இல்லாமல் சந்திக்கப்படுவதில்லை. அதிலும் வெற்றி மகத்தானதாக இருக்கும் பட்சத்தில் அது சந்திக்கும் தடைகளும் பெரிய அளவிலேயே தான் இருக்கும். தடைகள் ஒன்றிரண்டிலேயே மனம் உடைந்து நிறுத்தப்பட்ட முயற்சிகள் உலகில் கோடிக்கணக்கில் இருக்கக்கூடும். அவற்றில் எத்தனையோ இன்று வெற்றி கண்டவற்றை விட எத்தனையோ விதங்களில் மேன்மையாக இருந்திருக்கவும் கூடும். அதனால் எத்தனையோ பெரும் திறமைகள் உலகத்தின் பார்வைக்கே வராமல் போய் இருந்திருக்கின்றன என்பது தான் மிகவும் வருந்தத் தக்க உண்மை அதிலும் இந்த ஆண்டு வன்னியர் சங்க மாநாடு நடைபெறபோகிறது என்றவுடனே எத்தனை தடைகள் அத்தனை தடைகளையும் தடயங்களாக மாற்றி..
தடைகள் பல கடந்து சரித்திரம் படைத்தது வன்னியர் திருவிழா...
உணர்வுகளையும் உயிர்களையும்
துடி துடிக்க சாகடித்து
புதைக்குழியின் மேல் நின்று
விடுதலை போரட்டம்
செய்வதாக கூறி
வன்னியர்கள் புற முதுகில் குத்தி
குளிர்காய்ந்த திராவிட கட்சிகளே..
இதே எங்கள் வன்னிய குடும்ப திருவிழா
உங்களுக்கு அடிக்கப்பட்ட சாவுமணி
எங்கள் குடும்ப கூட்டம்
இனி உங்களை திருப்பி
அடிக்க போகும் சலங்கை ஒலி....
வரலாற்றை மறந்த இனம்
வாழ்ந்தாக சரித்திரம் இல்லை...
வன்னியர்களை புற முதுகில் குத்தியவர்கள்
இனி வாழ போவதும் இல்லை.
வாழ்க வன்னியர் இனம் வளர்க வன்னியர் ஒற்றுமை....