நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, November 30, 2010

பல கட்சிகளுக்கு இதயமே தலைமை அலுவலகம் என்றால் பாட்டாளிகளுக்கு இதயம் தைலாபுரம்தான் (மருத்துவர் அய்யா,கருணநிதி,செயலலிதா பற்றிய அரசியல் பயணம்)...

மருத்துவர் இராமதாசு






திண்டிவனத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கீழ்சிவிரிகிராமம்தான் மருத்துவர் இராமதாஸ் பிறந்த ஊர், பிறந்த தேதி 25.7.1939. சஞ்சீவிராய கவுண்டர்-நவநீதம் தம்பதியரின் மகனான ராமதாசுடன் உடன் பிறந்தவர்கள் 3 சகோதரர்கள் ஒரு சகோதரி. வன்னியர் சமூகத்தை சேர்ந்த ராமதாஸ் சொந்த கிராமத்தில் தொடக்க கல்வியையும் சென்னையில் நடுநிலை, மேல்நிலை கல்வியை பயின்றார். சென்னை மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து 1967ல் அரசு மருத்துவர் வேலையில் சேர்ந்தார்.
சில ஆண்டுகளிலேயே அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வீட்டிலேயே டாக்டர் தொழிலை செய்துவந்தார். அதற்கிடையே சரஸ்வதியை மனைவியாக கரம் பிடித்தார். தனது இனத்து மக்களின் வாழ்வில் மேம்பாட்டை உருவாக்க வன்னியர் சங்கத்தை 1980ல் ராமதாஸ் தொடங்கினார். 1987ல் இடஒதுக்கீடு கேட்டு வன்னியர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்திற்கு ராமதாஸ்தான் தலைமை தாங்கினார். தமிழக வரலாற்றில் நடந்த மிகப்பெரிய போராட்டங்களில் வன்னியர்கள் நடத்திய இடஒதுக்கீடு போராட்டமும் ஒன்று. இந்நிலையில் 1989ல் பாட்டாளி மக்கள் கட்சியை ராமதாஸ் நிறுவினார். கட்சியில் எந்த பதவியும் வகிக்க மாட்டேன், கூட்டங்கள் நிகழ்ச்சிகளுக்கு சொந்த செலவில்தான் வந்து செல்வேன், எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டேன், சட்டசபை நாடாளுமன்றத்திற்குள் நுழைய மாட்டேன், எனது வாரிசுகள் யாரும் எந்த காலத்திலும் சங்கத்திலும் கட்சியிலும் பதவிக்கு வரமாட்டார்கள், பிரதமர் பதவியே தந்தாலும் விலை போகமாட்டேன் என 5 உறுதிமொழிகளை ராமதாஸ் பா.ம.க.வை தொடங்கியபோது அளித்தார். படிப்படியாக கட்சியை வளர்ப்பதில் ராமதாஸ் அதி-தீவிரம் காட்டினார். சாதி கட்சி என்று பா.ம.க. மீது விழுந்த முத்திரையை காலப்போக்கில் மாற்றினார். மத்திய அரசில் பா.ம.க. அங்கம் வகிக்கும் அளவுக்கு கட்சியை வளர்த்தார். பா.ம.க.வை உதாசீனப்படுத்தியவர்கள் அனைவரும் இன்று பா.ம.க. கூட்டணியை விரும்பும் அளவுக்கு கட்சியை மேம்படுத்தியது ராமதாஸ் என்ற தனி மனிதன்தான் என்பதை பாட்டாளிகள் உறுதியுடன் நம்புகின்றனர். பல கட்சிகளுக்கு இதயமே தலைமை அலுவலகம் என்றால் பாட்டாளிகளுக்கு இதயம் தைலாபுரம்தான். போயஸ் தோட்டத்தைபோல் தைலாபுரம் தோட்டமும் பல அரசியல் மாற்றங்கள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது. அரசியல் பணி அதிகமானதால் 1997ல் டாக்டர் தொழிலை நிறுத்தினார் ராமதாஸ். மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்த ராமதாஸ் 1995ல் பசுமை தாயம் அமைப்பை ஏற்படுத்தி மரங்கள் நடுவது என பல சமூக பணிகளை ஆற்றி வருகிறார். இந்த அமைப்பின் தலைவராக மருத்துவர் அய்யா அவர்களின் மகன் அன்பு மணி இராமதாசு இருந்தார் பின்பு மத்திய சுகதார துறை அமைச்சாரகி உலகம் போற்றும் அளவுக்கு வளர்ந்தார் வர. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. எம்.கிருஷ்ணசாமியின் மகள்தான் அன்புமணியின் இவர் தான் மருத்துவர் அன்புமணிக்கு பின்பு பசுமைத்தாயகம் என்ற அமைப்பை தலைமையெற்று உலக போற்றும் சாதனைகளை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். அன்புமணி தவிர ராமதாஸ#க்கு 2 மகள்கள். முதல் மகள் ஸ்ரீகாந்தி இவருடைய கணவர் டாக்டர் பரசுராமன். திண்டிவனத்தில் உள்ள ராமதாஸின் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள். மற்றொரு மகள் கவிதா கணவர் டாக்டர் ஜெயகணேஷ்.





கருணாநிதி


கருணாநிதி என்ற பெயரை நீக்கிவிட்டு அரை நூற்றாண்டு தமிழக அரசியலை யாரும் எழுதிவிடமுடியாது என்ற அளவிற்கு தன் குடும்ப அரசியலை தமிழகத்தில் வியாபித்திருக்கிறார் கலைஞர். மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்து பல பல பலே பலே வேலைகளை செய்து மிக உயர்ந்த பதவியை அடைந்தவர். முத்துவேலர்-அஞ்சுகம் அம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்த கருணாநிதி பொதுவாழ்வுக்கு வந்தபோது அவருக்கு வயது 14 தான். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கலைஞர்என்று அழைக்கப்படும் கருணாநிதி 1924 ஆம் ஆண்டு ஜின் 3 ஆம் தேதி பிறந்தார்.
1936
ல் திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவ நேசன் கையெழுத்து பிரதியை நடத்தி அதன் ஆசிரியராகவும் கலைஞர் செயல்பட்டு வந்தார். 14 வயதில் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர் பேரணியை நடத்தினார். 20 வயதில் திராவிடர் நடிகர் கழகம் என்ற மன்றத்தை தொடங்கி சீர்திருத்த நாடகங்களை அரங்கேற்றினார். நாடகங்களை கருணாநிதி நடத்தி வந்த சமயத்தில் பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டது.


1946
ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திற்கு கொடி வடிவமைக்கப்பட்ட நேரத்தில் கருப்பு கொடியின் மத்தியில் சிவப்பு நிறத்திற்கு தனது ரத்தத்தை கருணாநிதி தொட்டு வடிவமைத்தார்.

1949
ல் சேலம் மாடர்ன் தியேட்டரில் சேர்ந்து கருணாநிதி பணியாற்றிக் கொண்டிருந்த போது தி.க.விலிருந்து விலகி அண்ணா தலைமையிலான தி.மு.க.வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் முதல் வீரராக கருணாநிதி நின்றார். 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று வெற்றிபெற்று முதன் முறையாக சட்டசபையில் காலடி எடுத்து வைத்தார்.

1960
ல் தி.மு.க.வின் பொருளாளர் பதவி கருணாநிதியை தேடி வந்தது. 1962ல் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் 1967ல் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் என்று அடுத்தடுத்து பதவிகள் கருணாநிதியிடம் சேர்ந்தன. 1969ல் அண்ணா மறைந்த நேரத்தில் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அண்ணாவின் தம்பிதான் அடுத்த முதல்வர் என கலைஞரை பலரும் அடையாளம் காட்ட முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காமராஜரும் ராஜாஜியும் சேர்ந்து தி.மு.க.வை எதிர்த்தனர். ஆனால் அதனை முறியடித்து 184 இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி 2வது முறையாக ஆட்சியை பிடித்தார். 1983ல் இலங்கை தமிழர் பிரச்னைக்காக எம்.எல்.ஏ. பதவியை துறந்தார். தொடர்ந்து 1984ல் மேலவை உறுப்பினராக இருந்தார் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி அ.தி.மு.க.வை உருவாக்கி ஆட்சியை பிடித்த போதும் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கருணாநிதி வைத்திருந்தார். 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 1989ல் 3வது முறையாக கருணாநிதி முதல்வர் ஆனார். 1991ல் நடந்த தேர்தலில் கருணாநிதி மட்டுமே ஜெயித்த நிலையில் பீனிக்ஸ் பறவையாக எழுந்து 1996ல் 4வது முறையாக ஆட்சி கட்டிலில் கருணாநிதி அமர்ந்தார்.அதை தொடர்ந்து தற்போது ஆட்சி கட்
டிலில் அமர்ந்து குடும்ப அரசியலையுடன் சேர்த்து அரசக அரசியலை திறம்பட நடத்தி வருகிறார்..



ஜெயலலிதா







யாரையும் மதிக்காதவர் என்றால் ஜெயலலிதாதான் என்று சொல்லும் அளவுக்கு தமிழகத்தில் பெயர் கிடைத்தது. ஜெயலலிதா மைசூரில் பிறந்தாலும் இவருடைய தாய் தந்தையர் சந்தியா-ஜெயராமின் பூர்வீகம் திருச்சி ஸ்ரீரங்கம்தான்.1948 பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்த ஜெயலலிதா தன் இளம்வயதில் பெங்களூரில் உள்ள பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும் சென்னை சர்ச் பார்க் கான்வென்டிலும், பிரசன்டேஷன் கான்வென்டிலும் பள்ளி படிப்பை முடித்தார். சர்ச் பார்கில் ஜெயலலிதா படித்து வந்தபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவருக்கு ஓராண்டு ஜினியர்.

1964
ஆம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் தேர்வில் ஜெயலலிதா மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேறினார். தகுதியின் அடிப்படையில் மேற்படிப்பு தொடர மத்திய அரசிடமிருந்து உதவித்தொகை கிடைத்தது. ஆனால் சினிமா வாய்ப்பு கிடைத்ததால் படிப்பை தொடர முடியாமல் நடிகை ஆனார். பள்ளியில் படிக்கும்போது பேச்சு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறார். படிப்பில் முதல் மாணவி என்பதால் கான்வென்டின் சிறந்த மாணவி விருதையும் வாங்கியிருக்கிறார். ஜெயலலிதா நடித்த முதல் படம் சின்ன கொம்பே‘ (கன்னடம்). தமிழில் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடைபடமே ஜெயலலிதா நடித்து வெளியான முதல் படம். ஆனால் படப்பிடிப்பில் கலந்துகொண்ட முதல் படம் ஆயிரத்தில் ஒருவன். அன்றைக்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் நடித்ததால் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மொத்தம் 187 படங்களில் நடித்திருக்கிறார். 1971ல் தாய் சந்தியா மறைந்ததை தொடர்ந்து 1975 இருந்து திரையுலகத்தில் இருந்து விலகினார். எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்று 4.6.1982ல் அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர்ந்தார். அதன் பின்பு தமிழக அரசின் சத்துணவு திட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் ஆனார். 28.1.1983 ஜெயலலிதாவை கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். ஆக்கினார். 1984ல் ஏப்ரல் 23 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவையில் அண்ணாவுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185 தான் ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டது.

1987
ல் எம்.ஜி.ஆர். மறைந்ததை அடுத்து எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி மற்றும் ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டது. 1989ல் தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 26 இடங்களில் வெற்றி பெற்றது. போடி நாயக்கனூர் (தேனி) தொகுதியில் இருந்து முதன்முறையாக சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டசபையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெயரையும் ஜெயலலிதா பெற்றார். 1989 மார்ச் 25 ஆம் தேதி சட்டசபையில் கருணாநிதி பட்ஜெட் தாக்கல் செய்தபோது பெரும் கலவரம் ஏற்பட்டது. ஜெயலலிதா தாக்கப்பட்டதாக அப்போது புகார் எழுந்தது. தலைவிரி கோலமாக சட்டசபையில் இருந்து வெளியேறி கவர்னர் மாளிகையில் முறையிட்டார். சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன். இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என்று அப்போது ஜெயலலிதா சபதம் செய்தார். அதன் பின்பு 1991ல் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வாராக ஜெயலலிதா சட்டசபைக்குள் நுழைந்தார். இரண்டாக பிளவுபட்டிருந்த அ.தி.மு.க. ஜெயலலிதா தலைமையில் மீண்டும் இணைந்தது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னமும் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது. ஒருங்கிணைந்த கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்று முதல் இன்று வரை அப்பதவியில் ஜெயலலிதா நீடித்து வருகிறார்.

1996
நடந்த தேர்தலில் அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தபோது பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் தோற்றுப்போனார். 19916 ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள் ஜெயலலிதாவும் கட்சியும் தோற்க காரணமாயின. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொன்ட சுதாகரன் திருமணத்தை நடத்தினார். தேர்தல் தோல்விக்கு காரணமான சசிகலா குடும்பத்தினருடன் நான் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ள போவதில்லை என அறிவித்தார். ஆனால் சில மாதங்களிலேயே சசிகலாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தார். ஜெயலலிதா பெயர் உச்சரிக்கும்போது எம்.ஜி.ஆர். நினைவுக்கு வருகிறாரோ இல்லையோ ஆனா, உடன்பிறவா சகோதரி சசிகலாவின் பெயரை யாரும் உச்சரிக்காமல் இருப்பதில்லை. அந்த அளவுக்கு சசிகலா ஜெயலலிதா நட்பு இருந்தது. ஜெயலலிதா-சசிகலா குடும்பம், மற்றும் அமைச்சரவை சகாக்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கும் வழக்கு எனக்கூறப்பட்ட டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளது. 1996 தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜெயலலிதா 1998ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளின் பலத்துடன் கூட்டணி வைத்தார். பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றினார்.

1999
ல் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ்ப்புக்கு ஜெயலலிதா காரணமானார். அதனை தொடர்ந்து நடந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்தார்.

2001
ல் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா எப்படி முதல்வராக பதவி வகிக்கலாம் என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட நிலையில் முதல்வர் பதவியில் இருந்து இறங்கி ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினார். பின்னர் டான்சி வழக்கில் இருந்து ஜெயலலிதாவை சென்னை ஐகோர்ட் விடுதலை செய்ததை தொடர்ந்து ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு 3வது முறையாக பதவியேற்றார். அதன் பிறகு நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்
 





No comments: