கும்மிடிப்பூண்டி,டிச.29: வரும் சட்டமன்ற தேர்தலை பா.ம.க கூட்டணியோடு சந்தித்தாலும் தனித்து சந்தித்தாலும் கும்மிடிப்பூண்டியில் பாமக போட்டியிடுவது உறுதி என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 236 கிளைகளை சேர்ந்த 708 பொறுப்பாளர்களுக்கான தேர்தல் பயிற்சி முகாம் கும்மிடிப்பூண்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
÷
திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் க.ஏ.ரமேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில துணைத் தலைவர்கள் துரை ஜெயவேலு,கடலூர் சண்முகம்,சீதாராமன் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் வேலு பேசுகையில், ""இந்திய அரசியல் வரலாற்றிலேயே கட்சியின் அடிமட்ட தொண்டர்களை நேரில் சந்தித்து அவர்களிடம் ஆலோசனை கேட்பது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே'' என்றார்.
மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், பாமக-வின் போராட்ட வரலாறு கும்மிடிப்பூண்டியில் ரயில் மறியல் போராட்டத்தில் துவங்கியதை மறக்க முடியாது எனவும், தேர்தலை குறிவைத்து கட்சி நடத்தாமல் அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பாமக செயல்படுகிறது என்றும் கூறினாôர்.
சிறப்புரையாற்றிய டாக்டர் ராமதாஸ், ""கடந்த சட்டமன்ற தேர்தலில் கும்மிடிப்பூண்டி தொகுதியில் பாமக கூட்டணியில் போட்டியிட்ட நிலையில் சிலரால் பழிவாங்கப்பட்டு 250-க்கும் குறைவான வாக்குகளில் தோற்கடிக்கப்பட்டது.
ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக கூட்டணியோடு போட்டியிட்டாலும், தனித்துப் போட்டியிட்டாலும் கும்மிடிப்பூண்டியில் பாமக போட்டியிடுவது உறுதி என்பதால் பாமக வேட்பாளரை 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்ற பெற செய்ய வேண்டியது கட்சியின் கிளை பொறுப்பாளர்களின் கடமை.
1967 ஆண்டு முதல் ஒவ்வோரு தேர்தலிலும் கூட்டணிகள் மாறுவது தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் அது குறித்து தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் உள்ள 1 கோடி வன்னியர் இன வாக்குகளை பாமக-விற்கு ஆதரவாக மாற்றும் போது பாமக தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 100 சட்டமன்ற தொகுதிகளை எளிதில் கைப்பற்றும்.
வரும் தேர்தலில் பாமக-விற்கு எதிராக வாக்களிக்க பிற கட்சிகள் பணம் கொடுத்தால் அதை வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் வாக்குசாவடிக்கு சென்று பாமக-விற்கு வாக்களிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
கூட்ட முடிவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், ""தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதைப் போல தை திங்களுக்கு பிறகு தமிழக அரசியலில் கூட்டணி குறித்து பாமக-வின் நிலைப்பாடு அறிவிக்கப்படும்'' என்றார்.
No comments:
Post a Comment