நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, January 6, 2011

எம்.ஜி.ஆர் முதுகின் மீது சவரி செய்யும் விசயகாந்த்...

 எம்.ஜி.ஆர் அவர்கள் விண்ணுலகம் சென்று கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.

எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த நாள் முதல் இன்று வரை நடைபெற்ற தேர்தல்களில் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லியே ஓட்டுக்களை வாங்கிக்கொண்டு இருந்தனர் அ.தி.மு.கவினர்.

ஆனாலும் இது ஏற்றுகொள்ளக் கூடியதாக இருந்தது.
எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த கட்சி, அவருடன் இருந்த பலர் இன்றும் அ.தி.மு.கவில் உள்ளனர். எம்.ஜிஆருடன் பணியாற்றி உள்ளனர். ஆதலால் அவர்களுக்கு அந்த உரிமை உண்டு.

எம்.ஜி.ஆருக்கும் தனக்கும் துளிகூட சம்மந்தமில்லாத விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று கூறிக் கொண்டு தம்பட்டம் அடிப்பது எந்த வகையில் நியாயம்?.

எம்.ஜி.ஆரின் பெயரைச்சொல்லி ஓட்டுக்களையும் புகழையும் அவரை போல முதல்வராகவும் வருவதற்கு ஆசைப்படும் விஜயகாந்துக்கு என்ன உரிமை உள்ளது.

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சித் தொண்டராக இருந்தாரா?
அ.தி.மு.க கட்சியின் கட்சி பதவியில் இருந்தாரா?.
அ.தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு
கவுன்சிலராகவோ,

ஊராட்சி மன்றத் தலைவராகவோ,
நகர் மன்றத் தலைவராகவோ,
ஒரு எம்.எல்.ஏவாகவோ,
அட ஒரு உண்மை விசுவாசியாக, தொண்டனாக இருந்தாரா ?
எதுவுமே இல்லை.என்றே சொல்ல வேண்டும்.
அட இது எல்லாத்துக்கும் மேலே எம்.ஜி.ஆரிடம் இருந்த
அன்பு,
பண்பு,
நல்ல குண நலன்கள்,
கட்டுப் பாடுகள்,
நெருங்கி பழகக் கூடியத் தன்மை,
பிறருக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கும் குணம்,
பாராட்டும் குணம், etc..
இவற்றில் ஏதாவது ஒன்று உள்ளதா ?….
இந்த க(வெ)ருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்திடம்.
எம்.ஜி.ஆர் தேர்தல் நேரத்தில் பயன்படுத்திய வாகனத்தை வாங்கிவிட்டு அதில் பிரச்சாரம் செய்தால் எம்.ஜி.ஆர் ஆகிட முடியுமா?
எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் உள்ள பாடலை ரிமிக்ஸ் செய்து ஆடி நடித்தால் எம்.ஜி.ஆர். என்று கூறி விட முடியுமா?.
திடீரென்று இவர் கட்சி ஆரம்பிப்பாராம்,
கட்சிக்கும், தனக்கும் எந்த கொள்கையும் கிடையாதாம்.
ஆனால் தேர்தலில் நின்று ஓட்டுகளைப் பெற, பெரும் புகழும் அடைய, எம்.ஜி.ஆரின் பெயரை உபயோகித்துக் கொண்டு இருக்கின்றார்.
எம்.ஜி.ஆர் மறைந்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டன.
இன்னமும் அவர் பெயரை சொல்லி ஒட்டு கேட்க்க வெட்கமாக இல்லை.
அ.தி.மு.க கட்சியினர் கேட்டால்கூட பரவாயில்லை.
துளியும் சம்மந்தமில்லாத நீங்கள்
ஓட்டுக்காக,
புகழுக்காக,
பிரபலம் அடைவதற்காக

எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லி ஒட்டு கேட்க வெட்கமாக இல்லையா?
ஆரம்ப காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆரின் ரசிகராக வளர்ந்தவராம்.
எம்.ஜி.ஆரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவராம்.
ஆனாலும் ,எம்.ஜி.ஆர உயிருடன் இருக்கும் வரை அவர நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பே அமையவில்லையாம்.
எம்.ஜி.ஆருக்கு மக்கள் தலைவர் என்று பெயர் வந்ததே அவர் மக்களிடத்தில் அன்பாகவும், பண்பாகவும், பாசத்துடனும் நெருங்கி பழகியதால்தான்.

எளிதில் பார்க்கக் கூடியத் தலைவர்தான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை பார்க்க இந்த விஜயகாந்துக்கு ஒரு நாள் கூட நேரமில்லாமல் இருந்தது ஆச்சச்சரியம்தான். ?
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலங்களில் விஜயகாந்த் என்ன வெளிநாட்டிலா இருந்தார்?
பார்க்க முடியாதபடிக்கு எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் இருந்தாரா ?
எம்.ஜி.ஆரும் சென்னையில்தான் இருந்தார். நீங்களும் சென்னையில்தான் இருந்தீர்கள்.
மானசீக குரு உயிருடன் இருக்கும்போதே பார்க்க முடியாத உங்களுக்கு அவரின் பெயரை அதுவும்
இறந்த பின்னர்
இத்தனை நாள் உபயோகிக்காத நீங்கள்,
அரசியலில் ஈடுபட்ட
பின்னர் ஏன் உபயோகிக்க வேண்டும்.
உங்களது சுய நலத்திற்காக எம்.ஜி.ஆரின் பெயரை உபயோகிக்க அவசியம் என்ன ?

என்ன உரிமை இருக்கின்றது ?.
இப்படி அடுத்தவர் பெயரை சொல்லி ஓட்டுகளை பெற நினைப்பது கேவலமாக இல்லை?.
நாங்கள் எல்லாம் முட்டாள்கள், நீர் ஒருவர்தான் புத்திசாலியிலும் அதி புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீரோ?
உங்களுக்கு என்று சுய சிந்தனையில்லையா?.

உங்களுக்கு தைரியமிருந்தால் உங்கள் கட்சி கொள்கை, செயல் பாடுகள், செய்த நன்மைகள், செய்யப்போகும் நன்மைகள், வெளிப்படையான திட்டங்களைச் சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

விருத்தாச்சல தொகுதிக்கு நீங்கள்தானே எம்.எல்.ஏவாக இருக்கிறீர்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நீங்கள் உங்கள் தொகுதியில் செய்த நன்மைகளை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

இந்த மூன்றரை ஆண்டுகளில் மக்களுக்ககா நீங்கள் செய்த போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன்களைச் சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

இந்த மூன்றரை ஆண்டுகளில் உங்கள் தொகுதியில் லஞ்சங்களை ஒழித்து காட்டியிருந்தால் அதை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

தொகுதிக்கு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.
இந்த மூன்றரை ஆண்டுகளில் உங்களது விருத்தாச்சல தொகுதியை ஒரு முன் மாதிரியான தொகுதியாக மாற்றிக் காட்டியிருந்தால் அதை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

உங்கள் மூலம் பல நலத் திட்டங்ககளை தமிழக அரசு செய்து இருந்தால் அதை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.
மக்களின் குறைகளை கொஞ்சமாவது நிறைவேற்றியிருந்தால் அதை சொல்லியாவது ஒட்டு கேட்கலாமே?.
ஏன், பயமாக இருக்கின்றதா?

கட்சி கொள்கையுமில்லை, உருப்படியான செயல்பாடுகளும் இல்லை, செய்த நன்மைகள், செய்யப் போகும் நன்மைகள் என்னவென்று தெரியவில்லை, திட்டங்கள் என்னவென்று தெரியவில்லை, எப்படி ஒட்டு கேட்பது ?..

அதனால் உங்களுக்கு பயம் இருப்பது ஆச்சரியமில்லை.
இப்படி இருக்கும் நிலையில் எப்படி ஒட்டு கேட்பது என்று முழித்துக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் பெயரை சொல்லி ஓட்டுகளை வாங்க நினைத்துக் கொண்டு இருக்கின்றீரோ ?.
அது, கனவிலும் நடக்காது. நாங்க என்ன முட்டளுங்களுன்னு நெனைச்சிங்களா ?

எம்.ஜி.ஆரின் உண்மையான ரசிகர்கள், விசுவாசிகள் என்றால் சத்தியமாக உங்களுக்கு ஒட்டு போடா மாட்டார்கள்.
ஒருவேளை மாற்று கட்சியினருக்குக் கூட தங்கள் ஓட்டுகளைப் போடலாமே தவிர ஒரு போதும் உங்களுக்கு ஒட்டு போடா மாட்டார்கள்.
எம்.ஜி.ஆரின் உண்மையான ரசிகர்கள், விசுவாசிகள் தயவு செய்து தே.மு.தி.கவிற்கு உங்களது ஓட்டுக்களைப் போட்டுவிடாதீர்கள்.
அப்படி நீங்கள் போட்டால், எம்.ஜி.ஆரின் ஆன்மா கூட மன்னிக்காது.


No comments: