நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, November 22, 2012

மருத்துவர் தெய்வநாயகம்


மருத்துவர் தெய்வநாயகத்துக்கு
கிராமத்தானின் அஞ்சலி!










பிரபல நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் செ.நெ.தெய்வநாயகம், தன்னுடைய 70-ம் வயதில் திங்கள்கிழமை (நவம்பர் 19) அன்று சென்னையில் காலமானார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 1981&ம் ஆண்டு நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை ஏற்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.


இவர் மருத்துவர் இராமதாசு அய்யாவின் பள்ளி தோழர் ஆவார். இவர் ஒரு சத்திரியகுல வம்சத்தை சார்ந்தவர்..

இவரால் தமிழகத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் உறுவாகி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது..

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை அமைய மிக முக்கிய  நபர் ஆவார் இவர் என்பது குறிப்பிடதக்கது..


தான் ஒரு அலோபதி (ஆங்கில முறை)
மருத்துவராக இருந்தாலும்கூட, தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை முற்றிலுமாக உணர்ந்தவர் தெய்வநாயகம். சித்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து, 'ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்’ அமைப்பை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு அலோபதி மற்றும் -சித்த மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து வந்தார்.
கல்விப் பணியிலும் ஈடுபட்ட இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியின் செயலாளராக இருந்தார். லாப நோக்கமின்றி 3 மேல்நிலைப் பள்ளிகள், ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, குழந்தைகள் இல்லம் ஆகியவற்றை சென்னையிலும், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்திலும் நடத்தி வந்தார்.

சுற்றுச்சூழல் விஷயங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தெய்வநாயகம், மரபணு மாற்றுப் பயிர்களில் விளைந்த உணவுகளை உண்பதால், என்னமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது தெரியாத நிலையில், அவற்றை அனுமதிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார். மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்!
 — with 

No comments: