நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, December 23, 2010

கிராமத்து வாழ்கை...

பசுமைகளைப் போர்த்தி
உறவுகளோடு விளையாடும்
உன்னத இடம்.

நவீனங்கள் புகுந்தாலும் - போலி
நளினங்கள் புகாத இடம்..

சாதனை மனிதர்கள்
சாதாரணமாக உலாவும் இடம்..

வருங்கால இந்தியா
வறுமையோடு வாழும் இடம்..

உழைக்கும் வர்க்கம்
உடல் மாடாகத் தேய்ந்தும் - தினம்
உலைக்கே போராடும் இடம்..

அரிசி சாப்பாடு
விழாக்களில் மட்டும்
ஊர் விழாக்களில் மட்டும்...

விதைத்தவனும், விளைவித்தவனும் - ஒரு
கவளச் சோறுக்கு
உயிர் துறக்கும் அவல இடம்...

பாயாசம் அப்பளம்
வடையோடு மரக்கறி
இவையெல்லாம் பட்டியலோடு சரி
பார்த்தே அறியாதவர்கள்
பரிதவிக்கும் பண்பாளர்கள்...

உண்மையோடு உறவாடும்
உரிமையோடு போராடும்
உழைப்பே சுவாசமானவர்கள்

இன்றைய நாட்டை துாக்கி
தாங்கி நிற்க்கும்
உழைப்பால் உயர முடியாமல்
உருகுலைந்தவர்கள்
வாழும் இடம்

உண்மையான மனிதர்கள்
உலவும் உயர்ந்த இடம்

கிராமத்தான்கள் வாழும் இடம்.....

No comments: