நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, November 21, 2010

திரைப்பட ரசிகர் மன்றங்கள் ஒரு பார்வை...



நன்றி-குழலி
இந்த பதிவு தனிப்பட்ட எந்த ஒரு ரசிகர் மன்றத்தையும்
குறிவைத்து எழுதப்பட்டதல்ல.... ஆரோக்கியமான
ஒரு விவாதம் மட்டுமே, ஆரோக்கியமான, நாகரிகமான கருத்துகளை
எதிர்பார்க்கின்றேன். இதில் பல விடயங்களில் எமக்கு நேரடி அனுபவமுன்டு
திரைப்படங்கள் என்பது தமிழகத்தில் வெறும் பொழுது போக்கு அம்சமாக
மட்டுமிருப்பதில்லை, இங்கே சாதாரண பொது மக்களுக்கு தான் செய்ய முடியாத
விடயங்களை ஒருவர் திரையில் அரங்கேற்றும் போது ஒரு விதமான மகிழ்ச்சி
ஏற்படுகின்றது, அங்கே திரையில் நாயகனுக்கு பதில் தன்னை வைத்துப்பார்க்கின்றான்.
வட்டாச்சியர் அலுவலகத்தில்(மட்டுமல்ல மற்ற பல இடங்களிலும்) ஒரு சான்று வாங்கும்போது எல்லா நிலைகளுக்கும் லஞ்சம் கொடுக்கும்போது அந்த சாதாரண
மனிதனால் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் காசை கொடுத்துவிட்டு மனதிற்குள்
ஒரு இயலாமையான கோபம் மட்டுமே படமுடியும் அந்த கோபத்தைகூட அங்கே வெளியில் காட்டமுடியாது, இந்த நிலையில் இதை தட்டிகேட்டு ஒரு தாத்தா இந்தியன்
படத்தில் வரும்போது அங்கே நாயகனின் இடத்தில் தன்னையும் எதிர்நாயகனிடத்தில்
தன் எதிரியையும் வைத்துப்பார்க்கின்றான். தன்னால் செய்யமுடியாத ஒன்றை திரைப்படத்தில் காணும்போது உணர்ச்சி வசப்படுகின்றான், கை தட்டுகின்றான்,ஆர்ப்பரிக்கின்றான், படம் முடிந்து வெளியில் வரும்போது அது அத்தனையும்
மறந்து தன் வேலையைப்பார்க்கின்றான், ஆனால் இன்னமும் அந்த படத்தையே
நினைத்துக்கொண்டிருப்பவன் அந்த நாயகனை நம்ப ஆரம்பிக்கின்றான்,
அந்த திரை நாயகனும் ஒரு சாதாரண மனிதரே, அவரும் நம்மை மாதிரிதான், நாம் எப்படி வேலை செய்கின்றோமோ அது மாதிரி அவருக்கும் நடிப்பது
ஒரு தொழில் அவ்வளவே என்று எண்ணாமல் திரையில் தெரியும் நாயகன் உண்மையென நினைக்கின்றான் விளைவு திரையில் நாயகன் செய்வது
பேசுவது எல்லாம் உண்மை என நினைக்க ஆரம்பிக்கின்றான், அதன் விளைவால் நிழலை மட்டுமின்றி நிஜத்தையும் ஆராதிக்கின்றான்.
திரையில் மட்டுமே நூறு பேரை அடிப்பது சாத்தியம் உண்மையில் சாத்தியமில்லை என்று நம்பும் அதே ரசிகன் திரையில் பேசும் வசனங்களும் பாத்திரமும் உண்மை என நம்புவது ஏன் என புரியவில்லை!!!
ஒரு குறிப்பிட்ட நடிகரை விரும்ப ஆரம்பித்தப்பின் அதே நடிப்பை வேறொருவர் திரையில் செய்யும் போது மனம் ஏற்றுக்கொள்வதில்லை, அந்த நடிகரின் மீது
காழ்புணர்ச்சிகொள்கின்றான், அவனுடைய விருப்ப நடிகர் திரையில் செய்யும் விடயங்களை ஏற்றுக்கொள்ளும் மனம் மற்றொரு நடிகர் செய்யும் போது ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றது, ஏனெனில் நிழலையும் தான்டி நிசத்திலும் அந்த நடிகரை ஆராதிக்க ஆரம்பித்து விட்டான்.
இதில் குறிப்பிட்ட அளவிற்கு நடிகர்களின் பங்களிப்பும் உண்டு, மனித மனம் எப்போதும் புகழை விரும்பும், மற்றவர்கள் தம்மை பின் தொடர்வதை விரும்பும், திரையில் கிடைத்த புகழை நிசத்திற்கும் பயன்படுத்த விரும்புகின்றனர், விளைவு இரசிகர்களை தெய்வம் அது இது என்று புகழ ஆரம்பிக்கின்றனர் விளைவு ரசிகன் மேலும் போதை கொள்கின்றான்.
தமிழகத்திலே திரைத்துறையை சேர்ந்தவர்கள் முதல்வரானதும், திரைத்துறையில்
உள்ளோரின் அரசியல் பிரவேசமும் பல நடிகர்களை அடுத்த முதல்வர்
பதவிக்கு கணவுகாண வைக்கின்றது, பத்திரிக்கைகளும் திரைத்துறை தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றன.
தன்னைப்போன்றே ஒரு குறிப்பிட்ட நடிகரை ஆராதிக்கும் சிலருடன்
சேர்ந்து மன்றம் தொடங்குகின்றனர் ரசிகர்கள், இது வளர்ந்த நடிகர்களுக்கு
மட்டுமே, தொடக்ககாலங்களில் நடிகர்களே பணம் தந்து சொந்தங்களின்
மூலம், தெரிந்தவர்கள் மூலம் ரசிகர் மன்றங்கள் திறக்கின்றனர்.
ரசிகர் மன்றங்கள் திறக்கும் அல்லது அதில் இருப்பவர்களின்
முக்கிய நோக்கம் ஊரிலோ அல்லது தாமிருக்கும் பகுதியிலோ
தமக்கென்று ஒரு அடையாளம் வேண்டும் இது தான் முதல் காரணி
இதன் பிறகுதான் நடிகரின் மேலுள்ள பாசமெல்லாம்.
பெரும்பாலான நடிகர்கள் ரசிகர் மன்றங்களை ஒரு அரசியல் கட்சி
மாதிரியே உருவாக்கிக்கொண்டுள்ளனர், மாநில (அகில உலக:-)) ) தலைமை
மாவட்டத்தலைமை என ஒரு அரசியல் கட்சி போன்றே நடத்துகின்றனர்
அரசியல் கட்சியாக மாறும்போதும் அமைப்பு ரீதியாக இது உதவுமென்பதால்.
அகில உலகத்தலைமை எப்போதும் ஒரு சாதாரண ரசிகராக இருக்க மாட்டார்
ஒன்று நடிகரின் சொந்தக்காரராக அல்லது நெருங்கிய நண்பராக இருப்பார்.
இதில் நடிகரின் மனைவிக்கும் அகில உலகத்தலைமை ரசிகர் மன்றத்தலைவருக்கும்
மன்றங்களை கட்டுப்படுத்துவதில் குழு மோதல் ஏற்படும்(இதைப்பற்றி விரிவாக பிறகு பார்ப்போம்), இப்படியாக மன்றங்கள் எப்போதும் சொந்தங்களின் கட்டுப்பாட்டில்தான்
இயங்கும், மன்றங்கள் கூட சொந்தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தான்
படத்திலும் நேரிலும் வாரிசு,குடும்ப அரசியலை எதிர்த்து கூப்பாடு போடுவர்,என்னே ஒரு பார்வை!!!
சரி மன்றங்களின் அடையாளம் என்ன?
ஒரே ஒரு பெயர் பலகை.
பெரும்பாலான மன்றங்கள் ஒரு சிலரின் முயற்சியால் தான் ஆரம்பிக்கப்படும்
ஆனால் பெயர் பலகையில் பெயர் போடவேண்டுமே,தலைவர்,துணைத்தலைவர், செயளாலர், துனை செயளாலர், இணை செயளாலர்,பொருளாளர், துனை பொருளாளர், இணை பொருளாளர், கௌரவ தலைவர்,கௌரவ செயளாலர் இது மட்டுமின்றி உறுப்பினர்கள்,
எங்கே செல்வர் இத்தனை பேருக்கும், எனவே மன்றம் ஆரம்பிப்போரின்
நண்பர்கள், சகோதரர்கள், மாமன், மச்சான்கள் பெயரெல்லாம் அவர்கள்
அந்த நடிகரின் ரசிகர்கள் இல்லையென்றாலும் ஒவ்வொரு பதவியோடு மன்றப்பலகையில் அலங்கரிக்கும், பெயருக்கு முன் கட்டாயம்
நடிகரின் பெயர் இடம்பெற வேண்டும். இங்கேதான் பெரும்பாலான நடிகர்கள்
கோட்டை விடுகின்றனர், ரசிகர் மன்றம், உறுப்பினர்கள் கணக்கெல்லாம் போடும் போது
இவர்களெல்லாம் நடிகரின் தீவிர ரசிகர்களின் கணக்கில் வருகின்றனர், ஆனால் உண்மையில் அப்படியல்ல.

பெரும்பாலான மன்றங்களுக்கு இந்த பெயர்பலகையைத்தவிர வேறொன்றுமிருக்காது,குறைந்தபட்சம் ஒரு கொட்டகைக்கூட இருக்காது. பெயர் பலகை வைத்தவுடன்
மன்றத்தை பதிவு செய்யும் சடங்கு உள்ளது, மன்றத்தின் பெயரை தலைமை மன்றத்திடம் பதிவுசெய்வது மிக அவசியம், அப்போதுதான் நாளை அரசியல் இயக்கமாக மாறும்போது அங்கீகாரம் கிடைக்கும், இதைவிட முக்கிய விடயமென்றால்
தலைமையிடமிருந்து ரசிகர் மன்றங்களுக்காக பணம் தரப்படுவது பதிவு செய்யப்பட்ட
மன்றங்களுக்கு மட்டுமே, மன்றங்களை பதிவு செய்யும் போது குறைந்தது 25 நபர்கள்
ரசிகர்களாக கணக்கு காட்டப்படவேண்டும், எனவே பல பெயர்களை தாமாகவே எழுதி
கையெழுத்தும் போட்டு அனுப்பவர் மன்ற நிர்வாகிகள், இந்த பெயர் பட்டியலையும்
பார்த்து தம் ரசிகர்களின் பலத்தை தவறாக கணிப்பர் நடிகர்கள்.
அகில உலகத்தலைமையிடமிருந்து பணம் மாவட்ட தலைமைக்கு அனுப்பப்படும்
அங்கிருந்து பணம் நகரத்தலைமைக்கும் அங்கிருந்து ஒவ்வொரு மன்றத்துக்கும்
தரப்படும். ஆனால் இந்த பணத்தை பிரித்துக்கொள்வதில் மன்றங்களுக்குள்
பெரிய குழு மோதலே நடக்கும். இந்த பணத்தை வைத்து நடிகர்களின் படம்
வெளியாகும்போது கட்-அவுட் வைப்பதும், சுவரொட்டி அடிப்பதும், பேனர்கள் கட்டுவதும் நடக்கும், இந்த கட்-அவுட், தோரணங்கள், சுவரொட்டி
களை வண்ணப்படம் எடுத்து தலைமைக்கு அனுப்பிவைப்பர், இது அவர்கள்
பெற்ற பணத்திற்கு செய்த செலவிற்கான கணக்கு காண்பிப்பதற்காக,எல்லா நடிகர்களின் தலைமை மன்றங்களும் ரசிகர் மன்றங்களுக்கு பணம் அனுப்பவதில்லை, அந்த மாதிரி நடிகர்களின் மன்றங்களுக்கு கட்-அவுட் வைக்க,சுவரொட்டி அடிக்க, கொடித்தோரணம் கட்ட செலவு செய்ய பணம் எப்படி கிடைக்கின்றது?.

No comments: