நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, November 21, 2010

பா.ம.கவின் தோற்றமும் வளர்ச்சியும்.........

பாமக 1989 ம் ஆண்டு மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்டது.
அவருக்கு தோளோடு தோள்நின்று இந்த கட்சியை உருவாக்கியவர்கள் பலர்,இதில் தலித் சமுதாயத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன், தலித் எழில்மலை ஆகியோர் முக்கியமானவர்கள். பாமகவின் கொள்கைகள் சட்டதிட்டங்கள் எல்லாம் முன்னாள் நீதிபதி,முன்னாள் இ.ஆ.ப (IAS) அதிகாரிகள் மற்றும் பல கற்றறிந்த பெரியவர்களாள் உருவாக்கப்பட்டது.
பாமகவின் கொள்கைகள் என்ன?
கம்யூனிசத்தின் சிறந்த அம்சங்கள், சோஷலிசத்தின் முக்கிய அம்சங்கள், பெரியாரின் திராவிட கொள்கைகளில் சில, டாக்டர் அம்பேத்கார் அவர்களின் கொள்கைகள் என அனைத்து முக்கிய இசங்களிலிருந்தும் சிறந்தவைகள் கலந்த கலவைதான் பாமகவின் கொள்கை.
பாமக ஒரு வன்னியர் கட்சியா?
நிச்சயமாக இல்லை, பாமகவின் சட்டதிட்டங்களிலும் சரி கொள்கைகளிலும் சரி ஒரே ஒரு இடத்தில் கூட வன்னிய சமுதாயத்தின் பெயரோ வன்னியர்களுக்காக என்றோ குறிப்பிடப்படவில்லை, அதன் தொடக்க காலத்தில் பல மேல்மட்ட தலைவர்கள் தலித்,நாடார்,முசுலீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், இன்றும் கூட பல வன்னியரல்லாதோர் பாமகவில் கட்சி பொறுப்பிலும், சட்டமன்ற,பாராளமன்ற உறுப்பினராகவும்,ஏன் மத்திய அமைச்சராகவும் கூட இருக்கின்றனரே, பிறகெப்படி இது வன்னியர் கட்சி என முத்திரை குத்தப்பட்டது, அங்கேதான் நமது தமிழ் பத்திரிக்கை ஊடகம் விளையாடிவிட்டது, இது பற்றி விரிவாக இன்னொரு பத்தியில் பார்ப்போம்.
பாமக கொடியிலே உள்ள நீல நிறம் தலித் சமுதாயத்தையும், மஞ்சள் நிறம் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தையும், சிவப்பு கம்யூனிசத்தையும் குறிப்பவை.
பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம் அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.
பாமகவின் முதல் தேர்தல் களம்
1989
ம் ஆண்டு கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பாராளுமன்ற தேர்தலை எதிர்கொண்டது. தனித்தும் போட்டியிட்டது, தருமபுரி,திண்டிவனம்,சிதம்பரம் தொகுதிகளிலே இரண்டாம் இடம், அதுவும் தருமபுரியிலே 10,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி, கடலூரிலே 95,000 வாக்குகள், இன்னும் பல தொகுதிகளிலே ஒரு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று முதல் தேர்தலிலேயே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாவிட்டாலும், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மாநில கட்சி என தேர்தல ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
பிற தேர்தல்கள்

1991
சட்டமன்ற தேர்தல்
வெற்றி -1,இரண்டாமிடம் 12,இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் - 21 பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் - 60கூட்டணி - இல்லை
அலை - ராஜீவ் காந்தி படுகொலை

1996
சட்டமன்ற தேர்தல்
வெற்றி -4,இரண்டாமிடம் 7,இருபதாயிரம் வாக்குகளுக்கு மேல் - 16 பத்தாயிரம் வாக்குகளுக்கு மேல் - 35கூட்டணி - இல்லை
அலை - ஜெயலலிதா எதிர்ப்பு

1998
பாராளுமன்ற தேர்தல்
வெற்றி -4,போட்டியிட்டது - 5இரண்டாமிடம் 1,
கூட்டணி - அதிமுக,பாஜக,மதிமுக
அலை - இல்லை

1999
பாராளுமன்ற தேர்தல்
வெற்றி -5,போட்டியிட்டது - 8,இரண்டாமிடம் - 3,கூட்டணி - திமுக,பாஜக,மதிமுக
அலை - இல்லை

2001
சட்டமன்ற தேர்தல்

வெற்றி -22,போட்டியிட்டது - 27,இரண்டாமிடம் - 5,கூட்டணி - அதிமுக,காங்கிரஸ்
அலை - இல்லை

2004
பாராளுமன்ற தேர்தல்
வெற்றி -6,போட்டியிட்டது - 6,இரண்டாமிடம் - 0,கூட்டணி - திமுக,காங்கிரஸ்,மதிமுக
அலை - இல்லை
தேர்தல் பாதையை பார்க்கும் போது எந்த கூட்டணியில் பாமக இருக்கின்றதோ அந்த கூட்டணிதான் வெற்றி பெற்றுள்ளது.
இனி நேரடியாக விடயத்துக்கு வருவோம்
மருத்துவர் இராமதாசு மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் பற்றி அலசுவோம்
தலித் விரோதம்
தலித் இனத்தின் மீது எப்போதும் மருத்துவர் விரோதம் காட்டியதில்லை, சில வன்னிய இனத்தை சேர்ந்தவர்கள் காட்டியிருக்கின்றனரே தவிர மருத்துவர் காட்டியதில்லை. பாமகவின் பொதுச்செயலாலர் பதவி தலித் இனத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என பாமகவிலே சட்டமே உண்டு
பாமக ஆட்சி கட்டில் ஏறினால் ஒரு தலித்தை முதல்வராக்குவதாக சபதம் செய்துள்ளது
முதன் முதலில் மத்திய அமைச்சர் அதுவும் ஒரே ஒரு பதவி பாமகவிற்கு கிடைத்த போது அது கொடுக்கப்பட்டது வன்னியருக்கல்ல தலித்.இரா.எழில்மலைக்கு, அதன் பின் டாக்டர்.பொன்னுசாமி அமைச்சராக இருந்தார்.
தமிழ்குடிதாங்கி என்ற பெயர் புரட்சிகலைஞர்,சூப்பர்ஸ்டார்,இளையதளபதி போல் தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயரல்ல,குடிதாங்கி என்ற ஊரிலே தன் சொந்த சாதி மக்களை எதிர்த்து தலித் இனத்திற்காக போராடியதால் திருமாவளவன் என்ற தலித்தலைவரால் சூட்டப்பட்டப்பெயர்தான்.

1987
லே வன்னியர்களின் போராட்டத்தை தடுக்க சாதித்தீ கொளுத்திவிடப்பட்டு எச்சங்களும் மிச்சங்களுமாக அமைதியை குலைத்த நாட்களிலே தலித் சமுதாயத்திலும் வன்னிய சமுதாயத்திலும் மாறி மாறி படுகொலைகள் நடந்தேறின. அப்படி ஒரு சில தலித்களால் படுகொலைசெய்யப்பட்டவரின் இறுதிச்சடங்களிலே நான் கலந்து கொண்டபோது மருத்துவர் இராமதாசு துக்கம் விசாரிக்க வருவதாக தகவல் வந்தது, அப்போது அங்கு கூடியிருந்த பலர் ஆமா இவரு வந்து என்ன சொல்லுவாரு பொறுமையாயிருங்க பேசித்தீர்க்கலாம்னு தான் சொல்வாரு, வேற என்ன சொல்வாரு என்பதிலிருந்தே தலித் சமுதாயத்தோடு மோதல் போக்கை அவர் விரும்பவில்லை.
வடதமிழ்நாட்டில் தலித் மற்றும் வன்னியர் சமுதாயங்கள் அரசியலில் ஒன்று சேர்ந்தால் வேறு எந்த கட்சியும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலாத நிலை, இரண்டு அடித்தட்டு சமுதாயங்களின் ஒற்றுமை மற்று அரசியல் எழுச்சிக்காக கணக்கிட்டு அரசியல் நடத்தி வருகின்றார்
தலித் இனத்தவருக்கு வட தமிழ்நாட்டிலே சரியான தலைவர் இல்லாதபோது மதுரையிலிருந்த திருமாவளவனை வட மாவட்ட மக்களுக்கு அறிமுகப்படுத்தியதே மருத்துவர்தான்.
கொள்கையற்ற கூட்டணித்தாவல்
முதலிலேயே ஒரு கேள்வி திமுக , அதிமுக வோடு மாறி மாறி கூட்டணி வைத்துகொள்கிறார் என்று குற்றம் சாட்டுபவர் எவரும் ஏன் திமுகவும் அதிமுகவும் கூட்டணியில் சேர்த்துக்கொள்கின்றன, ஏன் திமுக,அதிமுகவை கொள்கையற்ற கூட்டணி என தாக்குவதில்லை, அதுவும் மருத்துவர் இராமதாசை தாக்கும் அளவுக்கு தாக்குவதில்லை
ஏன் கொள்கை கொள்கையென பேசியபோது கொள்கை பிடிப்போடு இருந்தபோது இந்த பத்திரிக்கைகளும் இன்று அவர்மீது மட்டையடிப்பவர்களும் பாராட்டினர்களா? இல்லையே எழுத்தாளர்களிலே ஞானியையும் பத்திரிக்கைகளிலே நக்கீரனைத்தவிர மற்ற அனைவரும் இடித்துரைப்பதேயேதான் தொழிலாக வைத்துள்ளனர்.

1996
தேர்தலுக்குமுன் செல்வி.ஜெயலலிதா ஆட்சியின்போது 7 கட்சி கூட்டனியை உருவாக்கி அதன் சார்பாக திண்டிவனத்திலே மாநாடும் போட்டு அப்போது அடுத்த முதல்வர் கருணாநிதி தான் என உரக்க கூறியவர் மருத்துவர், ஆனால் அந்த சமயத்திலே கூட்டணியிலிருந்து துரத்தப்பட்டார்.
அப்போதும் தனியாக நின்று 4 தொகுதிகளிலே வென்றனர், ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என உதயசூரியனுக்கு ஓட்டே போடாதா வன்னிய இனப்பெண்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்தனர். இது பாமக வை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது மாநிலகட்சி என்கின்ற தகுதி இழப்பும் யானைசின்ன இழப்பும் நடந்தது.

1998
நாடாளுமன்ற தேர்தல், திமுக,அதிமுக இரண்டோடும் கூட்டணிக்கு தயாராக உள்ளோம், ஆனாலும் திமுகவோடு கூட்டணி காண விரும்புகிறோம். மாநில கட்சி தகுதி பெற குறைந்தது 2 பாராளுமன்ற தொகுதியிலே வெற்றி பெற வேண்டும், ஆணால் திமுகவோ ஒரே ஒரு தொகுதி மட்டுமே தரமுடியும் என கேவலப்ப்டுத்தியது. இங்கே தான் கருணாநிதியன் ராசதந்திரம் எம்.ஜி.ஆர் க்கு அடுத்தப்டியாக இராமதாசுவிடமும் அடிவாங்கியது.
இதே போல் மீண்டும் 2001 சட்டசபைதேர்தலிலே பாமக வை கழற்றிவிட்டு திமுக தோற்றது, அந்த பாடங்கள் தான் இப்போது கூட்டணியை சிதறவிடாமல் காப்பாற்றிக்கொண்டுள்ளார்.
கூட்டணி மாற்றத்திற்காக கொள்கை அளவில் எதையும் பாமக விட்டுத்தரவில்லை, பிற்படுத்தப்பட்ட சமுதாய முன்னேற்றத்தை விட்டுத்தந்தனரா? தமிழ் மொழி,சமுதாய வளர்ச்சியை விட்டுதந்தனரா?
பாமகவை தாக்குபவர்கள் திமுக,அதிமுக,பாஜக,காங். எல்லாம் எக்காலத்திலும் ஒரே கூட்டணியில் இருப்பதாக எண்ணுகின்றனரோ?

நன்றி-குழலி

No comments: