நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, November 21, 2010

மருத்துர் அய்யாவின் பலவீனம் எது....

நடிகர்களின் மீதான விமர்சனங்கள்
மற்ற சி(ப)ல அரசியல்வாதிகளைப்போல் குளிரூட்டப்பட்ட அறையிலே அமர்ந்து கொண்டு, பெரிய பணக்காரர்களோடும், தொழிலதிபர்கள், பண்ணையாளர்களின் ஆதரவோடும் அரசியல் செய்பவரல்ல மருத்துவர். செல்போனை தட்டினால் தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொண்டு வந்து கொட்டப்படும் நிலையும் இல்லை, நீரிழிவு மற்றும் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய அளவிலும் கிராமங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருபவர்தான் மருத்துவர்.
அப்படி சுற்றுப்பயணங்கள் சென்றபோது தமிழர்கள் முக்கியமாக இன்றைய இளைஞர்கள் திரைப்படம் என்ற மாயையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது, ஒரே ஒரு படிப்பகம் கூட இல்லாத குக்கிராமங்களில் கூட அரிதாரம் பூசும் பல நடிகர்களுக்கு ஆரத்தி எடுக்க ரசிகர்மன்றங்கள் இருந்தன, ஒவ்வொரு ஊரிலும் ரஜினி,விஜயகாந்த,கமல்,அஜீத்,விஜய் தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர் மன்றங்கள் என குறைந்த பட்சம் 7 ரசிகர்மன்றங்கள் இருக்கும், அருண்குமார் மற்றும் இன்னும் பல நடிகர்களின் மன்றங்களை கணக்கில் சேர்க்கவில்லை.
இளைஞர்களின் வாழ்க்கை,பலம் இப்படி வீணாவதை எண்ணித்தான் திரைப்படங்களின் பெயரால் நடிகர்கள் நிசத்தில் போடும் வேடங்களை கலைக்க குரல் கொடுத்தார், அது மாதிரியே திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதாவே தொடப்பயந்த ரஜினி என்ற மாயையை உடைத்து அவரின் உண்மை பலத்தை நாட்டுக்கும் புரியவைத்தார்.
ரஜினிகாந்த் பற்றிய சுந்தரமூர்த்தியின் பதிவையும், விஜயகாந்த் பற்றிய எனது பதிவையும் கீழ்கண்ட சுட்டிகளில் படியுங்கள்


நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்


விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?


இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்
இந்த மூன்று பதிவுகளும் இவர்களின் முகமூடியை கிழித்தெரியும்...
இதற்குமேல் இந்த இருவரைப்பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை
மற்ற எந்த ஊடகத்தையும் விட திரைப்பட ஊடகம் அதிக வலிமை வாய்ந்தது, குழந்தைகளைக்கூட பாதிக்ககூடிய ஊடகம், அப்படிபோடு போடு பாடலை முழுவதுமாக பாடிக்காட்டும் குழந்தையையும், சித்தப்பா விஜய் அங்கிள் சவால் சொல்றாரு என 3 வயது குழந்தையும் கூறும் பொழுது இந்த திரைப்படங்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என புரியவில்லையா? அந்த திரைப்படத்திலே சமூக பொறுப்போடும் தமிழ்ப்பற்றோடும் எடுங்கள் என கூறுவதில் என்ன தவறு?கச்சத்தீவை ஏதேதோ காரணம் கூறி இலங்கையிடம் தாரைவார்த்தது இந்தியா, அதனால் இன்றும் மீனவர்கள் படும் துயரங்கள் எத்தனை எத்தனை, அந்த கச்சத்தீவை மீட்கப்போராடி கைதானவர்தான் மருத்துவர், ஈழத்தைப்பற்றி பேசினாலே ஏதோ தேசத்துரோக குற்றம் செய்தது போல விமர்சிக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் இன்றுவரை ஈழப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளிப்பவர், புலிகளை ஆதரித்து பேசியதற்காக பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டபோதும் கூட, புலித்தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டுவரவேண்டும் என தீர்மானம் சட்டசபையிலே கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க திமுக கூட பயந்து பின் வாங்கி நடுநிலை எனக்கூறியது, அப்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து தீர்மானத்தை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கான தார்மீக ஆதரவை தெரிவித்தனர், தமிழ் பெயரைச்சொல்லி யாரும் தமிழகத்திலே அரசியல் செய்யமுடியாது, தமிழ்ப்பெயரைச்சொல்லி யாராலும் ஒரு வாக்குகூட கூடுதலாகப்பெறமுடியாது, அந்த காலம் மலையேறிவிட்டது, மருத்துவரின் போராட்டம் தமிழின்,தமிழினத்தின் மீதான பற்றுதலாலொழிய அரசியலால் அல்ல, ஆனால் அவரது தமிழ் போராட்டங்களை கொச்சை படுத்திக்கொண்டுள்ளனர் பலர், இதில் பலருக்கு கர்னாடகவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வருபவர்கள் தமிழர்களை இரட்சிக்கப்போவதாக கனவு வேறு.
மருத்துவர் இராமதாசு மற்ற அரசியல்வாதிகளைப்போல அன்போடு ஆரத்தழுவுவதுபோல முதுகிலே கத்தியை இறக்குபவர் அல்லர், அடுக்கு மொழியிலே அழகுத்தமிழிலே நயமாக பேசும் அரசியல்வாதியல்ல, கேமராவின் முன்னால் மட்டுமல்லாமல் எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் நடிக்கும் மனிதர்களுக்கிடையில் மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லும் குணம் படைத்தவர், ஆதரித்தால் பலமாக ஆதரிப்பதும் எதிர்த்தால் பலமாக எதிர்ப்பதும் இவரது இயல்பு, நாளை இவரோடு கூட்டணி வைத்தால் என்ன செய்வது, இவரை ஆதரித்தால் என்ன செய்வது என எண்ணி பசப்பு மொழிகள் பேசி கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுபவர் அல்ல, இவருடைய பேச்சும்,செயல்களும் அதிரடியாக இருக்கும், இதுதான் இவருடைய மிகப்பெரிய பலம், மிகப்பெரிய பலவீனமும் கூட, இவருடைய இந்த அதிரடிப்பேச்சினால் தான் செல்வி.ஜெயலலிதாவும், திரு.கருணாநிதியும் மோதிப்பார்க்க பயந்த ரஜினியுடன் மோதி ரஜினிக்கு இருந்த மாய பலத்தினை உடைத்தெறிந்தவர், இது தமிழினம் மறுமொரு நடிகரால், வேற்று மாநிலத்தவரால் ஆளப்படாமல் தப்பித்தது, இது மருத்துவர் இராமதாசினால் அடைந்த மிகப்பெரிய பலன். அதிமுகவோடு கூட்டணியைப்பற்றி மருத்துவர் கூறிய கருத்துகள் எமக்கு மிக அதிர்ச்சியை தந்தன.இந்த பேச்சுதான் அவருடைய பலவீனம், ஒரு தேர்ந்த அரசியல்வதிக்கான அரசியல் தந்திரம் (நயவஞ்சகம்?) அவரிடமில்லை, மனதில் பட்டதை நேரம் காலம் தெரியாமல் பேசுவது அவருடைய பலவீனம்.

நன்றி-குழலி

No comments: