நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, November 29, 2010

கி.மு.வில் வன்னியர்கள்...

பதினேழாம், 18 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையில் சேவை புரிந்த ஐரோப்பிய அதிகாரிகளும், வரலாற்று ஆசிரியர்களும் இலங்கையின் சமுதாயங்களைப் பற்றிச் சில சமயங்களிலே தெளிவான உறுதியான குறிப்புகளை எழுதியுள்ளனர்.
இலங்கையில் ஒல்லாந்தர்களின் வசமாக இருந்த பிரதேசங்களை ஆங்கிலேயர்கள் போர் புரியாது, இரத்தம் சிந்தாது பெற்றுக் கொண்டார்கள்.
பிரஞ்சுப் புரட்சியாளர்கள் ஓல்லாந்து நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அங்கு வற்றேவியக் குடியரசு என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அரசன் அங்கிருந்து இங்கிலாந்துக்கு ஓடி விட்டான். இலங்கைப் பிரதேசங்களை இங்கிலாந்துக்கு ஒரு உடன்படிக்கை மூலம் வழங்கினான். 1796 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள பிரித்தானியரின் கொம்பனி அரசாங்கம் இலங்கைப் பிரதேசங்களைப் பொறுப்பேற்றுக் கொண்டது.
அதன் பின்பு பிரித்தானியா, ஒல்லாந்தர் வசமிருந்த பிரதேசங்களின் நிர்வாகம், நீதிபரிபாலனம் என்பன தொடர்பான ஒரு அறிக்கையினை கிளைக்கோர்ண் (cleghorn) என்பவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
அவர் கொழும்பிலுள்ள ஒல்லாந்தர்களின் ஆவணச் சுவடிகள் நிலையத்திற்குப் பொறுப்பாக இருந்தவர். அம்ஸ்ரடாம் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். அதீதமான கல்வித் தகைமையுடன் நிர்வாக சேவையில் அனுபவமும் கொண்டிருந்தார்.
இலங்கைத் தீவின் குடியானவர்களைப் பற்றிச் சொல்லும்போது, இரண்டு தேசிய இனங்களைப் பற்றி குறிப்பிடுகின்றார். சிங்களவர், தமிழர் குறித்து அவர்களை அவ்வாறு வர்ணிக்கின்றார்.
புராதன காலம் முதலாக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வாழுகின்றன. தென்மேற்கு கரையோரங்களிலும் மத்திய பகுதியிலும் வாழ்பவர்கள் சிங்களவர் என்றும், வடக்கிலும் கிழக்கிலும் உள்ள மாவட்டங்களில் வாழ்பவர்கள் தமிழர்கள் என்றும் குறிப்பிடுகின்றார்.
ஒல்லாந்த அதிகாரிகளின் ஆவணக் குறிப்புகளின் அடிப்படையைக் கொண்டும் அக்காலத்தின் சனத்தொகையின் அடிப்படையிலும் அவர் இவ்வாறு இரு தேசிய இனங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
சுரொய்டர் என்பவர் 1760 இல் எழுதிய இலங்கை நிர்வாகம் பற்றிய விபரமான அறிக்கையில் இதே போன்ற கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஒல்லாந்தர் வசமுள்ள பிரதேசங்கள் இரு வெவ்வேறான பிரிவுகளைக் கொண்டுள்ளன என்றும், ஒன்றிலே சிங்களவரும் அதாவது தென் மேற்கிலே சிங்களவரும் வடகிழக்குப் பகுதியிலே தமிழரும் வாழ்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்குப் பிராந்தியத்தில் நிர்வாக அதிகாரிகளாக இருந்த ஒல்லாந்தர்கள் அப்பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றிச் சொல்லும் விபரங்களும் கிளெகோர்ன் கூறுவதை உறுதிப்படுத்துகின்றன.
ஃபான் சென்டெல் (Van senden) என்ற திருகோணமலைக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி 1786 இல் தினக்குறிப்புப் பதிவேடு ஒன்றை எழுதியுள்ளார்.
அவர் திருகோணமலை பற்று, தம்பலகாமம் பற்று, கொட்டியாரம் பற்று, கட்டுக்குளம் பற்று ஆகிய நான்கு பிரிவுகளிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று அங்குள்ள குடியானவர்கள், இயற்கை வளம், வயல் நிலங்கள், தோப்புகள், கைத்தொழில்கள் முதலானவற்றைக் குறித்த விபரங்களை எழுதியுள்ளார்.
இந்த நான்கு பிரிவுகளிலும் அடங்கிய கிராமங்களில் தமிழரும் முஸ்லிம்களுமே வாழ்ந்தனர் என்று அவர் குறிப்பிடுகின்றமை கவனத்திற்குரியது. குடியானவர்களில் வேறெந்த இனத்தவர்களும் அடங்கியிருந்ததாக அவருடைய பதிவேட்டில் ஓர் இடத்திலாவது சொல்லப்படவில்லை.
திருகோணமலை நகரப்பற்று தவிர்ந்த ஏனைய மூன்று பற்றுகளிலும் பரம்பரையாக ஆட்சியுரிமை பெற்றிருந்த வன்னியர்களைப் பற்றி அவர் குறிப்பிடுகின்றார். அவர் இந்த ஊர்களுக்குச் சென்றபோது இந்த மூன்று பற்றுகளிலும் பதவியில் இருந்த வன்னிபங்களின் பெயர்களைக் காணலாம்.
திருகோணமலை போலவே மட்டக்களப்புப் பகுதியிலும் ஒரு தனியான நிர்வாக அலகை ஒல்லாந்தர் உருவாக்கியிருந்தனர். வழமைப்படி மட்டக்களப்பு தொடர்பாக மேஜர் புர்நாட் (Major Bournanad) ஒரு விரிவான அறிக்கை எழுதியுள்ளார்.
அதிலே அப்பிரதேசத்து நிர்வாக, பொருளாதார, சமூக விடயங்கள் பற்றி மிக விரிவான குறிப்புகள் அமைந்துள்ளன. தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய இருசாரார் மட்டுமே அங்கு வாழ்ந்த குடியானவர்கள் என்று சொல்லப்படுகின்றது.
ஸ்கொட்லாந்தில் பிறந்தவரான ரொபேட் நொக்ஸ், கண்டி இராச்சியத்திற்கு வந்திருந்த சமயத்தில் அரசாங்கம் அவரைக் கைதுசெய்து தடுப்புக் காவலில் வைத்திருந்தது.
பல்லாண்டுகள் அவர் இவ்வாறு காலம் கழித்ததால், சிங்கள மொழியையும், கண்டி சமுதாயத்தையும் அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் சிறையிலிருந்து இரகசியமாக வெளியேறி, வடக்குப் பக்கமாகப் பிரயாணம் செய்து நுவரகலாபியாவை அடைந்தார்.
அங்கிருந்து வடக்குநோக்கிச் சென்றபோது, சிங்கள மொழியினைப் புரிந்துகொள்ள முடியாத சமூகத்தவரை எதிர்நோக்கினார்.
ஒரு சமயம் அவருக்கு அச்சம் ஏற்பட்டது. தன்னைக் கைப்பற்றி கண்டி அரசனிடம் அனுப்பிவிடுவார்களோ என்ற ஏக்கம் உண்டானது. ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக அவர் தப்பி ஓடுவதற்கு அவர்கள் உதவி புரிந்தார்கள்.
ரொபேட்நொக்ஸ் தமிழ் மொழி பேசப்படுகின்ற, தமிழர் தேசம் பற்றி தனது நூலிற் குறிப்பிடுகின்றார். குருந்துஓயா என்கின்ற ஆறு கண்டி இராச்சியத்துக்கும் இந்த தமிழ் தேசம் என்பதற்கும் எல்லையாக அமைந்தது என்றும் குறிப்பிடுகின்றார்.
குருந்து ஓயாவைக் கடந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது, அவர் தமிழர் வாழும் விவசாய கிராமம் ஒன்றை அடைந்தார். அங்கே அவர்கள் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் காளைகளையும், வண்டிகளையும் பார்த்தார்.
இவர் சென்றபோது அங்குள்ள புலோக்களிலே குரக்கன் விளைந்திருந்தது. அங்குள்ளவர்களால் சிங்கள மொழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
வேறொரு இடத்திலே அவர் தமிழர் தேசம் என்று குறிப்பிடும் நிலப்பிரிவை கைலாயவன்னியன் நாடு என்று வர்ணிக்கின்றார். அவர் வடக்கிலுள்ள தமிழர் வாழும் வன்னிப் பிரதேசத்தை கைலாய வன்னியன் நாடு என்று சொல்கிறார் என்பது தெளிவாகிறது.
யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரால் சிதைக்கப்பட்டபோது கைலாயவன்னியன் அவர்களுக்கு அடங்காமல் சுதந்திரமாக தனது பற்றுக்களைப் பரிபாலனம் செய்தான்.
பிறவன்னியர்கள் அவரைத் தமது தலைவராக ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே வன்னி நாடு கைலாயவன்னியன் நாடு என்று 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களாற் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னியர்கள் போர்த்துக்கேயருக்குப் பின்பு ஒல்லாந்தர்களுக்கும் அடங்கிவிடாது கிளர்ச்சி புரியும் வழக்கம் உடையவர்கள். இதன்காரணமாகவே ‘அடங்காப்பற்று வன்னி’ என்று வர்ணிக்கப்பட்டது.
மேற்கிலும் கிழக்கிலும் கடல்வரை பரந்திருந்த வன்னிநாட்டை அடங்காப்பற்று என்றனர். அங்கே கைலாய வன்னியனுக்குப் பின்பு அத்திமாபாணன், நல்லமாப்பாணன், சேனாதிராய முதலியார், பண்டாரவன்னியன் என்னும் பிரபலமான வன்னியர்கள் வெவ்வேறு காலங்களில் அதிகாரம் செலுத்தினர்.
வன்னிநாட்டில் பனங்காமம், கரிகட்டுமூலை, கருநாவல்பற்று, மேல்பத்து, முள்ளியவளை, தென்னமரவடிப்பற்று, செட்டிகுளம் பற்று எனும் ஏழு பிரிவுகள் இருந்தன.
இவை ஒவ்வொன்றையும் வன்னிபம் என்ற பட்டம் பெற்ற தலைவர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் முடிசூடிக் கொள்வதில்லை. நாணயங்களை வழங்கவில்லை. மற்ற எல்லா அம்சங்களிலும் அரசருக்குரிய அதிகாரங்களைப் பெற்றிருந்தனர்.
நிர்வாகம், நீதி பரிபாலனம், ஆலயபரிபாலனம், வேளாண்மை முதலான துறைகளில் அவர்கள் அதிக அதிகாரம் கொண்டிருந்தனர்.
அதேபோல மட்டக்களப்பிலும் வன்னியரின் ஆட்சி பூர்வகாலம் முதலாக நிலைபெற்றிருந்தது. வெருகல் ஆறு முதலாக பாணமை வரையான சும்மார் 150 மைல் நீளமுடைய நிலப்பரப்பை கொண்டது முற்காலத்து மட்டக்களப்பு தேசம்.
அது எழுவான்கரை, படுவான்கரை என்ற பிரிவுகளைக் கொண்டது. நடுவிலமைந்த ஏரியின் காரணமாக இந்தப் பாகுபாடு அமைந்தது.
அங்கே ஏறாவூர், மட்டக்களப்பு, மண்முனை, பழுகாமம், போரதீவு, சம்மாந்துறை, நாடுகாடு, பாணமை என்ற குறுநிலப் பிரிவுகளைப் பற்றி மட்டக்களப்பு பூர்வ சரித்திரம், நாட்டார் பாடல், ஆலயங்களில் படிக்கும் பாடல்கள், ஐரோப்பியர் எழுதிய ஆவணங்கள் என்பவற்றின் மூலமாக அறிய முடிகின்றது.
அங்கு அதிகாரம் செலுத்தியவர்கள் குறுநில மன்னர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றனர். ஆயினும் ஒல்லாந்தர் காலத்து ஆவணங்கள் சிலவற்றில் இவர்களை ‘அரசர்’ என்றும் அவர்களின் ஆட்சிபுலங்களை இராச்சியங்கள் என்றும் குறித்துக் கொண்டனர்.
முற்காலங்களில் இவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள் என்றும் கண்டி மன்னனின் மேலாதிக்கம் ஏற்பட்டது என்றும் புர்ணண்ட் குறிப்பிடுகின்றார்.
கண்டி மன்னரின் மேலாதிக்கம் ஏற்பட்டிருந்த காலத்தில் மட்டக்களப்பு தேசம் என்று குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. சில சமயங்களில் அதனை முக்குவர் தேசம் என்றனர்.
வன்னியர்களிற் சிலர் முக்குவர் சமூகத் தலைவராக இருந்தனர். மட்டக்களப்பு தேசத்தில் வேளாண்மை முறை, சமுதாய அமைப்பு என்பன தனிப்பண்புகள் உடையவை.
இவற்றிற்குரிய மரபுகள் இலங்கையில் வேறெங்கும் காணப்படாதவை. வன்னியர் படைபலமும், அதிகாரங்களும் மட்டக்களப்பு தேசத்து வன்னிபங்களின் சுயாட்சி உரிமையின் அடிப்படையில் பிரதேசத்து நிர்வாக அதிகாரம் பெற்ற்றிருந்தனர்.
அவர்களுக்கு உரித்தான பற்றுக்களின் நிர்வாகம், நீதிபரிபாலனம், வரி சேகரித்தல், வேளாண்மை, ஆலயபரிபாலனம் முதலானவற்றில் அவர்கள் அதிகாரம் கொண்டிருந்தனர்.
யானை, தேன், மெழுகு ஆகியவற்றை சம்பிரதாய பூர்வமாக அரசனுக்கு திறையாகச் செலுத்த வேண்டும். போர் ஏற்படும் காலங்களில் அரசனுக்கு ஆதரவாக படைத்துணை வழங்க வேண்டும்.
அதுமட்டுமின்றி பலசமயங்களில் அரச படையின் தலைவர்களாக வன்னிபங்கள் கடமையாற்றியதாக அறிய முடிகின்றது. இராசாதானியில் குழப்பமும் தகராறும் ஏற்பட்டபோது சில சமயங்களில் ஒருசாராருக்கு ஆதரவு வழங்க நேர்ந்தது.
விமலதர்மனுக்கும் ஜெயவீரபண்டாரனுக்கும் இடையே போர் ஏற்பட்டபோது, மட்டக்களப்பு தேசத்து வன்னிபங்கள் ஜெயவீர பண்டாரனுக்கு ஆதரவாக அனுப்பியிருந்த படைகளின் விபரங்களைப் பிலிப்பூஸ் போல்டே (Philippus Baldaeus) வர்ணிக்கின்றார்.
பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களையும் அலியன் யானைகளையும் பொருள்களை ஏற்றிச்செல்வதற்கான வண்டிகளையும் காளை மாடுகளையும் இவர்கள் அனுப்பியதாக சொல்லப்படுகின்றது.
தமது பிராந்தியங்களில் சுயாட்சி அதிகாரம் பெற்றிருந்ததோடு, கிழக்கிலங்கை வன்னியர்கள் இராசதானியிலும் இராட்சியத்தின் அதிமுக்கியமான விடயங்கள் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கு பற்றினார்கள்.
அயல் நாட்டவரோடு மேற்கொள்ளப்போகும் போர் நடவடிக்கைகள், உள்நாட்டுக் கலகங்கள் தொடர்பான விடயங்கள், ஆளும் அரசனுக்கு பின்பு அவனுடைய வாரிசை நிர்ணயித்தல் போன்ற விடயங்களைப் பிரதானிகளோடு கலந்து ஆலோசனை நடத்திய பின்னரே அரசன் தீர்மானிப்பான்.
இவ்வாறான கூட்டங்களில் சிங்களப் பிரதானிகளோடு கிழக்கிலங்கைத் தமிழ்ப் பிரதானிகளும் கலந்து கொள்கின்றமை குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்டியதாகும்.
ஒரு சமயத்தில் மட்டக்களப்பு வன்னிபம் குமார பண்டாரம், பழுகாமத்து வன்னிபம் செல்லப்பண்டாரம், போரதீவு வன்னிபம் தர்மசங்கரி, பாணமை வன்னிபம் சமரவாய் முதலானவர்கள் இராசதானியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரசன்னமாய் இருந்தார்கள்.
ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்தவரான ஸ்பில்பேர்கன் (Soilbergen) 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வந்திறங்கி, கண்டிராச்சியம் சென்றான்.
மட்டக்களப்பில் இறங்கிய போது அங்கு தர்மகங்காதரன் வன்னிபமாக விளங்கினான். அவனுடைய நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்த முதலியார் ஒருவர் கடற்கரைக்கு சென்று ஸ்பில்பேர்கனைச் சந்தித்தார்.
இருசாராரும் பரிசில்களை பரஸ்பரம் வழங்கிவிட்டு அடுத்தநாள் வன்னிபத்தின் ஏற்பாட்டினால் ஸ்பில்பேர்கனுக்கும் கப்பலில் வந்தவர்களுக்கும் விருந்துபசாரம் நடைபெற்றது.
அவர்களை வரவேற்கும் வண்ணமாக மூன்று யானைகள் கால்களை மடக்கி மரியாதை செய்தன என்று சொல்லப்படுகின்றது. வன்னிபத்தைச் சுற்றி 1400 வாட்படையினர் வந்திருந்த ஐரோப்பியர்களுக்கு மரியாதை செய்தார்கள்.
அதன் பின்னர், அதனை அடுத்த நாட்களில் வன்னிபத்தின் ஆதரவோடு ஒல்லாந்தர் கண்டி இராசதானிக்குச் சென்றனர்.

நாகர்களுக்கும் தென்னிந்தியாவில் வழங்கி இலங்கையிற் பரவிய பெரும் கற்படைப் பண்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கருதப்படுகிறது. இலங்கை வரலாற்றில் பெரும் கற்படைக் காலப் பண்பாடு பரவியதன் விளைவாக நாகரீக வளர்ச்சி ஆரம்பமாகியது.
இந்தப் பண்பாட்டின் செல்வாக்கு கிறிஸ்துவுக்கு முன் 5ஆம் நூற்றாண்டளவில் ஏற்பட்டது எனக்கருதலாம். பெரும் கற்படைக் கால பண்பாடு என்பது தென்னிந்தியாவில் கி.மு. ஆயிரமாம் ஆண்டளவில் ஆரம்பமாகிப் பரவியதொன்றாகும்.
அது கர்நாடக தேசத்திலிருந்து தெற்கு நோக்கிப் பரவித் தமிழகத்திலும் கேரளாவிலும் ஆந்திர தேசத்தின் சில பாகங்களிலும் பெரும் செல்வாக்கினை ஏற்படுத்தியது.
இப்பண்பாட்டைச் சேர்ந்த மக்கள் இரும்பின் உபயோகத்தை இப்பகுதிகளில் அறிமுகம் செய்தார்கள்.
தமிழகத்திலும் இலங்கையிலும் கர்நாடகத்திலும் புழக்கத்தில் உள்ள கத்தி, ஈட்டி, வாள் முதலிய கருவிகள் பெருமளவிற்கு வடிவமைப்பிலும் அளவிலும் பெரும் கற்படைக் காலத்தில் ஈமக் கல்லறைகளிற் கண்டெடுக்கப்பட்டனவற்றை ஒத்துள்ளன.
பெரும் கற்படைக் காலத்துப் பண்பாட்டு அம்சங்களை அவர்களின் ஈமக் கல்லறைகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. அவர்கள் பல விதமான ஈமச் சடங்குகளை வேறு வேறு கோலங்களில் அமைத்த கல்லறைகள், தாழிகள் போன்றவற்றில் பயன்படுத்தியுள்ளனர்.
பதுக்கை, கல்திட்டை, கல்வட்டம், குடைக்கல், ஈமத்தாழி, ஈமப் பேழை என்பன அவர்களாற் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், சில கல்லறைகளின் அண்மையில் நெடுநிலை என்று சொல்லப்படும் மிக உயரமான நடுகற்கள் காணப்படுகின்றன. இப்பண்பாட்டினுடைய அடையாளங்களாக அமைவன இரும்புக் கருவிகள், கருஞ்செம்மண் கலங்கள் ஆகியனவாகும்.
அவர்கள் கல்லறைகளிலே இறந்தோரின் சடலங்களைச் சில சமயம் முழுமையாகப் புதைத்தனர். சில சமயங்களில் ஈமத்தாழிகளில் சடலங்களை வைத்து அவற்றைப் புதைத்தனர்.
இறந்தவர்களின் சமுதாய நிலைக்கேற்ப சடங்குகளில் வேறுபாடுகள் ஏற்பட்டன. தலைவர்கள், வீரர்கள் இறக்குமிடத்து வாள்களை வைத்து அவற்றின் மேல் சடலத்தை வைத்தார்கள்.
தலை மக்களின் சடலங்களைப் புதைத்த இடங்களிலே நெடுநிலை அல்லது நடுகற்களை நிறுத்தினார்கள். இந்தப் பண்பாடு பரவியதன் காரணமாகக் கிராமிய வாழ்க்கை உற்பத்தி முறை என்பன வளர்ச்சியடைந்தன.
ஈமக் காடுகளுக்கு அண்மையில் அமைந்த சில குடியிருப்புக்களில் பல்லாயிரவர் செறிந்து வாழ்ந்தனர். வேளாண்மையும் வாணிபமும் கைத்தொழில் முறைமையும் விருத்தி பெறுவதற்கு இவர்களே காரணமாயிருந்தனர்.
இரும்புக் கருவிகளை உற்பத்தி செய்வதாற் காடுகளை அழித்து அல்லது காடுகளை வெட்டிப் பரந்த அளவில் வயல் நிலங்களை உருவாக்கினார்கள்.
பெரும் மரங்களை வெட்டிப் பெரும் கட்டிடங்களை அமைக்க முடிந்தது. கடற் பிரயாணங்களுக்கு வேண்டிய நாவாய்களையும் அவர்களாற் செய்து கொள்ள முடிந்தது. மீன்பிடித் தொழில், நீண்ட கடற் பிரயாணங்கள் என்பவற்றிலும் ஈடுபாடு கொண்டனர்.
இந்தப் பண்பாட்டையுடைய மக்கள் கடல் வழியாக இலங்கையை அடைந்தனர். முத்து, சங்கு முதலான கடல் வளங்களும் இரத்தினங்கள் போன்ற மலை வளங்களும் தேக்கு, முதிரை, கருங்காலி போன்ற காட்டு வளங்களும் அவர்களைக் கவர்ந்தன.
தென் இந்திய அல்லது தமிழகக் கரையோரங்களில் இருந்து இலங்கையின் கரையோரங்களுக்கு அவர்கள் சென்று குடியேறினார்கள். அவ்விதமான குடியேற்றங்களின் அடையாளங்கள் புத்தளம், மாந்தை, கந்தரோடை, கதிர்காமம், உகந்தை, கதிரவெளி, அநுராதபுரம் போன்ற இடங்களிற் கிடைத்துள்ளன.
இலங்கையில் இன்னும் வேறு பல இடங்களிலும் அவை காணப்படுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதற்கண்மையில் உள்ள தீவுகளிலும் முதன்முதலாகக் குடியேறிவர்கள் தமிழகத்தில் இருந்தும் சென்ற பெரும் கற்படைக் காலத்து மக்கள் என்பது இப்பொழுது தெளிவாகியுள்ளது.
அங்கு பழைய கற்காலத்தவர்களும் குறுணிக் கற்காலத்தவர்களும் வாழ்ந்தமைக்கு சான்று இல்லை. இரும்பு ஆயுதங்களால் நிலத்தை வெட்டி கிணறுகளை அமைத்து நீரை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் கொண்டிருந்ததனாற் பெரும் கற்படைக் கால மக்கள் அங்கு குடியேறினார்கள்.
இலங்கையின் வடமேற்கிலும் கிழக்கிலும் பரவிய அம்மக்கள் அங்கு வாழ்ந்த குறுணிக் கற்காலச் சமுதாயத்துடன் இணைந்து விட்டனர். இலங்கையின் ஏனைய பாகங்களிலும் வாழ்ந்த குறுணிக் கற்கால மக்கள் பெரும் கற்காலப் பண்பாட்டின் அம்சங்களை அறிந்து அவற்றை தாமும் பின்பற்றினார்கள்.
இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் மூதாதையர்கள் இந்த பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியிருப்புகளை ஏற்படுத்தி வேளாண்மை, மந்தை வளர்ப்பு, உலோகத்தொழில், மீன்பிடித் தொழில், வாணிபம், மரத் தொழில் முதலான தொழில்களில் விருத்தியடைவதற்கும் அவர்களும் அவர்களின் பிற்சந்ததியினரும் ஏதுவாக இருந்தனர்.
இலங்கைத் தமிழ்ச் சமுதாயம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உற்பத்தியைக் கொண்டது என்பது இப்போது தொல்லியற் சான்றுகளால் தெரியவருகிறது.
யாழ்ப்பாணத்திலும் வடக்கு வன்னிப் பிரதேசங்களிலும் கிழக்கிலங்கையிலும் அமைந்த குடியிருப்புக்கள் சிறு இராச்சியங்களாக இயங்கின. காலப்போக்கில் அவை இணைந்து கொண்டதினால் அப்பிரதேசங்களில் மத்திய காலத்தில் வளர்ச்சி பெற்றிருந்தன.
வன்னி இராச்சியங்கள் எல்லாம் கி.மு. காலத்துச் சிற்றரசுகளை மூலமாக கொண்டவை. அவை தொடர்ச்சியாக நிலைபெற்றிருந்தன. அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இராசதானிகளின் காலத்திலும் அவை நிலைபெற்றிருந்தன.
மகாவம்சம் துட்டகாமினியுடைய வடக்கை நோக்கிய படையெடுப்பை வர்ணிக்கும் போது தென்கிழக்கிலங்கையிலேயே அவன் 32 தமிழ் அரசர்களை வென்று அடக்கி விட்டு முன்னேறிச் சென்றான் என்று சொல்கிறது.
வேறும் ஒரு நூல் இந்தக் குறிப்பைக் குறிப்பிடுகின்றது. சீகளவத்துப்பஹரண என்பது அந்நூலாகும். இந்தக் குறிப்பை நவீன கால இலங்கை வரலாற்றில் மறைத்து விட்டார்கள்.
சிற்றரசர்கள் அல்லது குறுநில மன்னர்கள் தனியாகவும் கூட்டாகவும் வன்னி என்று சிறப்புப் பெயரால் குறிப்பிடுவது வழக்கமாகியது. நெடுங்காலமாக நிலைபெற்று வந்த குறுநிலப் பிரிவுகளை ஒரு காலகட்டத்தில் இவ்வாறு குறிப்பிடத் தொடங்கினார்கள்.
இலங்கையின் பல பாகங்களிலே தமிழ் பேச்சு மொழியாக வழங்கியமைக்கு ஆதியான பிராமிக் சாசனங்கள் ஆதாரமாகும். அவற்றிலே தமிழரை பற்றி கூறப்படுகின்றது.
அநுராதபுரம், பெரிய புளியங்குளம், திருமலையில் உள்ள சேருவில, அக்கரைப்பற்றில் உள்ள குடுவில் ஆகியவற்றில் கிடைத்த ஐந்து பிராமிக் சாசனங்களில் தமிழரைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அவர்கள் அனைவரும் பௌத்த சமயத்திற்கு ஆதரவு வழங்கிப் பிராகிருத பெயரைச் சூடிக் கொண்டார்கள்.
ஆதிகாலத்து இலங்கையில் வாழ்ந்த தமிழர் பெரும்பாலும் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதற்கு இந்த ஆதாரங்களும் வேறு பல சாசனங்களும் சான்றாக உள்ளன.
அநுராதபுர சாசனம் தமிழர்களாகிய சமணர்களைப் பற்றியும் கப்பலோட்டும் தமிழர்களை பற்றியும் குறிப்பிடுவதோடு, இளபரத எனும் ஒருவனையும் குறிப்பிடுகிறது.
பரதர் சமூகத்தவரையே இலங்கைப் பிராமிச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன என்ற கருத்தை முன்பு இளைஞரான இத்தாலிய ஆய்வாளர் ஒருவர் முன்வைத்தார். அந்த குறிப்பு அண்மைக்கால ஆய்வுகளினால் உறுதியாகிவிட்டது.
பொலன்னறுவையிற் கிடைத்த கல்வெட்டு ஒன்று பரதன் ஒருவனைப் பற்றி குறிப்பிடுகின்றது.
அது அவனைச் ‘சாகரிக’ என்று வர்ணிக்கின்றது. ‘சாகரிக’ என்பது கடலன் என்பதன் பிராகிருத மொழிபெயர்ப்பாகும்.
கடலன் என்பது புராதனமான தமிழகத்துச் சாசனங்களிற் பாண்டியர்கள் தொடர்பாகச் சொல்லப்படுகிறது.
கடலன் வழுதி என்பது அவற்றில் காணப்படுகின்ற ஒருவகை வர்ணனை. அவன் கடல் வாணிபம் செய்பவன் என்ற விளக்கம் இந்த கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ள கப்பல் வடிவத்தினால் உறுதியாகின்றது.
பரத என்று குறிப்பிடப்படுபவர் மீனவர் என்று கொள்வதற்கு நாணயம் ஒன்றில் காணப்படுகின்ற விபரங்கள் ஆதாரமாகின்றன.
அந்த நாணயத்தின் ஒரு புறத்தில் ‘பரத திசக’ (பரதனாகிய திசனுடையது) என்ற வாசகம் பிராகிருத மொழியிலும் பிராமி வரி வடிவங்களிலும் எழுதப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் மீன் உருவம் அமைந்திருக்கின்றது. பரத எனும் திசன் குலத்தால் மீனவரோடு தொடர்புடையவன் என்பது இதனாற் புலனாகிறது. பரதனைப் பற்றி 20க்கும் மேற்பட்ட சாசனங்களில் காணப்படுவது குறிப்பிடக்கூடியது.
புராதன காலத்து இலங்கையில் வாழ்ந்த பிராமணரிற் சிலர் தமிழராய் இருந்தனர். அரண்மனையிற் பிராமணரைப் புரோகிதராக நியமிப்பது வழக்கம்.
கி.மு. காலத்தில் அநுரா என்ற அரசி அதிகாரம் செலுத்திய காலத்தில் நீலிய என்ற தமிழ்ப் பிராமணன் புரோகிதராக இருந்தான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது.
கிழக்கிலங்கையிலும் சைவசமய தொடர்புடைய பிராமணர் இருந்தனர் என்பதை அந்நூல் மூலமாக அறிய முடிந்தது. கலந்த என்ற பெயருடைய கிராமத்திற் சிவலாயம் இருந்தமை பற்றிய குறிப்பு அதிலே உண்டு.
சாசனங்களிலும் மகா வம்சத்திலும் காணப்படுகின்ற குறிப்புகளின் அடிப்படையிற் பரத, வணிகர், பிராமணர் எனப் பல தொழில்கள் புரிகின்ற சமூகத்தவர்கள் இலங்கையில் தமிழ் சமுதாயத்தில் அடங்கியிருந்தார்கள் என்பது இப்போது தெளிவாகின்றது.
வட இலங்கையில் உள்ள வரலாற்றுச் சார்புடைய தமிழ் நூல்களில் ஆதிகால வரலாற்றைப் பற்றி அறிவதற்கு அவை எந்த வகையிலும் பயன்படவில்லை.
அவை காலத்தாற் பிற்பட்டவை. 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. ஆரிய சக்கரவர்த்தியின் குலத்து, யாழ்ப்பாணத்து அரசர்களுக்கு முற்பட்ட சமுதாய நிலைகள் பற்றி அவற்றின் ஆசிரியர்கள் எதனையும் அறிந்திருக்கவில்லை.
பெருங்கற்காலப் பண்பாடு பரவியபோது காலப்போக்கில் சில ஊர்களை மையமாகக் கொண்டு சிற்றரசுகள் தோன்றியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. ஆனைக்கோட்டையில் பெருங்கற்காலக் கல்லறை ஒன்றிற் கண்டெடுக்கப்பட்ட வெண்கல மோதிரம் ஒன்றில் கோவேதன் என்ற சொல் காணப்படுகின்றது.
கலாநிதி சி.பத்மநாதன்
ஓய்வுநிலை பேராசிரியர்
பேராதனை பல்கலைக்கழகம்

No comments: