நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Tuesday, November 16, 2010

ராமதாஸ் என்ன செய்தார் என்று கேள்வி கேட்பர்வர்களுக்கு ஒரு சிறிய பதில் இது








தமிழ் நாட்டு மக்கள் தொகையில் சுமார் 20% மக்கள் வன்னியர்கள் தான். ஆனால் இந்தப் பெரும்பான்மையான மக்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் கூலித் தொழிலாளிகளாக இருந்த நிலையில் தான் இவர்களின் முன்னேற்றத்திற்காக வன்னியர் சங்கம் பிறந்தது.இந்தச் சமுதாயத்தில் பிறந்து இம் மக்கள் பட்ட இன்னல்களை கண்டு இந்த இன்னல்களுக்கு ஒரு விடிவு தேட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அரசு மருத்துவராக இருந்த டாக்டர் ராமதாஸ் வன்னியர் சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். ஒவ்வொரு வன்னிய கிராமத்திற்கும் சென்று அந்த கிராமத்தின் உண்மை நிலையை கண்டு அம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டுமானால் இந்த சாதி மக்களின் எண்ணிக்கைக்கேற்ப விகிதாச்சார முறையில் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்று முடிவு செய்தார். அதனால் உதித்தது தான் இடஒதுக்கீட்டு போராட்டம். வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் மாநிலத்தில் 20%, மத்தியில் 2% கேட்டு துவங்கிய இடஒதுக்கீட்டு போராட்டம்.முதலில் உண்ணாவிரதம், ரயில் மறியல், ஒரு நாள் சாலை மறியல் என்று தொடங்கி பின் 1987ல் நடந்த 7 நாள் தொடர் சாலை மறியல் போராட்டம் தான் வன்னியர் சங்கத்தை உலகுக்கு அடையாளம் காட்டியது. தமிழகத்தின் வட மாவட்டங்கள் ஸ்தம்பித்தன. சென்னைக்கு ஏழு நாட்களும் எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. கிராமங்கள் தோறும் போலீசாரின் அடக்குமுறை. ஆண்கள் எல்லாம் சிறையில் இருக்க கிராமத்தில் எஞ்சியிருந்த பெண்களிடம் போலீஸார் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவங்கள் நிறைய உண்டு. இந்தப் போராட்டத்தில் 9 பேரை போலீஸாரின் துப்பாக்கி சூட்டில் வன்னிய சமுதாயம் பறிகொடுத்தது. பலர் காயமடைந்தனர். இந்தப் போராட்டத்தை எப்படியும் வெற்றியடைந்த வைத்து விட வேண்டும் என்ற வைராக்கியத்தில் பல மரங்களை வெட்டினார்கள் என்பது தான் உண்மை. . 9 பேரை போலீஸாரின் துப்பாகிச் சூட்டிற்கு பலி கொடுத்த இந்த சமுதாயத்தின் தியாகம் பற்றி ஊடங்கங்கள் இதுவரை ஒன்றுமே எழுதவில்லை. ஆனால் அவர்கள் எழுதியதெல்லாம் நாம் வெட்டிய மரங்களைத் பற்றித் தான்.
இவ்வாறு போராடி பெற்றது தான் மிகப் பிற்படுத்த சமுதாயத்திற்கான (Most Backward Classes - MBC) 20% இடஒதுக்கீடு. வன்னிய மக்களுக்கு மட்டும் இந்த ஒதுக்கீடு என்று இல்லாமல் பின்தங்கி இருந்த பலச் சாதிகளை ஒன்றிணைத்து MBC பிரிவு உருவாக்கப்பட்டது. ஆனால் எண்ணிக்கையை கொண்டு பார்த்தால் இதில் இருக்கும் முக்கிய பிரிவு வன்னியர்கள் தான். இன்று வன்னிய சமுதயாத்தில் இருந்து பல 
பொறியாளர்கள், மருத்துவர்கள் உருவாகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த இடஒதுக்கீடு தான்.
ராமதாஸ் என்ற மனிதர் வன்னிய மக்களின் மத்தியில் உருவாக்கிய விழிப்புணர்ச்சியும் அதன் காரணமாக நடந்த போராட்டங்களும், அதற்கு விலையாக கொடுத்த உயிர்களும் தான் இந்த ஒதுக்கீடு . டாக்டர் ராமதாஸ் என்ற தனி மனிதர் சாதித்த வெற்றி. தன் சமுதாயத்திற்காக ராமதாஸ் என்ன செய்தார் என்று கேள்வி கேட்பர்வர்களுக்கு எங்களுடைய சிறிய பதில் இது....../..