நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, February 26, 2012

மே 5-வன்னியர் திருவிழா அனைவரும் வாரீர்....



காற்றின் மொழியானக் கவிதையின் குரல்

            காதலியின் முத்தம், தாயின் மடி, மனைவியின் அக்கறை, குழந்தையின் புன்னகை இவை போன்றதுதான் கவிதை. மொழியின் அழகை மிகச் சிறப்பாக வெளிப்படச்செய்யும் ஒப்பனைக்கலை எனலாம் கவிதையை. அந்த அழகில் மயங்கியோர் ஒருவித அடிமைகளாகிவிடுகிறார்கள். நடிகையைத் திரையில் பார்த்து ரசிகனாகி, பிறகு மனதுக்குள் அவளையே காதலிக்கும் சிலரைப்போல, கவிதையைப் படிக்கத் தொடங்கி வாசகனாகி, பின்னர் அதையே சுவாசமாக்கி கவிஞரானோர் பலராவர். 

தமிழ்க் கவிதைச் சூழலில் கவிதைக்கும் கவிஞர்களுக்கும் எல்லைக்கோடுகள் இல்லை. தமிழகத்தில் மக்கள்தொகையைவிட கவிஞர்களின் தொகை கூடுதலாக இருக்குமோ என்கிற அளவுக்கு கவிதைகளின் நெரிசலைக் காணமுடிகிறது. எல்லாக் கவிதைகளுக்கும் நிச்சயமாக ஒரு ரசிகன் உத்தரவாதம் உண்டு. அவன், அதன் படைப்பாளி. அதனைத் தாண்டி அந்தக் கவிதை எத்தனை பேரால் வாசிக்கப்படுகிறது, ரசிக்கப்படுகிறது, சிலாகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து கவிதையின் வீச்சும் கவிஞனின் ஆற்றலும் கணக்கிடப்படும். எனினும், இவைதான் கவிதை. இவை மட்டும்தான் கவிதை  என்கிற இலக்கிய சர்வாதிகாரிகளை மீறி பூத்துக் கொண்டே இருக்கிறது கவிதை ஜனநாயகம்.


உள்ளீடற்ற வார்த்தை அலங்காரங்களைக் கவிதைகள் என்று உலகப் புத்தகத்தின் பக்கங்கள் பதிவு செய்வதில்லை. சமூகக்கோபம், அரசியல் அனல், தனிமைத் துயர், கையறுநிலை, கழிவிரக்கம், காதலின் மேன்மை எனக் கவிதையின் பாடுபொருளாக எவை இருப்பினும் அதில் உண்மையும் உணர்வும் வார்த்தைகளாகியிருத்தலே கவிதையை நிலைத்திருக்கச் செய்கிறது. சொற்களின் நேர்த்தியும் அடர்த்தியுமே நல்ல கவிதைக்கான எளிய இலக்கணம். மீந்துகிடக்கும் சொற்களின் சேமிப்புக் கிடங்காகவோ, தேவையற்ற சொற்களின் குப்பைத் தொட்டியாகவோ ஒரு நல்ல கவிதை எப்போதும் இருப்பதில்லை. 

கவிதையைப் படிப்பதற்கும் ரசிப்பதற்கும் கூட ‘அளவி’களை உருவாக்கிப் பார்க்கிறார்கள் இலக்கிய நாட்டாண்மைகள். எழுதியவரே அதைப் படித்துக்காட்டுவதைவிட, வாசகனின் மனது படித்துணர்வதே கவிதை வாசிப்பின் தன்மை என்கின்றனர் சிலர். படைத்தவனே அந்தக் கவிதையை வாசிக்கும்போதுதான் அதன் உண்மை நோக்கம் வெளிப்படும் என்றும் வாசக மனப்பரப்போ படைப்பாளி சிந்திக்காத கருத்துகளையெல்லாம் மேலேற்றிச் சொல்லும் என்றும் மற்றும் சிலர் கூறுகின்றனர். கவிதையைப் படைத்து முடிக்கும்வரைதான் அது படைப்பாளியின் சொந்தம். படைக்கப்பட்டபின்பு அதன் மீது பொதுத்தளத்திலிருந்து வெளிப்படும் பார்வையும் விமர்சனமும் கட்டுப்பாடற்றது என்கிறார்கள் வேறு சிலர். கவிதைகள் பல வடிவங்களில் இருப்பதுபோலவே, அதனை ரசிப்பதற்கும் பல வடிவங்கள் இருக்கின்றன. ஒற்றைத் தளத்தில் கவிதை வாசிப்பைக் குறுக்கிவைத்திட யாருக்கும் ஏகபோக அனுமதியில்லை.

கவிதைப் படித்தல் என்பது போல கவிதைக் கேட்டலும் இனிமையானது. நல்ல கவிதைகள் சில செவிக்கு உணவாகும்போது கற்றலிற் கேட்டலே நன்று என்கிற மூதுரை, அந்தக் கவிதைக்கு முன்பாக நினைவில் தேங்குகிறது. ஆயத்த ஆடைபோல மேடைக்கேற்றவாறு நெய்யப்படும் பெரும்பாலானக் கவிதைத் துணிகள் அந்தத் தருணத்தில் பளபளப்பாகக் கவர்ந்தாலும், வெகு சீக்கிரத்தில் சாயம் வெளுத்துவிடுகின்றன. பல நேரங்களில் கவிஞர்களின் சாயமும்தான். சுயதேவைக்காக அவசரமாக நெய்கின்ற கவிதைகள் மீது ஏற்படுகின்ற கோபம் ஒருபோதும் நல்ல கவிதைக் கேட்டல் மீதான ரசனையை நமக்குள் குறைத்துவிடாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும்.

வள்ளுவம் தொடங்கி கம்பனின் விருத்தங்கள், ஆழ்வார்கள்லிநாயன்மார்களின் பக்தி இலக்கியங்கள், பாரதியின் குயில்பாட்டுலிபாஞ்சாலி சபதம், பாரதிதாசனின் இடிமுழக்கங்கள் எனப் பலவற்றையும் நாமே படிப்பதைவிடவும் பிறர் சொல்லக் கேட்கும்போது கிடைக்கின்ற சுகமே தனி. 

படைத்தவனின் மொழியை அவன் குரலிலேயே கேட்கும் வாய்ப்பு கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பெரும்பாலோருக்குக் கிடைத்தது. அறிஞர் அண்ணாவின் நினைவேந்தலில் அவரது இதயத்தை இரவல் கேட்ட கலைஞர் கருணாநிதியின் கவிதாஞ்சலி இந்த வகையில் முதல் படையல் எனலாம். உரைநடையையும்கூட தன் குரல்வளத்தால் கவிதைபோல பிறரின் காதுக்குள் இறக்கிய கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் ஒலிநாடாக்கள் இன்னொரு வகை விருந்து. அதன் பின், கவிதை கேளுங்கள் என கவிஞர் வைரமுத்து தன் குரல் பதிவான ஒலிநாடாக்களாக இலக்கியப் பந்தி வைத்தார்.


இவையெல்லாம் வழக்கமான கவிதை வாசகர் பரப்பைத் தாண்டி பலரின் செவிக்குள் புகுந்து இதயத்தில் இருப்பு வைக்கப்பட்டன. மேற்சொன்னவர்கள் பெற்றிருந்த பெயரும் புகழும் இந்த செவிவிருந்துக்குச் சிறப்பு சேர்த்தன எனலாம். கவிதைகளை ஒலியாக்கம் செய்யும் முயற்சிகள் கவிதைப் புத்தகங்கள் அளவிற்குப் பெருகவில்லை என்றாலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கவிதைக்கேற்ற மொழியைப் போல கவிதைக்கேற்ற ஒலியும் அவசியமாகிறது. கேட்போரை ஈர்க்கவும் அவர்களின் மனதிற்குள் இறங்கவும் கவிதைகள் புதிய தொழில்நுட்பங்களுடன் கை கோர்த்துக் கொள்கின்றன. குரலைப் பின்தொடர்ந்து வரும் இசை என்பது இன்றைய தொழில்நுட்பம். தெளிவான குரலுடன் சேர்கின்ற இனிமையான இசை, கவிதையைக் கேட்கத் தூண்டும் ஆர்வத்தைப் பெருகச் செய்கிறது. காற்றின் அலைவரிசையில் பயணிக்கும் கவிதைகளை நம் காதுகள் தேடிச் செல்கின்றன. கவிஞர் ஜெயபாஸ்கரனின் ‘காற்றின் குரல்’ ஒலித்தகடு அத்தகையது.

சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் 18-2-2012 நடைபெற்ற விழாவில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசு இதனை வெளியிட்டார். எழுத்தாளர் பிரபஞ்சன், இயக்குநர்  பாரதிகிருஷ்ணகுமார், பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன், கவிஞர் ஆரூர் புதியவன் உள்ளிட்ட பலர் ஒலித்தகடின் சிறப்பினைப் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டனர். 

இந்த ஒலித்தகடு, கவிதை இன்பத்தை நம்மை நோக்கிக் கொண்டு வரும் அதேவேளையில், கவிதை இன்பத்தை நோக்கி நாம் நகரும்படியும் செய்கிறது அந்தக் ‘காற்றின் குரல்’. இரு திசைகளிலிருந்து ஒரு மையப்புள்ளியை நோக்கி நகரும்போது கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு நெருக்கமாகிறது. இயற்கையையும் சமுதாயத்தையும் நேசிக்கின்ற படைப்பாளியின் கவிதைகளைக் கேட்குந்தோறும் இன்பக்கேணியில் அமுதம் ஊற்றெடுப்பதென்பது போன்ற எண்ணம் பீறிடுகிறது. படைப்பாளி தன் குரலை முன்னிலைப்படுத்தாமல் கவிதைத் தோழமைகளின் குரலோடு சேர்ந்து பயணிப்பதும் அந்தப் பயணத்தின் இறுதிவரை நிழல்போல் தொடரும் அ.தட்சிணாமூர்த்தியின் இசையும் நல்லதோர் வீணையின் நாதமாய் அமைந்திருக்கிறது.

அலைகளின் ஓசையைக் கேட்டபடி, கரையில் நின்று கால் நனைக்கும் அனுபவத்தை வழங்குகிறது இளம்பிறையின் குரலில் ஒலிக்கும் கடல் கவிதை. செங்கல்சூளைக்கு விறகாகும் ஆலமரத்தின் அவலத்தை படைப்பாளியின் வேதனையோடு வெளிப்படுத்துகிறது ஜெயபாஸ்கரனின் குரல். குழந்தைகள் உலகத்திற்கு நம்மை விரல்பிடித்து அழைத்துச் செல்கிறது தென்காசி மீனாவின் குரலில் இழையும் கவிதை. வயலும் வயல் சார்ந்ததுமான மருதநிலம் இன்று விலையும் விலை சார்ந்ததுமான வியாபாரப் பொருளாகி பாலையாய் திரிந்த அவலத்தைச் சொல்கிறது பர்வீன் சுல்தானாவின் குரல்.. மனைவியைத் தாயின் இடத்தில் உட்கார வைக்கும் பேராண்மையைக் காண முடிகிறது வீ.கே.டி.பாலனின் குரலில். குறுங்கவிதை போன்று வெளிப்படுகிறது ஏகா.ராஜசேகரின் தொகுப்பரைக் குரல். ஒவ்வொரு கவிதையும் அதற்கேற்ற வகையில் ஒவ்வொரு குரலுடனும் சிறப்பு நுட்பங்களுடன் கூடிய இசையுடனும் அமைந்திருக்கின்ற அதே வேளையில், எல்லாவற்றிலும் உணரமுடிகிறது கவிஞர் ஜெயபாஸ்கரனின் கவிதை ஆளுமையை..

விரைந்து கொண்டிருக்கிறது உலகம். கால்களே இறக்கைகளாகிவிட்டன மனிதர்களுக்கு. விருந்துக் கூடங்களில்கூட நின்றபடியே சாப்பிடும் அவசர யுகத்திற்குள் ஆட்பட்டடிருப்போரை சாவகாசமாக உட்கார்ந்து கவிதையைப் படி என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. கவிதையின் சுவை உணராச் சமுதாயமாகவும் இதை விட்டுவிடமுடியாது. இத்தகைய சூழலில், காற்றின் திசைகளில் கவிதை ஒலிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம். தேவையுள்ளோர் தேடிக் கேட்பர். பேச்சு சந்தையாய் அலறும் பண்பலைகளில், எதிர்காலத்தில்  ஏதேனும் சில பொழுதுகளில் இத்தகை கவிதைக் குரல்கள் ஒலிக்கக்கூடும். தமிழுக்கும் கவிதைக்குமான உறவு தொப்புள்கொடி போன்றது. அந்த ஆதி உறவு, அறுபட்டபிறகும் தொடரவே செய்யும். காலத்திற்கேற்றபடி கவிதை வாசிப்பும் ரசிப்பும் மாறிக்கொண்டே இருக்கும் உலகில் காலமறிந்து ஒலித்திருக்கிறது கவிஞர் ஜெயபாஸ்கரனின் ‘காற்றின் குரல்’.



நன்றி-நந்தவனம்
ஒலிக் குறுந்தகடு விலை ரூ.100/-    

தொடர்புக்கு: கவிஞர் ஜெயபாஸ்கரன் 94449 56924
                        ஜெகமதி கலைக்கூடம் 99943 66153
  

Friday, February 24, 2012

பாமகவில் மீண்டும் இணைகிறார் பண்ருட்டி இராமசந்திரன்....? பாமகவில் மீண்டும் இணைகிறார் பண்ருட்டி இராமசந்திரன்....?

பாமகவில் மீண்டும் இணைகிறார் பண்ருட்டி இராமசந்திரன்....?


சில நாட்களுக்கு முன்பு திமுக வில் உள்ள நமது இனமான வீரபாண்டி ஆறுமுகத்தை திமுக ஓரம் கட்டி வருவது அனைவரும் அறிந்ததே..

வன்னியர்கள் எங்கிருந்தாலும் அவர்களை வாழவும், வளரவும் விடுவதில்லை தமிழகத்தை குடிகார நாடக மாற்றிவரும் திராவிடகட்சிகள்..


 1991-ல் பா.ம.க சார்பில் வென்ற முதல் M.L.A பண்ருட்டி S.இராமசந்திரன்,
பாமக வில் இருந்து பிரிந்து சென்ற ராமசந்திரன் தற்போது தேமுதிகவில்
உள்ளார்



தற்பொழுது தேமுதிக வின் முக்கிய புள்ளியாக வலம் வந்தவரும், தேமுதிக வின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவரும் தற்பொழுது தேமுதிக அவை தலைவராகவும் உள்ள பண்ருட்டி இராமசந்திரன் புறக்கணிக்கபடுகிறார்..


சென்னையில பொதுக்குழு நடந்த மண்டபத்தை சுற்றியும், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் விளம்பர பேனர்கள் கட்டியிருந்தா தேமுதிக வின் விளம்பர பதாகையில்  ஒண்ணுல கூட பண்ருட்டி ராமச்சந்திரன் பெயரும் இல்லை; போட்டோவும் இடம் பெறலை... பொதுக்குழுவுல அவர் பேசி முடிக்கறப்ப யாரும் கைதட்டலை... இதுல, அவருக்கு ரொம்ப வருத்தம் தான்... இருந்தாலும், அதை வெளிக்காட்டலை...




இருந்தாலும் தன் கட்சிகாரர்களிடம் பண்ருட்டி இராமசந்திரன் வருத்தபடுவதாகவும்.பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள பண்ருட்டி இராமசந்திரன் அவர்கள் தான் மீண்டும் தன் தாய் கட்சியான பாமகவில் இணையவிருப்பதாகவும் கூறிவருவதாக தேமுதிகவினரிடையே  பெரும் பரப்பரப்புடன் பேசப்பட்டுவருகிறது..

Thursday, February 23, 2012

மோரில் விஷம் வைத்து வீரப்பனைக் கொன்றவர்களுக்கு இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு க்ரவுண்டு நிலமும், ஒரு படி பதவி உயர்வும் வழங்கியவர்தானே இந்த ஜெயலலிதா.

மக்கள் தொலைக்காட்சியில் மக்கள் செய்திகளில் ஒளிப்பரப்பாகும் ஒற்றன் -நிகழ்ச்சியில் கூறப்பட்ட தகவல்களை அனைத்து ஊடகங்களும் இன்று பிரதிபலித்துவருகின்றன..


நிஜமல்ல கதை.





கடந்த ஒரு மாதமாக சென்னை மாநகர காவல்துறையினரை பிடித்து உலுக்கிக் கொண்டிருந்த வங்கிக் கொள்ளை வழக்கு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.   கொள்ளையடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப் பட்ட 5 இளைஞர்களை சென்னை மாநகர காவல்துறை இரவோடு இரவாக சுட்டுக் கொன்றிருக்கிறது.  அடிக்கடி சொல்லிக்கொள்வார்களே….   ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையான காவல்துறை என்று…  அந்த ஸ்காட்லாண்டு யார்டு போலீசையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது சென்னை மாநகர காவல்துறை.
DSC_6427
சென்னையில் பட்டப்பகலில் இரண்டு வங்கிகள் கொள்ளையடிக்கப் பட்டபோதே, சென்னை காவல்துறை ஆடித்தான் போனது. இது ஏற்கனவே ஆடிப்போயிருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளர் திரிபாதியின் நாற்காலியை மேலும் ஆடச் செய்தது.  சென்னை மாநகர ஆணையாளர் பதவியை பிடிக்க எப்போதுமே இருந்து வரும் போட்டியை எப்படியாவது சமாளித்து, தனது நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நெருக்கடியும் திரிபாதிக்கு இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் இந்த என்கவுண்டரை பார்க்க வேண்டும். வேளச்சேரியில் உள்ள வண்டிக்காரன் தெரு என்ற குடியிருப்புப் பகுதியில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.    இரவு 1 மணிக்கு இந்த என்கவுண்டர் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இன்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய திரிபாதி “நள்ளிரவு 12.30 மணிக்கு காவல்துறையினருக்கு வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்ட நபர்கள் அந்தப்பகுதியில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் இரவு ஒரு மணிக்கு அந்த இடத்திற்கு சென்றனர்.  போலீசார் அந்த வீட்டை வெளியிலிருந்து பூட்டி விட்டு, உள்ளே இருந்தவர்களை சரணடையச் சொல்லியிருக்கிறார்கள்.  அனால் உள்ளே இருந்தவர்கள் சராமாரியாக காவல்துறையினரைப் பார்த்து சுடத் தொடங்கி விட்டனர். சுற்றியிருந்த மக்களின் பாதுகாப்புக்காகவும், காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவும் வேறு வழியில்லாமல் சுட்டனர்.  கொள்ளையர்கள் சுட்டதில், காவல்துறை ஆய்வாளர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.   சுடப்பட்டதில் ஐந்து நபர்கள் காயமடைந்தனர்.   காயமடைந்தவர்களை அவசரமாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றபோது, அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்து போனவர்களை புகைப்படம் எடுத்து கொள்ளை போன வங்கிப் பணியாளர்களிடம் காண்பித்ததில், அவர்கள் வங்கியை கொள்ளையடித்தவர்கள்தான் என்று அவர்கள் அடையாளம் காண்பித்தனர்.   அந்த வீட்டிலிருந்து 5 பிஸ்டல், 2 ரிவால்வர் மற்றும் மொபைல் போன்கள் மற்றும் 14 லட்ச ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப் பட்டன” என்று தெரிவித்தார்.
DSC_6571
மேலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் படி, “நீதித்துறை நடுவரின் விசாரணை 
நடைபெற்று வருவதால், மேற்கொண்டு இந்த விவகாரம் குறித்து பேச முடியாது” 
என்றும் தெரிவித்தார்.
இறந்து போன,  வினோத்குமார், வினாய்குமார், ஹரீஷ்பிரசாத், சசிகரே, அபேகுமார்  ஆகியோரில் நான்கு பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர்.    திரிபாதி சொல்வதை வைத்துப் பார்த்தால், வேளச்சேரி வீட்டுக்கு விசாரணைக்காக சென்ற இடத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதால், வேறு வழியின்றி காவல்துறையினர் திருப்பிச் சுட்டுள்ளனர்.
DSC_5599
சம்பவம் நடந்த வீட்டின் அருகே உள்ள மக்கள், காவல்துறையினர் பெரும் எண்ணிக்கையில் இரவு 10 மணி முதலே அந்த இடத்தைச் சூழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.  பத்து மணி முதல் அந்த இடத்தில் குவிந்த போலீசார், அருகாமையில் உள்ள வீட்டில் இருந்தவர்களை வீட்டினுள் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  இரவு 12.30 முதல் 1 மணிக்குள் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.   திரிபாதி சொல்வது போல வெறும் விசாரணைக்காக அந்த வீட்டுக்கு சென்றவர்கள் இது போல பெருமளவில் ஆயுதங்களோடு சென்றது ஏன் என்பது இயல்பான கேள்வி.  கொள்ளையர்கள் வங்கிகளை கொள்ளையடித்தபோது ஆயுதங்கள் வைத்திருந்ததால் காவல்துறையினரும் ஆயுதங்களை எடுத்துச் சென்றனர் என்று சொல்லும் திரிபாதி இத்தனை போலீசார் அங்கே ஏன் சென்றனர் என்பதை விளக்கவில்லை. சாதாரண விசாரணைக்காகத்தான் காவல்துறையினர் அங்கே சென்றார்கள் என்றால், “ஆபரேஷன் டீமின் ஹெட்” என்று அடையாறு துணை ஆணையரை குறிப்பிடுவது ஏன் ?  சாதாரண விசாரணையைத்தான் “ஆபரேஷன்” என்று அழைப்பார்களா ?  மேலும் சாதாரண விசாரணைக்கு துணை ஆணையரை நள்ளிரவில் அனுப்ப வேண்டிய காரணம் என்ன ?
DSC_0874
அருகாமையில் குடியிருந்த பொதுமக்கள் அத்தனை பேரையும் வீட்டுக்குள் செல்லுமாறு இரவு 10 மணியிலிருந்தே காவல்துறையினர் மிரட்டியதிலிருந்தே இது எப்படிப்பட்ட ஒரு மோசமான படுகொலை என்பது தெரிகிறது.  என்கவுண்டர் நடந்த உடனே ஒரு பத்திரிக்கையாளரிடம் பேசிய இணை ஆணையர் ஒருவர், இரண்டு காவல் அதிகாரிகளுக்கும் எப்படிக் காயம் ஏற்பட்டது என்று கேட்டதற்கு, அவர்கள் இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது, உள்ளே இருந்தவர்கள் அரிவாளால் வெட்டியதால் காயம் ஏற்பட்டது என்றார்.   ஆனால் திரிபாதியோ, காயமடைந்த இரண்டு ஆய்வாளர்களும், கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயம் ஏற்பட்டது என்றார்.   இது போன்ற போலி என்கவுண்டர்களில் காவல் துறையினருக்கு ஏற்படும் காயம் அத்தனையுமே, வயிற்றிலோ, தோள்பட்டையிலோ தான் ஏற்படுகிறது.   இந்தச் சம்பவத்திலும் காயம் ஏற்பட்ட இரண்டு ஆய்வாளர்களுக்கும் தோள்பட்டையிலும், வயிற்றிலும், நெற்றியிலும் காயம் ஏற்பட்டிருக்கிறது.   இறந்து போன ஐந்து இளைஞர்களுக்கு மட்டும் நெஞ்சில் குண்டு பாய்ந்திருக்கிறது.   இந்த மர்மத்திற்கு காரணம் என்ன என்பதற்கு திரிபாதி விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
DSC_5562a
DSC_5569
இந்த இளைஞர்களை இப்படி துணிச்சலாக கொன்றதற்கு மற்றொரு முக்கிய காரணம், இவர்கள் அத்தனை பேரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இவர்களுக்காக வழக்கு போடவோ, மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கவோ யாரும் வர மாட்டார்கள் என்ற துணிச்சலே காரணம்.  இது போன்ற போலி மோதல் படுகொலைகளை நீதிமன்றங்களும் உரிய தீவிரத்தோடு அணுகுவதில்லை என்பதும், காவல்துறையினரின் துணிச்சலுக்கு மற்றொரு காரணம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும், 15க்கும் மேற்பட்ட வழக்குகள் போலி என்கவுண்டர்கள் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கிறது.
இறந்து போன ஐந்து பேரும் கொள்ளையர்கள் என்றே வைத்துக் கொள்ளலாம்.  அவர்கள் கொள்ளையடிக்கும் போது, எந்தவிதமான வன்முறைச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்பதை பார்க்க வேண்டும்.    ஆளில்லாத வங்கிகளாகப் பார்த்து 30 லட்ச ரூபாயை கொள்ளையடித்திருக்கிறார்கள்.  இவர்கள் செய்தது இவ்வளவு பெரிய தவறென்றால், பல கோடி ரூபாய்களை கொள்ளையடித் தவர்கள்தானே நமக்கு ஆட்சியாளர்களாக இருக்கிறார்கள் ?  66.5 கோடியோடு ஒப்பிடும்போது 30 லட்ச ரூபாய் ஒன்றும் பெரிய தொகை இல்லையே….
DSC_6624
மனித சமுதாயம் தோன்றி பல்வேறு கட்டங்களில் வளர்ந்து, இன்று மனித உரிமைகளை மதிக்க வேண்டும், மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற ஒரு சிறப்பான வளர்ச்சிக்கட்டத்தில் இருக்கிறது.   நமது குற்றவியல் சட்டத்தின் அடிநாதமே, குற்றவாளிகளை திருத்தி சமுதாய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய வேண்டும் என்பதுதான்.    இசுலாமிய நாடுகளிலும், சீனாவிலும் இருப்பது போல, துப்பாக்கியால் சுட்டும், கழுத்தை சீவியும் மரணதண்டனை வழங்கும் கொடிய வழக்கம் இந்தியாவில் இல்லை.  மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நாகரீக நாடாகவே நாம் இதுவரை அறியப்பட்டிருக்கிறோம்.  அப்படித்தான் அறியப்படவும் வேண்டும்.
நேற்று இரவு நடந்தது போன்ற போலி மோதல் படுகொலைகள் நமது சமுதாயத்தை காட்டுமிராண்டிக்காலத்துக்கே இட்டுச் செல்லும்.   அந்த அறையில் தங்கியிருந்த ஐந்து இளைஞர்களில் ஒரே ஒருவர் அந்தக் கொள்ளையில் சம்பந்தப்படாமல் இருந்திருந்தால், பறிக்கப்பட்ட உயிருக்கு என்ன பதில் சொல்வார் திரிபாதி ?
DSC_5118
இந்தத் திரிபாதி என்கவுண்டருக்கு பெயர் போனவர்.   அவர் 2001 அதிமுக ஆட்சிக் காலத்தில், சென்னை மாநகரத்தின் இணை ஆணையராக இருந்தபோது, ராஜாராம், வீரமணி போன்றவர்களின் என்கவுண்டர்களை நேரடியாக முன்னின்று நடத்தியவர். தற்போது தனது கமிஷனர் பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காகவே இந்த என்கவுண்டரை நடத்தியிருக்கிறார் என்ற சந்தேகமே மேலோங்குகிறது.   மேலும், இன்று பெங்களுரில், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா இன்று இரண்டாவது நாளாக சாட்சியம் அளிக்கும் நிலையில், அந்தச் செய்தியை பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் இந்த என்கவுண்டர் நடந்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் வலுவாக எழுப்புகிறார்கள் சில பத்திரிக்கையாளர்கள்.
DSC_5136
DSC_5155
இந்த தாக்குதலில் காயம் அடைந்ததாக வேடமிட்டுக் கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் இரண்டு காவல்துறை ஆய்வாளர்களையும், நேரில் சென்று பார்த்து இந்த போலி என்கவுண்டருக்கு ஜெயலலிதா வலு சேர்ப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.  மோரில் விஷம் வைத்து வீரப்பனைக் கொன்றவர்களுக்கு இரண்டு லட்சம் ரொக்கமும், இரண்டு க்ரவுண்டு நிலமும், ஒரு படி பதவி உயர்வும் வழங்கியவர்தானே இந்த ஜெயலலிதா.
நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் இன்றைய  சமுதாயத்தில் குறுக்கு வழியில் பணக்காரராக வேண்டும் என்ற உந்துதலில் தவறு செய்த இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றால், தனக்கு பிடிக்காத ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் வீசச் சொன்னவருக்கும், ஒரு சர்வே வெளியிட்டதற்காக மூன்று இளைஞர்களை உயிரோடு கொளுத்தியவர்களுக்கும் என்ன தண்டனை தர வேண்டும் ?

நன்றி-சவுக்கு

Wednesday, February 22, 2012

மாவீரன் வீரப்பன்...



மாவீரன் வீரப்பன்










உன்னை பிறிந்த நினைவுகளால்
ஈரவிழிகள் எம்மக்களுக்கு இன்னும் காயவில்லை
ஆனாலும் உந்தன் 
வீரமிகு சாதனைகளை இவ்வுலகமறவாது…
மொட்டு விழும் பூவினிலே முகம் தெரியும் எங்களுக்கு
உங்கள் கல்லறைக்கு கிட்டவர கண் தெரியும்
வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து உமை உயிர்ப்பிக்கும்
அஞ்சாத நெஞ்சோடு அசையாத இலக்கோடு

நீங்கள் இந்த மண்ணை விட்டு சென்றாலும் 
என்றுமே நீங்கள் வன்னியரின் முத்துக்கள்
உங்களின் வாசலில் வந்துமை வணங்குகிறோம்….

உங்கள் கல்லறை மீதினில் கைகளை வைத்ததொரு 
சத்தியம் எடுக்கின்றோம்…


கண்ணில் நீர்தாங்கி விண்ணுலகம் சென்றிட்ட
வீரமிகு தியாக வேங்கையே
ஆயிரம்,ஆயிரம் வன்னியரின்
ஆசியோடு நீ சுதந்திரமாய்
சுற்றிடுவாய் வன்னிய மக்களோடு

வீசிவரும் காற்றில் விரிந்த சிறகுகளோடு
பறந்துவிட்ட வீரமிகு மாவீரனே….
உம்மை நம் இனம் மறவாது
உந்தன் வீரத்தை எந்நாளும்
இவ்வுலகம் மறவாது…


Sunday, February 19, 2012

மருத்துவர் அய்யாவின் வழியில் வழி நடப்பாய்....


வன்னியனே இன்னுயிரை ஈந்தது போதும்
புயலாய் எழுந்திரு!
வன்னியச் செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும்
வாழ  வழி தேடும் உம் அனைவருக்கும்
வழி நெடுகும் தடங்கல்களே.

எத்தனை காலம் தான்
அடிமையாய் நீ இருப்பாய்..
உம் தலைமுறைக்காவது
சுதந்திர காற்றை நீ தருவாய்...

வாழ வழி தேடும் வன்னியனே
உம் வாசல் படி காத்திருக்கோம்..

மருத்துவர் அய்யாவின் வழியில்
வழி நடப்பாய்

நாளை நமதாகும்
நாளைய தலைமுறையும் உமதாகும்

சுவசிக்கின்ற காற்று உமதாகும்
நீ திரும்பும் திசையெல்லாம்
உமதாகும்..

வெற்றிகளை நீ தேடி 
சென்றது போதும்
வெற்றிகள் உமை தேடி வரும்
காலம் வெகு தொலைவில் இல்லை..

பாமக வின் ஆட்சி அமையும்
அன்நாளே
வன்னியனின் வாழ்வுக்கு அன்றே திருநாள்...


Tuesday, February 7, 2012

தேமுதிகவுக்கு பக்கவாதம்... பெயர் மாறும் தேமுதிக..



தேமுகிகவிற்க்கு தமிழக அரசால் பக்கவாதம் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்சி உறுப்பினர்களை இழந்து வருகிறது..இன்னும் சில மாதங்களில் முழுவதுமாக பாக்கவாதத்தல் பாதிக்கபட்டு தன் கட்சியை கலைத்து விட்டு சினிமாவிற்க்கு மறுபடியும் ஒடுவார் என எதிர்பார்க்கபடுகிறது 

அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் ஏற்பட்ட மோதல் சட்டசபையிலயே வெளிச்சத்திற்க்கு வந்தது..
கடந்த தேர்தலில் அதிமுக வுடன் கூட்ட்ணி வைத்து சில சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற விஜயகாந்த் கட்சி. அத்தேர்தலின் போதே குடித்து விட்டு உலறல் பேச்சு. தன் வேட்பாளரையே பொதுமக்கள் முன்னிலையிலேயே அடித்தது என பட்ட சர்ச்சைகளுக்கு இடையில் அதிமுகவின் தயவால் எதிர்கட்சி தலைவரானர் குடிகார விஜயகாந்த்..

இந்நிலையில் அதிமுகவினருக்கும் தேமுதிகவிற்க்கும் இடையே பயங்கர இடியாய் அமைந்தது சட்டபேரவை.. எங்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியாத விஜயகாந்த் நாக்கை கடித்து கொண்டும்-கை நீட்டி பேசியும் சினிமாவிற்க்கும் சட்டசபைக்கும் வித்தியசாம் தெரியாமல் பயங்கரமாக ஆவேசப்பட்டவர்..

தமிழக முதல்வரால் தகுதியில்லாதவருக்கு பதவி கிடைத்தால் இப்படிதான் நடந்து கொள்வார்கள்.தேமுதிகவுடன் கூட்டணி வைத்தற்க்காக வெட்கபடுகிறேன். அவமான படுகிறேன்.என தன் மனக்குமுறல்களை கெட்டிதீர்துவீட்டார்

இனி தேமுதிகவிற்க்கு அழிவுகாலம் ஆரபித்து விட்டது என அறைகூவல் வீட்டார்-அதன்படி அவருடைய கட்சி ச.ம.உ களை அதிமுகவில் இணைக்கும் பணி தொடங்கபட்டுவிட்டது..
முதற்கட்டமாக இப்ராகிம் இராவுத்தர்-மற்றும் தேமுதிகவின் முக்கிய நிருவாகிகள் அதிமுகவில் இணைந்து விட்டனர்








--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், குடிகாரருமான தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர், .தி.மு..வில் இணைந்துள்ளார். 




.தி.மு.- தே.மு.தி. கட்சிகளுக்கிடையே கடுமையான உரசல் இருந்து வரும் நிலையில், இப்ராகிம் ராவுத்தர் அதிமுக பக்கம் வந்துள்ள்ளதுஅரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.


தேமுதிக சார்பில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டவர் உட்பட தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அதிமுக  தலைமைக்கழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்விஜயகாந்த் நண்பரும் அதிமுகவில் இணைந்தார்

இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார்

ஆக மொத்தம் விஜயகாந்தின் வளர்ச்சியே இராவுத்தாரினால் என்றால் அது மிகையாது..


எனவே தேமுதிக 
இனி  
தேயும் திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றம் செய்யலாம என குடிகார விஜயகாந்த் ஆலேசித்து வருவதாக தெரிகிறது..