நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, December 5, 2013

புழல் மத்திய சிறைச்சாலை முதல் காடுவெட்டி வரை.... விடுதலை நாள் கொண்டாட்டங்கள்

தமிழத்தின் விடுதலை நாள்  -  04-12-2013


ஆளும் அதிமுக அரசால் வன்னிய மக்களுக்கு எதிரான நடவடிக்கையால்
2013 ஆம் ஆண்டு பல மாதங்களாக ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தமிழக சிறைகளில் வாடினார்கள்.. 

தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம் வன்னிய மக்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வன்னிய மக்களை ஒடுக்க நினைத்தது அதன் உச்சகட்டமாக மருத்துவர் இராமதாசு.. மருத்துவர் அண்புமணி இராமதாசு, மாவீரன் ஜெ.குரு என பல தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர்.. 

இதனை கண்டித்து தமிழகத்தில் மாபெரும் அதிர்வு அலை உருவாகியது..தொடர்ந்து பல சில மாதங்கள் தமிழகத்தின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடையும் வகையில் தமிழகம் முழுவதும் அற வழியில் வன்னிய மக்களின் வீடுகளில் கருப்பு கொடி,  அற வழியில் ஆர்பாட்டம் என ஆர்பரித்தது தமிழகமே....


இதற்கிடையில் மிகவும் உயிருக்கு ஆபாத்தான நிலையில் மருத்துவர் இராமதாசு நீதி மன்றத்தால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்..அதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடைபெற்றது...

மருத்துவர் அண்புமணி அவர்களும் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்..

இருந்தும் பல தொண்டர்கள்  பொய் வழக்குகளால் சிறையில்  வாடினார்கள்...அவர்களுக்கு குடும்பங்களுக்கு பா.ம.க சார்பில் ரூ.1000 ஆயிரம், அரிசி, உட்பட அனைத்து பொருட்களையும் மாதந்தோறும் வழங்கியது மட்டுமல்லாமல் அவர்களுக்கு குடும்பங்களுக்கு தமிழகம் முழுவதும் நேரில்  சென்று ஆறுதல் கூறினார் மருத்துவர் அண்புமணி....

அதனை தொடர்ந்து மாவீரன் ஜெ.குரு மட்டும் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் மீண்டும் மீண்டும் பொய் வழக்குகளை போட்டு சிறை வாசலிலேயே கைது செய்து தனது வன்னிய மக்கள் மீதான தாகத்தை தீர்த்து கொண்டது தமிழக அரசு...

இதற்கிடையில் கடந்த 4.12.2013 அன்று சென்னை உயர் நீதி மன்றத்தால் திரு.ஜெ.குரு அவர்கள் விடுதலை செய்யப்பட்டு..அன்று மாலை 06.55 மணிக்கு புழல் மத்திய சிறையிலிருந்து வெளிவந்தார்...

அவருக்கு வரவேற்பு அளிக்க பல்லாயிரம் பேர் புழல் சிறையில் கூடினார்கள்..கொல்கத்தா நெடுஞ்சாலை முழுவதும் எங்கு பார்த்தாலும் வாகனங்கள்.. எங்கு பார்த்தாலும் வன்னிய தலைகள் ...பட்டாசு சத்தங்கள்  என அதிர்ந்து போனது புழல் மத்திய சிறைச்சாலை....


மக்கள் கூட்த்தில் நீந்தி வந்து சேர்ந்தார் திரு.அண்புமணி அவர்கள் சிறையின் உள்ளே சென்று மாவீரன் அவர்களை வரவேற்று வெளியில் வந்தார்...

பின்பு சென்னை தி.நகரில் உள்ள மருத்துவர் அண்புமனி அவர்கள் இல்லத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்ப்பு அளிக்கப்பட்டது...

அதன் பிறகு தனது சொந்த ஊருக்கு செல்லும் வழி எங்கும் மிக பிரமாண்டமான வன்னிய மக்கள் வழி நெடுங்கும் அளித்தனர்..

தின்டிவனம் தைலபுரம் தோட்டம் சென்ற மாவீரனை மருத்து அய்யா அவர்கள் ஆரதழுவி வரவேற்றார்..


தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு தலைவனுக்கும் இப்படிபட்ட

எழுச்சியான வரவேற்ப்பு 

இல்லை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனத்தில் இளைஞர்கள் படைசூழ 

 நமது 

வாகனங்களின் எண்ணிக்கை பார்த்து இப்படி ஒரு வரவேற்ப்பு இதுவரை 

யாருக்கும் இல்லை. இதுதான்  தமிழகம் முழுவதும் இன்றைய பேச்சு



விடுதலை கொண்டங்களிலிருந்து சில புகைப்படங்கள் உங்கள் 

                                                     பார்வைக்கு..