நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Friday, April 27, 2012

நிச்சயம் ஒரு நாள் விடியும்-அது பாமக-வால் மட்டுமே முடியும்..


நிச்சயம் ஒரு நாள் விடியும்-அது பாமக-வால் மட்டுமே முடியும்..




1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!

11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!!



இன்னும் சொல்ல ஆயிரம் உண்டு....












என்று தான் திருந்துமே நம் நாடு...


பாமக வின் ஆட்சி தான் நம் வீடு....

Thursday, April 26, 2012

உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் ....



உலக ஜனநாயகத்திற்கே அடித்தளம் அமைத்தவர்கள் தமிழர்கள் !



ஜனநாயகம் என்ற ஆலமரம் இன்று உலகம் முழுவதும் விழுதுகள் பரப்பி செழிப்புடன் வளர்ந்ததற்கு காரணமான ஆணிவேரை 1100 வருடங்களுக்கு மேலாக அமைதியுடன் தாங்கிக்கொண்டுள்ள ஒரு அற்புதமான இடம் " உத்திரமேரூ...ர் " !. 

சிறு வயதில் நாம் பள்ளியில் படித்த நியாபகம் வரலாம், ஆனால் நாம் அதை அப்போதே மறந்திருப்போம் ! தெரியாதவர்களுக்காக இந்த தகவல் ,இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக திகழ்வதற்கும், மற்றும் பிற நாட்டு மக்கள் தங்களை ஆளப்போகிரவர்களை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை 1100 வருடங்களுக்கு முன்னர் நாம் பின்பற்றிய " குடவோலை " முறை தான் காரணம் என்றால் உங்களால் நம்பமுடியுமா ? தமக்கு பிடித்த நிர்வாகிகளை தாமே தேர்ந்தெடுக்கும் முறையை உலகிற்கே முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் நாம் ! . 

கி.பி 950 சோழர்கள் இந்த பகுதியை ஆண்ட போது "பராந்தக சோழன்" தான் இந்த முறையை கொண்டு வந்தார் என்று இந்த கோயில் கல்வெட்டு தெளிவு படுத்துகின்றது .தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த இடங்களில் இந்த இடத்திற்கு தான் உண்மையில் முதல் இடம் வழங்கி இருக்க வேண்டும்.சோழ கல்வெட்டுகளை ஆராய்ந்தமுன்னாள் தமிழ்நாடு தொல் பொருள் ஆராய்ச்சிமன்ற தலைவர் , திரு .டாக்டர்.நாகஸ்வாமி எழுதிய புத்தகத்தை வாங்கிப்படித்தால் இந்த கல்வெட்டுகளில் உள்ள அனைத்து விசயங்களும் உங்களுக்கு தெரிய வரும். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்தால் " யார் தேர்தலில் நிற்க முடியும் ?, யார் நிற்க முடியாது ?,அவர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் ? ,தேர்தல் எவ்வாறு நடை பெற வேண்டும் ?தேர்ந்தேட்டுகப்பட்டவர்கள் எவ்வாறு செயல் பட வேண்டும் ? என்ற தகவலை தருகின்றது. இதில் இருக்கும் சட்ட திட்டங்கள் இன்று நடை முறையில் இருந்தால் ஒருவர் கூட யோக்கியன் என்ற போர்வையில் தேர்தலில் நிற்க முடியாது..அவ்வளவு நிபந்தனைகள் உள்ளன !கோயில் மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் " நிர்வாகம்,நீதி,விவசாயம்,போக்குவரத்து," போன்ற இன்னும் பல தகவல்களை தருகின்றது . ஒரு ஆச்சர்யமான செய்தி என்ன தெரியுமா இன்று அன்னா அசாரே போராடிக்கொண்டிருக்கும் " தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் சரியாக செயல்படவில்லை என்றால் அவரை திரும்பப்பெறும் சட்டம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நாம் கொண்டுவந்து விட்டோம் " !!!. பல்லவ மன்னன் " நந்திவர்மனால்" இந்த இடம் கி.பி 750 வருடம் உருவாக்கப்பட்டது..

இந்த இடத்திற்கு இன்னொரு சிறப்பு தமிழகத்தில் எந்த இடத்திலும் இது போன்ற ஒரே இடம் அனைத்து மன்னர்களாலும் ஆளப்படவில்லை. இந்த இடத்தை " சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், சம்புவர்யர்கள், விஜய நகர அரசர்கள், நாயக்கர்கள் என இதன் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. இந்த இடத்திற்கு " ராஜேந்திர சோழனும் " , " கிருஷ்ணா தேவராயரும் " வந்துள்ளனர் ! இன்னொரு முக்கியமான தகவல் இந்த தொகுதியை ஒவ்வொரு சட்ட மன்ற தேர்தலிலும் இப்போதுள்ள அரசியல் கட்சிகள் இந்த தொகுதியின் நிலவரத்தை தான் முதலில் ஆவலுடன் பார்பார்கள் , ஏனெனில் இந்த தொகுதியை யார் கைப்பற்றினார்களோ அவர்கள் தான் இன்று வரை ஆட்சி அமைத்துள்ளனர் !!!.

இந்த கூற்று 1952 ல் காங்கிரஸ் தமிழகத்தை ஆட்சி செய்ததிலிருந்து தொடங்கி ,இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கு " அம்மா " வரை இந்த பட்டியல் நீள்கிறது !!.

இப்படிப்பட்ட உலகின் சிறப்பு வாய்ந்த இடத்தை எத்தனை தமிழர்கள் நேரில் சென்று பார்த்திருப்பீர்கள் ?..

Sunday, April 15, 2012

வன்னியர் என்பதை ஆழமாக பதிவு செய்ய வலியுறுத்த பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்..

வன்னிய இன மக்கள் தங்கள் பகுதியில் வரும் ஏப்ரல் 23தேதி முதல் சாதி வாரிகணக்கெடுப்பு நடத்த வருகிறார்கள்..வன்னியர் வாழ்வு வளம் பெறவும்.கல்வி, வேலைவாய்ப்பு, பொருளதரம் போன்ற வற்றில் முன்னேர இந்த கணக்கெடுப்பு உறுதுணையாக இருக்கும்

எனவே நம் குல சொந்தங்கள் கீழ் உள்ள துண்டு பிரசுர நகலை சேமித்து-அச்சடித்து அல்லது நகலெடுத்து கொண்டு நம் மக்கள் வாழும் வீடுகள் தோறும் வினியோகித்து விழிப்புணர்வு அடைய செய்து வன்னியர் என்பதை ஆழமாக பதிவு செய்ய வலியுறுத்த பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்..









Wednesday, April 11, 2012

மே-5 மகாபலிபுரத்தில் ஒன்றிணைவோம்...



வன்னியன் என்ற ஒற்றை சொல்லில் 
தரணி எங்கும் ஒற்றுமையாய் இரு
சாய்ந்து நீ போகும் வரை
நம் இன தாகத்தில் இருந்து
ஓய்ந்து போகாதே......
வீரத்தின் வித்துகள் நாமடா - தமிழக
விளை நிலத்தின் சொத்துகள் நாமடா.....
திராவிட விரோதிகளோடு 
இன்னும் ஏன் கூட்டடா...

எம் இனத்தின் மீது விரக்தி கொள்வதேனடா
தோழா விரக்தி கொள்வதேனடா 

திராவிட கட்சிகள் 
தமிழகத்தை
ஆக்கிரமித்து ஆள 
அடங்கி நீ போவதாடா
சொந்த நிலத்திலே நாம்
கூலிகளாய்....
ஒண்ட வந்தவர்கள்
தமிழகத்தை ஆள்வதா..?


இயற்கை வளம் நிறைந்த தமிழகத்தில்
இன்பமாய் வாழ்ந்தோமே - இன்று
இன்னொருவன் சிறையில்
இரத்த கண்ணீர் வடிக்கிறோமே....

இளகலையோ உன் உள்ளம் தோழா...
மானத்துக்கு பேர் போன வன்னியர்கள்
மகத்தான உயிரையும் இழந்தேமே...

மாற்றானின்(திராவிட கட்சிகளின்) மாயவலையில்
வன்னிய மயங்குவது ஏனடா...
பாரடா  தோழா பாரடா 
பாவியர் நாம் இல்லையடா

பார் போற்றும் வீரத்தமிழர் நாமடா இன்று 
பாரெல்லாம் அகதியாய்
பரிதவிக்கிறோம் ஏனடா...
எமக்கு இந்த நிலை
ஒற்றுமை நாம் இழந்ததினால் தானடா
இழந்ததினால் தானடா ,,,!

பல்லவ சம்ராஜ்ஜியத்தின் வரிசுகளே....
நம் மருத்துவர் அய்யாவின் பின் அணிவாகுப்போம்..
மே-5 மகாபலிபுரத்தில் ஒன்றிணைவோம்...

Thursday, April 5, 2012

வன்னியர் சங்க பொதுகூட்டம்-திருவள்ளுர் மாவட்டம்

தி ருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் கும்மிடிதொகுதி ஆத்துப்பாக்ம் கிராமத்தில் நேற்று 5-4-2012 அன்று நடைபெற்ற வன்னிய சங்க பொது கூட்டத்தின் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில


மாவீரன் குரு அவர்களின் எழுச்சியுரை







மாவட்ட செயலாளர் மா.செல்வராசு அவர்கள் பாடிய  ”இனம் மானம் காத்து” பாடல் அனைவரையும் இரசிக்க வைத்தது மட்டுமல்லமல் அனைவரையும் உற்சகப்படுத்தியது என்றால் மிகையாகது...

அருமையான குரல்.....அருமையான இசை


கூட்டத்தின் ஒரு பகுதி





ஒன்றிய செயலாளர் முருகன் அவர்கள் பேசிய போது அருகில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோ.இரவிராஜ் அவர்கள்





திரு குரு அவர்களுடன்  மாநில துணைத்தலைவர் ஜெயவேலு அவர்கள்



முன்னாள் அம்பத்துர் நகரமன்ற தலைவர் திரு சேகர் அவர்கள்




மாநாட்டு நிதியாக ரூபாய் 1 இலட்சம் நிதியை மாநில துணைத்தலைவர் கிருஷ்ணன் அவர்கள் வழங்கிய போது