நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, January 6, 2011

எம்.ஜி.ஆர் முதுகின் மீது சவரி செய்யும் விசயகாந்த்...

 எம்.ஜி.ஆர் அவர்கள் விண்ணுலகம் சென்று கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.

எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த நாள் முதல் இன்று வரை நடைபெற்ற தேர்தல்களில் எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லியே ஓட்டுக்களை வாங்கிக்கொண்டு இருந்தனர் அ.தி.மு.கவினர்.

ஆனாலும் இது ஏற்றுகொள்ளக் கூடியதாக இருந்தது.
எம்.ஜி.ஆர். அவர்கள் ஆரம்பித்த கட்சி, அவருடன் இருந்த பலர் இன்றும் அ.தி.மு.கவில் உள்ளனர். எம்.ஜிஆருடன் பணியாற்றி உள்ளனர். ஆதலால் அவர்களுக்கு அந்த உரிமை உண்டு.

எம்.ஜி.ஆருக்கும் தனக்கும் துளிகூட சம்மந்தமில்லாத விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர் என்று கூறிக் கொண்டு தம்பட்டம் அடிப்பது எந்த வகையில் நியாயம்?.

எம்.ஜி.ஆரின் பெயரைச்சொல்லி ஓட்டுக்களையும் புகழையும் அவரை போல முதல்வராகவும் வருவதற்கு ஆசைப்படும் விஜயகாந்துக்கு என்ன உரிமை உள்ளது.

எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சித் தொண்டராக இருந்தாரா?
அ.தி.மு.க கட்சியின் கட்சி பதவியில் இருந்தாரா?.
அ.தி.மு.க கட்சி சார்பில் போட்டியிட்டு
கவுன்சிலராகவோ,

ஊராட்சி மன்றத் தலைவராகவோ,
நகர் மன்றத் தலைவராகவோ,
ஒரு எம்.எல்.ஏவாகவோ,
அட ஒரு உண்மை விசுவாசியாக, தொண்டனாக இருந்தாரா ?
எதுவுமே இல்லை.என்றே சொல்ல வேண்டும்.
அட இது எல்லாத்துக்கும் மேலே எம்.ஜி.ஆரிடம் இருந்த
அன்பு,
பண்பு,
நல்ல குண நலன்கள்,
கட்டுப் பாடுகள்,
நெருங்கி பழகக் கூடியத் தன்மை,
பிறருக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கும் குணம்,
பாராட்டும் குணம், etc..
இவற்றில் ஏதாவது ஒன்று உள்ளதா ?….
இந்த க(வெ)ருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்திடம்.
எம்.ஜி.ஆர் தேர்தல் நேரத்தில் பயன்படுத்திய வாகனத்தை வாங்கிவிட்டு அதில் பிரச்சாரம் செய்தால் எம்.ஜி.ஆர் ஆகிட முடியுமா?
எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் உள்ள பாடலை ரிமிக்ஸ் செய்து ஆடி நடித்தால் எம்.ஜி.ஆர். என்று கூறி விட முடியுமா?.
திடீரென்று இவர் கட்சி ஆரம்பிப்பாராம்,
கட்சிக்கும், தனக்கும் எந்த கொள்கையும் கிடையாதாம்.
ஆனால் தேர்தலில் நின்று ஓட்டுகளைப் பெற, பெரும் புகழும் அடைய, எம்.ஜி.ஆரின் பெயரை உபயோகித்துக் கொண்டு இருக்கின்றார்.
எம்.ஜி.ஆர் மறைந்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டன.
இன்னமும் அவர் பெயரை சொல்லி ஒட்டு கேட்க்க வெட்கமாக இல்லை.
அ.தி.மு.க கட்சியினர் கேட்டால்கூட பரவாயில்லை.
துளியும் சம்மந்தமில்லாத நீங்கள்
ஓட்டுக்காக,
புகழுக்காக,
பிரபலம் அடைவதற்காக

எம்.ஜி.ஆரின் பெயரை சொல்லி ஒட்டு கேட்க வெட்கமாக இல்லையா?
ஆரம்ப காலத்தில் இருந்தே எம்.ஜி.ஆரின் ரசிகராக வளர்ந்தவராம்.
எம்.ஜி.ஆரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவராம்.
ஆனாலும் ,எம்.ஜி.ஆர உயிருடன் இருக்கும் வரை அவர நேரில் சந்தித்து பேசும் வாய்ப்பே அமையவில்லையாம்.
எம்.ஜி.ஆருக்கு மக்கள் தலைவர் என்று பெயர் வந்ததே அவர் மக்களிடத்தில் அன்பாகவும், பண்பாகவும், பாசத்துடனும் நெருங்கி பழகியதால்தான்.

எளிதில் பார்க்கக் கூடியத் தலைவர்தான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை பார்க்க இந்த விஜயகாந்துக்கு ஒரு நாள் கூட நேரமில்லாமல் இருந்தது ஆச்சச்சரியம்தான். ?
எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த காலங்களில் விஜயகாந்த் என்ன வெளிநாட்டிலா இருந்தார்?
பார்க்க முடியாதபடிக்கு எம்.ஜி.ஆர் வெளிநாட்டில் இருந்தாரா ?
எம்.ஜி.ஆரும் சென்னையில்தான் இருந்தார். நீங்களும் சென்னையில்தான் இருந்தீர்கள்.
மானசீக குரு உயிருடன் இருக்கும்போதே பார்க்க முடியாத உங்களுக்கு அவரின் பெயரை அதுவும்
இறந்த பின்னர்
இத்தனை நாள் உபயோகிக்காத நீங்கள்,
அரசியலில் ஈடுபட்ட
பின்னர் ஏன் உபயோகிக்க வேண்டும்.
உங்களது சுய நலத்திற்காக எம்.ஜி.ஆரின் பெயரை உபயோகிக்க அவசியம் என்ன ?

என்ன உரிமை இருக்கின்றது ?.
இப்படி அடுத்தவர் பெயரை சொல்லி ஓட்டுகளை பெற நினைப்பது கேவலமாக இல்லை?.
நாங்கள் எல்லாம் முட்டாள்கள், நீர் ஒருவர்தான் புத்திசாலியிலும் அதி புத்திசாலி என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீரோ?
உங்களுக்கு என்று சுய சிந்தனையில்லையா?.

உங்களுக்கு தைரியமிருந்தால் உங்கள் கட்சி கொள்கை, செயல் பாடுகள், செய்த நன்மைகள், செய்யப்போகும் நன்மைகள், வெளிப்படையான திட்டங்களைச் சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

விருத்தாச்சல தொகுதிக்கு நீங்கள்தானே எம்.எல்.ஏவாக இருக்கிறீர்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக நீங்கள் உங்கள் தொகுதியில் செய்த நன்மைகளை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

இந்த மூன்றரை ஆண்டுகளில் மக்களுக்ககா நீங்கள் செய்த போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன்களைச் சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

இந்த மூன்றரை ஆண்டுகளில் உங்கள் தொகுதியில் லஞ்சங்களை ஒழித்து காட்டியிருந்தால் அதை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

தொகுதிக்கு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அதை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.
இந்த மூன்றரை ஆண்டுகளில் உங்களது விருத்தாச்சல தொகுதியை ஒரு முன் மாதிரியான தொகுதியாக மாற்றிக் காட்டியிருந்தால் அதை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.

உங்கள் மூலம் பல நலத் திட்டங்ககளை தமிழக அரசு செய்து இருந்தால் அதை சொல்லி ஒட்டு கேட்கலாமே?.
மக்களின் குறைகளை கொஞ்சமாவது நிறைவேற்றியிருந்தால் அதை சொல்லியாவது ஒட்டு கேட்கலாமே?.
ஏன், பயமாக இருக்கின்றதா?

கட்சி கொள்கையுமில்லை, உருப்படியான செயல்பாடுகளும் இல்லை, செய்த நன்மைகள், செய்யப் போகும் நன்மைகள் என்னவென்று தெரியவில்லை, திட்டங்கள் என்னவென்று தெரியவில்லை, எப்படி ஒட்டு கேட்பது ?..

அதனால் உங்களுக்கு பயம் இருப்பது ஆச்சரியமில்லை.
இப்படி இருக்கும் நிலையில் எப்படி ஒட்டு கேட்பது என்று முழித்துக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் எம்.ஜி.ஆர் பெயரை சொல்லி ஓட்டுகளை வாங்க நினைத்துக் கொண்டு இருக்கின்றீரோ ?.
அது, கனவிலும் நடக்காது. நாங்க என்ன முட்டளுங்களுன்னு நெனைச்சிங்களா ?

எம்.ஜி.ஆரின் உண்மையான ரசிகர்கள், விசுவாசிகள் என்றால் சத்தியமாக உங்களுக்கு ஒட்டு போடா மாட்டார்கள்.
ஒருவேளை மாற்று கட்சியினருக்குக் கூட தங்கள் ஓட்டுகளைப் போடலாமே தவிர ஒரு போதும் உங்களுக்கு ஒட்டு போடா மாட்டார்கள்.
எம்.ஜி.ஆரின் உண்மையான ரசிகர்கள், விசுவாசிகள் தயவு செய்து தே.மு.தி.கவிற்கு உங்களது ஓட்டுக்களைப் போட்டுவிடாதீர்கள்.
அப்படி நீங்கள் போட்டால், எம்.ஜி.ஆரின் ஆன்மா கூட மன்னிக்காது.


டீ(தேநீர்) கடையான தேமுதிக அலுவலகம்...


டீ கடையான தேமுதிக அலுவலகம்.
 தலைநகர் தில்லியில தே.மு.தி.க., ஆபீசை விஜயகாந்த் திறந்து வச்சாரு. அப்ப நடந்த தடபுடல் விழாவுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து கட்சிக்காரங்க விமானத்தளையும் ரயில்லயும் கைகாசப் போட்டு கஷ்டப்பட்டு போனாங்க. தில்லி கட்சி ஆபீஸ்ல இருந்த ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட்டு, எல்லாரும் சந்தோசப்பட்டு, அடுத்த பிரதமர் & ஜனாதிபதி விஜயகாந்துதான் என்று கோஷம் போட்டுட்டு தமிழகம் வந்து சேந்தாங்க.
இப்போ என்ன மேட்டருன்னா , செப்டெம்பர் மாசம் 29ம் தேதி, தமிழக  மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னைக்காக, தில்லியில விஜயகாந்த் உண்ணாவிரதம் (நாடகம்) இருந்தாரு. அதுல கலந்துகிரதுக்காக, வழக்கம் போல தங்களது கை காசை போட்டு விமானத்திலும் ரயில்லயும் இங்கிருந்து போன கட்சிக்காரங்க,  ஆசை ஆசையா மிகுந்த பொறுப்புணர்வோடு ஒரு ஆர்வக் கோளாறுல, தில்லி கட்சி ஆபீஸில் இருக்கும் ரிஜிஸ்டர்ல கையெழுத்து போட கட்சி ஆபீஸ தேடிப் போய் இருக்காங்க.
தேடு தேடுன்னு தேடி இருக்காங்க..கட்சி ஆபீசைக் காணோமாம். வடிவேலு காமெடி பாணியில்  “கட்சி ஆபீசைக் காணோம் ” “கட்சி ஆபீசைக் காணோம் “ அப்படின்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் தங்களுக்குள் புலம்பிகிட்டு இருந்தாங்களாம்.
கடைசியா அக்கம்பக்கம் விசாரிச்சு கட்சி ஆபீஸ் இருந்த இடத்தை கண்டுபிடுச்சவுங்க….அப்படியே ஷாக் ஆயிட்டாங்களாம்.
கட்சி ஆபீஸ் இருந்த இடத்துல டீக்கடைதான் இருந்துச்சாம்.
ஒரு நிமிஷம் ஆடிப்போன கட்சிக்காரங்க என்ன எதுன்னு விசாரிச்சப்ப, மாசம் 13,000 வாடகை தர முடியாம கட்சி ஆபீசைக் காலி செஞ்சுட்டதா சொல்லி இருக்காங்க.
இதை கேட்டு மேலும் அதிர்ச்சியான கட்சிக்காரங்க நொந்து போய் திரும்பி வந்து இருக்காங்க.
தமிழ்நாட்டுலேயே இன்னும் பெரிதாக சாதிக்க முடியாம இருக்கும் தேமுதிக கட்சிக்கும், விஜயகாந்துக்கும் தில்லியில் கட்சி ஆபீசை ஆரம்பித்தது எல்லாம் தேவையா.
 

அப்படியே தேவை என்றால் வாடகையை கொடுத்து கட்சி ஆபீசை மூடாமல் இருந்திருக்கலாம். குறைந்த வாடகைக்கு வேறு இடம் மாறி இருக்கலாம்.
ஒரு வேளை இப்படி இருக்கலாம், கட்சி ஆபீசுக்கு மாசா மாசம் வாடகை கட்ட சரியான ஒரு உண்மைத் தொண்டர் கிடைக்கவில்லை போல.
ஆகாயத்தில் கோட்டைகட்ட ஆசைப் பட்டால் இப்படித்தான்.
விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும்.
படிப்படியாக முன்னேற நினைக்காமல் ஓவர் நைட்டுல முதல்வரா, பிரதமரா, ஜனாதிபதியா ஆயிடலாம்னு நினைச்சா இப்படித்தான்.
எதுக்கு இப்படி கட்சி ஆபீஸ திறக்கனும், வாடகை கூட கட்ட முடியாம மூடனும்.இந்த பந்தா எல்லாம் தேவையா.
தன்னோட கட்சி ஆபீசுக்கு 13,000 ரூபாய் கட்ட முடியாத நிலையிலா இருக்கிறார் விஜயகாந்த்?.எல்லா செலவுகளையும் தொண்டர்களின் தலையில் கட்டுவிடலாம் என்ற ஒரு அற்ப புத்திதான்.
என்னிக்கு இவரைப் பத்தி, இவரோட கட்சிக்காரங்க தெரிஞ்சு புரிஞ்சிக்கப் போறாங்களோ. பாவம்.

மக்களை ஏமற்றும் விஜயகாந்...வன்னிய இளைஞர்களே ஏமாறாதீர்..

அடுத்தவர் முதுகில் சவாரி செய்யும் ஆட்களை நாம் பார்த்திருக்க கூடும். அடுத்தவருடைய பெர்யர்களையும், பட்டங்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்ட ஒரு மகா ( கேவலமான ) மனிதர் இருக்கின்றார்.
அவரு வேற யாருமில்லைங்க…..நம்ம புரட்சி கலைஞர், கருப்பு எம்.ஜி.யார் விஜயகாந்து தாங்க.
இப்படி பெயர்களையும் பட்டங்ககளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு இவர் அடைந்த பேரும் புகழும் மிக அதிகமே.
எப்படி என்று பார்ப்போம்.
அ. விஜயகாந்தாக மாறிய விஜயராஜ் அழகர்சாமி நாயுடு:
விஜயராஜ் அவர்கள் சினிமா உலகில் நுழைய, பிரபலமாக  ஆசை பட்டு தனது பெயரில் உள்ள “ராஜ்” இனை நீக்கி விட்டு …. அப்பொழுது மிக பிரபலமாக பேசப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல் வர வேண்டும் என்று எண்ணி ரஜினியின் பெயரில் இருக்கும் காந்தை எடுத்து தனது பெயரோடு ஒட்டிக் கொண்டு விஜயராஜ்……விஜயகாந்தாக மாறினார்.
அதன் மூலம் பேரும் புகழும் வந்தது.
ஆ. புரட்சி கலைஞராக மாறிய விஜயகாந்த்:
புரட்சி கலைஞர் என்று அழைக்கப்படும் இவர் என்ன புரட்சி செய்தார். பசுமை புரட்சியா ? கல்வி புரட்சியா ?. அல்லது மக்கள் நலனுக்காக பல போராட்டங்கள் நடத்தி மக்கள் புரட்சி செய்தாரா ?. ஒன்றுமே செய்ய வில்லை.
நமது தமிழக முதல்வர் மாண்புமிகு கருணாநிதியை விரும்புவர்களும் விரும்பாதவர்கள்கூட அவரைக் கலைஞர் என்று பெருமையாக அழைத்து புகழாரம் சூட்டுவர்.
கலைஞரிடம் மதிப்பும் மரியாதையும் இருப்பதை போல் காட்டிக் கொண்டு ஆட்டுத் தோல் போர்த்தி கொண்ட ஒரு நரி போல் அவரிடம் நட்பாக இருந்து கொண்டு, கலைஞரிடம் அளவற்ற பாசத்துடன் இருப்பதைப் போல் நடித்து கொண்டு, சத்தமில்லாமல் புரட்சியையும் கலைஞரையும் ஏற்கனவே மாற்றிய பெயரோடு அடை மொழி போல் போட்டுக் கொண்டார்.
இதன் மூலம் அவர் அடைந்த பேரும் புகழும் அதிகமே.
இ. தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் பெயர் :
விஜயராஜ் விஜயகாந்தாக மாறி, விஜயகாந்துக்கு முன்பு புரட்சி கலைஞர் என்ற அடை மொழியும் போட்டுக் கொண்டு சில காலங்கள் சொல்லும் படியான படங்களில் நடித்து கொண்டு இருந்தார்.
பின்னர் காலங்கள் மாறின, காட்சிகள் மாறின. நடித்த படங்கள் ஓடவில்லை, பார்க்க ஆளுமில்லை என்ற நிலை ஆனது. இந்த நிலையில் அவருக்கு உதித்ததுதான் அரசியல் பிரவேசம். கட்சி ஆரம்பித்தார்.
தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் என்று பெயரும் சூட்டினார். கட்சியின் பெயராவது தனது சுய சிந்தனையில் உதித்த பெயரை வைத்தாரா ?. அதுவுமில்லை. கட்சிக்கு பெயர் வைக்க இவர் திரும்பிய இடம் தி.மு.க..
” திராவிட முன்னேற்ற கழகம் ” என்ற பெயரை காப்பி அடித்து கொஞ்சம் உல்டா பண்ணி முற்ப்போக்கு திராவிட கழகம் என்று மாற்றி, அதன் முன் தேசிய என்று போட்டுக் கொண்டார்.
கட்சியின் பேரைக் கூட சுயமாக சிந்தித்து பெயர் வைக்க தெரியாதவர். கட்சிக்கு பெயர் வைப்பதற்கே இவர் இன்னொரு கட்சியை நாட வேண்டியிருக்கின்றது. அப்படி பட்ட இவரெல்லாம் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்.
ஈ. கருப்பு எம்.ஜி.யார் – விஜயராஜ் :
தேசிய முற்ப்போக்கு திராவிட கழகம் என்று கட்சியும் ஆரம்பித்து விட்டார். சட்ட சபைத் தேர்தல் வந்தது. பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். கட்சியின் பெயர் சூட்ட தி.மு.க தேவைப் பட்டது.
இப்பொழுது அரசியலில், பிரசாரத்தில், மக்களிடம் பிரபலமாக, ஓட்டுக்களை வாங்க இன்னொரு நபரின் பெயர் தேவைப் பட்டது.
அவர் நமது மக்கள் தலைவர் எம்.ஜி.யாரின் பெயர்.
பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் தன்னை ஒரு கருப்பு எம்.ஜி.யார். என்று கூறி பிரச்சாரம் செய்தார். அவரது ரசிகர்கள் தொண்டர்கள் கருப்பு எம்.ஜி.யார் என்று பேனர்களும் வைத்தனர், அப்படியே கோஷமிட்டனர்.
ஆனால் நம் மக்கள், விஜயகாந்த் ஒரு கருப்பு எம்.ஜி.யார் அல்ல அவர் ஒரு வெறுப்பு எம்.ஜி.யார் என்று தங்களது ஓட்டுகள் மூலம் காட்டினர். எம்..ஜி.யாரின் பெயரைக் கூட சொல்லக் கூட இவருக்கு தகுதியில்லை என்று அந்த நேரங்களில் பலர் கூறினர்.
இனி வரும் காலங்களில் யாரின் பெயரை தன்னுடன் சேர்க்கிறார் என்று பார்க்கலாம்.