நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Monday, February 28, 2011

மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத் திருமண விழா..

                                                                    நாள்-28-02-2011
மருத்துவர் அய்யா அவர்களின் இல்லத் திருமண விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி,
பாட்டாளி  மக்கள் கட்சியினுடைய  நிறுவனத் தலைவரும், சமூக நீதிக் காவலரும், என்னுடைய அன்பிற்குரிய நண்பரும், என்றென்றும் திராவிட சமுதாயத்திலே  சுயமரியாதை உணர்வை உருவாக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று அயராமல் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற டாக்டர் ராமதாஸ் அவர்களே, அவருடைய அன்புச் செல்வன், என்னுடைய அன்புத் தம்பி  அன்புமணி ராமதாஸ் அவர்களே, தம்பி  ஸ்டாலின் இங்கே வாழ்த்தும்பொழுது தேர்தல் திருமணம்  என்று குறிப்பிட்டார். இது மணமகனை மணமகள் வீட்டாரும், மணமகளை   மணமகன் வீட்டாரும்  தேர்வு செய்த பிறகு நடைபெறுகின்ற  திருமணம்.   ஏற்கனவே  இல்லத்தார் தேர்ந்தெடுத்து நடத்துகின்ற திருமணம்.   எனவே  ஒரு நல்ல கூட்டணி     இரு குடும்பத்திற்கிடையே அமைந்து அந்தக் கூட்டணி   இந்தக் குடும்பத்தின் குலவிளக்குகளை ஏற்றி வைக்கக் கூடிய  கூட்டணியாக விளங்கும் என்ற நம்பிக்கையோடு  நான் அவர்களை வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா பேரன், டாக்டர் சுகந்தன் ராணிப்பேட்டை குணசேகரன் அன்பு மகள்  செல்வி  டாக்டர் டீனா  இவர்கள்  இருவரும்  இல்லறம் இணையும் விழா நடத்திக் கொள்ளும் இந்த நாளில், நாங்களும் சாட்சியாக இருந்தோம் என்று பெருமைப்படுகின்ற அளவிற்கு  நாமெல்லாம் இங்கே வாழ்த்துரை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

நம்முடைய நண்பர் கோ.க. மணி பேசும்போது என்னைச் சிறப்பிக்கும் போது கலைஞர், எதிர்க்கட்சித் தலைவராக எதிர்க் கட்சித் துணைத் தலைவராக எதிர்க் கட்சி கொறடாவாக அண்ணா அமைச்ச ரவையிலே அமைச்சராக  பிறகு முதல் அமைச்சராக என்று  இப்படி 56, 60 ஆண்டுகளில் நான் வகித்த பதவிகளையெல்லாம் சொன்னார். அந்த பதவிகளையெல்லாம் விட இன்றைக்கு இந்தத் திருமண விழாவிலே புரோகிதராக அமர்ந்திருக்கின்ற இந்தத் திருமணத்தை நடத்தி வைக்கின்ற இந்தப் பணியைத்தான் பெரும் பதவியாக நான் கருதுகிறேன்.
இதென்ன, புரோகிதர் பதவியை பெரிய பதவியாகக் கருதுகிறாய் என்று  யாராவது கேட்பீர்களேயானால்,  இன்றைக்கு அந்தப் பதவிக்குத் தான் நாட்டிலே பெருமை. எனவே அந்தப் புரோகிதராக இந்தத் திருமண விழாவிலே கலந்து கொண்டு மணமக்களை நான் வாழ்த்துகிறேன்.  என்னுடைய அன்பை,  உண்மையான நெஞ்சத்தை, உறவு முறையில் காட்ட வேண்டிய அந்தப் பாசத்தை  மணமக்களுடைய குடும்பத்தாருக்கு குறிப்பாக அய்யா ராமதாஸ் அவர்களுக்கு நான் வழங்க விரும்புகிறேன்.
குடும்பம் என்றால் இடையிலே சில பிணக்குகள் வரக் கூடும். என்ன தான் நான் மணமகனாக டாக்டர் ராமதாஸ் மணமகளாக இருந் தாலும் எங்கள் குடும்பத்திற்குள்ளே பிணக்குகள் வரும், போகும். ஆனாலும் ஒரு இலட்சியத்தை நிறைவேற்ற, ஈடேற்ற முனையும்போது நாங்கள் ஒன்று பட்டு நிற்போம் என்பதற்கு  நீங்கள் காணுகின்ற காட்சி தான்  சாட்சி என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்.

 நம்முடைய நாட்டில்  காலாகாலமாக நடைபெற்ற தமிழகத்தின் திருமணங்கள்  எல்லாம்    சங்கக் காலத்துத் தி
ருமணங்கள் எல்லாம்  ஞாயும் யாயும்  யாராகியரோ, எந்தையும் முந்தையும் எம்முறை கேளிர்   நானும் நீயும் எவ்வழி அறிதும்   செம்புலப் பெய் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே     நீ யாரோ, நான் யாரோ    உன்னுடைய தந்தை யாரோ     தாயார் யாரோ   செம்புலப் பெய் நீர் போல    சிகப்பு நிறத்திலே ஊற்றப்பட்ட தண்ணீர் அந்த வண்ணத்தோடு கலந்து ஒன்றாகி விடுவதைப் போல நம்முடைய அன்பான நெஞ்சங்கள் கலந்து விட்டன என்று சொல்லி மணவிழாவை முடித்துக் கொண்டார்கள்.   
அந்தத் தமிழர்களுடைய திருமணம் இடைக்காலத்தில் தடை பட்டு விட்டன என்று நாம் எண்ணியதற்கு  மாறாக பெரியார் அவர்களுடைய கொள்கைப் பற்றால்,  அதனை  சட்டப் பூர்வமாக நிறைவேற்றியதோடு மாத்திரமல்ல    இப்படி  எங்களுடைய குடும்பங்களிலும்  தமிழ் வழியிலே திருமணங்களை நடத்த முடியும், நடத்துவோம்,  சட்டம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்  நடத்துவோம் என்கின்ற உறுதியோடு நம்முடைய டாக்டர் அய்யா அவர்கள் இங்கே நடத்திக் காட்டிய திருமணம்,  பழந்தமிழர் காலத்திலே  பசும்புல்  தரையில் பால் வண்ண உடை உடுத்தி, காதலுக்கும் கடவுளுக்கும் வேறுபாடில்லை, அது காலத்தால் அழிவதுமில்லை என்று  வாழ்த்த தமிழர்கள் காலத்துத் திருமண முறையாக  இங்கே இருந்ததை நான் கண்டேன்.   வியந்தேன்,  வாழ்த்துகிறேன்.  அய்யா அவர்களையும், அவருடைய குடும்பத்தாரையும், அவருடைய கட்சித் தோழர் களையும் நான் வாழ்த்துகிறேன்.
அந்தக் கட்சியிலே உள்ள அத்தனை உறுப்பினர்களையும்   நான் வழக்கமாகச் சொல்வதைப் போல    என்னுடைய உடன்பிறப்புகள் என்ற முறையில்  அந்த உடன்பிறப்புக்களுக்கும் என் வாழ்த்துகளைச் சொல்லி, நாம் அடையப் போகும் வெற்றிக்கு  இது  முதல் அடையாளமாக இருக்கட்டும் என்று கூறி  இதுவும் ஒரு மங்கலமான விழா தான் என்று எல்லோராலும் பாராட்டக்கூடிய  போற்றக் கூடிய    விரும்பக் கூடிய விழாவாக  அமையும், அதைப் போல இந்தக் குடும்ப விழா எல்லோராலும் பாராட்டக் கூடிய ஒரு விழாவாக, வெற்றிக்கு அடையாள விழாவாக இந்த விழா அமைந்திருக்கின்றது என்று கூறி, மணமக்கள் பல்லாண்டு வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்தி
இன்று  டாக்டர் ராமதாஸ் அவர்களுடைய பேரனுக்கான திருமணம்,  இனி கொள்ளுப்
பேரனுக்கு நடைபெறுகின்ற திருமணவிழாவிலும் கலந்து கொள்கின்ற வாய்ப்பு நமக் கெல்லாம் கிடைக்கும்  என்று சொல்வதற்குக் காரணம்  அந்த அளவிற்கு எங்களுடைய நட்பு நீடிக்க வேண்டும் என்ற ஆசையோடு இதைச் சொல்கிறேன் என்று அப்படி நீடிப்பதற்கு  அன்புமணியும் அருள் பாலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

Tuesday, February 1, 2011

கருணாநிதிக்கு பாடம் புகட்டிய மருத்துவர் இராமதாசு...








                        31-1-11 அன்று டெல்லியில் "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., உள்ளது' என்று, முதல்வர் கருணாநிதி கூறியதற்கு, பா.ம.க., உடனடி பதிலடி கொடுத்ததால், தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் தி.மு.க.,விற்கு ஏற்பட்டுள்ளது. பா.ம.க.,வை காரணம் காட்டி, அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க நினைத்த தி.மு.க.,வின் திட்டம், "பணால்' ஆனது.

டில்லியில் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், காங்கிரஸ் உடனான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காகவும் தமிழக முதல்வர் கருணாநிதி, நேற்று முன்தினம் டில்லி வந்தார். அப்போது நிருபர்களிடம் பேசும்போது, "தற்போதைய நிலையில் எங்கள் கூட்டணியில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன' என்றார்.

இந்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் நேற்று பகல் 12 மணிக்கு, முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். அரை மணி நேர சந்திப்புக்குப் பின் வெளியே வந்த கருணாநிதியிடம், "பா.ம.க, குறித்து நீங்கள் நேற்று தெரிவித்த கருத்துக்கு, நேர்மாறாக ராமதாஸ் பதில் கூறியுள்ளாரே' என்று நிருபர்கள் கேட்டனர்.அதற்கு பதில் அளிக்கும்போது, "நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். அவர்கள் அவர்களின் கருத்தை தெரிவித்துள்ளனர். அவர் கூட்டணியில் எப்போது இணைவது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை' என்றார். பா.ம.க., குறித்த முதல்வரின் நிலைப்பாடு ஒரே இரவுக்குள் மாறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தி.மு.க. கூட்டணியில் இம்முறை எப்படியும் முடிந்தளவுக்கு அதிகமான சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் துடிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், காங்கிரசுக்கு ஓரளவுக்கு அதிகமாக சீட்டுகளை அளிக்க தி.மு.க., தீர்மானித்திருந்தாலும், காங்கிரஸ் எதிர்பார்க்கும் அளவிற்கு சீட்டுகளை அள்ளிக் கொடுக்க தி.மு.க, தயாராக இல்லை. காங்கிரஸ் உடனான பேரத்தின் கடுமையை முடிந்தளவுக்கு குறைக்க தி.மு.க., பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தான், மத்தியில் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கிடைத்த அமைச்சர் பதவிகளை தி.மு.க., ஏற்க முன்வராமல் தவிர்த்து விட்டது. இந்த வழியில், பா.ம.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வந்தால், இட நெருக்கடியை காரணம் காட்டி காங்கிரஸ் கேட்கும் சீட்டுகளை தர இயலாது என சமாளிக்கலாம் என்று தி.மு.க., திட்டமிட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திப்பதற்கு முன்பாகவே கூட்டணியில் பா.ம.க.,வும் உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தினால் தான், காங்கிரசுடன் பேரம் பேசும் போது எளிதாக இருக்கும் என்று தி.மு.க, எதிர்பார்த்தது. இதன் மூலம் அதிக தொகுதிகளை கேட்கும் காங்கிரசுக்கு, "செக்' வைக்க தி.மு.க., நினைத்தது. இதனடிப்படையில், டில்லி வந்ததும், "தி.மு.க., கூட்டணியில் பா.ம.க, உள்ளது' என்று கருணாநிதி பேட்டியளித்தார்.

இப்பின்னணியை உணர்ந்த பா.ம.க., சுதாரித்துக் கொண்டது. முதல்வரின் கருத்தை மறுக்கும் விதமாக, உடனடியாக பா.ம.க.. மாற்றுக்கருத்தை நேற்று முன்தினம் இரவே வெளியிட்டது. இதை தி.மு.க., சற்றும் எதிர்பார்க்கவில்லை.இதன் காரணமாக, ஒரே இரவுக்குள் பா.ம.க., குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் முதல்வருக்கு ஏற்பட்டுள்ளது. சென்ற பாரளுமன்ற தேர்தலில் பா.ம.கவை தோற்கடிக்க ஒரு தொகுதிக்கு 10 கோடி வரை திமுக செலவு செய்தது ஆனால் இன்று பாமக வின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

Wednesday, January 5, 2011

கருணநிதியை நாம் மட்டுமல்ல காலம் கூட மன்னிக்காது....

தி.மு.க. தோற்க வேண்டும்! ஏன்?


     டெல்லி செங்கோட்டையிலிருந்து கன்னியாகுமரி வட்டகோட்டை வரை தமிழகத்தில் தற்போது நடக்கும் ஆட்சி அலங்கோலத்தைப் பற்றி பேசாதவர்கள் மிக குறைவு, வடக்கில் இருந்து வந்து தமிழகத்தை சுரண்டுகிறார்கள் என்று வீதிதோறும் மேடை போட்டு பாட்டுபாடி தீர்த்தவர்கள், இன்று வடக்கே சென்று ஆட்சி பீடத்தில் ஒட்டிக்கொண்டு ஒட்டுமொத்த தேசத்தையே உண்டுயில்லை என்று ஆக்கி கொண்டிருப்பதாக நாடு முழுவதும் பேசப்படுகிறது தி.மு.காவின் சுரண்டலை தாங்க முடியாமல் திரு. ராகுல்காந்தி கூட கொதித்து போயிருப்பதாக கேள்வி, இப்படி எல்லாதரப்பிலும் கரித்து கொட்டும் அளவிற்கு இவர்கள் செய்த தவறுகள் தான் என்ன? கலைஞர் அரசால் ஒரு ரூபாய்க்கு அரசி உட்பட இரண்டு ஏக்கர் நிலம், இலவசதொலைக்காட்சி பெட்டி, மருத்துவ காப்பிடு திட்டம் என ஏகப்பட்ட நல திட்டங்களை செய்து வருகிறார்களே இவர்களை ஏன் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்? என சில விவரம் புரியாதவர்கள் கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவு என்றாலும் விளக்கம் சொல்ல வேண்டியது நமது கடமை.


       ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்று மிக பிரமாதமாக விளம்பரபடுத்தபடுகிறது அந்த விளம்பரத்தை மேலோட்டமாக கேட்டோம் என்றால் தமிழ்நாட்டில் பசி கொடுமை என்பதே கலைஞர் ஆட்சியில் இல்லாது போய்விட்டது என்று தோன்றும். ஆற அமர உட்கார்ந்து அரசியை தவிர மற்ற பொருட்களின் விலை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்தால் வெறும் சோற்றை மட்டுமே சாப்பிட பழகி கொண்டவர்களால் தான் தமிழ்நாட்டில் வாழ முடியும் என்பது தெரியும். பருப்பு விலை காய்கறிகளின் விலை, மசாலா பொருட்களின் விலை, இன்னும் சமையலுக்கு தேவையான மண்ணெய், எரிவாயு, விறகு என்று எல்லாவற்றையும் கணக்கு போட்டு பார்த்தால் ஒரு சிறிய குடும்பத்தை பட்டினி இல்லாமல் நடத்துவதற்கு தினசரி இருநூறு ரூபாயாவது வேண்டும். அடிப்படை தேவைகளுக்கே மாதம் ஆறாயிர ரூபாய் வேண்டும் எனும்போது தண்ணீர் வரி, மின்சார வரி, மருத்துவ செலவு, மற்றும் இதர செலவுகளுக்கு மக்கள் கண்கள் பிதுங்கி விடுகிறார்கள்.


    அதற்காக அரசாங்கம் ஒவ்வொரு குடி மகனுக்கும் மாதம் பத்தாயிரம் உதவி தொகையா தர முடியும்? என்று சிலர் கேட்கலாம் தமிழகத்தில் இருக்கின்ற எந்த மக்களும் உதவி தொகை எதிர்பார்க்கவில்லை. பொருட்களின் விலைவாசி குறைந்தால் தங்களது வருவாய்க்குள் செட்டும் சிக்கனமாக குடும்பத்தை நடத்தி கொள்ளலாம் என்று தான் எதிர்பார்க்கிறார்கள். முன்பெல்லாம் கடைதெருவிற்கு போனால் சட்டை பையில் பணத்தை எடுத்து போயி கைப்பையில் பொருள் வாங்கிவரலாம். இப்போதோ கைப்பையில் பணம் எடுத்து போனாலும் கூட சட்டை பை நிறைய பொருள் கிடைப்பதில்லை.

     விலைவாசி நிலவரம் இப்படியென்றால் மின்சாரத்தின் கதையோ மிக மோசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சாலை முதல் குழந்தைகள் படிப்பது வரைக்கும் மின்சாரம் இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. சுமார் ஒரு மணி நேரம் மின்சாரம் இல்லையென்றால் திருப்பூர், கோவை, சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் உற்பத்தி இழப்பு என்பது பல கோடி ரூபாயை தாண்டிவிடும்.

     இன்று தமிழகம் முழுவதிலுமே பலமணி நேரங்கள் மின்சாரம் இருப்பதில்லை. பலசிறிய தொழிற்சாலைகள் முற்றிலுமாக இயங்க முடியாத நிலைக்கு போய்விட்டன. இதனால் பல தொழிலாளர் குடும்பங்கள் வீதி வந்துவிட கூடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 



   நமது தமிழக அரசோ மின்சார உற்பத்தியை சீர்படுத்துவதற்கு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை இரண்டாயிரத்து ஒன்பதில் கூட அதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரளவு பிரச்சனையை சமாளித்து இருக்கலாம். அரசின் மெத்தன போக்கால் விவசாயம், தொழில்துறை, வீடுகள், மருத்துவமனைகள் கூட இருள் அடைந்து வருகிறது.

    இந்த நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யுனிட்டுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்டுத்துபவர்களுக்கு யுனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் ஏற்றியிருப்பது கடும் வேதனைக்குரியது, இன்றைய நிலையில் 300 யுனிட்டுகளுக்கு மேல் உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம், அதுவும் தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மின்சார கணக்கீடு டிஜிட்டல் மீட்டர்கள், இண்டிகேட்டர் எரிந்தால் கூட மரவட்டை மாதிரி நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இப்போது எல்லாம் சாதாரணமாக ஒரு குழல்விளக்கு எரிந்தால் கூட முன்னூறு ரூபாய்க்கு மேல் தான் மின்சாரகட்டணம் வருகிறது.


   தமிழகத்தின் பல ஊர்களில் குடி தண்ணீர் விநியோகம் என்பதே சுத்தமாக கிடையாது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் கார்பேரஷன் குழாயில் குடிதண்ணீர் வந்தே வருட கணக்காகிறது. தர்மபுரி, திருப்பூர், நான்குனேறி, ராதாபுரம், மதுரையின் சில பகுதிகளில் குடிதண்ணீருக்காக ஒரு குடும்பம் மாதம் முந்நூறு ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.

  நிலத்தடி நீரை சரியான முறையில் பயன்படுத்தினாலே தமிழகத்தில் குடீநீர் பிரச்சனையே ஏற்படாது. ஆனால் நிலத்தடி நீர் சுண்டி போவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை கெட்ட காரியங்களையும் ஆளும் தரப்பு செய்து கொண்டியிருக்கு, 


   பல நகராட்சிகள், பேரூராட்சிகளில் தெருவிளக்கை கூட பராமரிக்க அக்கறையில்லை. அரசாங்க மருத்துவமனைகளில் குறிப்பாக தலூக்கா தலைநகரங்களிலுள்ள மருத்துவமனைகளில் உயிர்காக்கும் மருந்துக்களே இருப்பில் இருப்பது இல்லை.

     கலைஞர் மருத்துவ காப்பிடு திட்டம் மிகபெரும் சேவைதிட்டமாக அரசாங்கத்தால் விளம்பரபடுத்தப்படுகிறது. உண்மையில் அந்த திட்டத்தால் சில ஏழைகள் பயன்பட்டாலும் கூட, பெருமளவு பயனையும், இலாபத்தையும் அனுபவிப்பது ஆளும் கட்சிகாரர்களுக்கு வேண்டப்பட்ட தனியார் மருத்துவ மனைகளே ஆகும்.

     அரசாங்கத்திலிருந்து நோயாளிக்கு ஒரு லட்சரூபாய் வரை சலுகை வழங்குவதாக கூறப்பட்டாலும் சிகிச்சைக்கு முன்பும், பின்பும் ஏரளமான கட்டண தொகைகளை மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளிடமிருந்து கரந்து விடுகிறது. சில குறிப்பிட்ட நோய்களுக்கு தான் கிசிக்கை என்று இருக்கும். போது நோயாளிகளுக்கு அது சம்பந்தமான விவரங்கள் தெரியாத போது மக்களின் அறியாமையை பல மருத்துவ மனைகள் சுயலாபத்தோடு பயன்படுத்துகின்றனர். ஆளும் தரப்புக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒரு சில மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமலே காப்பிட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்று கொள்ளப்படுகிறது. இது மருத்துவர்களால் பேப்பர் கேஸ் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. நோயாளிக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பிறகு சில செயற்கை கோணங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டு ஆவணமாக்கப்படுவதாகவும் கேள்வி.



    சமச்சீர் கல்விமுறையை கொண்டு வந்துவிட்டதாக அரசாங்கம் பெருமையடித்து கொள்கிறது. உண்மையில் இந்த கல்விமுறை பாடப்புத்தகங்களில் மட்டுமே இருக்கிறது. நடைமுறையோ, மாணவர்களும், பெற்றோர்களும் திணரும் வண்ணமே உள்ளது.

     தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருமே தங்களுக்கு என்று தனிதனி கல்லூரிகளை கட்டி வசூல் வேட்டையில் மிக தீவிரமாக இருக்கும் போது மக்களுக்கு பயன்படும் வண்ணம் கட்டண விகிதங்களை அரசாங்கத்தால் எப்படி தீர்மானிக்க முடியும்?

     கல்வியை வியாபார பொருளாக ஆக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியை எதிர்த்தவர்கள், ஆங்கிலத்தை வரவேற்று தமிழை அழித்தவர்கள் கல்விக்காக எப்படி சேவை செய்வார்கள். 


       சமுதாயத்தில் நடைமுறை தலைமுறையினரை தமிழ் பண்பாட்டை அறிய முடியாத வண்ணம் இன்று நாடு ஆகிவிட்டது. தமிழக்காக ஒடும் ஏயிலை இடைமறித்து தண்டவாளத்தில் தலைவைத்து, பாளையங்கோட்டை சிறையில் பாம்பும், தேளும் நடுவில் கடுஞ்சிறை அனுபவித்தவர் ஆட்சியில் தமிழ் பண்பாடு காற்றோடு போனதோ இல்லையோ பணக்கார தமிழன் தான் படிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

       தி.மு.க. அரசு சொன்னதைதான் செய்யும், செய்ததை தான் சொல்லும் என்று நமது முதல்வர் அவர்கள் அழகான கவிதை மொழியில் பேசி ஐம்பது லட்சம் ஏக்கர் நிலத்தை நிலமில்லாத விவசாயிகளுக்கு தலா இரண்டு ஏக்கராக பிரித்து தரப்போவதாக வாக்குறுதி வழங்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்கள், 


    ஆட்சிக்காலமும் இன்னும் சில மாதங்களில் முடிய போகிறது. இதுவரை எத்தனை பேர்கள் நிலத்தை பெற்றார்கள் என்று தெரியவில்லை. இது சம்பந்தமாக முதல்வரிடம் கேட்டால் ஐம்பது லட்ச ஏக்கர் நிலமில்லை, இருந்தால் காட்டுகள் பிரித்து தருகிறோம் என்கிறார்.

      இதை தான் ஆரம்பத்தில் வை. கோபால்சாமி, விஜயகாந்த் போன்றவர்கள் மேடைகளில் கேட்டபோது ஏழைகள் நிலம் பெறுவது பிடிக்காதவர்கள் என்று எரிச்சல்பட்டார் முதல்வர், இன்று அவர் கூறுகிறபடியே பன்னாட்டு நிறுவனங்களிடம் குவிந்து கிடக்கும் பல்லாயிர கணக்கான ஏக்கர் நிலங்களையாவது பிரித்து கொடுங்கள் என்று ஏழைகள் கேட்டால் காவல் துறையை ஏவிவிட்டு தடியடி நடத்தி தனது நிஜமான அரக்க தனத்தை வெளிகாட்டுகிறார்.



     பன்னாட்டு நிறுவனங்கள் வைத்துள்ள நிலங்களை கை வைத்து புதிய பிரச்சனைகளை கூட கிளப்ப வேண்டாம். அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களை ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகளை சார்ந்த திமிங்கலங்கள் பல காலமாக அபகரித்து அனுபவித்து வருகிறார்கள் அதை கையகப்படுத்தி மக்களுக்கு கொடுத்தாலே ஏராளமான பேர் பயனடைவார்கள்.

    தமிழக அரசே கூட திருவள்ளூர் மாட்டம் காவேரி ராஜபுரத்தில் 199 ஏக்கர் நிலத்தையும், பல்லவாடத்தில் 800 ஏக்கர் நிலத்தையும், திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மா பட்டியில் 5000 ஏக்கர் நிலத்தையும் கைவசம் வைத்துள்ளது.

        கையளவு இடமிருந்தால் கூட கண்ணீர் விடும் ஏழைக்கு தானமாக கொடுப்பேன் என்று வசனம் பேசிய முதல்வர் இந்த நிலங்களையெல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறாரோ தெரியவில்லை. ஒரு வேளை ஸ்டாலின் , அழகிரி, கனிமொழி தயாநிதிமாறன் போன்றோருக்கு பட்டாபோட்டு கொடுக்க போகிறாரோ என்னவோ? நிலைமை இப்படியிருக்க தி.மு.க அரசு செய்யும் பல நல்திட்டங்கள் அரசுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி கொடுக்கிறது என்று எதிர்கட்சிகள் பொறாமைபடுவதாக ஆளும் தரப்பு வாய்வலிக்க புலம்புகிறது.



     தற்போதைய தமிழக அரசின் இலவச திட்டங்கள் எந்த கோணத்தில் மக்களால் பார்க்கப்படுகிறது, விமர்சனம் செய்யப்படுகிறது என்பதை ஆராய்ந்தால் மக்களிடத்தில் கூட சற்று விழிப்புணர்வு ஏற்பட்டுயிருக்கிறது என்று சொல்ல வேண்டும். இலவச அடுப்பு கொடுத்தார்கள் ஏரிவாயு சிலிண்டர் விலை பலமடங்கு ஏறிவிட்டதனால் அடுப்பு துருபிடித்து கிடக்கிறது.

   இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி தந்தார்கள். ஒரு நாள் ஒடியது மறுநாளில் வெறும் புள்ளி மட்டும் தான் தெரிந்தது. ஒடாத டி.வி யை மூலையில் போடுவதா அல்லது வெங்காயத்திற்கோ மரவள்ளி கிழங்கிற்கோ, காயலான் கடையில் போடுவதா?

    அடுத்ததாக இலவச நீர் மோட்டார் தரப்போவதாக தலைவர் அறிவித்து இருக்கிறார். அதை வாங்கி எந்த பழைய இரும்பு கடையில் போடுவது என்று மக்கள் பேசி கொள்கிறார்கள்.

      இதுமட்டுமல்ல இந்த இலவச திட்டங்களை எல்லாம் அறிவிப்பதை விட்டுவிட்டு நிலப்பதிவு அலுவலகம், வருவாய் துறை அலுவலகம், காவல் துறை போன்வற்றில் ஊழல் நடக்காமல் சாமானியனும் நிவாரணம் பெற வழி செய்தாலே கலைஞரை கை எடுத்து கும்மிடலாம் என்றும் பேசி கொள்கிறார்கள். இந்த பேச்சியெல்லாம் கலைஞர் காதில் எப்படியேறும்.

      இத்தகைய உருப்படி இல்லாத திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை கூட மன்னித்து விடலாம். .ஜெயலலிதா வந்தாலும் சரி வேறு யாரு ஆட்சிக்கு வந்தாலும் சரி தமிழகத்தின் தலையெழுத்து இப்போதைக்கு இதுதான்.

    ஆனால் மன்னிக்க முடியாத, கூடாத ஒரு கொடும் செயலை கலைஞர் செய்து விட்டார். சுற்றுச்சூழலுக்காகவும். மது. புகை போன்றவற்றால் பாதிக்கபடுவதை தடுத்து நிறுத்த வக்கில்லாத கருணாநிதி தனி மனிதராக ஐந்து ஆண்டு காலத்தில் சுகாதர துறையில் போரடி பல சாதனைகளை புரிந்த மருத்துவர் அன்புமணி அவர்களை அழிக்க நினைத்து பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஏழு தொகுதிகளிலும் பன்னாட்டு கம்பனிகளுடன் கைகோர்த்து பல கோடிகளை வாரி இறைத்து நம்மை  தோற்கடித்த கருணநிதியை நாம் மட்டுமல்ல காலம் கூட மன்னிக்காது.இத்தனை நாள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து ஏரளமான பணத்தை சுரண்டி வைத்திருக்கிறோம். அந்த பணத்தில் கால் பங்கை செலவழித்தாலே ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்களையே விலைக்கு வாங்கி விடலாம் என்று செயல்படுகிறார் கருணாநிதி. இதன் மூலம் ஜனநாயகம் என்பது செத்த சவமாகிவிடும். அதனால்தான் தமிழகத்தில் ஜனநாயகம் பிழைக்க சர்வ நிச்சயமாக தி.மு.க தோற்க வேண்டும் நாம் வருங்காலத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் பா.ம.க வெற்றிபட பாடுபடவேண்டுமே தவிற மாம்பழத்தை காலில் போட்டு மிதித்த ஸ்டாலினையே  வெற்றிபெற வைக்ககூடாது..