நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, September 14, 2014

செப்டம்பர்- 17 இன்னுயிர் தந்து இனம் மானம் காத்த வன்னியர் குல சிங்கங்களின் புகைப்படங்கள்





1987 ஆம் ஆண்டு - வன்னியர் உட்பட அனைத்து சாதியினருக்கும் சாதிவாரி மக்கள்தொகைக்கேற்ப இடஒதுக்கீடு கேட்டு செபடம்பர் 17, தந்தை பெரியார் பிறந்த நாள் முதல், ஒருவார கால சாலமறியலை அறிவித்தது, மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட வன்னியர் சங்கம். மூன்று மாத காலத்திற்கு முன்னறே அறிவிப்பு செய்து, நாடெங்கும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. ஆனால், செப்டம்பர் 16 அன்று அண்ணா அறிவாலயம் திறக்கப்படும் என தாமதமாக அறிவித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

அதாவது, செபடம்பர் 17 அதிகாலை 12 மணி முதல் மறியல் நடத்துவதாக வன்னியர் சங்கம் முன்பே கூறியிருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதே செபடம்பர் 16 இரவு சென்னையில் அறிவாலயம் திறப்புவிழா நடத்தி, செபடம்பர் 17 அதிகாலை 12 மணிக்கு மேல் தென்மாவட்ட திமுகவினர் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை கடக்கும் வகையில் - சதி செய்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி.

வன்முறையில் ஈடுபடுவதற்கு அணியமாக ஆயுதங்களுடன் வந்த குண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதான் இட ஒதுக்கீட்டு போரில் 21 பேர் உயிரிழக்கவும், ஒரு லட்சம் பேர் சிறைக்கு செல்லவும், பல்லாயிரக் கணக்கானோரின் வீடுகளும், உடைமைகளும் காவல்துறை வெறியாட்டத்தில் பாழாக்கப்படவும் காரணமான முதல் நடவடிக்கையாகும்.

வன்னியர் சங்கத்தின் நியாயமான போராட்டத்தில் - வன்னியர்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 21 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் படுகாயம், லட்சம் பேர் சிறை, பல ஆண்டுகள் வழக்கு, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் உடமை இழப்பு - என ஏராளமான இழப்புகளை வன்னியர்கள் சந்தித்தார்கள். இந்தத் தியாகத்தால் இன்று தமிழ்நாட்டில் 107 சாதியினர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பெறுகின்றனர்.

திமுக குண்டர்கள், காவல்துறை வன்முறையாளர்களின் கொலைவெறியாட்டங்கள் தமிழ் மக்களின் நினைவலைகளில் இருந்து மறைந்து விட்டன. ஆனால், தமது உயிரைக் காப்பாற்ற வேண்டும், உடமைகளைப் பாதுகாக்க வேண்டும், காவல்துறையினர் துப்பாக்கிகளோடு ஊருக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சிலநூறு மரங்களை வெட்டி, சாலையில் தடுப்பை ஏற்படுத்தியதற்காக - வன்னியர்கள் இன்றும் 'மரம் வெட்டிகள்' என்று ஆதிக்கச் சாதிக் கூட்டத்தினரால் தூற்றப்படுகின்றனர்.

வன்னியப் போராளிகளின் அந்த மாபெரும் தியாகம் நிகழ்ந்து 25 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அந்த 21 தியாகிகளை நினைவு கூறுவோம்.

இன்னுயிர் தந்து இனம் மானம் காத்த வன்னியர் குல சிங்கங்களின் புகைப்படங்கள்


























Wednesday, August 13, 2014

உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகி - சாமி நாகப்பன் படையாட்சி

மகாத்மா காந்தியின் தென் ஆப்பிரிக்க சத்யாகிரகப் போரில் பங்கேற்று 6 ஜூலை 1909 அன்று உயிர்த்தியாகம் செய்த - உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகி

மகாத்மா காந்தி வடிவமைத்த மாபெரும் போராட்ட முறை சத்தியாகிரகம் எனப்படுவதாகும். இந்திய விடுதலைப்போராட்டம், நெல்சம் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டம், மார்ட்டின் லூதர் கிங்கின் அமெரிக்க கருப்பின உரிமைப் போராட்டம் என உலகின் மிகப்பெரிய போராட்டங்களின் அடிப்படை வடிவம் சத்தியாகிரகம்தான். அப்படிப்பட்ட தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போருக்காக முதன்முதலில் உயிர்த்தியாகம் செய்தவர் சாமி நாகப்பன் படையாட்சி.

சாமி நாகப்பன் படையாட்சியின் தியாகத்தை போற்ற வேண்டும் என காந்தி விரும்பினார். 6.10.1909 அன்று போலக் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் சாமி நாகப்பன் நிழற்படம் கிடைத்ததைக் குறிப்பிட்டு, உடனடியாக அதனை சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று காந்தி தெரிவித்தார். இதன் மூலம் தமிழ்மக்களிடம் நாகப்பன் தியாகத்தை கொண்டுசெல்ல வேண்டும் என அவர் நினைத்தார். அந்த விருப்பம் நிறைவேறவே இல்லை.

மாவீரன் சாமி நாகப்பன் படையாட்சி அவர்களின் தியாகத்தை போற்ற வேண்டும் என்கிற மகாத்மா காந்தியின் விருப்பத்தை 104 ஆண்டுகளுக்கு பிறகாவது நாம் நிறைவேற்றுவோம்.

தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின்தியாகமும். உலக வரலாற்றின் மிகப்பெரிய சனநாயகப் போராட்டமாக கருதப்படுவது மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டம் ஆகும்.இப்போராட்டத்தில் முதன்முதலில் பலியான உலகின் முதல் சத்தியாகிரகத் தியாகியை எல்லோரும் மறந்துவிட்டனர். ஒரு மாபெரும் தியாகி மறக்கப்பட்டது ஏன்? அவர் ஒரு தமிழர் என்பதாலா? வஞ்சிக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதாலா? ஏழை என்பதாலா? படிக்காதவர் என்பதாலா? அந்த மாபெரும் தியாகம் குறித்த இரண்டாவது கட்டுரை இதுவாகும்: இதர இரண்டு கட்டுரைகளை இந்த இணைப்புகளில் காணலாம்:1. மறக்கப்பட்ட மாபெரும் தியாகம் – சாமி நாகப்பன் படையாட்சி! 3. தமிழ் வீரத்தை புகழும் மகாத்மா காந்தி: சாமி நாகப்பன் படையாட்சி கட்டுரை 2. தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகமும் தமிழர்களின் தியாகமும்தென் ஆப்பிரிக்க டிரான்சுவால் காலனி அரசாங்கம் உருவாக்கிய ஏசியாட்டிக் பதிவு சட்டத்தை எதிர்த்து காந்தி 1906 ஆம் ஆண்டில் போராட்டம் அறிவித்தார். காந்தியின் முதல் சத்தியாகிரகப் போராட்டம் இதுதான். காந்தி முதன்முதலாக சிறை சென்றதும் இந்த போராட்டத்திற்காகத்தான். அவரது அறிவிப்பை மீறி 1907 ஆம் ஆண்டு அந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும் இச்சட்டத்துக்கு எதிராக 1909 ஆம் ஆண்டில்தான் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது .

தென் ஆப்பிரிக்காவில் காந்தி
இதே காலகட்டத்தில்தான் காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்தின் முதல் உயிர்த் தியாகமாக சாமி நாகப்பன் படையாட்சி வீரமரணம் அடைந்தார். கடைசியில் 1914 ஆம் ஆண்டில் காந்திக்கும் செனரல் ஸ்முட்ஸ் என்கிற டிரான்சுவால் அரசின் செயலாளருக்கும் இடையேயான உடன்படிக்கையின் பேரில் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய நிவாரண சட்டம் என்கிற புதிய சட்டத்தின் படி இந்திய சமூகத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.
தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம் வரலாற்று நோக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக, இரண்டு கண்டங்களில் இருக்கும் இரண்டு நாடுகளின் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கப்புள்ளி அதுதான். அகிம்சை முறையிலான இந்திய சுதந்திரப்போராட்டத்தின் வழிகாட்டி இந்த போராட்டம்தான். நெல்சன் மண்டேலா அவர்களின் தென் ஆப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் வழிகாட்டியும் இந்த போராட்டம்தான். இரண்டாவதாக, அமெரிக்க குடியுரிமை போராட்டமான மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் போராட்டம் தொடங்கி, அதற்கு பின் இன்றுவரை உலகெங்கும் நடக்கும் அகிம்சை வழி போராட்டங்கள் அனைத்திற்கும் தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் இந்த போராட்டம்தான் முன்னோடியாகும். தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகப் போராட்டமே மகாத்மா காந்தியை உருவாக்கியது, அதுவே இந்திய விடுதலைப் போரின் வழிகாட்டி என்பதை காந்தியும் தெளிவாக கூறியிருக்கிறார். “காந்தி இந்தியாவில் பிறந்திருக்கலாம் – ஆனால் தென் ஆப்பிரிக்காதான் காந்தியை ‘உருவாக்கியது’” என்றார் அவர். 1925 ஆம் ஆண்டு கான்பூர் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி “தென் ஆப்பிரிக்க இந்தியர்கள் என்னை உங்களுக்கு (காந்தியை இந்தியாவுக்கு) அளித்ததாகக் கூறுகிறார்கள். அதனை நான் ஒப்புக்கொள்கிறேன். அது முற்றிலும் உண்மை. இப்போது என்னால் இந்தியாவுக்காக என்னென்ன பணிகளை எல்லாம் செய்ய முடிகின்றதோ, அவை எல்லாம் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவை” என்று கூறினார் எட்டாண்டுகள் நடந்த தென் ஆப்பிரிக்க இந்தியர்களின் சத்தியாகிரகப் போரில் இருபதாயிரம் இந்தியர்கள் பங்கேற்றதாக காந்தி தெரிவிக்கிறார். இவர்கள் எல்லோரும் தத்தமது வேலைகளை விட்டுவிட்டு – வருமானத்தை இழந்து – பலநாட்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். பலர் நாடுகடத்தப்பட்டனர். எத்தனை துன்பம் வந்தாலும் அதனை எதிர்கொண்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

ஜொகனஸ்பர்க் அருங்காட்சியகத்தில் உள்ள சாமி நாகப்பன் படையாட்சி, வள்ளியம்மா முனுசாமி படங்கள்
இப்போராட்டத்திற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள் என்று நான்கு பேர்களை குறிப்பிடுகிறார் காந்தி.
1. சாமி நாகப்பன் படையாட்சி: காந்தியின் கட்டளைக்கு ஏற்ப “ஏசியாட்டிக் பதிவு சட்டத்தின்படி பெயரை பதிவு செய்ய மறுத்து சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால்” 1909 ஆம் ஆண்டு சூன் மாதம் 21 ஆம் நாள் கைது செய்யப்பட்டார் தமிழரான சாமி நாகப்பன் படையாட்சி. அவருக்கு மூன்று பவுண்ட் தண்டம் அல்லது 10 நாள் கடின உழைப்புடன் கூடிய கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், தண்டத் தொகையைக் கட்டாமல் சிறைத் தண்டனையை ஏற்பதே சத்தியாகிரகப் போராட்டம் என்பதால் சிறைக்குச் சென்றார் சாமி நாகப்பன் படையாட்சி.

சாமி நாகப்பன் படையாட்சி
முதல் நாள் இரவு ஜொகனஸ்பர்க ஃபோர்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த நாள் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ஸ்கெய் சாலை சிறை முகாம் எனும் இடதிற்கு நடத்தியே அழைத்துச் செல்லபட்டார். அங்கு அவர் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டார். கடும்குளிரில் திறந்தவேளி கூடாரத்தில் தங்கவைக்கப்பட்டார். சரியான உணவும் இல்லை. உடல் நலம் பாதிப்படைந்த நிலையிலும் சாலை அமைத்தல், அதற்காக கல் உடைத்தல் போன்ற கடுமையான வேலைகள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டன. உடல்நலப் பாதிப்பிற்கு சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. ஏறக்குறைய கொலை செய்யப்பட்டவராக சூன் 30 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்ட சாமி நாகப்பன் படையாட்சி 1909 ஆம் ஆண்டு சூலை 6 ஆம் நாள் இரட்டை நிமோனியாவால் இதயம் செயலிழது மரணத்தை தழுவினார். அப்போது அவரின் வயது 18. சூலை 7 ஆம் நாள் ஜொகனஸ்பர்க் இந்தியர்கள் சாமி நாகப்பன் படையாட்சியின் உடலை ஒரு பொது நிகழ்ச்சியாக அடக்கம் செய்தனர். நன்றி ..கிராமத் தான்

வன்னியர் சங்கம்

நம் வன்னியர் சங்கத்திற்கு வயது 125



சென்னையில் வன்னியர் சங்கம் 09-06-1889--ல்ராவ் சாகிப் செல்லப்பா நாயக்கர் வீட்டில் அய்யாசாமி பிள்ளை தலைமையில் துவங்கப்பட்டது

சங்கத்தின் ஆண்டு விழாக்கள் நடைபெற்ற நாள் - இடம் - தலைமை வகித்தவர் பெயர்- முக்கிய விருந்தினர் பெயர் ஆகிய தகவல்கள் வருமாறு

01-06-1890 சென்னையில் அய்யாசாமி பிள்ளை தலைமை

21-06-1891 சென்னையில் செல்லப்ப நாயக்கர் தலைமை

05-06-1892 சென்னையில் பச்சையப்ப நாயக்கர் வீட்டில் ராவ் பகதூர் தனக்கோட்டிமுதலியார் தலைமை

25-01-1893 சென்னையில் பங்களா முதலியார் வீட்டில் புதுவை சதாசிவவேல் தலைமை

17-06-1894 ஆற்காடு நவாபு தோட்டம்

17-06-1895 ஜெயராம வேல் தலைமை

28-07-1895 ஆற்காடு நவாபு தோட்டம் காளிமுத்து படையாச்சி தலைமை

19-07-1896 ஆற்காடு நவாபு தோட்டம் சாமியார் தலைமை

21-06-1897 குருசாமி ராயர் தலைமை

26-06-1898 சென்னையில் தனக்கோட்டிமுதலி பங்களாவில் தருமபுரி மலையான்டிக் கன்டர் தலைமை

23-07-1899 கடலூர் குமரப்பன் பேட்டையில் 1900 இல்லை 1901 இல்லை

1902 ஆவணி மாதம் அய்யாசாமி பிள்ளை பங்களாவில் அரிராஜ கன்டர் தலைமை

03-081903 ஆற்காடு நவாபு தோட்டம் ஆறுமுக நாயக்கர் தலைமை 1904=1906 ஆன்டு விழா நடைபெறவில்லை

29-02-1907 தலைமை சிற்றரசு 1908 -1910 தகவல் கிடைக்கவில்லை


27-12-1911 கச்சி நகர் சிதம்பரம் சோழனார் தலைமை

30-12-1912 செஞ்சியில் சுப்பிரமணிவேல் தலைமையில்

11-06-1913 வெள்ளி விழாவும் சேலம் மாவட்ட சங்க 6-ம் ஆன்டு விழாவும் இனைந்து செலத்தில் சென்னை திருவேங்கட நாயகர் தலைமையில் பலபத்திர நாயக்கர் முன்னிலை கந்தசாமி கன்டர், நாட்ராம்பள்ளி தாயப்பசெல்வர், கோவை பூபதி, செல்லம் சின்ன லட்சுமணராஜா பலபத்திர நாயக்கர் முன்னிலை இரன்டு நாள் விழா தலைவரை விழா மெடைக்கு அழைத்து சென்ற ஊர்வலம் 5 மைல் நீளம் இருந்த்தாம் 1914 -1918 தகவல் கிடைக்கவில்லை

19-04-1919 திருக்கழுக்குன்றம்- சீர்காழி ராய ராவுத்த மின்டர் தலைமை ஒரு லட்சம் பேர் கூடிய கூட்டம்

25-12-1921 சூரப்ப சோழர் தலைமையில் 1922 -1929 தகவல் கிடைக்கவில்லை

24-05-1930 சேலத்தில் வரதப்ப நாயகர் தலைமையில் 1931 - 1939 தகவல் கிடைக்கவில்லை

05-05-1940 தங்க விழா மயிலாப்பூரில் ராஜுவேல் தலைமையில் வன்னிய கவி அர்த்தநாரீஸ்வர வர்மா அவர்களின் பங்கு இந்த விழாக்களில் அதிகம் உண்டு

Wednesday, May 28, 2014

"வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் - VANNIYAPHOBIA"

"வன்னியர்களுக்கு எதிரான இனவெறி மனநோய் - VANNIYAPHOBIA"

50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில், திமுக - அதிமுக ஆதரவில்லாமல் வென்று சாதனைப் படைத்தார் மருத்துவர் அன்புமணி இராமதாசு. மாபெரும் இயக்கமான திமுக ஓரிடத்தில் கூட வெற்றிபெறாத நிலையில் - பாமக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.

ஆனால், இந்த சாதனையை தமிழக பத்திரிகைகள் எதுவும் எழுதவில்லை. சமூக ஊடகங்களிலும் இச்சாதனை பேசப்படவில்லை.


(இதுவே, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்குப் பதிலாக, வைகோ அவர்கள் வெற்றிபெற்றிருந்தால் - தமிழக ஊடகங்களில் அது மாபெரும் சாதனையாக பேசப்பட்டிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்).


மருத்துவர் அன்புமணி அவர்களின் சாதனையைப் பற்றி ஒரு வார்த்தையும் பேச வராத தமிழக ஊடகங்கள் - அவர் அமைச்சராக்கப்படவில்லை என்பதை மட்டும், ஏதோ பெரிய ஏமாற்றாம் என்பது போல எழுதி மகிழ்கின்றன.


வன்னியர் ஒருவரின் உண்மையான வெற்றியை மறைத்து, அதே வன்னியரின் இல்லாத தோல்வியை இவர்கள் கொண்டாடுவது ஏன்?


அதே போன்று, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக ஐநா அவையில் உரையாற்றியதை மூடிமறைத்தக் கும்பல், இப்போது ராஜபக்சே வரும் நிகழ்ச்சிக்கு அவர் போகலாமா எனத் தூற்றுகின்றனர்.
வன்னியர் ஒருவரின் சாதனையை மறைத்து, அதே வன்னியரின் மீது அவதூறுகளை பரப்புவது ஏன்?
இதற்கு பின்னாலிருப்பது 'ஒரு உளவியல் காரணமே' ஆகும். இதனை ஒவ்வொரு வன்னியரும் உணர வேண்டும்.
"மனநோய்"
தமிழகத்தில் குறிப்பிட்ட சிலருக்கு வன்னியர்களுக்கு எதிரான மனநோய் பீடித்துள்ளது. இந்த மனவியாதி பிடித்தவர்களிடம் பணம், ஊடகம், அதிகாரம் எல்லாமும் இருக்கிறது. அதனால், தொற்றுநோய்ப் போன்று, 'வன்னியரல்லாதோரிடம்' ஒரு பொதுவான 'வன்னியர் எதிர்ப்பு' மனநிலையை பரப்பி வைத்துள்ளனர்.


வன்னியர்கள் குறித்த எல்லாவிதமான கட்டுக்கதைகளுக்கும் அவதூறுகளுக்கும் இந்த மனநோய் தான் காரணம் ஆகும்.


"உலகளாவிய எடுத்துக்காட்டு"


ஒரு இனத்துக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் 'இனவெறியின் ஓர் வடிவம்' ஆகும். அவ்வாறே, யூதர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ANTISEMITISM என்றும், இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது ISLAMOPHOBIA என்றும் வகைப்படுத்தப்படுகிறது.
அதே போன்று வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்வது VANNIYAPHOBIA எனக் கூறலாம்.
# ANTISEMITISM – “is prejudice, hatred of, or discrimination against Jews”
# ISLAMOPHOBIA - “a multifaceted mix of discourse, behaviour and structures which express and perpetuate feelings of anxiety, fear, hostility and rejection towards Muslims”
# VANNIYAPHOBIA - “is prejudice, hatred of, or discrimination against Vanniyars”
வன்னியர்கள் மீதான இத்தகைய வெறுப்புக்கு வன்னியர்களின் செயல்பாடுகள் பெரிதளவில் காரணம் இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால், அதனைக் கண்டறிந்து மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த வெறுப்புக்கு முதன்மையான காரணம் மற்றவர்கள் மனதில் உள்ள வீணான மனநோய் (VANNIYAPHOBIA) என்பதை உணர்வோம். அதனை மற்றவர்களுக்கும் புரியவைக்க முயல்வோம்.


(2012 தருமபுரி நிகழ்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியவர்கள் சுமார் 10 பேர் நடுவழியில் கொலைசெய்யப்பட்டனர். அதுகுறித்து யாரும் பேசவில்லை. ஆனால், மரக்காணம், தருமபுரி நிகழ்வுகளில் இதற்கு நேர் எதிராக எல்லோரும் நடந்தது கொண்டனர் என்பதை கவனிக்கவும்.
எதிர்தரப்பில் ஒரு நபருக்குக் கூட சிறு கீரலும் இல்லாத மரக்காணம், தருமபுரி சம்பவங்களில், வன்னியர்கள் தரப்பில் மட்டுமே 2 பேர் படுகொலை, ஒருவர் தற்கொலை ஆனார்கள். வன்னியர்கள் பாதிக்கப்பட்ட இந்த நிகழ்வுகளில் குற்றம்சாட்டப்பட்டோரும் வன்னியர்கள்தான்)


"என்ன செய்ய வேண்டும்?"


வன்னியர்களுக்கு எதிரான இனவெறி என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட மனநோய் என்பதை உணர்ந்து - வன்னியர்களுக்கு எதிரான இனவெறிக் கருத்துகளை பரப்புவோரையும், அவர்களது இந்த மனநோய்க் கருத்துகளையும் ஆவணப்படுத்துவதற்கு வன்னியர்கள் முன்வர வேண்டும்.
எடுத்துக்காட்டாக, 'தமிழ்நாடு தனி நாடாக மாறினால் வன்னியர்கள் வெளியேற்றப்படுவார்கள்' என்றார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி. வன்னியர்களின் அரசியல் அடையாளமாக மருத்துவர் அன்புமணி இராமதாசு இருப்பதால், 'தருமபுரியில் அன்புமணி தோற்கவேண்டும்' என்று எழுதினார் தமிழ் இந்து நாளிதழின் கவிதா முரளீதரன்.


இவ்வாறாக, யாரெல்லாம், எப்படியெல்லாம் வன்னியர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்கள் அன ஆவணப்படுத்தி, அதற்கான காரணங்களை ஆராய ஆர்வமுள்ள வன்னியர்கள் முன்வர வேண்டும்.


இனவெறி எனும் மனநோய் (RACISM), யூதர்களுக்கு எதிரான மனநோய் (ANTISEMITISM), இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநோய் (ISLAMOPHOBIA) எவ்வாறு எதிர்க்கப்படுகிறதோ - அதே போன்று வன்னியர்களுக்கு எதிரான இனவெறி (VANNIYAPHOBIA) மனநோயை கையாள வன்னியர்கள் முன்வர வேண்டும்.


(குறிப்பு: எந்த ஒரு தனிப்பட்ட சாதி, இனம், மதம், மொழி, குழுவினருக்கு எதிராகவும் வன்னியர்கள் வெறுப்புணர்வை கைக்கொள்ளக் கூடாது. மனிதர்களின் குணம் அவர்களது பிறப்பிலோ, மரபணுவிலோ, அடையாளத்திலோ இல்லை. அது அவரவர் எண்ணத்திலும் நம்பிக்கையிலும் இருக்கிறது.)


https://www.facebook.com/photo.php?fbid=883064385052651

நன்றி .திரு.அருள் இரத்தினம்

Sunday, March 2, 2014

சாதனை மனிதர் அன்புமணி இராமதாசு - புத்தகம்...

உலகில் யவரும் செய்திடாத சாதனை..
5 0 ஆண்டுகளில் செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் செய்து முடித்த வல்லவர்..
உலகமே 5 வருடங்களில் உற்று நோக்கிய மாமனிதர்..

5 ஆண்டே ஆண்டில் சாதித்த போதி தர்மர்

ஆம்  மத்திய சுகாதரா துறை அமைச்சாரக சேவையாற்றிய மருத்துவர் அன்புமணி அவர்களை பற்றி ( 2.03.2014 அன்று நடைபெற்ற ---சாதனை மனிதர் அன்புமணி இராமதாசு---என்ற புத்தக வெளியிட்டு விழாவில் உதிர்ந்த சில முத்துக்கள் இவை..


சிறப்பு விருந்தினராக மருத்துவர் அய்யா கலந்து கொள்ள புத்தகத்தை வெளியிட்டவர் ---- மக்கள் நீதிபதி (இப்பட்டம் மருத்துவர் அய்யாவல் வழங்கப்பட்டத) திரு.சந்துரு அவர்கள் வெளியி்ட மருத்துவர் அய்யா, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு.தேவசகாயம், பசுமைத்தாயகம் மாநில செயலாளலர் திரு. அருள் இரத்தினம், வழக்கறிஞர் பாலு ஆகியோர் பெற்று கொண்டனர்...




சாதனை புத்தகம் உங்கள் பார்வைக்கு