நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Monday, June 6, 2011

திராவிடத்தை விழுங்க தயாராகும் பாமக !"

-------------------------------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை பா.ம.க வின் மீது உள்ள பற்றால் மக்களின் மனநிலை என்ன என்பதை இணையத்தில் வெளியிடபடும் கட்டுரைகள், கருத்துரைகள் பாமகவை புகழ்ந்து இருந்தாலும் இகழ்ந்து இருந்தாலும் சிறிதும் மாற்றமில்லாமல்
அப்படியே தொகுத்து வழங்கபடுகிறது.

வருங்காலத்தில் பாமகவின் சேவை இந்நாட்டிற்க்கு தேவை
------------------------------------------------------------------------------------------------------------


திராவிடத்தை விழுங்க தயாராகும் பாமக !" என்ற தலைப்பில் மக்களின் கருத்துரைகள்



பெரியார் ஊட்டிய திராவிட உண(ர்)வை அரசியல் கட்சியாக மாற்றி நன்கு பயன்படுத்திக் கொண்ட அரசியல்வாதிகள் அண்ணா, கலைஞர் மு கருணாநிதி, எம்ஜிஆர் வரிசையில் புதிதாக தற்போது இணையப் போகிறவர் பாமக தலைவர் மருத்துவர் இராமதாசு. இதற்காக தமிழ் இன மீட்டெடுப்பு இயக்கம் என்ற பெயரில் புதிய இயக்கம் அறிவிக்கப்பட்டதாக செய்தி இதழ்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசை தமிழ்நாட்டில் பின்னுக்குத் தள்ளி தேசியவாதக் கட்சியை பலமிழக்கச் செய்து மாநில அரசியல் கட்சிகளினால் எதையும் சாதிக்க முடியும் என்று காட்டிய பெருமை பெரியாரையே சாரும். மாநில கட்சிகளின் தயவினால்தான் மத்தியில் கூட்டனி ஆட்சி நடக்கிறது. இல்லையென்றால் பெரும்பாண்மை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்துதல், ஒத்திவைப்பு தீர்மாணங்கள் என்றே பாராளுமன்ற செயல்பாடுகள் முடங்கி இருக்கும். மற்ற மாநில கட்சிகளும் மத்தியில் செல்வாக்கு அடைந்ததற்கு தமிழக கட்சிகளே முன்னோடி. வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற கோஷம் மத்தியில் கூட்டனி ஆட்சிகளுக்கு பிறகு முடங்கிவிட்டது.

தமிழக அரசியலைப் பொருத்தவரை இரண்டு கட்சிகள் தான் ஒன்று பெரியார் சார்புடைய கட்சிகள், மற்றொன்று மத்திய தேசியவாதக் கட்சிகள். தேசியவாதக் கட்சிகள் (காங்கிரஸ், பாஜக) . பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே மாநிலத்துக்கு என்ற தனியாக எந்த கொள்கையும் இல்லாத கட்சிகள். எனவே மாநிலத்தில் இவற்றின் வளர்சி என்பது சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. தமிழக பாஜகவை தமிழக காங்கிரசுடன் ஒப்பிடும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிடவில்லை.

அதிமுக பெரியாரை எதிர்க்கவும் இல்லை உயர்த்திப் பேசுவதும் இல்லை. திமுக பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்தினாலும், பெரியார் கொள்கைகளைவிட வாரிசு அரசியல் என்ற எதிர்ப்பை சமாளித்து அடுத்தக் கட்ட தலைவரை அறிவிக்கும் முனைப்பில் இருக்கிறது. பெரியார் சிலைகள் வைக்க ஆதரவு கொடுத்ததைத் தவிர பெரியார் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கு திமுக பின்வாங்குவதாகவே தெரிகிறது. பெரியார் பெயரைச் சொல்லி கட்சி வளர்க்கும் நிலை இன்று இல்லை என்று திமுக நினைத்திருக்கக் கூடும். தி.க. தேர்தலில் போட்டியிடாத கட்சி பெரியார் கொள்கைகளை பிராச்சாரம் செய்வதுடன் பெரியார் ஆதரவு நிலைப்பாடுகளை தேர்தல் காலத்தில் பெரும் கட்சிகளின் கூட்டனி அமைப்பை பொறுத்து தி.க தன் ஆதரவை தெரிவிக்கிறது.

பாமகவுக்கு அடுத்த கட்ட அரசியலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணியில் சேர்ந்து சீட்டுகளைப் பெற்று அரசின் அங்கமாக இருக்க அவர்கள் விரும்பும் நிலையை மாற்றி பெரிய மாநில கட்சி என்ற உயர்வுக்குச் செல்ல முடிவெடுத்து அதன் காரணியயகவே இந்த மேற்கண்ட அறிவிப்பு வந்திருக்கக் கூடும் என்று
நினனக்கிறேன். அவர்களுடைய அறிவிப்புப் படி பெரியார் கொள்கையை பரப்புவது அதே சமயத்தில் பெரியாரின் கடவுள் எதிர்ப்பை தொடப் போவதில்லை என்றும் சொல்கிறார்கள். இவர்கள் சரியான பாதையில் சென்றால் பெரியார் ஆதரவாளர்கள் இவர்கள் பக்கம் திரும்புவார்கள். வருங்காலத்தில் திராவிட அரசியல் கட்சிகளுக்கு பாமக பெரிய சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

பாமக திராவிடக் கட்சி போன்ற பாரம்பரிய அரசியல் கட்சி அல்ல. அடுத்தக் கட்ட அரசியல் வளர்ச்சிக்கு மாபெரும் தலைவரை முன்னே வைத்துக் காட்டுவது அவசியம். அதற்கு பெரியாரை முன்னிறுத்தாலாம் என்ற யோசனையில், அந்த வகையில் என்றும் தாக்கம் உள்ள பெரியார் கொள்கைகளை பாமக கையில் எடுத்திருப்பது அரசியல் சாணக்கியத்தனமா என்பது போகப் போகத் தான் தெரியும்.
இனி பெரியார் கொள்கைகளை சொந்தம் கொண்டாடவும் பங்கு போட்டுக் கொள்ளவும் திராவிடக் கட்சிகளுக்கும் பாமகவிற்கும் கடும் போட்டி இருக்கும்.

எது எப்படியோ பெரியார் கொள்கைகள் தமிழ் மண்ணில் இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்வதற்காகவாவது பயன்படும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விடாதுகருப்பு said...
நன்றாக ஆராய்ந்து அலசி இருக்கிறீர்கள் கண்ணன். ராமதாசின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இத்தனை நாள் சும்மா இருந்துவிட்டு பெரியார் வாழ்க, தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்று கூவுவதெல்லாம் வாக்காளனைக் கவரும் உத்தியாகவும் இருக்கலாம்.
வாரிசு அரசியல் இல்லை என்று சொல்லிக் கொண்டு அன்புமணியை முன்னிறுத்தியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். சென்னையின் மேயராக ஒரு தலித் வரக்கூடாதென கலைஞரிடம் மல்லுக்கு நின்றதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் அவர் ஒரு ஜாதிக்கட்சியின் தலைவர் என்பதை நாம் மறக்கக் கூடாது.
//விடாதுகருப்பு said... நன்றாக ஆராய்ந்து அலசி இருக்கிறீர்கள் கண்ணன். ராமதாசின் அணுகுமுறையில் மாற்றம் தேவை. இத்தனை நாள் சும்மா இருந்துவிட்டு பெரியார் வாழ்க, தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்று கூவுவதெல்லாம் வாக்காளனைக் கவரும் உத்தியாகவும் இருக்கலாம்.
வாரிசு அரசியல் இல்லை என்று சொல்லிக் கொண்டு அன்புமணியை முன்னிறுத்தியதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். சென்னையின் மேயராக ஒரு தலித் வரக்கூடாதென கலைஞரிடம் மல்லுக்கு நின்றதையும் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.
எது எப்படி இருந்தாலும் அவர் ஒரு ஜாதிக்கட்சியின் தலைவர் என்பதை நாம் மறக்கக் கூடாது.//
சதீஷ்,பாராட்டுக்கு நன்றி. நீங்கள் சொல்வதும் சரிதான். பாமக தன்மீது உள்ள ஜாதிக் கட்சி முத்திரையை நீக்குவதற்கு இந்த வழியை தேர்ந்தெடுத்திருப்பதற்காக கூட இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
நல்ல பதிவு கண்ணன்.
விடாதுகருப்பின் கருத்துக்களை நானும் மறுமொழிகிறேன்.
சாதியின் பெயரில் பிரிவனைவாத இயக்கம் நடத்திக்கொண்டு இப்படி ஒரு கூத்து தேவைதானா?கோடி கோடியாக சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் விஜயகாந்த், காமாரஜரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதைபோல்தான் இதுவும்.
நல்ல ஆய்வு கோவியாரே!
ஆனாலும் இதற்கு மேலும் பா.ம.க. வளருமா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தக் கட்சி அதிகபட்சமாக எந்த அளவுக்கு வளரமுடியுமோ அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. எதிர்காலத்திலும் கூட அது ஒரு முழுமையான மாநிலக் கட்சியாக வளர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
எல்லோரும் சொல்லுவது போல பா.ம.க. ஒரு ஜாதிக்கட்சி என்று முத்திரை குத்த நான் விரும்பவில்லை. ஒரு தலித்தை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் டாக்டர் அய்யா.
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுழற்சி முறையில் எல்லா சாதியினரையும் ஆண்டுக்கு ஒருவராக முதல்வர் ஆக்குவோம் என்று முற்போக்குத் தனமாக சிந்தித்தவர் டாக்டர் அய்யா.
அவரை ஒரு சாதிய எல்லைக்குள் அடக்குவது என்பது எனக்கு உடன்பாடானதல்ல.
//எது எப்படியோ பெரியார் கொள்கைகள் தமிழ் மண்ணில் இன்னும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்வதற்காகவாவது பயன்படும். //
:)))
அது சரி..

"
நான் படிக்கும்போது 6ம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம் பாட மொழியாக இருந்தது. 11ம் வகுப்பு வரை ஆங்கிலத்தை மொழிப்பாடமாகத்தான் படித்தேன். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட அப்படித்தான் படித்தார்."
அப்டின்னு சொல்லிருக்காரு. அவர் பிள்ளைங்க, பேரப் பசங்க படித்தது எப்படின்னு சொல்லக் காணோம்... :)
1988-89 சமயத்தில் வன்னியர் சங்கத்தை பாமக என்று அரசியல் கட்சியாக்கிய சமயத்தில்,தானோ, தன் குடும்பத்தாரோ ஆட்சி, அதிகாரம், பதவி போன்ற பொறுப்புகளுக்கு வரமாட்டோம்... அப்படி வந்தால் முச்சந்தியில் வைத்து சவுக்கால் அடியுங்கள் என்று பாரம்பரிய முறைப்படி சத்தியம் செய்து வாக்குத்தந்தவர் மருத்துவர் ராமதாசு ஐயா அவர்கள்.

2005-
ல் எம்.பி ஆகாமலேயே மகன் அன்புமணியை ராஜ்ஜியசபா வழியாக அமைச்சராக்கினார்.

2005-
ல் சம்பந்தி கிருஷ்ணசாமிக்கு காங்கிரஸில் பதவிக்கு லாபி செய்து பலனடைந்தார்.

2007-
ல் கூட்டணி அரசு, அதிகாரம்-பதவிப் பகிர்வின் போது விஷ்ணுபிரசாத் (அன்புமணியின் மைத்துனர்) பதவிக்கு வர முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது.
சிவபெருமான் நீலகண்டனாகச் செய்தமாதிரி மருத்துவர் ராமதாசு அரசியல் திரா"விட'த்தை விழுங்கித் தொண்டையில் வைத்தவாறே தமிழனைக் காக்கும் அவதாரம் எடுத்திருக்கிறார் என்பதை அறிவதில் மகிழ்ச்சி.
மருத்துவரின் வாக்குசுத்த டிராக் ரெக்கார்டு நம்பிக்கை தரவில்லை என்றாலும் வாழ்க்கையே நம்பிக்கையில் தானே இருக்கிறது என்பதை நினைக்கிறேன் :-))
// Hariharan # 26491540 said... மருத்துவரின் வாக்குசுத்த டிராக் ரெக்கார்டு நம்பிக்கை தரவில்லை என்றாலும் வாழ்க்கையே நம்பிக்கையில் தானே இருக்கிறது என்பதை நினைக்கிறேன் :-)) //
ஹரிஹரன்,முதல்முறை (?) வருகைக்கு நன்றி !திரா'விடம்'னு தலைப்பு போட்டதால் எட்டிப் பார்த்து கருத்துசொல்லி இருக்கிங்க ! :)))நம்பிக்கையே வாழ்க்கை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.
மேலும் கருத்துக்களுக்கு நன்றி !
//மாசிலா said... நல்ல பதிவு கண்ணன்.
விடாதுகருப்பின் கருத்துக்களை நானும் மறுமொழிகிறேன்.
சாதியின் பெயரில் பிரிவனைவாத இயக்கம் நடத்திக்கொண்டு இப்படி ஒரு கூத்து தேவைதானா?கோடி கோடியாக சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் விஜயகாந்த், காமாரஜரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதைபோல்தான் இதுவும்.
//
மாசிலா, வாங்க ! மேலும் நண்பர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். கருத்துக்கு மிக்க நன்றி !
ம்ம்ம் மாத்தேன் போ...நான் விசியகாந்துக்கு தான் ஓட் போட்வேன். அவர் கொளுகை எனக்கு ப்டிச்சிருக்கு.
என்ன கொளுகையா ? அது அடுத்த ப்ன்னூட்டத்துல தான் சொல்வேன்.
G.Ragavan said...
இதனால எதுவும் நன்மை நடந்துரும்னு நம்ப முடியலை. அப்படி நடந்தா அது பாமகவுக்கு இருக்கலாம்.
கருப்பும் மாசிலாவும் சொல்லும் கருத்துகள் ஏற்புடையவை.
சாதீய எல்லைக்குள் அவரை அடக்குவதில் உடன்பாடல்ல என்று லக்கிலுக் சொல்வது நடக்க வேண்டுமென்றால் அதற்கு வழிவகை தேட வேண்டியது ராம்தாஸ். நாமல்ல. பொன்ஸ் சொல்லியிருக்கும் செய்தியும் மறுக்க முடியாயததே.
பாமக ஒரு மாநிலக்கட்சியாக வளரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. லக்கிலுக் குறிப்பிட்டது போல பெயருக்கும் செயலுக்கும் தகுந்த வளர்ச்சியை அது ஏற்கனவே அடைந்து விட்டது. இதற்கு மேலும் வளர வேண்டும் என்றால் ஆண்டவந்தான் கண் பார்க்க வேண்டும்.
//ஆனாலும் இதற்கு மேலும் பா.ம.க. வளருமா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தக் கட்சி அதிகபட்சமாக எந்த அளவுக்கு வளரமுடியுமோ அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. எதிர்காலத்திலும் கூட அது ஒரு முழுமையான மாநிலக் கட்சியாக வளர வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது//
ஏற்றுக்கொள்ளும்படியான கூற்று.
தெற்கு மாவட்டங்களில் பாமக பெரிதாக வளர்ந்துவிட வாய்ப்புகள் இல்லை.
விஜய்காந்த் பேக்டர் வட மாவட்டங்களில் பாமகவுக்கு பாதிப்பு தராமல் இருக்க பாமக கூடுதலாக எதையாவது சொல்லி இயங்கவேண்டிய அவசியம் /அழுத்தம் இருக்கிறது.
அனைத்து சமூக பிரிவினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக பாமக இருக்கிறதா? இல்லை என்பதே நிதர்சனம்.
சைதாப்பேட்டைக்கு பாமகவுக்கு பங்க் குமார் மாதிரி எம்.எல்.ஏ வேட்பாளர்கள் தேர்வு செய்யும் விதம் மக்களிடையே நம்பிக்கையை விட கிலியை ஏற்படுத்துகிறது. (சேகர்பாபு, கராத்தேவை ஆதரிக்கும் கட்சிகள் ஏற்படுத்துவதுமாதிரியான கிலி)
காடுவெட்டி குரு, சினிமாக்காரர்களை பிளாக்மெயில் செய்வது, தியேட்டரில் பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடுவது என்பவை பாமக மீதும் மருத்துவர் ராமதாசுமீதும் நம்பிக்கையைத் தருவதாயில்லை!
கருணாநிதி, ஜெயலலிதா படிக்காதவர்கள் என்பதால் ரவுடி வேட்பாளர்கள், தேர்தல் வன்முறை, ஊழல்,மற்றும் தவறுதலான சமூக வழிநடத்துதல் என்று சலித்துப்போன சாமானியனுக்கு , ராமதாசு எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர் என்றிருந்தும் அதே மேற்படி தறுதலை அரசியல் விஷயங்களைச் செய்தால் சமூகத்தின் எல்லாப் பிரிவுகளில் இருக்கும் சாமானியனின் ஆதரவு கிடைக்குமா பாமகவுக்கு?நல்ல அரசியலுக்குத் தமிழகம் இன்னும் எவ்வளவு காலம் ஏங்கி இருக்க வேண்டும் எனத் தெரியவில்லை:-((
நம்புவோம் விரைவில் நல்ல அரசியல் நடந்து தமிழகம் மேம்படும் என்று :-))
//கோடி கோடியாக சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் விஜயகாந்த், காமாரஜரை வைத்து அரசியல் வியாபாரம் செய்வதைபோல்தான் இதுவும்.//
ஏதோ இன்றைய அரசியல் வாதிகள் போல ஊரான் வீட்டுச்சொத்தை குவித்து வைத்துள்ளது போல பேசுகிறீர்கள். உழைச்சு சம்பாதித்தது தானே.
ராமதாஸின் முன்னோடி கலைஞர் என்பதைத்தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஒரு காட்டில் ஒரு சிங்கம் தான் இருக்க முடியும் என்கிற சூழ்நிலை. எனவே ராமதாஸின் இந்த முயற்சி எடுபடாது.
//சைதாப்பேட்டைக்கு பாமகவுக்கு பங்க் குமார் மாதிரி எம்.எல்.ஏ வேட்பாளர்கள் தேர்வு செய்யும் விதம் மக்களிடையே நம்பிக்கையை விட கிலியை ஏற்படுத்துகிறது.
//
கருப்புவுக்கு சொன்னதே தான் ஹரிகரனுக்கும், செய்திகளை தெரிந்து கொண்டு பேசவும், கலைராஜன், ஆதி, சேகர்பாபு போன்றவர்களுக்கு மற்ற கட்சிகள் வாய்ப்பு வழங்கிய போதும் பங்க் குமாருக்கு சைதையில் நிற்க பாமக அனுமதிக்கவில்லை, இரண்டு முறையும் அங்கே நின்றது பாமகவின் இன்டலக்சுவல்களில் ஒருவரான சி.ஆர்.பாஸ்கரன்.
ஒரு டிஸ்கி போட்டுக்கறேன், பாமகவை புனிதர்களின் கட்சியென்றோ மருத்துவரை புனிதரென்றோ நான் சொல்லவில்லை....
பங்க் குமார் சைதை பாமக வேட்பாளராக கூட்டணிக்கட்சி திமுக தந்த அழுத்தத்தினால் நிறுத்தப்படவில்லை. திமுக உடனான உரசலே பங்க் குமாரின் என்கௌண்டராக பரிமாணம் பெற்றது. பங்க் குமாரை விடுங்கள் முடிந்த சகாப்தம்(!!) காடுவெட்டி குரு மக்கள் பிரதிநிதியாகத் தகுதியானவராமா? தாதாயிஸ/ரவுடித்தனத்தில் பங்க் குமாருக்கு இணையானவர்தானே காடுவெட்டி குரு?
கோ.வி நல்லதொரு அலசல். ராமதாசு அவர்கள் தொடங்கியிருக்கும் தமிழ் இன மீட்டெடுப்பு இயக்கம் வெற்றியடைய வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். ராமதாசு எதைச் செய்தாலும் அதை சாதியக் கண்ணோட்டத்தினுடே பார்ப்பது என்பது அவரவர் சாதிய உணர்வு தந்த அரிப்பிற்கு சொறிந்து கொள்வது போலத்தான். பாமாக வளர்ச்சி அதனுடைய உச்சபச்ச வளர்ச்சியை அடைந்து விட்டதாகவே இருந்தாலும் அவர்களின் எல்லா செயல்களையும் தேர்தல் அரசியலோடு முடிச்சு போடுவது சரியானதொன்றாக இருக்காது. ஏனென்றால் அரசு அதிகாரம் மட்டுமே எல்லாவிதமான மாற்றங்களையும் தந்துவிடாது. சமூக, பண்பாட்டு ரீதியிலான அதிகாரமும் தமிழன் கைகளில் வேண்டும்.
தேர்தல் அரசியல் என்பது சமரசங்களும், சாதுர்யங்களும் நிறைந்த ஒரு விளையாட்டு மைதானம். இங்கு ஒருவன் வெற்றி பெறும் வீரனாக மட்டுமே போராட முடியும். ஆக்கப்பூர்வமான மாற்றம் என்பது முதலில் சாத்தியமற்றதாக தோன்றினாலும் நீண்ட கால நோக்கில் பார்த்தால் சிறிதளவேனும் பலனைத்தரும். இத்தனை சதவீத மாற்றம் வந்தால்தான் வெற்றி என்பதைவிட மாற்றமே இங்கு முக்கியம். எந்த கட்டத்திலும் தமிழனின் எழுச்சிக்கு பெரியார் ஒரு காரணியாக இருக்கிறார் என்பதையே ராமதாசுவின் செயல் உணர்த்துகிறது.
பி.கு: நான் வன்னியனும் அல்ல வட மாவட்டாத்தானும் அல்ல. மருதக்காரந்தேன்
//இத்தனை சதவீத மாற்றம் வந்தால்தான் வெற்றி என்பதைவிட மாற்றமே இங்கு முக்கியம்.
//
இதையேத்தான் அய்யா வீரமணி அவர்களிடம் நானும் கோவிக.கண்ணனும் உரையாடியபோது கூறினார், 100% வெற்றி கிடைக்குமாயின் மிக்க மகிழ்ச்சி, 0 வில் இருக்கும் நமக்கு 10% வந்தாலும் 20% வந்தாலும் நல்லதே, மாற்றம் அந்த மாற்றம் தான் முக்கியம் அதனால் மனம் தளராதீர்கள் என்றார்.... அதையே நீங்களும் குறிப்பிடுவது மகிழ்ச்சி.
ஹரிகரன் என்னுடைய டிஸ்கியை மீண்டுமொரு முறை படிக்கவும், நான் தவறென சொன்னது நீங்கள் குறிப்பிட்ட செய்தியை, பங்க் குமார் சைதை வேட்பாளர் என நீங்கள் குறிப்பிட்டீர் அதை தவறு என்று கூறினேன். அப்புறம் அடுத்ததற்கு தாவுவது, இதெல்லாம் பழைய டெக்னிக் தானே இதே வலையுலகில் இரண்டாண்டுகளாக பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன், ஆட்கள் தான் மாறுகிறார்கள் ஆனால் அதே பழைய சேம் சேம் டெக்னிக் தான் :-)
//அப்புறம் அடுத்ததற்கு தாவுவது, இதெல்லாம் பழைய டெக்னிக் தானே இதே வலையுலகில் இரண்டாண்டுகளாக பார்த்துக்கொண்டு தானே இருக்கிறேன், ஆட்கள் தான் மாறுகிறார்கள் ஆனால் அதே பழைய சேம் சேம் டெக்னிக் தான்//
குழலி,என்ன செய்வது. பேசப்படும் பிரதேசம் அதே தமிழகம். பேசப்படுவது அதே மாதிரியான அரசியல் கட்சிகள். பின்ன எல்லா விஷயமும் அதே தானே? சுட்டுகிற /கேட்கிறதும் பழசாத்தானே தெரியும் :-)) டெக்னிக்கு என்ன வேண்டி இருக்கு இதுக்கு :-)))
பாமக சாதிச்சங்கமாகத் தோன்றிய கட்சி என்றாலும் எப்போதுமே அது திராவிட உணர்வுடைய கட்சி என்று தானே இது வரை எண்ணியிருந்தேன். இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் ஏதோ இப்போது தான் பாமக திராவிட உணர்வுகளையும் பெரியாரையும் முன்னிறுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறதே?! என் புரிதலில் இருந்த தவறா? என்னுடைய பாமக நண்பர்கள் எல்லோருமே (பத்து பேராவது இருப்பார்கள் - அனைவரும் வன்னியர்களாகத் தான் இருக்கிறார்கள் என்பது தற்செயலானது இல்லை என்றாலும்) திராவிட உணர்வுகளைத் தான் வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்கள்; கொண்டிருக்கிறார்கள்.

//பங்க் குமார் சைதை பாமக வேட்பாளராக கூட்டணிக்கட்சி திமுக தந்த அழுத்தத்தினால் நிறுத்தப்படவில்லை.
//
ஆகா ஹரிகரரே இதென்ன கூத்து, பாமக-திமுக கூட்டணி பேச்சில் கோ.க.மணி தானே கூட இருந்தார், நீங்க எப்போ அங்க போனிங்க? மறந்துவிட்டீர்களா திமுக திராவிட கட்சியென்பதை?பாமகவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை மருத்துவர் எப்போதும் யாரையும் அனுமதிப்பதில்லை, உதாரணம் கடந்த சென்னை மாமன்ற துணைமேயர் தேர்தலுக்கு கலைஞர் கூறிய பாமக வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்பதற்கு யாரை நிறுத்த வேண்டுமென்பதை பாமக தான் முடிவு செய்யும் எனவே அந்த பதவியே தேவையில்லை என்று கூறியவர் மருத்துவர்.
செய்திகளை தெரிந்துகொண்டு பேசவும், தப்பும் தவறுமாக அள்ளித்தெளிக்க வேண்டாம் ஹரிகரரே, உம் விருப்பத்திற்கு விளக்கமும் அர்த்தமும் பொருளும் சொல்ல இதொன்றும் உம் சனாதான தர்ம இந்து மதம் அல்ல....
கோ.க,நல்ல நடுநிலயான அலசல்.

/*
அதிமுக பெரியாரை எதிர்க்கவும் இல்லை உயர்த்திப் பேசுவதும் இல்லை. திமுக பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்தினாலும், பெரியார் கொள்கைகளைவிட வாரிசு அரசியல் என்ற எதிர்ப்பை சமாளித்து அடுத்தக் கட்ட தலைவரை அறிவிக்கும் முனைப்பில் இருக்கிறது.*/
தமிழக அரசியலை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருபவன் நான். நீங்கள் மேலே கூறியிருக்கும் கருத்துக்கள் தான் நான் அவதானித்ததும்.
கலைஞருக்குப் பின் அண்ணன் வைகோ அவர்களுக்கு தமிழக அரசியலில் நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என நம்புகிறேன்.
உண்மையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோரின் கொள்கைகளை உதட்டளவில் இல்லாமல் இதயத்திலும் வைத்திருக்கும் உன்னதமான மனிதர்.
இன்னொரு கருத்து: தந்தை பெரியாருக்குப் பின் தமிழகத்தில் பல சமூகச் சீரழிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி இளம் சந்ததியை சினிமா மோகத்திலிருந்து விடுவித்து தமிழகத்தில் ஒரு விழிப்புணர்ச்சியை மருத்துவர் இராமதாசு அவர்கள் தான் செய்து வருகிறார் என்பது என் எண்ணம்.
unarvukal said...
நல்ல பதிவு. "திமுக பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்சி நடத்தினாலும்" என்று கூறுகிறீர்கள், ஆனால் பெரியாரின் கொள்கைகளும் திமுக வின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று தான் கேள்விப்பட்டேன். அதிருக்கட்டும், திராவிட உணர்வு என்று எல்லோரும் குறிப்பிடுகிறார்களே அது என்ன? நான் இலங்கைத் தமிழன், திராவிடன் என்ற சொல்லையே நாங்கள் பாவிப்பது கிடையாது. அதிலும் பெரியார் திராவிடர்கள் எனக் குறிப்பிட்டவர்களெல்லாம், இன்று திராவிடன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அடிக்க வருகிறார்கள் ஆனால் தமிழர்கள் மட்டும் திராவிடத்தைக் கட்டியழுவதேன், சும்மா தமிழன், தமிழுணர்வு என்று சொல்லக் கூடாதா?
Kiruthu said...
கருப்பும் மாசிலாவும் சொல்லும் கருத்துகள் ஏற்புடையவை.
பாமக ஒரு மாநிலக்கட்சியாக வளரும் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை.
கிருது
//செய்திகளை தெரிந்துகொண்டு பேசவும், தப்பும் தவறுமாக அள்ளித்தெளிக்க வேண்டாம் ஹரிகரரே// வெகுஜன ஊடக வன்முறையால் படித்ததை/கிடைத்ததை அள்ளித்தெளித்த செய்திதானுங்க குழலி :-))

//
உம் விருப்பத்திற்கு விளக்கமும் அர்த்தமும் பொருளும் சொல்ல இதொன்றும் உம் சனாதான தர்ம இந்து மதம் அல்ல....//
பதிவுக்குச் சம்பந்தமில்லாத இதைச் சாய்சில் விட்டுவிடலாம் :-))
//கருப்பும் மாசிலாவும் சொல்லும் கருத்துகள் ஏற்புடையவை.
பாமக ஒரு மாநிலக்கட்சியாக வளரும் என்ற நம்பிக்கை எனக்கும் இல்லை.
கிருது//
அதுக்குதானே அவரு தனி மாநிலம் கேட்டாரு ?
//வெகுஜன ஊடக வன்முறையால் படித்ததை/கிடைத்ததை அள்ளித்தெளித்த செய்திதானுங்க குழலி :-))
//
எந்த ஊடகத்தில் எந்த பத்திரிக்கையில் என்று தெரிவித்தால் நலமாக இருக்கும், எனக்கு தெரிந்த வரை பங்க் குமார் சீட் கேட்டதும் பாமகவால் அது மறுக்கப்பட்டதும் மட்டுமே செய்தியாக வந்தவை, திமுக எதிர்ப்பினால் தான் மறுக்கப்பட்டது என்று எந்த செய்தியிலும் எனக்கு தெரிந்தவரை வரவில்லை, தாங்கள் எந்த பத்திரிக்கை என்று கூறினால் தெரிவிக்க வேண்டியவர்களுக்கு தெரிவிப்பேன், மறுப்பு அளிக்க நினைத்தால் அவர்கள் அளித்தாலும் அளிக்கலாம், மற்றபடி இப்படியாகத்தான் இருக்கும் என்ற உங்கள் கற்பனை ஓட்டமாக இருந்தால் செய்தியை வெறும் செய்தியாக மட்டும் சொல்லவும், மீண்டும் சொல்கிறேன், செய்திகள் உம் விருப்பத்திற்கு விளக்கமும் அர்த்தமும் பொருளும் சொல்ல இதொன்றும் உம் சனாதான தர்ம இந்து மதம் அல்ல....
neo said...
>> மீண்டும் சொல்கிறேன், செய்திகள் உம் விருப்பத்திற்கு விளக்கமும் அர்த்தமும் பொருளும் சொல்ல இதொன்றும் உம் சனாதான தர்ம இந்து மதம் அல்ல.... >>குழலி! அப்பிடிப் போடுங்க அருவாள! :)கண்னன்,

>>
இனி பெரியார் கொள்கைகளை சொந்தம் கொண்டாடவும் பங்கு போட்டுக் கொள்ளவும் திராவிடக் கட்சிகளுக்கும் பாமகவிற்கும் கடும் போட்டி இருக்கும். >>அரசியல் இயக்கங்களில் திமுக மட்டும்தான் பெரியாரிய அரசியலலை, அடையாளங்களை முன்வைக்கும் இயக்கம். இப்போது பா.ம.கவும் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னமோ அதிமுக, மதிமுக எல்லாம் பெரியாரியத்தை முன்னெடுப்பவர்கள் போன்ற மாயையை உங்கள் பதிவு ஏற்படுத்துகிறது அதுவே தவறு.
பெரியார் பெரியா இவரா? என்று அதிமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசவும், அதை கைகட்டி வாய்பொத்தி மண்ணாந்தையாய் வைகோவின் மதிமுக- கேட்டுக் கொண்டு அடிமையாய் இருக்கிறார்கள்!
ஆகவே, திமுக-வின் பெரியாரிய-திராவிட அரசியல்
இணையாய் போட்டியாளராய் பா.ம.க வருகிறது களத்துக்கு என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.
போட்டி ஆரோக்கியமானதாய் இருக்குமென நம்புகிறேன்!
திராவிடத்தின் முக்கியமான கடமை - 'சமூக நீதியை' இந்தியா முழுவதும் ஊடுருவிச் செல்லுகிற அரசியல் கருத்தாய் பரப்புவது. அதை கலைஞரும், மருத்துவரும் (திமுக-வும், பாமக-வும்) சரியாய் (தத்தமது) வழிகளில் செய்டு வருகின்றனர். எனவே - திராவிட இயக்கத்துக்கு உண்மையான 'மறுமலர்ச்சியாய்' இந்தப் போட்டி அமையட்டும்! :)
neo said...
>> அதிலும் பெரியார் திராவிடர்கள் எனக் குறிப்பிட்டவர்களெல்லாம், இன்று திராவிடன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அடிக்க வருகிறார்கள் ஆனால் தமிழர்கள் மட்டும் திராவிடத்தைக் கட்டியழுவதேன், சும்மா தமிழன், தமிழுணர்வு என்று சொல்லக் கூடாதா? >>உணர்வுகள்,

திராவிடத் தமிழர்கள்
வலைத்தளம் சென்று அங்கிருக்கும் கட்டுரைகளைப் படித்தால் உமது இந்தக் கேள்விகளுக்குப் பொருட்படுத்தக்கூடிய பதில்கள் கிடைக்கும். இந்த விவாதத்தைத் திசை திருப்ப வேண்டாம்.
கோவியாரே... நல்ல ஆராய்ச்சி..
கருப்புவின் மரம் வெட்டிக் கட்சி பதிவைப் படித்தபின் எனக்கு ஏனோ நிறுத்தப்பட்ட பஸ்ஸில் இருந்து இறங்கி 10 கிலோமீட்டர் நடந்து வந்து முன்பின் தெரியாத ஒரு கிராமத்தில் இரவு தங்கி பின் காலையில் லாரி ஏறிப்போன ஞாபகம் வந்தது. வன்னியர்களுக்கு உரிமை பெற்றுத் தரப்போராட்ட இயக்கம் ஆரம்பித்த டாக்டர் (மருத்துவர் என்று சொன்னால் டாக்டர் கோபித்துக் கொள்ளக் கூடும். தலித்துகளின் ஒரு பிரிவினரான சவரம் செய்வோரை மருத்துவர் என்று அழைப்பதுண்டு) பின்னாளில் தைலாத் தோட்டத்தை அவர் வளப்படுத்திக் கொண்டதோடு சரி. உள்ளுர் வன்னிய சங்கத் தலைவர்கள் எல்லாம் கட்டப் பஞ்சாயத்து அடவாடிகள் செய்து பணம் ஈட்டிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து பணம் ஈட்ட வாய்ப்பு வராத போது தனிக்கட்சி ஆரம்பித்தனர். பின்பு முகவரி இல்லாமல் போயினர் சிலர். காடு வெட்டி குரு போன்றோர் கட்சியின் பெயரால் ஒரு வன்முறை சாம்ராஜ்யத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். தற்போது புது இளைஞர்களைக் கவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது அவருக்கு. மற்றபடி உங்கள் கருத்துதான் என் கருத்தும். ஜாதியை மட்டுமே சொல்லி வளர்த்த கட்சி இது. தென் மாவட்டங்களில் வளராமல் இருப்பதுடன் வட மாவட்டங்களிலும் தேய ஆரம்பித்திருக்கிறது. முக்கியப் புள்ளிகள் எல்லாம் காண்ட்ராக்டராக பல மாநிலங்களில் பிஸியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசியல் செய்ய நேரம் இல்லை. பொருளாதார உதவி செய்வதற்கும் தயக்கம் இருக்கிறது. கட்சி பலவீனப்பட ஆரம்பித்திருக்கிறது என்று புரிந்து கொண்டு பலப்படுத்த ஆரம்பித்திருப்பது அவர் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்று பறைசாற்றுகிறது. திருநாவுக்கரசர் கண்ணப்பன் போன்றோர்கள் எல்லாம் தனிக்கட்சி ஆரம்பித்து ஒட்டாண்டியாகிப் போனவர்கள். அந்த வகையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த டாக்டரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இப்போதைக்கு இது தக்க வைக்கும் போராட்டமே ஒழிய வளரவைக்கும் செயற்பாடு அல்ல..
bala said...
//திராவிடத்தை விழுங்க தயாராகும் பாமக//
ஜிகே அய்யா,என்ன திராவிடத்தை விழுங்க முடிவு செய்து விட்டார்களா?என்ன ஆணவம்?இதை கேள்வி கேட்பாரில்லையா?அது சரி.அந்த அசிங்கத்தை இவங்க ஏன் சாப்பிட வேண்டும்?திமுக வே அதை விழுங்கி ஏப்பம் விடட்டுமே?மருத்துவர் அய்யா,தமிழ் இயல்,இசை,நாடகத்தை மீட்டு விழுங்கினால் போதுமே.எதற்கு இந்த பேராசையோ தெரியவில்லை.
பாலா
பாலா ,எதையாவது தின்னா தெளியாதான்னு திரியராங்க , தின்னுட்டு போகட்டும் விடுங்க .
பாலா ,எதையாவது தின்னா தெளியாதான்னு திரியராங்க , தின்னுட்டு போகட்டும் விடுங்க .
bala said...
//எதையாவது தின்னா தெளியாதான்னு திரியராங்க , தின்னுட்டு போகட்டும் விடுங்க// மூர்த்தி அய்யா,அதுவும் சரிதான்.ஆனா தெளியற பித்தமா பிடிச்சுருக்கு இவிகளுக்கு?பாலா
பாலா, மற்றும் கரு மூர்த்தி
விவதமாக கருத்துக்கள் சென்றால் நல்லது.
bala said...
//பாலா, மற்றும் கரு மூர்த்தி
விவதமாக கருத்துக்கள் சென்றால் நல்லது. //ஜீகே அய்யா,நல்லதுங்கய்யா.தெளிவான கருத்து ஒண்ணு தோணுதய்யா.
முதல்ல பா.ம.க திராவிடத்தை விழுங்கட்டும்.அப்புறம், தி.மு.க பா.ம.க வை விழுங்கட்டும்.பிறகு அ.இ.அ.தி.மு.க ,தி.மு.க வை விழுங்கட்டும்.அப்புறம் தே.மு.தி.மு.க அ.இ.அ.தி.மு.க வை விழுங்கட்டும்.
ம.தி.மு.க வை யாரும் விழுங்க வேண்டாம்.கடிச்சி துப்பினா போதும்.
அதுக்குள்ள திராவிடமும் டைஜெஸ்ட் ஆயிடும்.என்ன சொல்றீங்க.
பாலா
பாலா ஐயா,நம்ம வரவணையான் ஐயா உங்களை வெத்தலைப் பாக்கு வச்சு கூப்பிடுறாக அங்கேயும் போய் உங்க கருத்து மழையை பெய்யுங்க... நம்ம பதிவு முழுகடிச்சிடாதிங்க...அடமழை தாங்காதுன்னு அனானிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை !
:)
இதை ஏன் பாமக VS திராவிட கட்சி என பார்க்கின்றீர்கள், திராவிட கொள்கைகளை ஏற்கனவே கொண்டிருக்கும் பாமக தற்போது அதை மேலும் பரப்புவதற்கு என்று எடுத்துக்கொள்ளலாம், ஹி ஹி பாமகவும் திராவிட கொள்கையை பரப்ப இறங்கியிருப்பது யாரோ சிலருக்கு வயிற்றை கலக்குவது போலிருக்கும் போல.... :-)))
ராமதாஸ் அய்யா அப்பப்ப ஜெயலலிதா பக்கமும் ஜிங்கி அடிப்பாரு. ரெண்டு சீட்டு கூட கொடுத்தா பாஜக பக்கமும் சாய்வாரு.. அவருக்கு வேண்டியது சீட்டும் பதவியும்!
bala said...
//நம்ம வரவணையான் ஐயா உங்களை வெத்தலைப் பாக்கு வச்சு கூப்பிடுறாக அங்கேயும் போய் உங்க கருத்து மழையை பெய்யுங்க.//
ஜிகே அய்யா,நம்ம செந்தில் அய்யா, என்ன வர உடறதில்லை அய்யா.அவரே நம்ம பேர்ல செம்மையா கேள்வியும் கேட்டு,பதிலும் போட்டுடறாரய்யா.
அது சரி,பா.ம.க வோடு,திராவிடத்தையும் சேர்த்து முழுங்கின தி.மு.க மலப்பாம்பு தான் எம் மக்கள்(ராஜ் வனஜ் அய்யாவோட சகோதரர்கள்) காலையும் சுற்றிக் கொண்டு, அவங்க கையில் மலமும் கொடுக்குதே,அது எதனால,மலப் பாம்பானதாலயா?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.
பாலா
//ஜிகே அய்யா,நம்ம செந்தில் அய்யா, என்ன வர உடறதில்லை அய்யா.அவரே நம்ம பேர்ல செம்மையா கேள்வியும் கேட்டு,பதிலும் போட்டுடறாரய்யா.
அது சரி,பா.ம.க வோடு,திராவிடத்தையும் சேர்த்து முழுங்கின தி.மு.க மலப்பாம்பு தான் எம் மக்கள்(ராஜ் வனஜ் அய்யாவோட சகோதரர்கள்) காலையும் சுற்றிக் கொண்டு, அவங்க கையில் மலமும் கொடுக்குதே,அது எதனால,மலப் பாம்பானதாலயா?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.
பாலா //
பாலா ஐயா,அவரை சொல்லிட்டு நீங்களே கேள்வியும் கேட்டு பதிலும் சொல்லி என்னை கன்பார்ம் பண்ணச் சொல்லுறிகளே இது ஞாயமா ?தமிழ்மணம் வராத புண்ணியத்தில்
யாருக்கும் இன்னிக்கு உங்கள் அருள்பார்வை சென்று சேராது என்று ஒட்டுமொத்தமாக எனக்கு இப்படி கருணை பொழியிறிங்களே... மெத்த சந்தோசம் !
நல்லா இருக்கனும் சாமி !
//அது சரி,பா.ம.க வோடு,திராவிடத்தையும் சேர்த்து முழுங்கின தி.மு.க மலப்பாம்பு தான் எம் மக்கள்(ராஜ் வனஜ் அய்யாவோட சகோதரர்கள்) காலையும் சுற்றிக் கொண்டு, அவங்க கையில் மலமும் கொடுக்குதே,அது எதனால,மலப் பாம்பானதாலயா?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கய்யா.
பாலா //
பின்னூட்ட சூராவளி பாலா வாழ்க ,

(
பயப்படாதீங்க பாலா , கோட்டரும் பிரியாணியும் கேக்க நான் கழக் போர்வாளோ பூத்தேஜண்டோ இல்லை )
//தமிழ்மணம் வராத புண்ணியத்தில்
யாருக்கும் இன்னிக்கு உங்கள் அருள்பார்வை சென்று சேராது என்று ஒட்டுமொத்தமாக எனக்கு இப்படி கருணை பொழியிறிங்களே... மெத்த சந்தோசம் !//
:)))))
bala said...
//பூத்தேஜண்டோ இல்லை// கரு.மூர்த்தி அய்யா,அவரு முதல்ல பூத் ஏஜெண்ட்டா தான் இருந்தாரு.ஆனா ஓட்டு போட வர்ரவங்களை விரட்டி,விரட்டி அடித்ததால,கழகக் கண்மணிகள் அவருக்கு பூத ஏஜெண்ட் பட்டம் கொடுத்து கெளரவப் படுத்தினாங்க.இனிமே கழகம் வழங்கிய பட்டமே அவரோட அடையாளம்.
பாலா