நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, December 8, 2011

மது மூலம் வரும் மக்கள் பணத்தில் அரசை நடத்துவதை விட


நாட்டை காப்பற்ற ஒன்று சேருவோம்..


ண்டுக்கு 14,000 கோடி ரூபாய் வருமானம் கொட்டும் டாஸ்மாக் சார்பில் இப்போது புதிதாக வெளிநாட்டு மதுபானங்களை விற்க 'எலைட் ஷாப்களைத் திறப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. 'உயர் ரக மது வகைகள், குளிரூட்டப்பட்ட பார், கம்ப்யூட்டர் பில்எனக் கவர்ச்சிகரமான அம்சங்களுடன் தமிழக அரசு புது சாதனை படைக்க அடிகல் நாட்டிருக்கிறது.

நாட்டில் முழு மது விலக்கு வேண்டும் என மருத்துவர் அய்யா அவர்கள் பல ஆண்டுகளாக போரடிவருகிறார் அதில் சில குறிப்பிட்ட  வெற்றியையும் கண்டுள்ளார்.

மது மூலம் வரும் மக்கள் பணத்தில் அரசை நடத்துவதை விட வெறென்ன சொல்வது.............................. நீங்களே இவ் வெற்றிடத்தை  புர்த்தி செய்து கொள்ளுங்கள்..












எலைட்  மதுவிற்பனையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது...



தமிழகம் முழுவதும் 200 "எலைட்' மதுபான கடைகள் உள்ளிட்ட 800 கடைகள் திறப்பதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஐகோர்ட்டில் வழக்கறிஞர் எம்.ஞானசேகர் தாக்கல் செய்த மனு:வணிக வளாகங்கள், முக்கிய வர்த்தக மையங்கள், பொழுதுபோக்கு இடங்களில், 200 உயர்ரக மதுபான கடைகளை திறக்கும் திட்டம் உள்ளது. இக்கடைகளில் உயர்தர மதுபான வகைகள் விற்பனை செய்யப்படும். கடைகளுடன் இணைந்து "பார்' இருக்காது. இந்த "எலைட்' கடைகள் தவிர 600 சாதாரண மதுபான கடைகளும் திறக்கப்பட உள்ளது.


புதிய "எலைட்' கடைகள் மற்றும் சாதாரண கடைகளை திறக்கும் முடிவு சட்ட விரோதமானது. முந்தைய அரசானது, மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் முதல் கட்டமாக, கூடுதல் கடைகளை திறக்கக் கூடாது என முடிவெடுத்தது. கடைகளின் நேரத்தையும் குறைத்தது.இந்நிலையில், இந்த அரசானது, ஐந்து ஆண்டுகளில் 800 கடைகளை திறக்க முடிவு செய்துள்ளது.


உயர்ரக மதுபான கடைகள், சென்னையில் 20, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகராட்சிகளில் 40, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் மாநகராட்சிகளில் 25, மாவட்ட தலைநகரங்கள் 23ல் 115 கடைகள் என மொத்தம் 200 கடைகளும், 33 மாவட்டங்களில் சாதாரண கடைகள் 600ம் திறக்கப்பட உள்ளது.இதற்கான அரசாணை, கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்க வேண்டும். புதிய "எலைட்' மற்றும் சாதாரண கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும். தற்போது இயங்கி வரும் கடைகளை ஆய்வு செய்ய, ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


வழக்கு கண்டிப்பாக வெற்றி பெறும்...தமிழக அரசுக்கு நல்லதொரு பாடம் மீண்டும் நீதி மன்றம் புகட்டும்...