நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, December 21, 2011

விவசாயிகளுக்கு பரிசு தொகை தமிழக அரசு அறிவிப்பு - சாத்தியமா?

 விவசாயிகளுக்கு பரிசு தொகை வழங்க அரசு முன்வந்திருப்பது வரவேற்க்க தக்க செயல்... ஆனால் அவர்கள் கூறும் நிபந்தனைகளை பார்த்தால் இது சாத்தியமல்லாத ஒன்றாகும்..
அப்படியும் மீறி பரிசு பெற்றால் அது அரசங்கத்தை ஏமற்றியும் அதிகரிகளை தன் கையில் போட்டு கொள்ளும் சக்தி வாய்ந்த அரசியல் வாதியாகத்தான் இருக்க முடியும்... 
தமிழக அரசின் அறிவிப்பு...
சென்னை : திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு போட்டி நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதிக விளைச்சல் தரும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசும் பதக்கமும் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் இந்த போட்டியில் கலந்துகொள்ள 50 சென்ட் நிலத்தில் பயிர் விளைவித்திருக்க வேண்டும் என்றும் ஏக்கருக்கு குறைந்தது 2500 கி வரை விளைச்சல் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் நீலகிரி மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண்துறையில் புதிய தொழில்நுட்பம் புகுத்தும் நோக்கில் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் திருந்திய நெல் சாகுபடி முறையில் குறைந்த இடுபொருட்களின் மூலம், அதிக மகசூல் பெறுவது  எப்படி அரசு கூறும் வழிமுறைகள் இவைகள் தான்..          
சாதாரண நெல்நடவில் மொத்த நீர்த்தேவை, 1200 மி.மீ., எனில் திருந்திய சாகுபடியில் பாதியளவு போதும்.
§                     இலை வண்ண அட்டையை பயன்படுத்தி, தேவைக்கேற்ப தழைச்சத்து இடவேண்டும்.
   வெள்ளைப் பொன்னிக்கு 3ம் எண், மற்ற ரகங்களுக்கு 4ம் எண்ணுடன் நிறத்தை ஒப்பிட வேண்டும்.
                அட்டை எண் 4க்கு குறைவாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 30 கிலோ அளவில் தழைச்சத்தும், தண்டு உருளும் பருவத்தில் பாதியளவு சாம்பல் சத்தும் இட வேண்டும்.
§                     நிலத்தில் சீரான நீர் இருக்கும் போது, நட்ட 10, 20, 30, 40ம் நாட்களில் களைக்கருவி கொண்டு, பயிரின் ஊடே குறுக்கும், நெடுக்குமாக களையை மண்ணில் மடக்கி விட வேண்டும்.
§                     காற்றோட்டம் அதிகமாவதுடன், தண்ணீர், உரச்சத்துக்கள் நெற்பயிருக்கு கூடுதலாக கிடைக்கும்.

இவ்வாறு அரசு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுரை கூறுகின்றனர்..
ஆனால் இவர்கள் கூறும் வழிமுறைப்படி நெல் சாகுபாடி செய்தால்
13.000 ஆயிரம் முதல் 15.000 ஆயிரம் வரை செலவாகும்.. என்று விவசாயிகள் கூறுகின்றனர்..
சாதரண முறையில் பயிர் சாகுபடி செய்தால் 15.000 முதல் 18.000 வரை செலவாகும்..
திருவள்ளுரை மாவட்ட விவசாயி  திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் நெல் பயிரிட்ட திருப்பாச்சூரைச் சேர்ந்த விவசாயி  கதிரேசன் அவர்கள் தினமணி நாளிதழ்க்கு 4-12-2011 அன்று அளித்த பேட்டி...

 நான் 15 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். பல முறை லாபமும் சில முறை நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விதை நெல், உரம், யூரியா என அனைத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. எனவே, வேளாண்துறை அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 2 ஆண்டுகளாக திருந்திய நெல் சாகுபடி திட்டத்தின் கீழ் நெல் பயிரிட்டேன். அதன்மூலம் அதிக லாபம் ஈட்டியுள்ளேன்.
திருந்திய நெல் சாகுபடி திட்டத்தில் களை எடுத்தல், பூச்சி மருந்து தெளித்தல், நாற்று நடும் கூலி, விதை நெல் உள்ளிட்ட செலவுகள் குறைகின்றன. இது தவிர வழக்கமான முறையில் பயிர் செய்யும் போது ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை செலவாகும்.   திருந்திய நெல் சாகுபடியில் ரூ.10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் மட்டுமே செலவாகிறது. வழக்கமான முறையில் ஏக்கருக்கு 22 முதல் 25 மூட்டைகள் அறுவடை செய்ய முடியும்.
 திருந்திய நெல் சாகுபடி திட்டம் மூலம் 28 முதல் 30 மூட்டைகள் அறுவடை செய்ய முடியும். செலவு குறைவதுடன் மகசூலும் அதிகளவில் கிடைப்பதால் திருந்திய நெல் சாகுபடி திட்டம் விவசாயிகளுக்கு நல்ல பலனைத் தரும் என்றார்.


விவசாயி தன் அனுபவத்தில்  கூறியபடி 28 முதல் 30 மூட்டைகள் அறுவடை செய்ய முடியும் என்கிறார்..அவரது சொல்படி பார்த்தால்

1மூட்டை 75 கிலோ என்றால் 30 மூட்டைகள்  2250 கிலோ  ஒரு ஏக்கருக்கு பயிர் செய்து அறுவடை செய்ய முடியும் என்கிறார்...

அதுவும் அவர் உண்மையாக கூறி இருந்தால் அவர் சொல்லும் 30  மூட்டைகள்  அதிகபட்சமானவையாகும்..

ஆனால் தமிழக முதலமைச்சர் அவர்கள்...குறைந்தது 50 சென்ட் நிலத்தில் பயிர் செய்திருக்க வேண்டும் என்றும் அதவது  ஓரு ஏக்கர் நிலத்தில் குறைந்தது  2500 கிலோ  வரை அறுவடை செய்தால் 5.இலட்சம் பரிசும் 3500 ரூபாய் மதிப்புள்ள நினைவு பரிசும் அளிக்க படும் என்கிறார்..

நான் ஒரு விவசாயி என்ற முறையில் எங்கள் குடும்ப அனுபவத்தில் ஒரு ஏக்கருக்கு 20 முதல் 23  மூட்டைகள்  மட்டுமே அறுவடை செய்திருக்கிறோம்..

சரி தமிழக அரசு சொல்வது போல் பரிசு தொகை கிடைத்தால் அது உண்மையான உரிய விவசாயிக்கு கிடைக்க அரசு வழிவகை செய்ய வெண்டும் என்பதே என்னை போன்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பு...