நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, February 22, 2012

மாவீரன் வீரப்பன்...



மாவீரன் வீரப்பன்










உன்னை பிறிந்த நினைவுகளால்
ஈரவிழிகள் எம்மக்களுக்கு இன்னும் காயவில்லை
ஆனாலும் உந்தன் 
வீரமிகு சாதனைகளை இவ்வுலகமறவாது…
மொட்டு விழும் பூவினிலே முகம் தெரியும் எங்களுக்கு
உங்கள் கல்லறைக்கு கிட்டவர கண் தெரியும்
வீசுகின்ற காற்றினிலும் மூச்சுக் கலந்து உமை உயிர்ப்பிக்கும்
அஞ்சாத நெஞ்சோடு அசையாத இலக்கோடு

நீங்கள் இந்த மண்ணை விட்டு சென்றாலும் 
என்றுமே நீங்கள் வன்னியரின் முத்துக்கள்
உங்களின் வாசலில் வந்துமை வணங்குகிறோம்….

உங்கள் கல்லறை மீதினில் கைகளை வைத்ததொரு 
சத்தியம் எடுக்கின்றோம்…


கண்ணில் நீர்தாங்கி விண்ணுலகம் சென்றிட்ட
வீரமிகு தியாக வேங்கையே
ஆயிரம்,ஆயிரம் வன்னியரின்
ஆசியோடு நீ சுதந்திரமாய்
சுற்றிடுவாய் வன்னிய மக்களோடு

வீசிவரும் காற்றில் விரிந்த சிறகுகளோடு
பறந்துவிட்ட வீரமிகு மாவீரனே….
உம்மை நம் இனம் மறவாது
உந்தன் வீரத்தை எந்நாளும்
இவ்வுலகம் மறவாது…


Sunday, February 19, 2012

மருத்துவர் அய்யாவின் வழியில் வழி நடப்பாய்....


வன்னியனே இன்னுயிரை ஈந்தது போதும்
புயலாய் எழுந்திரு!
வன்னியச் செய்திகளைச் செவிமடுத்த உங்கள் அனைவருக்கும்
வாழ  வழி தேடும் உம் அனைவருக்கும்
வழி நெடுகும் தடங்கல்களே.

எத்தனை காலம் தான்
அடிமையாய் நீ இருப்பாய்..
உம் தலைமுறைக்காவது
சுதந்திர காற்றை நீ தருவாய்...

வாழ வழி தேடும் வன்னியனே
உம் வாசல் படி காத்திருக்கோம்..

மருத்துவர் அய்யாவின் வழியில்
வழி நடப்பாய்

நாளை நமதாகும்
நாளைய தலைமுறையும் உமதாகும்

சுவசிக்கின்ற காற்று உமதாகும்
நீ திரும்பும் திசையெல்லாம்
உமதாகும்..

வெற்றிகளை நீ தேடி 
சென்றது போதும்
வெற்றிகள் உமை தேடி வரும்
காலம் வெகு தொலைவில் இல்லை..

பாமக வின் ஆட்சி அமையும்
அன்நாளே
வன்னியனின் வாழ்வுக்கு அன்றே திருநாள்...


Tuesday, February 7, 2012

தேமுதிகவுக்கு பக்கவாதம்... பெயர் மாறும் தேமுதிக..



தேமுகிகவிற்க்கு தமிழக அரசால் பக்கவாதம் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்சி உறுப்பினர்களை இழந்து வருகிறது..இன்னும் சில மாதங்களில் முழுவதுமாக பாக்கவாதத்தல் பாதிக்கபட்டு தன் கட்சியை கலைத்து விட்டு சினிமாவிற்க்கு மறுபடியும் ஒடுவார் என எதிர்பார்க்கபடுகிறது 

அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் ஏற்பட்ட மோதல் சட்டசபையிலயே வெளிச்சத்திற்க்கு வந்தது..
கடந்த தேர்தலில் அதிமுக வுடன் கூட்ட்ணி வைத்து சில சட்டமன்ற உறுப்பினர்களை பெற்ற விஜயகாந்த் கட்சி. அத்தேர்தலின் போதே குடித்து விட்டு உலறல் பேச்சு. தன் வேட்பாளரையே பொதுமக்கள் முன்னிலையிலேயே அடித்தது என பட்ட சர்ச்சைகளுக்கு இடையில் அதிமுகவின் தயவால் எதிர்கட்சி தலைவரானர் குடிகார விஜயகாந்த்..

இந்நிலையில் அதிமுகவினருக்கும் தேமுதிகவிற்க்கும் இடையே பயங்கர இடியாய் அமைந்தது சட்டபேரவை.. எங்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியாத விஜயகாந்த் நாக்கை கடித்து கொண்டும்-கை நீட்டி பேசியும் சினிமாவிற்க்கும் சட்டசபைக்கும் வித்தியசாம் தெரியாமல் பயங்கரமாக ஆவேசப்பட்டவர்..

தமிழக முதல்வரால் தகுதியில்லாதவருக்கு பதவி கிடைத்தால் இப்படிதான் நடந்து கொள்வார்கள்.தேமுதிகவுடன் கூட்டணி வைத்தற்க்காக வெட்கபடுகிறேன். அவமான படுகிறேன்.என தன் மனக்குமுறல்களை கெட்டிதீர்துவீட்டார்

இனி தேமுதிகவிற்க்கு அழிவுகாலம் ஆரபித்து விட்டது என அறைகூவல் வீட்டார்-அதன்படி அவருடைய கட்சி ச.ம.உ களை அதிமுகவில் இணைக்கும் பணி தொடங்கபட்டுவிட்டது..
முதற்கட்டமாக இப்ராகிம் இராவுத்தர்-மற்றும் தேமுதிகவின் முக்கிய நிருவாகிகள் அதிமுகவில் இணைந்து விட்டனர்








--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தேசிய முற்போக்கு திராவிட கழக கட்சியின் தலைவரும், குடிகாரருமான தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான இப்ராகிம் ராவுத்தர், அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். 




அ.தி.மு.க- தே.மு.தி.க கட்சிகளுக்கிடையே கடுமையான உரசல் இருந்து வரும் நிலையில், இப்ராகிம் ராவுத்தர் அதிமுக பக்கம் வந்துள்ள்ளது,  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.


தேமுதிக சார்பில் சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்டவர் உட்பட தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் இன்று அதிமுக  தலைமைக்கழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.  விஜயகாந்த் நண்பரும் அதிமுகவில் இணைந்தார்

இப்ராகிம் ராவுத்தரும், விஜயகாந்தும் ஆரம்பத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். விஜயகாந்தை வைத்து ராவுத்தர் நிறைய படங்கள் தயாரித்துள்ளார். 

ஆக மொத்தம் விஜயகாந்தின் வளர்ச்சியே இராவுத்தாரினால் என்றால் அது மிகையாது..


எனவே தேமுதிக 
இனி  
தேயும் திராவிட முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றம் செய்யலாம என குடிகார விஜயகாந்த் ஆலேசித்து வருவதாக தெரிகிறது..






Thursday, January 19, 2012

சோழர்கள் வன்னியர் சாதி என்பதற்கும் ஆதாரம் :


                                         
                           பூங்குயிலன் கௌரி



சோழர்கள் வன்னியர் சாதி என்பதற்கும் ஆதாரம் :

முதலில் தேவர் என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள் ..தேவர் என்பது ஒரு பட்டம் . தேவர் என்னும் பட்டம் தமிழகத்தில் பல சாதியினருக்கு உள்ளது ... இங்கே வன்னியர்,முத்தரையர் ,கள்ளர் ,மறவர், அகமுடையார் என்பவர்களும் தேவர் பட்டம் தரித்தவர்கள் ..

சரி இப்பொழுது மற்ற சாதியினர் தாங்கள் சோழர்கள் என்பதற்கு முன் வைக்கும் கேள்விக்கு வருவோம் ..

கேள்வி : ராஜ ராஜனும் அவரது முன்னோர்களும் தேவரென்று பெயருடன் சேர்த்து அழைக்கப்பட்டனர். உதாரணமாக யானை மேல் துஞ்சிய தேவர், ராஜராஜ சோழ தேவர் என்று,

பதில் :

(சோழர் கால) மதுராந்தகம் கல்வெட்டு வாசகம் இதோ:

"இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத் தேவன்"
இந்த தேவரும் நீங்கள் நினைக்கும் தேவரா?

இதொ இன்னும் இரண்டு கல்வெட்டுக் குறிப்புகள்:

சேக்கிழார் குன்றத்தூர் தொண்டை மண்டல சைவ வேளாளர் என்பது உமக்குத் தெரிந்திருக்கும். அவர் பற்றி திருமழபாடி கல்வெட்டு (12 ம் நூற்றாண்டு)
"குன்றத்தூர் சேகிழான் மாதவடிகள் இராம தேவனான உத்தமச் சோழப் பல்லவரையன்"
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

செங்குன்றாபுரம், விருதுநகர் கல்வெட்டு (13 ம் நூற்றாண்டு)

"கம்பன் தேவனான நாற்பத்தெண்ணாயிர ஆச்சாரி"
இது கம்மாளருக்கு இருந்த தேவர் பட்டம்.
இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

திருச்சி மாவட்டம், 12 ம் நூற்றாண்டு கல்வெட்டு:
"வண்ணான் அழிவில்லாத தேவன்"

இவர் நீங்கள் நினைக்கும் தேவரா?

எதையும் ஆய்ந்து அலசி முடிவெடுப்பதே சான்றோர் வழி. அதனால் தான் அறிவிற் சிறந்த சான்றோர் அவைக்குப்போனால் பாம்பும் சாகாது என்றனர்?

ஆக, வெறும் தேவர் என்னும் பட்டத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ,அதற்க்கு உரிமை கொண்டாடுவது அறியாமையே ... காரணம் தேவர் என்னும் பட்டம் கொண்ட சாதிகள் பல உள்ளன தமிழகத்தில் .....

உண்மையில் கள்ளர் சங்ககாலத்தில் இவர்கள் முதலில் தூசிப் படைகளாக, ஆநிரை கவரும் வெட்சிப் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்ந்து வரப்பட்ட கால்நடைகள் அவர்களுக்கே பகிர்ந்தளிக்கப்பட்டது. பிறகு அவர்களை குதிரை பராமரிப்பு போன்ற பணிகளில் ஈடுபடுத்தினர். இவ்வாறானவர்கள் சேர்வைக்காரர்களாக அறியப்பட்டனர். பிறகு இவர்கள் அகப்பரிவாரங்களாக, அரண்மனைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவர்களே அகம்படியர் ஆவர். படைத் தளபதி ஆகும் அளவு இவர்களுக்கு உரிமை இருந்தது. இதைத்தான் 'கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படி மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆயினரே' என்கிற சொல்வழக்கு வெளிப்படுத்துகிறது.

அப்படியானால் ராஜராஜ சோழன் யார் ?

ஷத்ரியனான சுந்தர சோழனுக்கும், மலையமான் குலப் பெண் வானவன் மாதேவிக்கும் பிறந்தவன் ராஜ ராஜன். மலையமான் குலம் என்பது ஒரு அடிமைப்படாத சிற்றரசு வம்சமாக இருந்திருக்கிறது. மலையமான் திருமுடிக் காரி பற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இந்த மலையமான் வம்சம் அடிமைப் பட்டிருந்தால் சூத்திர வர்ணமாகி இருக்கும். அவ்வாறு அடிமைப்படவில்லை என்பது பிற சான்றுகள் மூலம் நிரூபணம் ஆகிறது.

வன்னியர் குல க்ஷத்ரியர்கள் மட்டுமே தமிழகத்தில் க்ஷத்ரியர் பட்டம் பெற்றவர்கள் . க்ஷத்ரியர் என்பதற்கு உண்மையான தமிழ் வார்த்தை சான்றோன் . சான்றோன் என்பதற்கு வீரன் என்று பொருள் என்பதை மயிலை சேனி வேங்கடசாமி அவர்கள் நிரூபித்திருக்கிறார்.

வன்னியர் குலம் மட்டுமே அடிமைபடாது வந்தமையால் ,இவர்கள் நேரடியாக க்ஷத்ரியர்களாக, அரச வர்ணத்தில் வகைப்படுத்தப்பட்டனர். அடுத்து மலையமான் என்பதற்கும் வருவோம் ... வன்னியர்களை மலையமன்னர் எனவும், பல்லவர் , சோழர் எனவும் கம்பர் பாடிய பாடல் பின்வருமாறு :

குலத்தலைவர் படைச் சிறப்பு

விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே. 8

சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல் இவ்வாறு குறிப்பிடுகின்றது.

ஆகா ராஜ ராஜன் வன்னியர்குல க்ஷத்ரியனே ... சோழரை மற்ற சாதியினர் நாங்கள் என்று உரிமை கொண்டாடினால் ,சோழர்கள் சூத்திரர் வர்ணத்தில் வர நேரிடும் .. காரணம் ,தமிழகத்தில் வன்னியர்கள் மட்டுமே க்ஷத்ரியர் வர்ணத்தில் உள்ளவர்கள் .

இங்கே ராஜ ராஜனும் க்ஷத்ரியனே...

ஆதாரம் பின்வருமாறு :

சுந்தர சோழன் இறந்தபோது அவனது மனைவி வானவன் மாதேவியும் உடன்கட்டை ஏறி இருக்கிறாள். சூத்திரப் பெண்கள் இவ்வாறு உடன்கட்டை ஏறியதற்கான சான்றுகள் ஏதும் இதுவரை கிடைத்ததாகத் தெரியவில்லை. மேலும், சிறிய வயதிலேயே முடிசூடிக் கொள்ள சொல்லப்பட்ட போது, க்ஷத்ரிய தர்மப் படி உரிய வயது வந்ததும் முடிசூடுவதாக ராஜ ராஜன் சொன்னது அவனது மெய்கீர்த்திகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் க்ஷத்ரிய சிகாமணி என்பது அவனது மெய்கீர்த்தியில் சொல்லப்பட்டுள்ளது. எனவே அவன் க்ஷத்ரியனே.

இப்பொழுது சோழர் வன்னியர் குல க்ஷத்ரியர் என்பதற்கு முக்கிய ஆதாரத்திற்கு வருவோம் :

களப்பிர அரசனான கூற்றுவ நாயனார் தில்லை வாழ் அந்தணர்களை முடிசூட்ட வேண்ட அவர்கள் சோழர்க்கன்றி சூட்டோம் முடி என மறுத்தது தெளிவாகிறது.

தில்லை வாழ் அந்தணரால் முடி சூட்டப்படும் பேறு பெற்ற ஒரு குடும்பத்தினர் இன்றும் சிதம்பரம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சிதம்பரம் பகுதியில் ஆட்சியாளாராக விளங்கியவர்கள். நாயக்கர் காலத்தில் பாளையக்காரர்களாக பிச்சாவரம் பகுதியில் ஆட்சி செய்தவர்.இவர்கள் "சோழனார்" என்று அழைக்கப்பட்டனர்.

கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் பிச்சாவரம்(பித்தர்புரம் என்பதே சரி) பகுதியை ஆண்ட விட்டலராயச் சோழனார் இம்மரபினர் ஆவார்.இவரைக் குறித்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன் பிச்சாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இம்மரபினர் முடி சூடிக்கொள்வதற்கு முன்பு அபிஷேகம் செய்யப்பெற்று தில்லை நடராசரின் திருநீற்றைப் பெற்று அங்குள்ல பஞ்சாக்கரப் படி மீதமர்ந்து பட்டம் புனைந்துகொண்டு தில்லையில் சிம்மாசனத்தில் அமர்ந்து நல்லறம் புரிந்தனர். இந்தச் செய்தி திருக்கை வளம் என்ற நூலில் காணப் பெறுகிறது.

இந்நூலை இயற்றியவர் கூடல் இருவாட்சிப் புலவர் என்பவர். இவர் அரியலூர் மன்னரான விஜயரங்க ஒப்பிலாத மழவராயர் அரசவையில் இதனைப் பாடினார்.

இவ்வாறு பாடப்பெற்ற இம்மரபினர் சோழனார் என்றும் தில்லைச் சோழர் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மரபினரில் ஒருவர் பெயர் : புலிக்குத்திப் புலிவாயில் பொன்னூஞ்சல் ஆடிய வீரப்ப சூரப்பச் சோழனார்.

தில்லை வாழ் அந்தணர் முடியெடுத்துக் கொடுக்க சைவ வேளாளர் ஒருவர் இம்மரபினருக்கு முடிசூட்டுவார்.இவ்வாறு பிச்சாவரம் சோழனாருக்கு முடி சூட்டும் வேளாளர் சோழ மன்னர்களின் அமைச்சராக இருந்தவரின் வழி வந்தோர் எனக் கூறுவர்.

இந்த சோழனார் மரபில் கி.பி 1844 -இல் இரத்தினசாமி சூரப்ப சோழனார் பிறகு இராமபத்திர சூரப்ப சோழனார், கி.பி. 1911 -இல் தில்லைக்கண்ணு சூரப்ப சோழனார், 1943 - இல் ஆண்டியப்ப சூரப்ப சோழனார், பின்பு 1978 - இல் சிதம்பரநாத சூரப்ப சோழனார் முதலானோர் நடராசர் திருமுன் பட்டம் புனைந்திருக்கிறார்கள்.

பிச்சாவரம் குறுநில மன்னர் ஸ்ரீ ஆண்டியப்ப சூரப்ப சோழனார் திருமணம் சிதம்பரத்தில் நடைபெற்றதையும், இம்மன்னருக்குத் தில்லைக் கோயில் மரியாதைகளுடன் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றதையும் 24/ 8 /1943 - இல் வெளிவந்த ஆங்கில நாளேடு இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த மன்னர் 19/8/1943 - இல் முடி சூடித் திருமணம் செய்துகொண்டதைப் பாராட்டுவதற்காக சிதம்பரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.இந்தச் செய்தி 16/10/1943 - இல் வெளிவந்த சுதேசமித்திரன் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

தில்லையில் நடராசர் திருமுன் முடி சூடும் உரிமை சோழர்க்குரியது. வேறு எந்த அரச மரபினரும் இந்த உரிமையைப் பெற்றிருக்கவில்லை என்பது தேற்றம்.
அத்தகைய உரிமையை பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் மட்டும்தான் பெற்றிருந்தனர்.

இவர்கள் சோழர் பரம்பரை என்பதால் இந்த முடி சூடும் உரிமை பெற்றிருந்தனர்.

பிச்சாவரம் பாளையக்காரர்களான சோழனார்கள் வன்னிய குலத்தினர் ஆவர்.

நன்றி---- பூங்குயிலன் கௌரி

Sunday, January 8, 2012

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...





தைத்திங்கள் திருநாளில்

பொங்கல் பொங்குவோம் – புதுப்

பொங்கல் பொங்குவோம்!


வன்னியர்கள் செழித்தோங்கப்

பொங்கல் பொங்குவோம்!


மருத்துவர் அய்யா வளமுடன் வாழ

பொங்கல் பொங்குவோம்!


 பசுமைத்தாயகம் செழித்தோங்கப்

பொங்கல் பொங்குவோம்!


மனிதஇனம் தழைத்தோங்கப்

பாமக வளர்ந்தோங்க

பொங்கல் பொங்குவோம்!


இன்னல்கள் இல்லாதொழியப்

வன்னியர்களின் எதிரிகள் ஒழிந்துபோக

பொங்கல் பொங்குவோம்!


புதிய பாதையில் பாமக---- எழுச்சிமிகு புகைப்படங்கள் சில...

திருவள்ளுர் மாவட்டத்தில் நடைபெற்ற புதிய அரசியல்..புதிய நம்பிக்கை பொது கூட்டத்தின் புகைப்படங்கள் சில...

இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கனோர் பங்கேற்றனர்...


                          இன்றைய போதி தர்மர் மருத்துவர் சின்ன அய்யா 
                                                    அவர்களின் எழுச்சியுரை

                             








   திருவள்ளுர் வடக்கு செயலாளர் திரு.செல்வராசு அவர்கள் பேசிய போது



                                    பாமக வின் வளர்ச்சியில் இசை கலைஞர்கள்




                                                வருங்கால வன்னிய சிங்கங்கள்




                                                  பொது கூட்டத்தின் ஒரு பகுதி





                                       மருத்துவர் சின்னய்யாவின்  எழுச்சியுரை





                                                  பொது கூட்டத்தின் ஒரு பகுதி





                                                 விதையிலும் வன்னிய இரத்தம்






பாமகவின் கொள்கைகளை பரப்பும் வன்னியகுல தியாகிகள்











வன்னிய குல வாரிசு



                  கூட்டத்தில் உணர்ச்சி மிகு கோஷங்களுடன் வன்னிய  தாய்