நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, November 22, 2012

மருத்துவர் தெய்வநாயகம்


மருத்துவர் தெய்வநாயகத்துக்கு
கிராமத்தானின் அஞ்சலி!










பிரபல நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் செ.நெ.தெய்வநாயகம், தன்னுடைய 70-ம் வயதில் திங்கள்கிழமை (நவம்பர் 19) அன்று சென்னையில் காலமானார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 1981&ம் ஆண்டு நெஞ்சக நோய் மருத்துவப் பிரிவை ஏற்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.


இவர் மருத்துவர் இராமதாசு அய்யாவின் பள்ளி தோழர் ஆவார். இவர் ஒரு சத்திரியகுல வம்சத்தை சார்ந்தவர்..

இவரால் தமிழகத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆங்கில மருத்துவர்களும், சித்த மருத்துவர்களும் உறுவாகி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது..

தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனை அமைய மிக முக்கிய  நபர் ஆவார் இவர் என்பது குறிப்பிடதக்கது..


தான் ஒரு அலோபதி (ஆங்கில முறை)
மருத்துவராக இருந்தாலும்கூட, தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை முற்றிலுமாக உணர்ந்தவர் தெய்வநாயகம். சித்த மருத்துவக் குழுவினருடன் இணைந்து, 'ஹெல்த் இந்தியா பவுண்டேஷன்’ அமைப்பை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு அலோபதி மற்றும் -சித்த மருத்துவத்தை இணைத்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளித்து வந்தார்.
கல்விப் பணியிலும் ஈடுபட்ட இவர், சென்னை தியாகராய நகரில் உள்ள செ.தெ.நாயகம் பள்ளியின் செயலாளராக இருந்தார். லாப நோக்கமின்றி 3 மேல்நிலைப் பள்ளிகள், ஓர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, குழந்தைகள் இல்லம் ஆகியவற்றை சென்னையிலும், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்திலும் நடத்தி வந்தார்.

சுற்றுச்சூழல் விஷயங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தெய்வநாயகம், மரபணு மாற்றுப் பயிர்களில் விளைந்த உணவுகளை உண்பதால், என்னமாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது தெரியாத நிலையில், அவற்றை அனுமதிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார். மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான பிரசாரங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்!
 — with 

Wednesday, October 10, 2012

கிறிஸ்தவ கோயிலில் வன்னியர் விழா


கிறிஸ்தவ கோயிலில் வன்னியர் விழா



கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில்
கோ
ணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலயமும் ஒன்று. விருத்தாசலத்தில் இருந்து சுமார் 15  கி. மீ. தொலைவில் இந்த ஊர் அமைந்துள்ளது.     


கோணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம்
இந்த கோயில் வன்னியர் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான வீரமாமுனிவர். ஆரியனூர் என்று அழைக்கப்படும்  கோணான்  குப்பத்திற்கு வந்திருக்கிறார். தனது தோள் பையில் இரண்டு மாதா சொருபங்களை வைத்திருந்த அவர், களைப்பின் மிகுதியால் அங்குள்ள குளக்கரையில் படுத்து உறங்கி விடுகிறார். அங்கே ஆடு மேய்த்து கொண்டிருந்த சிறுவர்கள் ஒரு மாதா சொருபத்தை எடுத்து புதரில் போட்டு விடுகின்றனர்.      

வீரமா முனிவர் சிலை 
கண்விழித்த வீரமாமுனிவர் சிலை காணாமல் போனதை கண்டு வருத்தம் அடைந்தார். அப்பகுதியை ஆண்ட வன்னிய பாளையக்காரரான முத்துசாமி கச்சிராயரை சந்தித்து சிலை காணாமல் போனது பற்றி கூறிவிட்டு வேறு ஊருக்கு சென்று விடுகிறார்.   

படத்தின் வலது மூலையில் உள்ள சிலை தான் வீரமாமுனிவர் தொலைத்ததாக கூறப்படும் மாதா சிலை.  படத்தில் இடமிருந்து வலமாக... ஒளிப்பதிவாளர் திரு. சித்தார்த்தன் கண்டர், ஆலய ஊழியர் திரு. அந்தோணி, நான், கோணான்குப்பம்  திரு. ரொசாரியோ உடையார், ஆவணப்பட ஒளிப்பதிவாளர் திரு. இதாயத்துல்லா ஆகியோர்.      

பின்னர் மன்னரின் கனவில் ஒரு நாள் மாதா தோன்றி நான் காட்டில் தனித்திருக்கிறேன், எனக்கு நீ சிற்றாலயம் ஒன்று  கட்டினால் உனக்கு ஆண் வாரிசு தருவேன் என்று கூறி மறைந்து விட்டார்.

கண்விழித்து எழுந்த மன்னர் தமது ஆட்களை அழைத்து காட்டில் தேடியபோது கனவில் கண்ட அதே சொருபம் கிடைக்கபெற்றதால் மகிழ்ச்சி அடைந்தார். 

சிலை கிடைத்த இடத்திலேயே மாதாவுக்கு சிற்றாலயம் கட்டி வழிபட்டு வந்துள்ளார். மன்னருக்கு ஆண் வாரிசும் கிடைத்திருக்கிறது.     

மன்னர் முத்துசாமி கச்சிராயர் கட்டியதாக கூறப்படும் சிற்றாலயம். 

இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் கோணான்குப்பம் வந்த வீரமாமுனிவர், மாதா சிலை கிடைத்திருப்பதையும் கச்சிராயர் அதற்கு சிற்றாலயம் கட்டி இருப்பதையும் கண்டு மகிழ்ந்தார். பின்னர் ஆலயத்தை தனது பொறுப்பில் எடுத்து கொண்ட அவர். அன்னைக்கு பேராலயம் கட்டினார். 

இவை அனைத்தும் வீரமா முனிவரின் வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள செய்திகள். 

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தேர் திருவிழா நடத்தப்படும். அப்போது வீரமாமுனிவரை ஆதரித்து கோயில் கட்ட இடமும் கொடுத்த முகாசா பரூர் பல்லவ அரசர்களை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

அரசர் அரண்மனையில் இருந்து அரச உடையுடன்  மேள தாள முழக்கங்களுடன் கோயிலுக்கு ஊர்வலமாக வருவார். அவர் வடம் தொட்ட பின்பே தேரோட்டம் தொடங்கும். இந்த பாரம்பரிய நிகழ்ச்சி இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

2011 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவை நான், முரளி நாயக்கர், கார்த்திக் நாயகர் மற்றும் ஸ்ரீ விஜய் கண்டர் ஆகியோர் நேரில் கண்டு பரவசம் அடைந்தோம்.           

இடமிருந்து வலமாக... திரு. நா. முரளி நாயக்கர், நான், மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர், திரு. அ. கார்த்திக் நாயகர், திரு.ப. ஸ்ரீ விஜய் கண்டர் ஆகியோர். 
முகாசா பரூர் ஊராட்சி மன்ற தலைவரான மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர் அவர்கள் மகிழுந்தில் ஊர்வலமாக வர, கட்டுக்கடங்காத கூட்டத்துக்கு நடுவே காவல் துறையினர் மக்களை விலக்கி அரசரை மேடைக்கு அழைத்து சென்றனர்.   
பாதிரியார்கள் கச்சிராயர் வம்சத்தின் பெருமையை கூறி அவருக்கு சிறப்பு செய்தனர். மன்னர் வடம் தொட்டு கொடுத்தபின் தேரோட்டம் தொடங்கியது.
  

             மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் பல்லவ மன்னர் (தலைப்பாகை அணிந்திருப்பவர்).    

             மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர்
மஹா ராஜ ராஜ ஸ்ரீ பொன் பால தண்டாயுத கச்சிராயர்

                      மன்னருக்கு மரியாதை
பாதிரியார் கச்சிராயரின் பெருமையை கூறுதல்.
மன்னரது ஏற்புரை
  முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பே கச்சிராயர்கள் தேவாலயம் கட்டியதாக கூறப்பட்டாலும் முகாசா பருரிலோ அல்லது கச்சிராயர்கள் அதிக அளவில் வசிக்கும் தியாகவல்லியிலோ எந்த கச்சிராயரும் மதம் மாறவில்லை. 

அதே சமயம் புதுச்சேரியில் முருங்கப்பாக்கம் முதன்மை சாலையில் நமது உறவினர் சொல்லாய்வு அறிஞர் வேல்முருகன் அவர்களின் அச்சகத்துக்கு அருகே கிறிஸ்தவ கச்சிராயர் ஒருவரின் பெயர் பொறித்த கல்வெட்டை காண முடிகிறது.  

புதுச்சேரியில் உள்ள கல்வெட்டு - கிளெமென்ட் ஜோசப் கட்சிராயர் என்பதை கவனிக்கவும்.


எந்த காலத்திலோ சிலர் மாறியும் இருக்கிறார்கள். ஆனால் கச்சிராயர்களின் புகழ் பாடும் கோணான்குப்பம் தேர் திருவிழா எந்த மாற்றமும் இல்லாமல் பாரம்பரிய பெருமையை பறைசாற்றி கொண்டு இருக்கிறது.

நன்றி - அண்ணல் பக்கங்கள்

Monday, September 24, 2012

பா.ம.க பாடல்கள் (pmk songs)



     வீரமீகு வன்னியகுல சத்திரியர்களின் புகழ்பாடும் பாடல்களின் தொகுப்பு..




பறக்குது பறக்குது பறக்குது பாரீர் பாட்டாளி மக்கள் கட்சி கொடி- 
எழுதியவர் திரு ஜெயபாஸ்கரன் அவர்கள்- 
பாடியவர்  திரு புஷ்பவனம் குப்புசாமி அவர்கள்

ஆண்ட இனத்தின் அடுத்த தலைமுறை அழகாய் வருவதைப் பார் பார்..

ஆண்ட இனம் மீண்டும் ஆள போகுதடா...

அய்யா அழைக்கிறார்... அய்யா அழைக்கிறார்...

இதயம் உள்ளவர் இருக்கின்ற வரைக்கும் உங்கள் தியாகம்


வியர்வை சிந்தி உழைப்பதெல்லாம் நம் இனங்க ..

யாருக்கு நான் ஓட்டு போட

ஜனங்கள் என்ன ஜனங்களே தமிழ்நாட்டு ஜனங்களே...

பொது வாழ்வில் டாக்டர் அய்யா துாய்மையானவர்

பல்லாண்டு வாழனும் நீங்க...

இளைஞர்களின் எழுச்சி நாயகன் சின்ன அய்யா தாங்க...

எத்தனை எத்தனை போராட்டம் அய்யா வாழ்விலே...



ஊமைகளாய் ஆமைகளாய்

எழுந்து வா எழுந்து வா.

ஏறுறது ஜெயக்கொண்டம்


ஓடோடி உழைத்து உருகுலைந்து

சின்ன சின்ன மாம்பழம்.

நீங்கள் இல்லாமாலா நாங்கள்

பிச்சு கண்ணு பிச்சு கண்ணு

மாம்பழ சின்னக் கோலம் 

வெற்றிக்கனி பறிப்போம்

தொடரும்..

Sunday, September 9, 2012

தண்ணீரில்லாமல் மிதக்கின்றான்...... "குடிகாரன்".......

மரணத்தின் விளிம்பில்

சுத்தமான இரயில் நிலையம்
நிசப்த பூமியில்
மௌனம் மட்டும் சத்தமாய் ஒலிக்க,

நான் காத்திருக்கிறேன்!
இனிமேல் நமக்குள்
குறைந்தபட்ச சத்தம்
மரணமாயிருக்கட்டும்!


8-8-2012 அன்று கோடம்பக்கம் தொடர்வண்டி நிலையத்தில் எடுக்கப்பட் புகைபடம்





Monday, August 13, 2012

நாளை நமதே...


வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு தமிழகம் முழுவதும் பாமக சார்பில் நடைபெறவுள்ள போரட்டத்தில் வன்னியர்கள் அனைவரும் கலந்து கொண்டு நமது உரிமையை மீட்டெடுப்போம்






Sunday, July 29, 2012

கல்வித்திருவிழா -2012- கும்மிடிபூண்டி



திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் சமூக முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வன்னிய சமூகத்தை சார்ந்த 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும்.உலக யோக செம்பியன் பட்டம் பெற்ற சிறுவருக்கும் மற்றும் 6.முறை சிறந்த ஓவிய பட்டம் பெற்ற நமது சமுதாயத்தை சார்ந்தவர்களுக்கு பாரட்டு விழா நடைபெற்றது

காலை 9.00 மணி முதலே மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கூட்ட அரங்கிற்கு வர தொடங்க அரங்கமே கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தது..சில நமிடங்களில் மருத்துவர் அன்புமணி அய்யா அவர்கள் அரங்கிற்க்க வர அரங்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் எழுந்து நின்று வரவேற்க சின்ன அய்யா அவர்களோ அனைவரையும் பார்த்து சிரித்தபடி கை அசைத்து கொண்டே மேடைக்கு சென்றார்

இந்நிகழ்ச்சியில் திரு.கோபல் (தலைவர் சமுச),திரு.முகுந்தன்,திரு.சிவப்பிரகாசம்,திரு.உமாபதி,திரு.சேகர்,திரு.கோ.ரவிராஜ்,திரு.துரை.செயவேலு,திரு.ம.செல்வராசு மற்றும் சமுச-வை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.




வெளியில் நிறுத்தப்பட்ட வாகனங்களின் ஒரு பகுதி



மருத்துவர் சின்ன அய்யாவை வரவேற்க காத்திருக்கும் சமுச நிருவாகிகள்


 அய்யாவை வரவேற்க்க வைக்கப்பட்ட பதாகை

 




                       சாலை ஒரங்களில் நடப்பட்டிருந்த சமுச கொடி கம்பங்கள்


சின்ன அய்யாவிற்கு வரவேற்ப்பு

                                                அரங்கிற்குள் சின்ன அய்யா


                                                               தமிழ் தாய் வாழ்த்து
                                   


 

திரு.முகுந்தன் அவர்களின் சிறப்புரை

திரு.கோ.ரவிராஜ் அவர்கள் சிறப்பு

                                      
                                      அரங்கிற்கு வெளியே நமது சொந்தங்கள்
                               

                                           திரு.கோபல் அவர்களின் சிறப்புரை  


பாரட்டு வழங்க காத்திருக்கும் நினைவு பரிசு





                                                                   மாணவ மாணவிகள்
                           

                               திரு.ம.செல்வராசு அவர்கள் பாடல் பாடிய  போது
     

                                              மருத்து அய்யாவின் சிறப்புரை



             


  சான்றிதழ் உடன் மாணவர்கள்


                                                     நினைவு பாரிசு வழங்கியபேர்து