நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Sunday, November 21, 2010

புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு...

புகையிலை, குடிப்பழக்க எதிர்ப்பு

பல வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், ஏற்கனவே வழங்கும் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் எச்சரிக்கை அறிக்கைகள், தணிக்கை நெறிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர் மரு. அன்புமணி ராமதாஸ். இவரது ஆட்சியில், அமெரிக்காவில் இருப்பதைப் போலவே, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டது. சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை இவரது ஆட்சியின் கீழ் தடை செய்யப்பட்டது.
புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கைநெறிகளைக் கொண்டு வந்தார். இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின. இத்தகைய கடும் எதிர்ப்புகள் 2009ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இவரது கட்சியை பல கோடிகளை இரைத்து தோல்வியடைய செய்தன.
, அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

No comments: