நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Wednesday, December 29, 2010

சென்னை மாநகராட்சி எல்லையை விரிவுபடுத்தக் கூடாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

.


திசம்பர் 30-2010

சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிப் பகுதிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து, சென்னை பெருநகர மாநகராட்சி எனஅறிவிக்க மாநில அரசு முடிவு செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது.  இதற்கு சென்னை மாநகராட்சியின் ஒப்புதலைப் பெற முயற்சி நடக்கிறது.

 மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்று பேசி வருகிறோம். இதற்கு மாறாக, பரவலாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகளை கலைத்துவிட்டு, சென்னை மாநகராட்சியோடு இணைத்து ஓர் அதிகார குவியலை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இது அதிகாரப் பரவல் என்ற அடிப்படை கொள்கைக்கே முரணானது.

 சென்னை பெருநகர மாநகராட்சியோடு இணைக்கப்பட இருக்கும் பகுதிகளில் 9 நகர்மன்றத் தலைவர்களும், 200-க்கும் மேற்பட்ட நகர்மன்ற கவுன்சிலர்களும், 8 பேரூராட்சித் தலைவர்களும், 200-க்கும் மேற்பட்ட பேரூராட்சி கவுன்சிலர்களும், 25 ஊராட்சி மன்றத் தலைவர்களும், 400-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் செயல்பட்டுவருகின்றனர். இவர்கள் அந்தந்தப் பகுதி மக்களின் தேவைகளை உணர்ந்து, அவற்றை நிறைவேற்றுவதில் அக்கறையோடு செயல்படுகின்றனர்.

 இவ்வாறு 800-க்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் செய்து வரும் பணிகளை,  மாநகராட்சியின் வெறும் 93 கவுன்சிலர்கள் மூலம் நிறைவு செய்ய முடியுமா? அதிக பணிகள்   காரணமாக ஏற்கெனவே சென்னை மாநகராட்சிப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன.

 தரமான சாலைகள், குடிநீர் வழங்குதல், தெரு விளக்குகள், கழிவு நீர் அகற்றுதல் மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகிய கட்டமைப்பு வசதிகளை மாநகருக்கு அருகேயுள்ள பகுதிகளிலும் நிறைவேற்ற இந்த விரிவாக்கம் அவசியம் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

 இது உண்மையானால், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இப்போது சென்னை மாநகராட்சி தன்னிறைவு பெற்று விட்டது என்று அறிவிக்க முடியுமா?

   மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சென்னை மாநகராட்சி தன்னிறைவு பெற்றால், அதில்தான் உண்மையான பெருமை இருக்கிறது.

 எனவே, சென்னை மாகராட்சியோடு சுற்றியுள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அதற்குப் பதிலாக, ஏற்கெனவே ஆலோசனை செய்தபடி, அம்பத்தூர், திருவொற்றியூர், தாம்பரம் என மூன்று புதிய மாநகராட்சிகளை உருவாக்க வேண்டும என்று மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments: