நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .
நாம் வாழ வேண்டுமானால் நாம் ஆள வேண்டும்.. கிராமத்தான் .

Thursday, December 30, 2010

மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யும் திட்டம் ஒத்திவைப்பு

சென்னை, டிச. 30:
சென்னை மாநகராட்சி எல்லையை  விரிவாக்கம் செய்யும் திட்டம் குறித்த தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



திசம்பர் 29 -2010 அன்று மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்ட கோரிக்கையை ஏற்றுசென்னை மாநகராட்சி எல்லையை  விரிவாக்கம் செய்யும் திட்டம் ஒத்திவைக்கபட்டுள்ளது்

மாநகராட்சி மன்றக் கூட்டம் நிறைவடைந்த பின்  இதுகுறித்து மாநகர மேயர் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை கூறியது: சென்னை மாநகராட்சியின் இப்போதைய பரப்பு 173 சதுர கிலோ மீட்டர். இது, தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகர மாநகராட்சிகளின் பரப்பை விடக் குறைவுதான். சென்னையைப் போலவே அதைச் சுற்றி அமைந்துள்ள திருவொற்றியூர், தாம்பரம், அம்பத்தூர் உள்ளிட்ட 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியின் எல்லை, பரப்பை 430 சதுர கிலோ மீட்டர் அளவுக்கும், மக்கள்தொகையை 56.63 லட்சம் கொண்டதாகவும் விரிவாக்கம் செய்ய அரசு திட்டமிட்டது.

இப்போது சென்னை மாநகராட்சியில் 155 வார்டுகள் உள்ளன. இவற்றில் தலா 40 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட 107 வார்டுகளாகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டது. 9 நகராட்சிகளில் தலா 20 ஆயிரம் மக்கள்தொகை கொண்டதாகவும், 25 ஊராட்சிகளில் தலா 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்டதாகவும் ஒட்டுமொத்தமாக 200 வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

புறநகர்ப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு ரூ. 3,871 கோடியில் திட்டம்: சென்னையுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டிருந்த நகராட்சிகளில் ஆலந்தூர் நகராட்சியில் மட்டுமே பாதாள சாக்கடை வசதி உள்ளது. திருவொற்றியூர்,  இதர 8 நகராட்சிகளில் இந்த வசதி இல்லை. இதேபோல இந்த புறநகர் பகுதிகளைச் சேர்ந்த நகராட்சி, ஊராட்சிகளில் சாலைகள், குடிநீர், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு, பஸ் நிறுத்தங்கள், மழைநீர் வடிகால் வசதிகளையும் முழுமையாக நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ. 3,871.65 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவே சென்னை மாநகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், விரிவாக்கம் செய்யப்படக் கூடிய எல்லைகளின் விவரங்கள், தெருக்களின் விவரங்கள் ஆகியவை சரியாகத் தெரிய வேண்டும் என்று பா.ம.க மன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, மன்றக்கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் (எண் 55) ஒத்திவைக்கப்படுகிறது. எனினும், 21 நாள்களுக்குள் இத்திட்டத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள தனி அலுவலருக்கு மன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். இதன்பின்னர் அரசிடம் கலந்து பேசி இந்தத் திட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார் மேயர் மா. சுப்பிரமணியன்.

No comments: